Posts

Showing posts with the label இலக்கியம்

சிறந்த பக்தன் - சிறுகதை

Image
‘இன்றும் ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன். ‘கடலம்மாவிற்கு நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத் தேற்ற முயன்றான் களமன். அந்த பெரிய மரக்கலம் ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலில் இரண்டு நாட்களாக ஊசலாடிக்கொண்டிருந்தது. இருப்பினும் இன்னும் ஒரு மீனைக்கூட  பிடிக்கமுடியவில்லை. ‘என்ன சிந்தனை முத்தண்ணா?’ ‘எல்லாம் உன் தமக்கையை எண்ணித்தான்.’ ‘அவளுக்கென்ன? பரதவர்களில் வலிமையான உமக்கல்லவா மணம்புரிந்து கொடுத்துள்ளோம். பின் என்ன கவலை?’ ‘நீ அறியாததா? இக்கடல்மாதா தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். பாவம் என்னவள்; பசிப்பிணி எனும் பாவியால் சூழப்பட்டிருப்பாள். ’ ‘இது இறைவனின் திருவிளையாடலேயன்றி வேறெண்ண சொல்ல?’ ‘நம் தலைவர் ஏதோ குற்றம் புரிந்திருப்பாரென்று நினைக்கிறேன்’ ‘என்ன மூடத்தனமிது? நம் பரதவக்குலத்தலைவர் மீது பழிசுமத்தினால் உண்ண ஒருபருக்கை நெல்லும் கிடைக்காது முத்தண்ணா’ ‘இப்போது மட்டும் இங்கே என்ன வாழ்கிறது?’ ‘சரி வா. வீசிய வலையை எடுக்கலாம். ’ என்றவாறே இருவரும் அங்கிருந்து கலத்...

கொலை - சிறுகதை

Image
நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது; ஓருயிரின் அருமைத் தெரியாமல் இருந்தது எவ்வளவு பெருந்தவறு ! ஏன் அதைச் செய்தேன் என்று யோசித்தால் ஒருபக்கம் சூழ்நிலை எனும் காரணி இருப்பினும் மறுபுறம் அதை நான் என் முழுமனதுடன்தான் செய்துள்ளேன். சிறிதுநேரத்திற்குமுன் இதே இடம்; இதே அறை; இதே இருளை விரட்டும் மின்குழல் விளக்கு. ஆனால் சிறு மாற்றம் , மனிதர்களுக்காக கணக்கிடப்படும் இல்லாவொன்றான காலமும் நானும் தான். அப்போதைக்கும் இப்போதைக்குமான என் சிந்தனை வெவ்வேறு. எனக்குள் ஒரு மாற்றம். நல்லதா? கெட்டதா ? எனப்பகுத்தறியக் கடினமான மாற்றம். ஆனால் இம்மாற்றாத்தால் எனக்கு நன்மையோ இல்லையோ, என்னைச் சுற்றியிருப்பவைகளுக்குச் சிறிதேனும் நன்மையைத் தரும் என எண்ணுகிறேன். என் ஆசைப் பூனை; இதோ, என் மடிமேல் இறுகிய கம்பளிப் போர்வையில் சுருண்டு படுத்திருக்கும் இந்த பூனையால்தான் எல்லாம். அது மட்டும் அப்போது சத்தமிடவில்லையெனில் என்மனம் இவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்காது. என்வேலைகளை முடித்துவிட்டு அறையில் நுழையும்போது இதே பூனைதான் கத்தியது. ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் என்னையும், அறையின் மேற்பகுதியையும் பார்த்து, தொடர்ந்தா...

PERFUME – ஒரு பார்வை

Image
THE STORY OF A MURDERER இப்படத்தின் இயக்குநர் டாம் டய்க்வர் பற்றிக்கூறவேண்டுமெனில் அவரும் ஒரு கிறிஸ்நோலன் போன்றவரே . சிறுவயதில் 8 mm கேமராவைத்தூக்கிக்கொண்டு படம் எடுக்கிறேன் என்று சுற்றி இருந்த நண்பர்களை பாடுபடுத்தியது   ; முதல் குறும்படத்தை சினிமா நண்பர் ஒருவரின் துணையுடன் வெளியிட்டது ; அதன்பின் நண்பர்களிடம் கடன்வாங்கி டெட்லி மரியாவை இயக்கி நல்ல இயக்குநர் என்று பேரெடுத்து வாங்கிய கடனை கட்டமுடியாமல் தவித்தது ; அடுத்து மூன்றாவது படமான ரன் லோலா ரன்னை எடுத்து கடன் பிரச்சனை உட்பட அனைத்தையும் தீர்த்து கொஞ்சம் செட்டிலானது போன்ற விஷயங்களைக் கவனித்தால் அவருடைய வாழ்க்கையை வைத்தே மிகப்பெரிய ஒரு தன்னம்பிக்கைத்தரும் FELLGOOD திரைப்படத்தை எழுதி , இயக்கிவிடலாம் . இத்தனைப் பிரச்சனைகளையும் சமாளித்து தலைவர் இயக்கிய ஒரு அட்டகாசமான ப்ளாக்பஸ்டர் சைக்கலாஜிக்கல் திரில்லர் தான் PERFUME . பேட்ரிக் சுய்ஸ்கின்ட் எனும் ஜெர்மானிய எழுத்தாளரால் 1985 எழுதப்பட்டு வெளிவந்த தஸ் பர்ஃபூம் (DAS PARFUM) எனும் நாவல் உலகமெங்கும் மெகாஹிட்டானது . அந்த நாவலைப்படித்தபின் குப்ரிக் உட்பட உலகின் பல மு...

தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை

Image
செவ்வாயின் நேரப்படி மணி மாலை 4.30ஐத்தொட்டதும் , தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேறி , புதிதாய்  வாங்கியிருக்கும் தன்னுடைய ஹைட்ராலிக்ஸ் காரினுள் புகுந்தான் சிவராஜன் . காரினுள் இருக்கும் தொடுதிரையில் டார்கெட் எனும்கேள்விக்கு ரெட் மௌன்டைனில் இருக்கும் தன்னுடைய வீட்டினைக் குறிப்பிட்டு ஆட்டோபைலட் மோடில் பறக்க ஆரம்பித்தான் . பூமியில் ஆக்ஸிஜன் உற்பத்திசெய்யும் அவனுடைய நிறுவனம் செவ்வாயிலும் தனது காலடியை எடுத்துவைத்தது . ஏற்கனவே செவ்வாயில் குடியேறிவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் , செவ்வாயின் நிலவுகளில் ஒன்றான தைமஸில் மனிதர்கள் குடியேறத்தேவையான வசதிகளை நிறுவிக்கொண்டிருந்தார்கள் . அதன் ஒரு அங்கமாக அங்கு ஆக்ஸிஜனை உற்பத்திச்செய்து நிலைநிறுத்தும் பணி இவன் வேலைசெய்யும் கம்பனி வாங்கியது . ஏற்கனவே செவ்வாயில் அவன் செய்திருந்த சிறப்பான பணியால் அவனை டீம்ஹெட்டாக மாற்றி , தைமஸிற்கு அனுப்பியிருந்தார்கள் . இன்னும் பத்து நிமிடங்களில் அந்தகார்  5000 கிலோமீட்டரைக்கடந்து அவனின் வீட்டினைச்சென்றடைந்துவிடும் . நாளை பொங்கல் என்பதால் , டிடிஎச்சில் ரிலிஸாகும் புதுத்திரைப்படத்தின் சந்தாவை க...

பேய்க்கதை - சிறுகதை

Image
‘ மச்சி . நா பேய பாக்கனும்டா . ’ என்ற ஹரியை அதிசயித்துப்பார்த்தான் ராம் . ‘என்னடா திடீர்னு ? பைத்தியம் பிடிச்சிடுச்சா ?’ ‘இல்ல மச்சி . கண்டிப்பா நா பார்த்தே ஆகனும் .’ இனி ஹரியிடம் வாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது ராமுக்குத்தெரியும் . ‘அப்படினா உனக்கு ஏத்த சரியான ஆளு பேயடிச்சாமி தான்டா . அந்தாளபோயி பாரு . அவரு உனக்கு எல்லாம் தெளிவா சொல்லுவாரு .’ என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் ராம் . ஹரிக்கு இந்த எண்ணம் கடந்த 3 நாட்களாகத்தான் இருந்தது .பேயைப்பார்க்க அவன் எதற்கு விரும்பினான் என்று அவனுக்கேத்தெரியவில்லை . ஆனால் பேய் எப்படி இருக்கும் என்று பார்த்தேயாகவேண்டும் .ராம் சொன்ன பேயடிச்சாமியைப்பார்க்க கிளம்பினான் .எங்கும் வனம் . இருட்டு வேறு பயமுறுத்தியது . எங்கோ தூரத்தில் ஒரு கொடூரமான மிருகத்தின் உறுமலோ இறுமலோ இவனை மேலும் திகிலாக்கியது . ‘மச்சி , அவர சாய்ங்காலத்துலதான் பாக்க முடியும் .எல்லையோரத்துல இருக்க காட்டுல தான் அவரோட இடம் இருக்குது . பகல்ல அவரு வேற எங்கயோ போயிடுவாருனு சொல்லிருக்காங்க .’ ‘எங்க போவாரு மச்சி ?’ இருட்டு என்றால் பயம...

CN’S - INCEPTION – ஒரு பார்வை

Image
“ FILMS ARE SUBJECTIVE – WHAT YOU LIKE , WHAT YOU DON’T LIKE . BUT THE THING FOR ME THAT IS ABSOLUTELY UNIFYING IS THE IDEA THAT EVERYTIME I GO TO THE CINEMA AND PAY MY MONEY AND SITDOWN AND WATCH A FILM GO UP ONSCREEN , I WANT TO FEEL THAT THE PEOPLE WHO MADE THAT FILM THINK IT’S THE BEST MOVIE IN THE WORLD , THAT THEY POURED EVERYTHING INTO IT AND THEY REALLY LOVE IT . WHETHER OR NOT I AGREE WITH WHAT THEY’VE DONE , I WANT THAT EFFORT THERE – I WANT THAT SINCERITY . AND WHEN YOU DON’T FEEL IT , THAT’S THE ONLY TIME I FEEL LIKE I’M WASTING MY TIME AT THE MOVIES ” -      CHRISTOPHER NOLAN காமிக்ஸ் தழுவலும் இல்லை . நாவல் அடாப்சனும் இல்லை . வீடியோகேம்களை கொண்டும் உருவாக்கப்படவில்லை . தொலைக்காட்சித்தொடர்களைத்தழுவியும் எடுக்கப்படவில்லை . ஆனால் இன்செப்ஷன் மேற்கண்ட தழுவல்களில் அந்த சம்மரில் வந்த அத்தனைப்படங்களையும் ஊதித்தள்ளி வெற்றிக்கொடி நாட்டியது . இத்தனைக்கும் ஒரு சின்ன விஷயத்தை வைத்து 830 மில்லியன் டாலர் சம்பாதிப்பது என்பத...