வதந்திகள் – சிறுகதை
‘ அவனா ? கண்டிப்பா சான்ஸே இல்ல ’ என்றேன் அழுத்தத்துடன் . ‘ அவனே தான் . நா என்னட ரெண்டு கண்ணால பாத்தேன் . ரெண்டு காதாலயும் கேட்டேன் . ’ என்னால் நம்பமுடியவில்லை .அவன் மிகவும் நல்லவன் . அவனுக்கு அவனுடைய தந்தையை அவ்வளவாகப் பிடிக்காது என்பது உண்மை தான் . அவனுக்கு மட்டுமல்ல , யாருக்கும் அவனுடைய தந்தையின் உண்மையான முகத்தைக் கண்டால் பிடிக்காது . வீட்டிலேப் புலி , ஊருக்குப் பசு என இரட்டை வேடக்கபடதாரி . அவரைப் பொறுத்தவரை , அவருடைய வீட்டில் அவர்தான் எல்லாம் தெரிந்தவர் . அவர் பேச்சைக்கேட்கவில்லை என்றால் அவ்வளவு தான் . திட்டித்திட்டியே சாகடிப்பார் . நாம் என்ன சொல்லவருகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் , அவராக ஒன்றை கற்பனை செய்து , அதை அவரே ஏற்றுக்கொண்டு ஊரெல்லாம் பரப்பி விடுவார் . பலமுறை அவருக்கும் பிரபுவுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டதை நானே பார்த்துள்ளேன் . ஆனால் இம்முறை பிரபு தன் தந்தையை அடித்துவிட்டான் என்ற செய்தியை நம்பமுடியவில்லை . ‘சும்மா அரகுரயாப் பாத்துட்டு உளராத பிரியா .’ பிரியா . என் தங்கை . +2 முடித்து இரண்டுவருடமாய் வீட்டில் இருப்பவள் . சுத்தஜாதகமாய் பிறந்து தொலைத்ததால் ...