Posts

காதல் காதல் – தொடர்கதை – 4

Image
முதல் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள் . இரண்டாம் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள் . மூன்றாம் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள் . அன்றைய இரவு , கொசு கடிப்பதுகூட அழகாய் இருந்தது மதனுக்கு . படுக்கையில் உருண்டு புரண்டு பாழ்படித்துக்கொண்டிருந்தான் . வீட்டில் அனைவரிடமும் சம்பந்தமே இல்லாமல் சந்தோஷமாய்ப்பேசினான் .அவனின் அதீத சந்தோஷத்தின் காரணம் புரியவில்லை . கண்ணனிடம் ஏற்கனவே  பஸ்ஸினுள் நடந்த நிகழ்ச்சிகளை தெரிவித்திருந்தான் . ‘மச்சி ! நாளைக்கு மார்னிங் அவ வர்ற பஸ்ல வந்துடாத . அப்படி போனா சப்புனு முடிஞ்சிடும் . அவள ஏங்க வைக்கனும் . அப்போதான் ஈவ்னிங் மீட் பண்றப்ப , செம டச்சிங்கா இருக்கும் ’ என்ற கண்ணனின் அறிவுரை  , மதனை வாட்டினாலும் கஷ்டப்பட்டாவது காலையில் அவளைத்தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான் . ஆனாலும் முடியவில்லை . மறுநாள் காலை 5 மணிக்கே குளித்து ரெடியாகி விட்டான் . கண்ணனின் பேச்சைக்கேட்பதா ? கன்னியின் பேச்சைக்கேட்பதா ? என்று குழப்பிக்கொண்டிருந்தான் . 7 மணிக்கே பஸ் ஸ்டாப்பில் வந்துநின்றான் . தயிர்க்கூடையைத்தூக்கி கொண்டு பால் மார்க்கெட் செல்வத...

காதல் காதல் – தொடர்கதை – 3

Image
முதல் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள் . இரண்டாம் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள் அன்றைய நாள்முழுதும் மதன் , கண்ணனிடம் அன்றுநடந்த நிகழ்ச்சிகளை மிகைப்படுத்திக் கூறியவாறே இருந்தான் . இவனின் காதலைப்பற்றி கேள்விபட்ட தேவி , மதனைவிட அதீத சந்தோஷத்தில் மிதந்தாள் . தனக்குப்பிறகு மதனைப்பார்த்துக்கொள்ள ஒருத்தி கிடைத்துவிட்டாள் என்கின்ற நினைப்பே அவளுக்கு ஒரு பெரும்சுமையையும் கவலையும் தீர்த்துவைத்தது போலிருந்தது . அவளும் தனக்குத்தெரிந்த டிப்ஸ்களை மதனிடம் கூறிக்கொண்டே இருந்தாள் . ‘டேய் மதன் . அவளுக்கு உன்ன பிடிச்சிருக்கு . அதுனால தான் அவ உன்ன திரும்பி பாத்தா . இனிமேல் தான் ஜாக்ரதையா இருக்கனும் . எப்பவும் பொண்ணுங்க கிட்ட கோவத்தமட்டும் காட்டிடாத . இனிமேல் இந்த மாதிரி கன்றாவியா ட்ரஸ் பண்ணாத . நல்ல டீசென்டா , ஜென்யூனா ட்ரஸ் பண்ணு . இது என்னடா பெர்ஃப்யூம் ? நல்லாவே இல்ல . பார்க் அவென்யூ ஸ்மெல்லாம் எந்த பொண்ணுக்கும் பிடிக்காது . ஃபா மாத்திக்கோ . குங்குமம் இட்டா உனக்கு எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா ? இனிமேல் குங்குமம் வச்சிகிட்டே வா . அப்றம் தப்பித்தவறி தம் அடிச்சிட்டு அவ பக்கம் ...

