Posts

Showing posts with the label காமெடி

தில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்

Image
சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபின் வெளிவந்த முதலிரண்டு படங்களும் சுமாராகவே செல்ல , மூன்றாவதாக தமிழ்சினிமாவின் இன்றைய கலெக்ஷன் ஜானரான ஹாரர்ரைக் கையில் எடுத்திருக்கிறார். அதுவும் அவருக்கு பக்காவாகவே கைக்கொடுத்திருக்கிறது. கதை என்று பெரிதும் அலட்டிக்கொள்ளாமால் , நம்மிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது காமெடியைத் தான் என்று நன்குணர்ந்து ஒரு பக்காவான காமெடி கம் ஹாரர்ரை திகட்டத் திகட்ட தந்திருக்கின்றனர் ராம்பாலாவும் சந்தானமும். சிவன்மலைக்கோட்டை எனும் ஊருக்கு ஒருகாலத்தில் வியாபார விசயமாக வந்த திபெத்திய மகாராஜாவை வசியம் செய்து திருமணம் செய்துகொள்கிறாள் ஒரு வசியக்காரி. ராஜா வியாபாரத்துக்கு வெளியூர் போகும்போதெல்லாம் தன் கள்ளக்காதலனுடன் சரசம் செய்து அவன்மூலம் ஒரு பையனை பெற்றெடுத்து ராஜாவுக்கு தெரியாமல் வளர்க்கிறாள். ஒருநாள் அறிந்துகொள்ளும் ராஜா அவளின் கள்ளக்காதலனையும், குழந்தையையும் கொன்றுவிட்டு, அவளுக்கு கடுமையான தண்டனையைக் கொடுக்கும்படி ஆனையிட்டுவிட்டு , தன் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கே கிளம்பிவிடுகிறார். பழிவாங்கவேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் அந்த வசியக்காரி, ...

SNATCH - சினிமா விமர்சனம்

Image
கிட்டத்தட்ட ப்ளாக்கில் சுறுசுறுப்பாக இயங்கி நான்குமாதங்களுக்கும் மேலாகின்றது என நினைக்கிறேன். சில பர்சனல் காரணங்களால் எழுதுவது மட்டுமில்லாமல் வாசிப்பது, திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற மகத்தான காரியங்களையும் தடைசெய்யவேண்டியதாகி விட்டது. இந்நான்கு மாத காலத்தில் அதிகபட்சமாக பார்த்த  திரைப்படங்களின் எண்ணி்க்கை 20 இருக்கலாம். அதேபோல் இக்காலகட்டத்தில் படித்த நாவல்களின் எண்ணிக்கையும் 10-ஐத் தாண்டவில்லை என்பது எனக்கே வாய்த்த சோகம். வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாவல், 3 திரைப்படம் என்று சூளுரைத்த சபதத்தை நிறைவேற்ற கடைசி 20 நாட்களாக போராடி வருகிறேன். கிட்டத்தட்ட தினமும் 3 திரைப்படங்களும் 3 நாளுக்கு ஒரு நாவலும் படித்துவருகிறேன். இதைத்தவிர வேறு வேலையே இல்லையா என்று என்னைப்பார்த்து நீங்கள் பொறுமுவது புரிகிறது. சரி இப்போது எதற்கு இந்த ப்ளாஷ்பேக்? தேவையற்ற ஒரு பத்தி. பரவாயில்லை விட்டுத்தள்ளுங்கள். எல்லாம் க்வென்டின் திரைப்படம் பார்த்து  என்னைத்தாண்டி இப்படி ஒட்டிக்கொண்டது. உங்களுக்கு பரபர வேகத்தில் கேங்ஸ்டர் காமெடி திரைப்படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தால் சிறிதும் தாம...

RATATOUILLE – சினிமா விமர்சனம்

Image
அது 2005 என்று நினைக்கிறேன்; பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது நான் படித்துக்கொண்டிருந்த  பள்ளிக்கு, அருகிலுள்ள கல்லூரியில் இருந்து எம்.பி.ஏ மாணவர்கள் தங்களின் ப்ராஜெக்ட்காக புத்தகங்களை விற்க வந்தார்கள். “Whitakers world of facts” எனும் அப்புத்தகத்தின் வண்ணப்படங்களைப் பார்த்ததுமே வாங்கிவிடவேண்டும் என்ற ஆவல் எனக்குள் மலர்ந்தது. மேலும் அக்காலக்கட்டத்தில் பொது அறிவிலும் புத்தகங்கள் படிப்பதிலும் எனக்கு அதீத ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்டரி படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பாவின் வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் படித்து முடித்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். காமிக்ஸ், அரசியல் வரலாற்றுக்கட்டுரைகள், ஆச்சரியங்கள், அதிசயங்கள், விண்வெளி என எதைப்பற்றிய செய்தி கிடைத்தாலும் படித்துவிட்டுத்தான் மறுவேலை. அப்படியொரு அறிவுப்பசியில் (இப்போ இல்ல; அப்போ) திளைத்துக்கொண்டிருந்த எனக்கு அப்புத்தகம் பெரும் பொக்கிசமாகவே பட்டது. ஆனால் விலை கொஞ்சம் அதிகம்; எப்படி வாங்குவது? அன்று வீட்டிற்கு வந்ததுமே என் நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தேன்; முகத்தை சோகமா...

