Posts

Showing posts with the label புனைவுகள்

சிறந்த பக்தன் - சிறுகதை

Image
‘இன்றும் ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன். ‘கடலம்மாவிற்கு நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத் தேற்ற முயன்றான் களமன். அந்த பெரிய மரக்கலம் ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலில் இரண்டு நாட்களாக ஊசலாடிக்கொண்டிருந்தது. இருப்பினும் இன்னும் ஒரு மீனைக்கூட  பிடிக்கமுடியவில்லை. ‘என்ன சிந்தனை முத்தண்ணா?’ ‘எல்லாம் உன் தமக்கையை எண்ணித்தான்.’ ‘அவளுக்கென்ன? பரதவர்களில் வலிமையான உமக்கல்லவா மணம்புரிந்து கொடுத்துள்ளோம். பின் என்ன கவலை?’ ‘நீ அறியாததா? இக்கடல்மாதா தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். பாவம் என்னவள்; பசிப்பிணி எனும் பாவியால் சூழப்பட்டிருப்பாள். ’ ‘இது இறைவனின் திருவிளையாடலேயன்றி வேறெண்ண சொல்ல?’ ‘நம் தலைவர் ஏதோ குற்றம் புரிந்திருப்பாரென்று நினைக்கிறேன்’ ‘என்ன மூடத்தனமிது? நம் பரதவக்குலத்தலைவர் மீது பழிசுமத்தினால் உண்ண ஒருபருக்கை நெல்லும் கிடைக்காது முத்தண்ணா’ ‘இப்போது மட்டும் இங்கே என்ன வாழ்கிறது?’ ‘சரி வா. வீசிய வலையை எடுக்கலாம். ’ என்றவாறே இருவரும் அங்கிருந்து கலத்...

THE BUTTERFLY EFFECT – சினிமா விமர்சனம்

Image
என்.டி.ஆரின் நானக்கு ப்ரேமதோ திரை விமர்சனத்தை எழுதும்போது இடையில் இத்திரைப்படத்தைப் பற்றி எதேச்சையாக குறிப்பிட்டேன். இந்த திரைப்படம் நினைவுக்கு வந்ததும் உடனே இந்தபடத்தைப் பற்றி இத்தனை நாள் எழுதாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம்தான் தோன்றியது. அப்படி ஒரு ஸ்பெசல் ட்ரீட்மென்ட் தான் இத்திரைப்படம். உங்களுக்கு பல சர்ப்பரைஸ்களைக்கொடுக்கும் வல்லமை வாய்ந்தது இந்த பட்டர்ப்ளை எஃபெக்ட். ஏற்கனவே நானக்கு ப்ரேமதோ திரைப்படத்தைப் பற்றிய பதிவிலே கேயாஸ் தியரியைப்பற்றியும் அதன் கோட்பாடுகளில் ஒன்றான பட்டர்ஃப்ளை எஃபெக்ட் பற்றியும் பார்த்தோம். அந்த கான்செப்டை அப்படியே வைத்து ஒரு பக்காவான திரைக்கதையை எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் இந்த திரைப்படம். கேயாஸின்படி குத்துமதிப்பான நிகழ்காலம் குத்துமதிப்பற்ற எதிர்காலத்தை உருவாக்காது என்பதைவைத்து நாம் நம் இறந்தகாலத்தை மாற்றமுனைந்தால் என்னவாகும் என்பதே இத்திரைப்படம். நினைத்துப்பாருங்கள்; உங்கள் வாழ்க்கையின் மிகமுக்கியமான இறந்தகாலத்துக்கு இப்போது உள்ள நீங்கள் சென்றால் என்ன செய்வீர்கள்? எடுத்துக்காட்டாக ஒரு ஐந்தாண்டுகளுக்குமுன் நீங்கள் ஒருகொலையைச் செய்க...

