பைரவா – சினிமா விமர்சனம்
அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைப்பாளர் என்றதும் டரியலே ஆகிவிட்டேன். டீசரும் ட்ரைலரும் கொஞ்சநாட்களாக விஜய்க்குள் தூங்கிக்கொண்டிருந்த ‘காடுனா புலி! வூடுனா கரடி’ விஜயை மொத்தமாக ஏலமெடுத்தது போலிருக்க, பாடல் மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. காலையில் பிகைன்ட் வூட்ஸ் மற்றும் சில ப்ளாக்கர்களின் விமர்சனங்கள், இதுக்கு சுறாவே தேவலாம் என்ற ரீதியில் வெளிவர, இருமனமாகவே திரையரங்குக்குள் சென்றேன். கதையை என்னவென்று சொல்வது; தலயும் தளபதியும் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது. யாருக்கோ நடக்கும் பிரச்சனையில் வான்டேடாக வண்டியிலேறி ரவுடி அவதாரம் எடுப்பதையே கடந்த சில திரைப்படங்களாக இருவரும் கையான்டு வருகின்றனர். அதேரீதியில் தான் காதலிக்கும் பெண்ணிற்கு இருக்கும் பிரச்சனையை தானே தலையிலேற்றி (‘விக்’க சொல்லல) அதை வழக்கம்போல தீர்த்து சுபம் போட்டுவிடுகிறார்கள். இடையிடையே காமெடியைப் பொழிய நண்பன், காதலியுடன் காதல் எபிசோட், ஆக்சன் எபிசோடுக