காதல் காதல் – தொடர்கதை - 2

Image
முதல் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள் ஓய் குயில்களே ! உங்களுக்கு போட்டியாக ஒருத்தி வந்துவிட்டாள் என்று உரக்கக்கூற நினைத்த மதனுக்கு  ‘அண்ணா’ என்ற வார்த்தை நாராசமாய் அவன் காதில் ஒலித்துவிட்டது . இவ்வளவு அழகான நாளில் இப்படியொரு கொடூரமான வார்த்தையைக்கேட்க கூடும் என்று அவன் அறிந்திருந்தால் நிச்சயம் மாலைவேளையில் அந்த பேருந்தினுள் ஏறியிருக்கவேமாட்டான் . அவனுக்குள் சுர்ரென்று கோவம் உச்சந்தலைக்குள் ஏறியிருந்தது . ‘அண்ணா ப்ளீஸ் . தள்ளி நில்லுங்க’ என்று மறுபடியும் அவள் கூறியபோது வெடித்தே சிதறிவிட்டான் . ‘யாருடீ உனக்கு அண்ணன் ? அப்படியே பளார்னு விட்டன்னு வச்சிக்கோ , அவ்ளோதான் .’ ‘நா என்ன தப்பு பண்ணேன் . எதுக்கு திட்ரிங்க ’ என்று கண்கலங்கியவாறே அவள் கேட்டாள் . பாவம் , அந்த 18 வயது மங்கைக்கு கல்லூரியின் முதல்நாளன்று யாரென்றே தெரியாத ஒருவனிடம் திட்டு வாங்கியது அதிர்ச்சியையும் சிறிது கலக்கத்தையும் உண்டாக்கிவிட்டது . ‘நீ ஒரு வெங்காயமும் பண்ணல . எல்லாம் என் தப்பு தான் . இன்னொரு தடவ அண்ணானு சொன்ன , மூஞ்சு மொவரையெல்லாம் பேத்துடுவேன் .’ என்றவாறே திரும்பி வேகவேகமாய் எதி...

காதல் காதல் – தொடர்கதை - 1

Image
‘மச்சி !  ஒரு பொண்ணு பஸ்ல உன்ன பாக்குதுனு வச்சிக்கோயேன் . அவள நீ அடிச்சி போட்ட மாதிரி பாக்கனும் . அவ பாக்கறப்போலாம் நீ அவ கண்ணையே பாத்துட்டு இருக்கனும் . தப்பித்தவறி அவ பாக்கற நேரத்துல நீ அவள பாக்காம வேற எங்கயாச்சும் வேடிக்க பாத்தனு வச்சிக்கோ , அவ்ளோ தான் . அதுக்கப்றம் நீ தலகீழா நின்னா கூட அவ உன்ன பாக்கமாட்டா . அதே மாதிரி அவ கண்ண மட்டும்தான் பாக்கனும் . வேற எங்கயும் பாக்கக்கூடாது . முக்கியமா அவ கழுத்துக்கு கீழ தப்பித்தவறி கூட உன் கண்ண ஓடவிட்றாத  . ’ என்று தன்னுடைய அட்வைஸ்களை அள்ளிவீசினான் கண்ணன் . இந்த அறிவுரைகளில் ஒருவார்த்தை விடமால் மனப்பாடம் செய்துகொண்டிருந்த மதனுக்கு காதல் வந்துவிட்டது என்று தனியாக சொல்லவேண்டுமா ? ‘அப்றம் மச்சி ’ கண்ணனின் அடுத்தகட்ட அட்வைஸ்களில் மெய்யுருகி தவித்தவாறே கேட்டான் மதன் . ‘அப்பறம் , பொண்ணுங்களுக்கு பஸ்ல கமெண்ட் அடிக்கறது ரொம்ப பிடிக்கும் . ஆனா பிடிக்காதமாதிரியே சிணுங்குவாங்க . அட் த சேம் டைம் , அவங்கள கலாய்க்கற மாதிரி கமெண்டக்கூடாது . அவங்க கிட்ட நாம கெஞ்சுறமாதிரி தான் பேசனும் .’ ‘அது எப்படி மச்சி ?’ ‘அது ரொம்ப சிம்பிள் ...

ஐ – சினிமா விமர்சனம்

Image
நேற்று , ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்கள் , இப்படம் 1000 கோடி வசூல் செய்துவிடும் என்று கூறியிருந்தார் . படம் அடுத்தவாரம் சீனாவில் வேறு மிகப்பிரம்மாண்ணடமாக ரிலிசாகப்போவதாக ஏராளமான தகவல்கள் வேறு .  200 கோடிக்கு மேல் பட்ஜெட் , விக்ரமின் கடுமையான உடல் உழைப்பு , ஏ.ஆர்.ரஹ்மானின் மெர்சலான பாடல்கள் இதையெல்லாம் விட எங்கள் தானைத்தலைவர் பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு என பயங்கர எதிர்பார்ப்பு . இது போதாதென்று நான் வேறு ஐ படத்தின் கதை என்று ஒரு பதிவை வேறு எழுதிவைத்து தொல்லைத்ததால் வேறுவழியேயின்றி படத்திற்கு செல்லவேண்டியதாய் போயிற்று . நல்லவேளையாக தியேட்டர் மேனஜர் ஒருவரைப்பிடித்து , நேற்றே டிக்கெட் எடுத்தாயிற்று . இருந்தாலும் ஒரு படத்தின் மார்க்கெட் அல்லது நடிகரின் நிலவரம் என்ன என்பதை பிளாக்கில் டிக்கெட் வாங்கும்போது தெரிந்துகொள்ளலாம் . எனக்குத்தெரிந்து கத்தி படத்திற்கு 200 ரூபாய் டிக்கெட் , வீரம் படத்திற்கு 200 ரூபாய் டிக்கெட் . கிட்டத்தட்ட தலயும் தளபதியும் ஒரே லெவலில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்தது . சரி , ஷங்கர் மற்றும் விக்ரமின் மார்க்கெட் எந்த அளவு இருக்கும் என்று...

