NTR’s 25- NANNAKKU PREMATHO – சினிமா விமர்சனம்
(முன்குறிப்பு – இக்கட்டுரை திரைப்படம் வந்தபோது எழுதியது. வேலைப்பளுவின் காரணமாக போஸ்ட் செய்ய இயலவில்லை. இது கொஞ்சம் பெரிய கட்டுரை. ஆனால் போர் அடிக்காமல் செல்லும் என நினைக்கிறேன். எனக்கு கட்டுரையெல்லாம் வேண்டாம், திரைப்படத்தைப்பற்றி மட்டும் பார்த்தால் போதும் என்பவர்கள் கடைசி 6 பாராவை மட்டும் படியுங்கள்.) தெலுகு சினிமா என்றாலே நம் ஊர் ஆட்களுக்கு சிறிது இளக்காரம் என்றே சொல்லலாம். ‘என்னய்யா படமெடுக்கறாய்ங்க? கிளிப்பச்ச கலர் சட்ட, கடல்நீல கலர் ஃபேண்டுல அவிய்ங்கள பாத்தாலே சிரிப்பு தாங்கல. இது போதாதுனு பண்ணுவானுங்க பாரு ராவடி, குதிரைய படுக்கப்போட்டு வீலிங் அடிக்கறது, தொடய தட்டி முன்னாடி போற ரயில்ல ரிவர்ஸ்ல போக வைக்கறதுனு யப்பா! ஆளவிடுங்கடா சாமி’ என்பதே பெரும்பாலோனோர் தெலுகு சினிமாக்களைப் பற்றிய பொது அபிப்ராயமாக இருக்கும். காரணம் நம் ஆட்கள் தெலுகு திரைப்படங்களில் இதுமாதிரி வரும் அட்டுக் காட்சிகளை மட்டும் காட்டிவிட்டு இதுதான் தெலுங்கு படம் என்ற முடிவுக்கு உடனுக்குடன் வந்துவிடுவதே. என்னிடம் யாராவது வந்து பக்காவான கமர்ஷியல் படம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்க்கவேண்டும...