FAST & FURIOUS 7 – சினிமா விமர்சனம்
FAST தொடரில் ஜஸ்டின் அளவிற்கு ஜேம்ஸ் படுவேகமான இந்த சீரிசை எப்படி எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் , அதைக்காட்டிலும் ஜேசன் ஸ்டேதம் வில்லன் கேரக்டரில் என்ன செய்யப்போகிறாரோ என்ற ஆர்வத்துடனும் படம் பார்க்கச்சென்றேன் . மேலும் ONE LAST RIDE என்ற PAPER AD – கள் வேறு இப்படமே இந்த சீரிஸின் கடைசிப் பாகமென்றும் கூறியிருந்தார்கள் . வழக்கமாக எங்கள் ஊர் தியேட்டரில் , அதுவும் ஆங்கிலப்படத்துக்கெல்லாம் ஷோ டைமிற்கு 10 நிமிடம் முன்னால் போனதுமே டிக்கெட் வாங்கிவிடலாம். அந்த நினைப்பிலேயே 11.30 ஷோவுக்கு 11 மணிக்குப்போனால் அப்படியே ஷாக்காகிட்டேன் . தல , தளபதி படம் எதுவும் ரிலிசாகியிருக்கா என்ற சந்தேகம் வேறு . என்னடான்னு பார்த்தா , எல்லாம் என்னைப்போலவே FAST சீரிஸின் , சீரியஸான ரசிகர்கள் . எப்படியோ என் நண்பனின் புண்ணியத்தால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உழ்நுழைந்ததும் ஒன்றைப் புரிந்துகொண்டேன். இந்த தலைமுறையில் திரைப்படம் பார்க்கவரும் பெரும்பாலான இளைஞர்கள் , தங்களின் சந்தோஷத்திற்காக வருகிறார்களோ இல்லையோ , சமூகவலைத்தளங்களின் மத்தியில் , தான் இந்தபடம் பார்த்துக்கொண்டிருப்பதாக சீன் போடுவதற்கே வ...