78 ரூபாய் – சிறுகதை

Image
‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்.’ அவரின் குரல் என்னை ஈர்த்தாலும் என்னுடைய அப்போதைய நிலை அவர் கூறுவதை ஒன்றமறுத்தது. ஒரு அவசரகாரியமாக வெளியில் கிளம்பிய எனக்கு மழையின் வடிவில் தடை ஏற்பட ஒரு வீட்டின் முற்றத்தில் அடைக்கலமானேன். ஓரிரு நிமிடங்களில் அவரும் தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் நனைந்தும் நனையாமலும் நான் இருக்குமிடத்தை அடைந்தார். அவ்வீட்டின் உரிமையாளர் எனக்கு சொந்தமென்பதால் அவருடன் துளிகூட ஈடுபாடில்லாமல் மழையைப் பற்றிய மொன்னையான விவாதங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் வந்து சேர்ந்தார். அவரின் காக்கி பேண்டும் சர்ட்டும் அவர் வொயர்மேன் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது. ‘புதுசா வந்துருக்கிங்களா சார்’ எனது அருகிலிருந்த வீட்டின் உரிமையாளன் அவரிடம் கேட்டான். ‘ஆமா தம்பி. அத்தனூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர். அதுக்குமுன்னாடி…..’ என்று ஆரம்பித்து பல்வேறு விதமான அனுபவங்களைக் கூறிக்கொண்டே...

தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை

Image
செவ்வாயின் நேரப்படி மணி மாலை 4.30ஐத்தொட்டதும் , தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேறி , புதிதாய்  வாங்கியிருக்கும் தன்னுடைய ஹைட்ராலிக்ஸ் காரினுள் புகுந்தான் சிவராஜன் . காரினுள் இருக்கும் தொடுதிரையில் டார்கெட் எனும்கேள்விக்கு ரெட் மௌன்டைனில் இருக்கும் தன்னுடைய வீட்டினைக் குறிப்பிட்டு ஆட்டோபைலட் மோடில் பறக்க ஆரம்பித்தான் . பூமியில் ஆக்ஸிஜன் உற்பத்திசெய்யும் அவனுடைய நிறுவனம் செவ்வாயிலும் தனது காலடியை எடுத்துவைத்தது . ஏற்கனவே செவ்வாயில் குடியேறிவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் , செவ்வாயின் நிலவுகளில் ஒன்றான தைமஸில் மனிதர்கள் குடியேறத்தேவையான வசதிகளை நிறுவிக்கொண்டிருந்தார்கள் . அதன் ஒரு அங்கமாக அங்கு ஆக்ஸிஜனை உற்பத்திச்செய்து நிலைநிறுத்தும் பணி இவன் வேலைசெய்யும் கம்பனி வாங்கியது . ஏற்கனவே செவ்வாயில் அவன் செய்திருந்த சிறப்பான பணியால் அவனை டீம்ஹெட்டாக மாற்றி , தைமஸிற்கு அனுப்பியிருந்தார்கள் . இன்னும் பத்து நிமிடங்களில் அந்தகார்  5000 கிலோமீட்டரைக்கடந்து அவனின் வீட்டினைச்சென்றடைந்துவிடும் . நாளை பொங்கல் என்பதால் , டிடிஎச்சில் ரிலிஸாகும் புதுத்திரைப்படத்தின் சந்தாவை க...

பேய்க்கதை - சிறுகதை

Image
‘ மச்சி . நா பேய பாக்கனும்டா . ’ என்ற ஹரியை அதிசயித்துப்பார்த்தான் ராம் . ‘என்னடா திடீர்னு ? பைத்தியம் பிடிச்சிடுச்சா ?’ ‘இல்ல மச்சி . கண்டிப்பா நா பார்த்தே ஆகனும் .’ இனி ஹரியிடம் வாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது ராமுக்குத்தெரியும் . ‘அப்படினா உனக்கு ஏத்த சரியான ஆளு பேயடிச்சாமி தான்டா . அந்தாளபோயி பாரு . அவரு உனக்கு எல்லாம் தெளிவா சொல்லுவாரு .’ என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் ராம் . ஹரிக்கு இந்த எண்ணம் கடந்த 3 நாட்களாகத்தான் இருந்தது .பேயைப்பார்க்க அவன் எதற்கு விரும்பினான் என்று அவனுக்கேத்தெரியவில்லை . ஆனால் பேய் எப்படி இருக்கும் என்று பார்த்தேயாகவேண்டும் .ராம் சொன்ன பேயடிச்சாமியைப்பார்க்க கிளம்பினான் .எங்கும் வனம் . இருட்டு வேறு பயமுறுத்தியது . எங்கோ தூரத்தில் ஒரு கொடூரமான மிருகத்தின் உறுமலோ இறுமலோ இவனை மேலும் திகிலாக்கியது . ‘மச்சி , அவர சாய்ங்காலத்துலதான் பாக்க முடியும் .எல்லையோரத்துல இருக்க காட்டுல தான் அவரோட இடம் இருக்குது . பகல்ல அவரு வேற எங்கயோ போயிடுவாருனு சொல்லிருக்காங்க .’ ‘எங்க போவாரு மச்சி ?’ இருட்டு என்றால் பயம...

