Posts

Showing posts from August, 2014

சலீம் – சினிமா விமர்சனம்

Image
‘நான்’ என்ற சிறந்த கிரைம்-திரில்லரில் நடித்த விஜய் ஆண்டனியின் இரண்டாம் படம் . படத்தைப்பற்றி பார்க்கும்முன்  , நம்மை கொஞ்சம் நோக்குவோம் . நம்மில் எத்தனை பேர் , சிக்னலில் 0 SEC எனக்காட்டி , பச்சை சிக்னல் விழுந்தபின் , நம் வாகனத்தை , சிக்னலில் இருந்து கிளப்பியுள்ளோம் ? ஒன்வே ரோட்டில் , எதிராக ஒருமுறையேனும் பயணிக்காதோர் எத்தனை பேர் உள்ளனர் ? லஞ்சம் பற்றி வாய்கிழிய கூவும் நாம் ,  நமக்கென்று ஏதேனும் தேவைப்படும்போது , லஞ்சம் கொடுக்காமல் இருந்திருக்கிறோமா ? நாம் சிக்னலை சரியானபடி பின்பற்ற நினைத்தாலும் , பின்னாலிருப்பவன் விடமாட்டான் . ஓயாமல் ஹார்ன் அடித்து , ஏதேனும் வசைபாடி விட்டு , சிக்னல் விழும்முன்னே பறப்பான் . அவனின் ஏச்சுபேச்சுகளுக்கு பயந்தே நம் வாகனத்தை எடுத்துக்கொண்டு , விதிகளையும் மனக்குமுறல்களையும் விழுங்கியபடி செல்வோம் . நாம் எவ்வளவுதான் நல்லவனாக இருக்கவேண்டும் என்று நினைத்தாலும் , நம்மைச்சுற்றியுள்ள சமூகம் , அப்படி இருக்கவிடாது . அதையும்மீறி இருப்பவனை , ‘வேஸ்ட் , அட்டு , மொக்கை’ என்று பட்டம் சூட்டி மகிழ்வார்கள் . திடிரென ஒருநாள்  நமக்கு இச்சமூகத்தின்மீது கோபமேற்பட்டால்

பயணம் @ டைம் மெஷின் - 5

Image
பயணம் @ டைம்மெஷின்-1ஐப்படிக்க   இங்கே அழுத்துங்கள் பயணம் @ டைம்மெஷின்-2ஐப்படிக்க  இங்கே அழுத்துங்கள் பயணம் @ டைம்மெஷின் -3ஐப்படிக்க  இங்கே அழுத்துங்கள் பயணம் @ டைம் மெஷின் - 4ஐப்படிக்க  இங்கே அழுத்துங்கள் அத்தியாயம் -3 கிமு 2-ம் நூற்றாண்டு பகுதி -3 கலகமும் பயணமும் கல் தோன்றிய பின்பே , மண் தோன்றும் என்பது நில இயல்பு. நிலங்களுல் குறிஞ்சிநிலமே முதலில் தோன்றிய நிலமாதலால் ,மக்கள் தங்கள் வாழ்க்கையை முதலில் ஆரம்பித்த இடமும் அதுவே . மக்களின் உடலை வளர்த்து  , உயிர்காக்கவல்ல உணவுப்பொருட்களை , அம்மக்களின் உழைப்பை எதிர்நோக்காமல் தரவல்ல ஒரே இடம் குறிஞ்சிநிலமாகும். காயும், கனியும் ,கிழங்கும் , மக்கள் விரும்பி உண்ணும் ‘மா’வினங்கள் என அனைத்தும் வெகு எளிதாக கிடைத்ததால் ‘நாளைத் தேவை’ என்ற சேமித்துண்ணும் தனியுடைமை பொருள் நிலை , அம்மக்களுக்கு இல்லை. ஆனால் , அந்நிலை அம்மக்களுக்கு நீடிக்கவில்லை. வருடங்கள் உருண்டோட , மக்கள் தொகை பெருகிற்று , ‘மா’க்கள் தொகை குறுகிற்று .  உண்ண ஆட்கள் அதிகமானதால் , உணவுப்பற்றாக்குறையும் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்நிலையில்தான்

