Posts

Showing posts from June, 2015

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

Image
ஒரு திரைப்படத்தின் ட்ரைலரைப் பார்த்ததுமே , இந்த படத்துக்கு கண்டிப்பாக போகனும் எனும் எண்ணத்தை சமீபகாலமாக எந்த திரைப்படத்தின் ட்ரைலரும் எனக்குள் ஏற்படுத்தவில்லை . ஆனால் இந்த படத்தின் ட்ரைலர் வந்ததுமே கண்டிப்பாக போயாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் . என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை ; ஆனால் பார்க்கவேண்டும் . படத்தின் கதையை , தினத்தந்தி பேப்பர் விளம்பரங்களிலேயே போட்டுவிட்டார்கள் . முதல்பாதி ஹீரோ , ஹீரோயினைத் துரத்துகிறார் ; இரண்டாம் பாதி ஹீரோயின் , ஹீரோவைத் துரத்துகிறார் . இதைவைத்துக்கொண்டு மிக எளிமையாக , போரடிக்காத திரைக்கதையினால் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மணன் .  ஹீரோ கார்த்திக் , ஒரு ஜிம் பயிற்சியாளர் . ஜாலியாக , பாஸிட்டிவாக இருப்பவர் . இவர் பணிபுரியும் ஜிம்மின் வாடிக்கையாளர்கள் பெரும்பணக்காரர்கள் என்பதால் இவருடன் அனோன்யம் . ஹீரோயின் சுப்புலட்சுமி , ஒரு அனாதை  . சிறுவயதுமுதலே மிடில்கிளாஸ் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறார் . ஒரு பணக்காரனைத் திருமணம் செய்துகொண்டு தான் நினைத்தபடி வாழவேண்டும் என்பதே அவருடைய ஆசை . அப்போதுதான் பிரபலங்களுடன் இர

JURRASIC WORLD - சினிமா விமர்சனம்

Image
இப்படம் நான் சென்று பார்க்க முதல்காரணம் எனக்குள் ஒளிந்துகொண்டிருந்த 11 வயது சிறுவனின் நினைவலைகள் தான் .  சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படம் ஜுராசிக் பார்க் . டைனோசர் என்ற பெயரை மட்டுமே அப்போது கேள்விபட்டிருக்கிறேன் . அப்போதெல்லாம் அதன் புகைப்படத்தைப் பார்க்ககூட வாய்ப்பில்லை . ஏதாவது பேப்பரில் டைனோசரின் எலும்பு கண்டுபிடிப்பு என்ற செய்தியில் நாய் நக்கிவைத்த ஆட்டு எலும்புபோல் ஏதோவொன்றை போட்டிருப்பார்கள் . அக்கால ( 15 வருடங்களுக்கு முன் ) கேபுள் கனெக்சன்களிலும் சன் டிவி , ராஜ் டிவியைத்தாண்டி வேறு எந்த சேனலும் எங்கள் ஊரில் எடுக்காது . அப்போதுதான் தமிழ்நாட்டில் திருட்டி விசிடி கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது . அப்போதைய காலகட்டத்தில் எந்த புதுப்படம் வந்தாலும் கேபுள் டிவியிலும் உள்ளூர் சேனல்களிலும் விளம்பரஇடைவெளியின்றி போட்டுவிட ஆரம்பித்துவிடுவார்கள் . ஒரு சிலநேரங்களில் படம் ரிலிசாவதற்குமுன் கேபுளில் போட்ட கூத்துகளும் அறங்கேறியுள்ளது . அப்போதைய கட்டத்தில் தான் நான் முதல் ஹாலிவுட் திரைபடத்தைப் பார்த்தேன் (ஆர்மர் ஆஃப் காட் போன்ற பழைய ஜாக்கி திரைபடங்கள் ஹாலிவுட்டில

காக்கா முட்டை - ஒரு பார்வை

Image
 அப்பாடா ! ஒருவழியாக தமிழின் அரியதொரு படத்தினை இன்று பார்த்தாயிற்று . சென்றவாரத்திலிருந்து செல்லலாம்  , செல்லலாம் என்று  முயன்றும் இன்றுதான் நிறைவேறியது . யாரைக்கேட்டாலும் படம் சூப்பர் ! தாருமாறு ! பாக்காட்டி விட்டா பாவம் ! என்று அடுக்கிக்கொண்டே போனதுகூட என் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் . ஒரு படத்தினை உயர்த்தி பேசுவதற்காக அடுத்தவர் ரசனையை மட்டப்படுத்துகிறார்களோ ? அப்படி என்னதான் இருக்கிறது இதில் என்பதற்காகாவே சென்றேன் . ஒரு முக்கிய விஷயம் , மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன் . அதை காக்கமுட்டை நிறைவேற்றியதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும் . இருங்க! இருங்க ! திட்ரதுக்கு கமென்ட் பாக்ஸ நோக்கி ஓடாதிங்க . முழுசா படிச்சிட்டு போங்க . பொதுவாக ஆஹா ! ஓஹோ என்று எல்லாரும் புகழும்போது நம்மிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்கும் . நாம் பார்த்ததிலேயே மிகச்சிறந்த படத்துடன் நம் மனது அப்படத்தை கம்பேர் செய்ய ஆரம்பிக்கும் . அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் அந்த திரைப்படத்தை பார்க்கும்போது இம்மி பிசகினாலும் பிடிக்காமல் போய்விடும் . ஏனென்றால் நமக்குப்பிடித்தமான படத்தை விட இது என்ன பெரியது ? என்ற எண்ணத்த

12 ANGRY MAN - சினிமா விமர்சனம்

Image
ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை , அதன் கதை முதலில் ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும் ; அடுத்து அதன் திரைக்கதை பரபரப்பாகவும் , புதிதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கவேண்டும் . மூன்றாவது , அதிமுக்கியமானது , அப்படத்தின் இயக்குநரின் பெயரை படம் முடிந்தாலும் தெரிந்துகொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்குநரின் திறமை முழுதாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் . ஆனால் , இந்த திரைப்படம் மேற்கூறிய விதிகளில் கடைசிவிதியைத் தவிற மற்ற எதுவும் பொருந்தவே பொருந்தாது . பெரிய கதை ஒன்றுமில்லை ; பரபரப்பான திரைக்கதை கிடையாது , பெரிய டெக்னீஷியன்கள் கிடையாது , ஆனால் இத்திரைப்படம் நம்மை பார்வையளாராக திரைக்கு வெளியில் இருக்கவைக்காமல் , நம்மையும் ஒரு கேரக்டராக மாத்திவிடும் . காரணம் , விவாதம் . ஒரு இயக்குநரின் திரைப்படங்கள் மொத்தமும் சேர்ந்து 44 ஆஸ்காருக்கு வெவ்வேறு துறைகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா ? அக்கால சூப்பர்ஸ்டார்கள் மர்லன் ப்ரான்டோ , சீன் கானரி , ரிச்சர்ட் சீர் , பால் ந்யூமேன் , மைக்கேல் கெய்ன் போன்றோர்களெல்லாம் விரும்பி விரும்பி நடிக்க நினைத்த இயக்குநரை