அனிமேஷன் திரைப்படங்கள் – ஒரு பார்வை

Image
பொதுவாக அனிமேஷன் படங்கள் என்றாலே குழந்தைகளுக்கானது என்றவொரு அபிப்ராயம் , அனிமேஷன் படம் பார்க்காதவர்களுக்கு உண்டு . காரணம் , கார்ட்டுன் தொலைக்காட்சிகளில் போடும் மொக்கையான அனிமேஷன் சீரயல்களைச் சொல்லலாம் . ஆனால் அந்த பார்வையெல்லாம் மேலைநாடுகளில்  எப்போதோ வழக்கொழிந்துவிட்டது  . அனிமேஷன் படங்களுக்கான வரவேற்பையும் வசூலையும் பார்த்தாலே நமக்குத்தானாக புரியும் . நம் இந்தியாவிலும் இத்தகைய  மனோபவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது .  இப்போதெல்லாம் எங்கள் சேலத்தில்கூட ஆங்கிலத்தில் ரிலிசாகும் அனிமேசன் படங்கள் , அமெரிக்காவில் ரிலிசாகும் அதேநேரத்தில் ரிலிசாகிறது . FROZEN எனும் அனிமேசன் படம் , நோலனின் பெரும்ஹிட்டான டார்க்நைட் ரைசஸின் வசூலையேத் தூக்கிச்சாப்பிட்டது . TOYSTORY 3 ஆம் பாகம் 1 பில்லியன் டாலர் வசூல் செய்து சினிமா உலகையே வாயைப்பிழக்கவைத்தது . ஒருசில ஆண்டுகளில் வெளிவந்த அனிமேசன் திரைப்படங்கள் , அந்தந்த காலங்களில் வந்த மாபெரும் இயக்குநர்களின் வசூல்களையெல்லாம் தூக்கி அலேக்காய் சாப்பிட்டு ஏப்பமெல்லாம் விட்டிருக்கிறது . இதற்கெல்லாம் என்னகாரணமாக இருக்கும் என  என் கை,கா...

Mr.PEABODY & SHERMAN – சினிமா விமர்சனம்

Image
டைம் ட்ராவல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ? நாமும் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து  மண்டையைக்குடைந்து கொண்டேதானிருக்கிறோம் . இன்னும் காலப்பயணம் என்பது கனவுப்பயணமாகவே இருக்கிறது . (17-ஆம் நூற்றாண்டு என்பது மேலைநாட்டினவர்க்கு . நமக்கெல்லாம் மஹாபாரதத்திலேயே ஒரு இன்டர்ஸ்டெல்லர் கிளைக்கதை இருக்கிறது .) சரி , அம்மாதிரியான விஷயங்களைத்திரைப்படத்தில் பார்த்து சிலாகிப்பது தான் நம்விதி என்றால் யாரால் மாற்றமுடியும் . இந்த படம் டைம்ட்ராவலை அடிப்படையாகக்கொண்ட ஒரு அனிமேஷன் , அட்வெஞ்சர் , பேமிலி ட்ராமா . இது நான் எழுதும் இரண்டாவது அனிமேஷன்  திரைப்படம் என தினைக்கிறேன் . ஏற்கனவே டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு THE TIME TRAVELER’S WIFE , INTERSTELLAR ஆகிய திரைப்படங்களைப்பார்த்துள்ளோம் . இந்த படத்தில் நம்மை அசத்தும் விஷயம் என்னவென்றால் , படத்தில் காலப்பயணம் செய்யும் இடங்களும் சந்திக்கும் மனிதர்களும்தான் . அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்கிறீர்களா ? எகிப்திய பாரோ டட்டான்க் ஆமன் , மோனலிசா புகழ் ஓவியர் லியானர்டோ டாவின்ஸி , பிரஞ்சுப்புரட்சியின்போது பிரான்ஸ் அரசியான மேரி அன்டோனன்ட...