BACK TO THE FUTURE – 1 ஒரு பார்வை

Image
ராபர்ட் செமெக்கிஸ் – தலைவரைப்பற்றி எளிமையாக சொல்லவேண்டுமெனில் இவர் ஒரு ஹாலிவுட் கே . எஸ் . ரவிக்குமார் . 1978 – ல் சினிமாவினுள் நுழைந்து இன்றுவரை உலகளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் , தனி பாக்ஸ் ஆபிசையும் வைத்திருப்பவர் . இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கியவர் . வெறும் பணத்திற்காக மட்டுமில்லாமல் ஆங்காங்கே மக்களிடையே சமூக விழிப்புணர்வைப்பற்றியும் ஏற்படுத்தும் அதிசய இயக்குநர் . கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த FLIGHT திரைப்பட த்தில்கூட குடிக்கெதிரான தனது கருத்தை ஆணித்தரமாக பதிந்திருப்பார் . சுமாரான திரைப்படமான FLIGHT  பாக்ஸ் ஆபிசில் முதலைக்காட்டிலும் ஐந்து மடங்கு லாபத்தை சம்பாதித்து என்றால் அதற்கு காரணம் செமெக்கிஸ் தான் . இவரது அடுத்த படமான THE WALK , பிலிப் பெடிட் என்பவர் , விமான தாக்குதலில் தகர்க்கப்பட்ட இரட்டைக்கோபுரத்திற்கிடையே கயிறு கட்டி நடந்து சாதனை படைத்ததை வைத்து அவரது வாழ்க்கையைப்பற்றிய சுயசரிதமாக எடுக்கப்படுகிறது . ஆனால் செமெக்கிஸின் வாழ்க்கையையே ஒரு திரைப்படமாக எடுக்கலாம் . திரைப்படக்கலை பற்றிய கல்லூரிப்படிப்பை  முடித்தப...

22 JUMP STREET – சினிமா விமர்சனம்

Image
சென்றபாகத்தில் பள்ளியில் நடக்கும் போதைப்பொருள் பிரச்சனைகளை ஓழித்தபின் ஜெங்கோ மற்றும் ஷ்மித் இருவரும் அன்டர்கவர் ஏஜென்டாக மாறுகிறார்கள் . முதல் காட்சியிலேயே ஜெங்கோ மற்றும் ஸ்மித் இருவரும் ஒரு மிஷனுக்குச்செல்ல , அங்கே ஸ்மித்தின் குளறுபடிகளால் மிஷன் நாசமாய்ப்போகிறது . இருந்தாலும் ஜெங்கோ எதுவும் சொல்லாமல் வழக்கம்போல நட்பு பாராட்டுகிறான் . இவர்களின் சொதப்பல்களைத்தொடர்ந்து இருவரையும் மீண்டும் JUMP STREET – க்கு அனுப்பிவைக்கபடுகிறார்கள் . 21  JUMPSTREET – ல் இருந்த நிக்சனின் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்படுகிறது . அதுதான்   22 JUMP STREET. ஏற்கனவே இருந்த கொரியன் ஜீசஸ்க்கு பதில் வியட்நாம் ஜீசஸ் , கண்ணாடி ரூம் , சென்ற பாகத்தில் ஜெங்கோவிற்கு   உதவிய   பள்ளிநண்பர்கள் மூவரும் இங்கு வேலைசெய்ய என ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பிக்கிறது திரைப்படம் . இம்முறை அவர்களிருவருக்கும் கொடுக்கப்பட்ட வேலை கல்லூரியில் போதைமருந்து விற்கும் கும்பலைப்பிடிப்பது . இந்த போதைமருந்தின் விளைவால் ஒரு மாணவி இறந்துவிட்டதாகவும் , WHYPHY எனும் போதைப்பொருளை அந்த இறந்த பெண்ணுக்கு ஒருவன...

21 JUMP STREET – சினிமா விமர்சனம்

Image
சென்ற பதிவான HORRIBLE BOSSES   திரைப்பட த்தைத்தொடர்ந்து அடுத்தும் ஒரு காமெடித்திரைப்படத்தையே பார்க்கப்போகின்றோம் . இதிலும் ஆங்கிலத்திரைப்படங்கள் என்றாலே வரும் சிற்சில கெட்டவார்த்தைகள் இடம்பெறும் . அதிலும் நமது ICE CUBE இருப்பதால் மனிதர் வரும் காட்சியெலெல்லாம் தாருமாறான புதுப்புது வார்த்தைகளாக பேசியிருப்பார் . மற்றபடி ஒரு பார்ட்டி காட்சியில் ஒரே செகன்ட் மட்டும் சில பிட்டுகள் வரும் . பரவாயில்லை   என்றால் , பெரிய உறுத்தலாக இல்லாமல் காமெடியாகவே இருக்கும் . படத்தின் கதை என்று சொன்னால் பள்ளிகளில் நடக்கும் போதைப்பொருள் விற்பனையைக்கண்டுபிடிக்க , பள்ளிமாணவர்களாகச்செல்லும் இரு போலிஸ்காரர்களின் சாகசம் என்று சிம்பிளாக சொல்லிவிடலாம் . என்னது ? இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா ? அது நம்ம தல நடித்த ஏகன் படத்தைப்போத்தான் இருக்கும் . ஆனால் ஏகன் படமல்ல  . இப்படம்  1987 – ல் 21 JUMP STREET எனும் பெயரிலேயே வெளிவந்த ஒரு சீரியலின் தழுவல் . இதேபோல் நம் தளத்தில் ஏற்கனவே THE FUGITIVE திரைப்படத்தையு...