CN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்

Image
இதுவரை வந்த பேட்மேன் படங்களில் , ஏன் நோலன் படங்களிலேயே , பயங்கர வேகமானதும் , அட்டகாசமான விசுவல்களும் , அற்புதமான கேரக்டர்களையும் கொண்ட படம் என்றால் , அது டார்க் நைட் தான் . இப்படத்தைப்பற்றிப் பார்க்கும்முன்  என் சிறுவயதில் நடந்த நிகழ்வு ஒன்று ஞாபகம் வருகிறது 2008 ன் ஜூலை மாதம் . அப்போதே நானெல்லாம் HBO மற்றும் STAR MOVIES சேனல்களின் அதிதீவிர விசிறி . அந்த நாட்களில் நான் பார்க்கும் படங்கள் எல்லாம் எந்தமாதிரி என்றால் , ஒன்று தாருமாறான சண்டைக்காட்சிகள் இருக்கவேண்டும் . இல்லையெனில் அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கவேண்டும் . அப்போதெல்லாம் HBO வில் அடிக்கடி ஆதிகால பேட்மேன் படங்கள் போடுவார்கள் . அதில் என்னை ஓரளவு ஈர்த்த படம் என்றால் , பெங்குயின் வில்லனாக வரும் அந்த BATMAN RETURNS படம் மாத்திரமே ! அதற்கு காரணம் , சிம்பிள் . பென்குயின் மட்டுமே ! அதைத்தாண்டிய மற்ற பேட்மேன் படங்களெல்லாம் என் பொறுமையை வெகுவாக சோதிக்கும் .ஜாக் நிக்கல்சன் . ஜிம் கேரி , ஜார்ஜ் குளுனியெல்லாம் அப்போது என்னைப்பொறுத்த வரை ஒரே ஒரு டப்பா படம் நடித்தவர்கள் . அத்தகைய காலகட்டங்களில் ஸ்பைடர்மேனின் தற்கொலைப...

தமிழ் பேய்த்திரைப்படங்கள் – ஒரு பார்வை

Image
சமீபகாலமாக தமிழ்சினிமாவிற்கு பேய் ஜுரம் பிடித்தாற்போல் , வரிசையாக ஒரே பேய்த்திரைப்படங்களாக இறக்குமதி செய்து தியேட்டர்களில் அலறவிடுகிறார்கள் . அவற்றில் ‘ர’ , ‘ஆ’ , ‘பிசாசு’ , ‘யாமிருக்க பயமே’ , ‘அரண்மனை’ ஆகிய படங்களைப்பற்றி எனதுஎண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு . முதலில் பேய்ப்படங்கள் எடுக்கப்படும் விதங்களை நான் பார்த்த பேய்ப்படங்களை கொண்டு கீழே வகைபடுத்தியுள்ளேன். 1. ஒரு வீடு . புதிதாக குடியேறும் குடும்பம் . அவ்வீட்டில் ஏற்கனவே இறந்த ஆத்மாக்கள் அவர்களைப்பீதிக்குள்ளாக்கி கொல்லுவது அல்லது தனது பழியைத்தீர்ப்பது . (எகா . THE CONJURING ,முனி ,  ) 2. மறுபடியும் ஒருவீடு . அந்த வீட்டின் ஓனர் , அவ்வூரில் ஒரு பெண்ணைக்காதலிக்க , அவள் அசந்தர்பவசமாக கொல்லப்பட்டு , அந்த வீட்டினுள் புதைக்கப்படுவாள் . அந்த வீட்டினுள் இருக்கும் இளம்பெண்ணின் உடலில் புகுந்து கிராபிக்ஸ் வெறியாட்டங்களைச்செய்வாள் . (எகா . அரண்மனை , மாசாணி) 3. மீண்டும் ஒரு வீடு . அங்கே எப்போதோ யாரோ ஒரு மந்திரவாதி , தனக்கு சக்திக்கிடைக்கும் எனும் பொருட்டில் நரபலி கொடுப்பார் . அதன்பின் அதை அறியாதவர்கள் அவ...