Posts

Showing posts with the label சைக்கோ

THE CONJURING 2 – சினிமா விமர்சனம்

Image
பேய் திரைப்படம் என்றாலே உடனே நினைவுக்கு வரும் ஆள் ஜேம்ஸ் வான். ஆள் பார்க்க பாஸ்ட்புட் கடையில் நூடுல்ஸ் கிளறும் வட இந்திய பையன்போல் இருந்துகொண்டு ஹாரர் ஜானரில் கலக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக பேய் திரைப்படங்களில் ஜேம்ஸ் வான் செய்த சாதனைகளை மறக்கவே முடியாது. DEATH SILENCE, THE CONJURING, INSIDIOUS இரண்டு பாகங்கள் இயக்கியதோடு ANNABELLE , INSIDIOUS 3, வெளிவர இருக்கும் LIGHTS OUT ஆகிய பேய்த் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இது போதாதென்று SAW திரைப்படங்களைத் துவக்கி வைத்ததோடு மட்டுமில்லாமல் 6 பாகங்களை தொடர்ந்தார்போல் தயாரித்துள்ளார். என்னால் இன்னும் நம்பமுடியாத விசயம் FAST AND FURIOUS 7 திரைப்படம் இவர் இயக்கத்தில் உருவானது என்பதுதான்.  THE WARREN FILES எனப்பெயரிடப்பட்டு இன்ஷிடியஸ் முதல் சாப்டரை முடித்த கையோடு ஜேம்ஸ் வான் இயக்க ஆரம்பித்த திரைப்படம் தான் கான்ஜுரிங். வெறும் 20 மில்லியன் பட்ஜெட்டில் உருவான அத்திரைப்படம் அடித்த கலெக்ஷனைப் பார்த்து ஹாலிவுட்டே ஸ்தம்பித்தது எனலாம். கிட்டத்தட்ட 320 மில்லியன் டாலர் வசூல்வேட்டை நடத்திய அமிட்டிவில்லி பேயைப் பார்த்த...

THE BUTTERFLY EFFECT – சினிமா விமர்சனம்

Image
என்.டி.ஆரின் நானக்கு ப்ரேமதோ திரை விமர்சனத்தை எழுதும்போது இடையில் இத்திரைப்படத்தைப் பற்றி எதேச்சையாக குறிப்பிட்டேன். இந்த திரைப்படம் நினைவுக்கு வந்ததும் உடனே இந்தபடத்தைப் பற்றி இத்தனை நாள் எழுதாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம்தான் தோன்றியது. அப்படி ஒரு ஸ்பெசல் ட்ரீட்மென்ட் தான் இத்திரைப்படம். உங்களுக்கு பல சர்ப்பரைஸ்களைக்கொடுக்கும் வல்லமை வாய்ந்தது இந்த பட்டர்ப்ளை எஃபெக்ட். ஏற்கனவே நானக்கு ப்ரேமதோ திரைப்படத்தைப் பற்றிய பதிவிலே கேயாஸ் தியரியைப்பற்றியும் அதன் கோட்பாடுகளில் ஒன்றான பட்டர்ஃப்ளை எஃபெக்ட் பற்றியும் பார்த்தோம். அந்த கான்செப்டை அப்படியே வைத்து ஒரு பக்காவான திரைக்கதையை எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் இந்த திரைப்படம். கேயாஸின்படி குத்துமதிப்பான நிகழ்காலம் குத்துமதிப்பற்ற எதிர்காலத்தை உருவாக்காது என்பதைவைத்து நாம் நம் இறந்தகாலத்தை மாற்றமுனைந்தால் என்னவாகும் என்பதே இத்திரைப்படம். நினைத்துப்பாருங்கள்; உங்கள் வாழ்க்கையின் மிகமுக்கியமான இறந்தகாலத்துக்கு இப்போது உள்ள நீங்கள் சென்றால் என்ன செய்வீர்கள்? எடுத்துக்காட்டாக ஒரு ஐந்தாண்டுகளுக்குமுன் நீங்கள் ஒருகொலையைச் செய்க...

