பிசாசு – சினிமா விமர்சனம்
ஹெர்குல் பொய்ரெட் . அகதா கிறிஸ்டி என்ற ஆங்கில க்ரைம் கதை மன்னனின் ஆஸ்தான கேரக்டர் தான் ஹெர்குல் பொய்ரெட் . அகதா கிறிஸ்டி , பொய்ரெட்டை ஒரு பொறியுருண்டை மாதிரி வடிவமைத்திருப்பார் . ஆனால் அவர் துப்பறிவதைப் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாய் இருக்கும் . 1926 –ல் வெளியான அகதாவின் புகழ்பெற்ற ஒரு நாவல் , THE MURDER OF ROJER ACKROYD . ஒரு கொலையைக்கண்டுபிடிக்க வரும் பொய்ரெட் , அவருக்கு உதவும் ஒரு டாக்டர் என கதை பரபரவெனச்செல்லும் . ஆனால் , கடைசியில் வைப்பார் பாருங்கள் ஒரு ட்விஸ்ட் . அந்த ட்விஸ்ட்டாலேயே அந்த நாவல் இன்றளவும் உலக க்ரைம் நாவல்களில் 5-ஆம் இடத்தில் இருக்கிறது . 2004 – ஆம் ஆண்டு , ஹாலிவுட் விக்ரம் (சாரி ! கோலிவுட் கிறிஸ்டின்பேல்னு வேனும்ணா விக்ரம சொல்லலாம் .) கிறிஸ்டின்பேலின் நடிப்பில் , ப்ராட் ஆன்டர்சன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படம் THE MACHINIST . இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்ட பேல் , தன் எடையை இழந்துகொண்டே வருவார் . திடிரென ஒரு உருவம் அவரை மிரட்டிக்கொண்டே இருக்கும் . பேலுக்கு பலவிதமான மனஉலைச்சல்கள் அந்த உருவத்தால் ஏற்படும் . அந்த உருவம் தன்னைக்கொல்ல ந...