THE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்

Image
2010- ல் , சில்வர்ஸ்டர் ஸ்டாலோனின் முதல் எக்ஸ்பாண்டபுள்ஸ் பாகம் ரிலிசாகி , இந்தியாவில் சக்கைப்போடு போட்டது . அதன்பின் , 2012-ல் ரிலிசான இரண்டாம் பாகம் , ஓரளவு சுமாராகவே ஓடியது .ஆனால் , இதன் மூன்றாம் பாகம் மற்ற இரண்டு பாகங்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டது. மனுஷன் ,ஏற்கனவே தனியா நடிச்ச  ராம்போ சிரியஸ்கள , ஒரு 5000 பேரயாவது கொன்னுருப்பாரு. இப்போ வயசானதாலோயோ என்னவோ , இன்னும் ஒரு 8 பேரக் கூட்டிகிட்டு , தாருமாறா கொல்றாரு. ஆனால் , அஞ்சான் படம் மாதிரி ஆடியன்ச கொல்லாம , படத்துல வர்ற வில்லனுங்களதான் கொல்றாரு. கதை அட என்னத்தப்போய் கதை. இவங்க டீம்ல 5 பேரு. ஒரு மிஷன்க்கு , மெஷின்கன் எடுத்துட்டு போராங்க. அங்க வில்லன பாக்கறாங்க. அங்க ஒரு ட்விஸ்டு. வில்லன் , ஏற்கனவே , ஸ்டாலனோட எக்ஸ்பேண்டபுள்ஸ் டீம்ல இருந்து விலகுனவர். அவரு , ஸ்டாலனோட டீம் மெட் ஒருத்தர , பெட்டக்ஸ்ல சுட்டரராறு. வில்லன் தனியா ராணுவமே வச்சிருக்க அளவுக்கு பெரிய ஆள். அங்க போனா சாவு நிச்சயம்னு முடிவு பண்ண ஸ்டாலன் , தன் டீம் மெட்களை கழட்டி விட்டுட்டு , புதுசா 4 பேர வச்சி ஒரு டீம் ரெடி பன்றாரு . அப்போ , வில்லன் தன்னோட பிசி

BURIED (Eng-2010) – சினமா விமர்சனம்

Image
BURIED - ENGLISH 2010 தமிழில்  வெளிவந்த இருவர் மட்டும் என்ற படத்தில் , ஹீரோ , ஹீரோயின் என இருவர் மட்டுமே , மொத்தப்படத்திலும் நடித்திருப்பார்கள் . இதே போன்று கிட்டத்தட்ட ஹீரோவை மட்டுமே சுற்றி நகரும் படங்களில், வில் ஸ்மித் நடித்த AFTER LIFE படத்தையும் குறிப்பிடலாம்(ஆனால் , இந்தப்படத்தில் ப்ளாஸ்பேக் காட்சிகளில் பலர் வருவார்கள்) . CAST AWAY , 127 HOURS , LIFE OF PIE , GRAVITY போன்ற படங்களிலும் , பெரும்பான்மையான காட்சிகள் ஒருவரைச்சுற்றியே நடப்போது போல் காட்டினாலும் , அந்த படங்களில் , ஒரு சின்ன வேடத்திலாவது, வேறொருவரை ஒரு காட்சியில் காட்டிவைத்துவிடுவார்கள் . ஆனால் , முழுக்க முழுக்க , வெறும் ஒருவர் மாத்திரமே நடித்த படம் ஒன்றெனில் , எனக்குத்தெரிந்தவரை இது ஒன்று மட்டுமே. அப்படியே வேறு படங்கள் இருந்தாலும் , இந்த படத்தில் வரும் இன்னொரு சிறப்பு , கண்டிப்பாக அந்த படங்களில் இருக்காது . காரணம் , இந்த படம் முழுக்க முழுக்க ஒரே லொகேசனில் எடுக்கப்பட்டது . 2006 , அமெரிக்கா , ஈரான் மீது போர்த்தொடுத்த காலம் . அச்சமயத்தில் , அமெரிக்காவிலிருந்து , கான்ட்ராக்ட் அடிப்படையில் ட்ரைவர் , சமையல்