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

Image
படம் ஆரம்பித்த முதல் 2 நிமிடத்திலேயே என்னைக்கவர்ந்திழுத்த ஒரு படமென்றால் அது கண்டிப்பாக FIGHT CLUB மட்டுமே . அப்படி என்ன FIGHT CLUB-ல் இருக்கிறது  என்கிறீர்களா ?  படத்தின் டைட்டிலை பார்த்ததும் ஏதோ குத்துச்சண்டை சம்பந்தமான படமாக இருக்கும் என்று நினைத்து, வேண்டா வெறுப்பாக இருந்த எனக்கும் ஆரம்பத்தில் அப்படி ஒரு கேள்வி எழுந்தது . முதல்காட்சியிலேயே ஒருவன் , ஒரு சேரில் கட்டப்பட்டிருக்கிறான் . அவனுக்குப்பின்னால் ஒருவன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிற்கிறான் . கட்டப்பட்டிருக்கும் நபர் நம்மிடம் பேச ஆரம்பிக்கிறான் . அவன்தான் படத்தின் ஹீரோ . அவனுக்கு பின்னால் இருக்கும் நபர் டெய்லர் (துணி தைக்கற ஆளு இல்லைங்க . பேரே TYLOR தான் ) எனவும் , அவன் அந்நகரத்தில் இருக்கும் பெரிய பெரிய அடுக்குமாடி அலுவலக கட்டிடங்களில் பாம் வைத்திருக்கிறான் எனவும் , அவையனைத்தும் இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கப்போகிறது என்றும் கூறுகிறான் . இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும் என்றால் , டைலர்க்குத்தெரிந்த விஷயம் எனக்கும் தெரியும் என்கிறான் . இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் மர்லா எனும் பெண்தான் என்று கூறுப...

TRIANGLE - விமர்சனம் + அலசல்

Image
கிறிஸ்டோபர் ஸ்மித் அப்டினு ஒரு டைரக்டர் . அவர் எழுதி இயக்கிய திரைப்படம் தான் இது . இந்த மனுஷனுக்கு விமர்சனம் எழுதறவங்க மேல என்ன காண்டோ தெரியல . எவனுமே விமர்சனம் எழுதிடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி ஒரு படம் எடுத்துருக்காரு . இந்த படத்த எங்க ஆரம்பிக்கறது , எங்க முடிக்கறது , எப்படி எழுதறதுனேத் தெரியலை . இருந்தாலும் இப்படத்தின் வாயிலாக நான் உணர்ந்ததை எழுதுகிறேன் . ஜெஸ் என்பவள் அறிமுகமாகிறாள் . அவளுக்கு ஆட்டிசம் எனும் மனநோய்க்குறைபாடுள்ள ஒரு மகன் இருக்கிறான் . அவள் வீட்டில் காலிங்பெல் அடிக்க , சென்று பார்க்கிறாள் . ஆனால் யாருமில்லை . சிறிதுநேரத்தில் வேறொரு உடையில் தன் மகனிடம் பயப்படவேண்டாம் என்றுகூறி ஆறுதல் சொல்கிறாள் . அடுத்த காட்சியில் ஒரு படகைக்காட்டுகின்றனர் . TRIANGLE எனப்படும் அந்த படகின் உரிமையாளன் கிரேக் . அவனும் ஜெஸ்ஸும் தோழிகள் என்பது அவர்களின் உரையாடல்களிலேயேத் தெரிகிறது . அவளின் மகன் எங்கே எனக்கேட்கும் கிரேக்கின் வேலையாள் விக்டரிம் , பள்ளிக்குச்சென்றிருக்கிறான்  எனக்கூறுகிறாள் . ஆனால் சனிக்கிழமை பள்ளி விடுமுறை நாள் .விக்டர் , கிரேக், கிரேக்கின் தோழி சேல்லி ,அவளி...

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை

Image
சேலத்தில் மீண்டும் ஒரு இளைஞர் காணமல் போயிருப்பது , மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காணமல் போனவரின் பெயர் ,குமார். இதே போன்று மூன்று மாதங்களுக்கு முன் ஒரு இளைஞர் காணமல் போனது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வருடங்களில் , இவருடன் சேர்த்து 7 பேர் காணமல் போயுள்ளனர். காணமல் போனவர்களை பற்றிய ஒரு செய்தியும் , காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்பதுதான் பரிதாபம். ---------------------------------------------------------------------------------------------------- “ ஹேமா ! அந்த பையன பாருடி . உன்னையே வெறிச்சு  பாக்குறான் ” “ ஹே ,சும்மா இருடி. ” “ அவன் பாக்குற பார்வைய பாத்தா , இன்னைக்கு உங்கிட்ட புரபோசல் பண்ணிடுவான் போலருக்கு” “ அச்சோ ! அமைதியா வாடி .ப்ளீஸ் ” தோழி , ஜெயாவிடம் கெஞ்சிக்கொண்டே வந்தாள் ஹேமா. தலைகுனிந்து புத்தகத்தை புரட்டுவதைப்போல அவனைப்பார்த்தாள். ஒரு நொடி பார்வையில் , அத்தனையும் அவளுக்கு வெளிச்சமாயிற்று. ஜெயா சொல்வது போலவே , அந்த ட்ரிம் செய்த மூஞ்சுக்கார இளைஞன் ,அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இவளின் ஒரு நொடி பார்வையை ...