பேய்க்கதை - சிறுகதை
‘ மச்சி . நா பேய பாக்கனும்டா . ’ என்ற ஹரியை அதிசயித்துப்பார்த்தான் ராம் . ‘என்னடா திடீர்னு ? பைத்தியம் பிடிச்சிடுச்சா ?’ ‘இல்ல மச்சி . கண்டிப்பா நா பார்த்தே ஆகனும் .’ இனி ஹரியிடம் வாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது ராமுக்குத்தெரியும் . ‘அப்படினா உனக்கு ஏத்த சரியான ஆளு பேயடிச்சாமி தான்டா . அந்தாளபோயி பாரு . அவரு உனக்கு எல்லாம் தெளிவா சொல்லுவாரு .’ என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் ராம் . ஹரிக்கு இந்த எண்ணம் கடந்த 3 நாட்களாகத்தான் இருந்தது .பேயைப்பார்க்க அவன் எதற்கு விரும்பினான் என்று அவனுக்கேத்தெரியவில்லை . ஆனால் பேய் எப்படி இருக்கும் என்று பார்த்தேயாகவேண்டும் .ராம் சொன்ன பேயடிச்சாமியைப்பார்க்க கிளம்பினான் .எங்கும் வனம் . இருட்டு வேறு பயமுறுத்தியது . எங்கோ தூரத்தில் ஒரு கொடூரமான மிருகத்தின் உறுமலோ இறுமலோ இவனை மேலும் திகிலாக்கியது . ‘மச்சி , அவர சாய்ங்காலத்துலதான் பாக்க முடியும் .எல்லையோரத்துல இருக்க காட்டுல தான் அவரோட இடம் இருக்குது . பகல்ல அவரு வேற எங்கயோ போயிடுவாருனு சொல்லிருக்காங்க .’ ‘எங்க போவாரு மச்சி ?’ இருட்டு என்றால் பயம...