பயணம் @ டைம் மெஷின் - 4

Image
பயணம் @ டைம்மெஷின்-1ஐப்படிக்க   இங்கே அழுத்துங்கள் பயணம் @ டைம்மெஷின்-2ஐப்படிக்க  இங்கே அழுத்துங்கள் பயணம் @ டைம்மெஷின் -3ஐப்படிக்க  இங்கே அழுத்துங்கள் அத்தியாயம் -3 கி.மு. 2-ம் நூற்றாண்டு பகுதி-2 காஞ்சிபுரம் இருட்டின் பிடியில்  , மெல்ல மெல்ல சிக்கிக்கொண்டிருந்த அவ்வூரை அடைந்ததும் ,பாலாவும் , சந்துருவும் தங்களின் வேகத்தை துரிதப்படுத்தினர் .அவர்களின் கால்களை சுமந்து , அவர்களின் பயணத்திற்கு பாதையை காட்டியது அந்த மண்சாலை . அச்சாலையை ஒட்டிய இருபுறமும் ,பனைஓலையில் வேயப்பட்ட குடிசைகள் தென்பட ஆரம்பித்தன.. மிக நேர்த்தியாக , ஒரு பனங்கீற்றுக்கூட தெரியாத அளவிற்கு குடிசைகள் தென்பட்டன . பத்து, பதினைந்து குடிசைகளுக்கு இடையே ஆங்காங்கே , களிமண்ணை , கருங்கல்லுடன் புனைந்து கட்டப்பட்ட மாளிகைகள் , தங்களின்  ஒற்றை அடுக்கை மிகமிடுக்காக காட்டிக்கொண்டிருந்தன. பெரும்பாலான வீடுகள் , திண்ணையை  உரிமையாகபெற்றிருந்தன .குடிசைகளுக்கும் , மாளிகைகளுக்கும் உள்ளே ,  சில குடும்பத்தலைவிகள் சமையலில் கண்ணும் கருத்துமாய்  இருக்க, சிலரோ வீட்டைக்கூட்டியபடி இருந்தனர். அனைவரின் வீடுகளிலும் சற்றுநே

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை

Image
சேலத்தில் மீண்டும் ஒரு இளைஞர் காணமல் போயிருப்பது , மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காணமல் போனவரின் பெயர் ,குமார். இதே போன்று மூன்று மாதங்களுக்கு முன் ஒரு இளைஞர் காணமல் போனது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வருடங்களில் , இவருடன் சேர்த்து 7 பேர் காணமல் போயுள்ளனர். காணமல் போனவர்களை பற்றிய ஒரு செய்தியும் , காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்பதுதான் பரிதாபம். ---------------------------------------------------------------------------------------------------- “ ஹேமா ! அந்த பையன பாருடி . உன்னையே வெறிச்சு  பாக்குறான் ” “ ஹே ,சும்மா இருடி. ” “ அவன் பாக்குற பார்வைய பாத்தா , இன்னைக்கு உங்கிட்ட புரபோசல் பண்ணிடுவான் போலருக்கு” “ அச்சோ ! அமைதியா வாடி .ப்ளீஸ் ” தோழி , ஜெயாவிடம் கெஞ்சிக்கொண்டே வந்தாள் ஹேமா. தலைகுனிந்து புத்தகத்தை புரட்டுவதைப்போல அவனைப்பார்த்தாள். ஒரு நொடி பார்வையில் , அத்தனையும் அவளுக்கு வெளிச்சமாயிற்று. ஜெயா சொல்வது போலவே , அந்த ட்ரிம் செய்த மூஞ்சுக்கார இளைஞன் ,அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இவளின் ஒரு நொடி பார்வையை அறிந