Posts

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

Image
ஒரு திரைப்படத்தின் ட்ரைலரைப் பார்த்ததுமே , இந்த படத்துக்கு கண்டிப்பாக போகனும் எனும் எண்ணத்தை சமீபகாலமாக எந்த திரைப்படத்தின் ட்ரைலரும் எனக்குள் ஏற்படுத்தவில்லை . ஆனால் இந்த படத்தின் ட்ரைலர் வந்ததுமே கண்டிப்பாக போயாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் . என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை ; ஆனால் பார்க்கவேண்டும் . படத்தின் கதையை , தினத்தந்தி பேப்பர் விளம்பரங்களிலேயே போட்டுவிட்டார்கள் . முதல்பாதி ஹீரோ , ஹீரோயினைத் துரத்துகிறார் ; இரண்டாம் பாதி ஹீரோயின் , ஹீரோவைத் துரத்துகிறார் . இதைவைத்துக்கொண்டு மிக எளிமையாக , போரடிக்காத திரைக்கதையினால் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மணன் .  ஹீரோ கார்த்திக் , ஒரு ஜிம் பயிற்சியாளர் . ஜாலியாக , பாஸிட்டிவாக இருப்பவர் . இவர் பணிபுரியும் ஜிம்மின் வாடிக்கையாளர்கள் பெரும்பணக்காரர்கள் என்பதால் இவருடன் அனோன்யம் . ஹீரோயின் சுப்புலட்சுமி , ஒரு அனாதை  . சிறுவயதுமுதலே மிடில்கிளாஸ் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறார் . ஒரு பணக்காரனைத் திருமணம் செய்துகொண்டு தான் நினைத்தபடி வாழவேண்டும் என்பதே அவருடைய ஆசை . அப்போதுதான் பிரபலங்...

JURRASIC WORLD - சினிமா விமர்சனம்

Image
இப்படம் நான் சென்று பார்க்க முதல்காரணம் எனக்குள் ஒளிந்துகொண்டிருந்த 11 வயது சிறுவனின் நினைவலைகள் தான் .  சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படம் ஜுராசிக் பார்க் . டைனோசர் என்ற பெயரை மட்டுமே அப்போது கேள்விபட்டிருக்கிறேன் . அப்போதெல்லாம் அதன் புகைப்படத்தைப் பார்க்ககூட வாய்ப்பில்லை . ஏதாவது பேப்பரில் டைனோசரின் எலும்பு கண்டுபிடிப்பு என்ற செய்தியில் நாய் நக்கிவைத்த ஆட்டு எலும்புபோல் ஏதோவொன்றை போட்டிருப்பார்கள் . அக்கால ( 15 வருடங்களுக்கு முன் ) கேபுள் கனெக்சன்களிலும் சன் டிவி , ராஜ் டிவியைத்தாண்டி வேறு எந்த சேனலும் எங்கள் ஊரில் எடுக்காது . அப்போதுதான் தமிழ்நாட்டில் திருட்டி விசிடி கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது . அப்போதைய காலகட்டத்தில் எந்த புதுப்படம் வந்தாலும் கேபுள் டிவியிலும் உள்ளூர் சேனல்களிலும் விளம்பரஇடைவெளியின்றி போட்டுவிட ஆரம்பித்துவிடுவார்கள் . ஒரு சிலநேரங்களில் படம் ரிலிசாவதற்குமுன் கேபுளில் போட்ட கூத்துகளும் அறங்கேறியுள்ளது . அப்போதைய கட்டத்தில் தான் நான் முதல் ஹாலிவுட் திரைபடத்தைப் பார்த்தேன் (ஆர்மர் ஆஃப் காட் போன்ற பழைய ஜாக்கி திரைபடங்கள் ஹாலிவுட...

காக்கா முட்டை - ஒரு பார்வை

Image
 அப்பாடா ! ஒருவழியாக தமிழின் அரியதொரு படத்தினை இன்று பார்த்தாயிற்று . சென்றவாரத்திலிருந்து செல்லலாம்  , செல்லலாம் என்று  முயன்றும் இன்றுதான் நிறைவேறியது . யாரைக்கேட்டாலும் படம் சூப்பர் ! தாருமாறு ! பாக்காட்டி விட்டா பாவம் ! என்று அடுக்கிக்கொண்டே போனதுகூட என் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் . ஒரு படத்தினை உயர்த்தி பேசுவதற்காக அடுத்தவர் ரசனையை மட்டப்படுத்துகிறார்களோ ? அப்படி என்னதான் இருக்கிறது இதில் என்பதற்காகாவே சென்றேன் . ஒரு முக்கிய விஷயம் , மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன் . அதை காக்கமுட்டை நிறைவேற்றியதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும் . இருங்க! இருங்க ! திட்ரதுக்கு கமென்ட் பாக்ஸ நோக்கி ஓடாதிங்க . முழுசா படிச்சிட்டு போங்க . பொதுவாக ஆஹா ! ஓஹோ என்று எல்லாரும் புகழும்போது நம்மிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்கும் . நாம் பார்த்ததிலேயே மிகச்சிறந்த படத்துடன் நம் மனது அப்படத்தை கம்பேர் செய்ய ஆரம்பிக்கும் . அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் அந்த திரைப்படத்தை பார்க்கும்போது இம்மி பிசகினாலும் பிடிக்காமல் போய்விடும் . ஏனென்றால் நமக்குப்பிடித்தமான படத்தை விட இது என்ன பெரியது ...

12 ANGRY MAN - சினிமா விமர்சனம்

Image
ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை , அதன் கதை முதலில் ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும் ; அடுத்து அதன் திரைக்கதை பரபரப்பாகவும் , புதிதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கவேண்டும் . மூன்றாவது , அதிமுக்கியமானது , அப்படத்தின் இயக்குநரின் பெயரை படம் முடிந்தாலும் தெரிந்துகொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்குநரின் திறமை முழுதாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் . ஆனால் , இந்த திரைப்படம் மேற்கூறிய விதிகளில் கடைசிவிதியைத் தவிற மற்ற எதுவும் பொருந்தவே பொருந்தாது . பெரிய கதை ஒன்றுமில்லை ; பரபரப்பான திரைக்கதை கிடையாது , பெரிய டெக்னீஷியன்கள் கிடையாது , ஆனால் இத்திரைப்படம் நம்மை பார்வையளாராக திரைக்கு வெளியில் இருக்கவைக்காமல் , நம்மையும் ஒரு கேரக்டராக மாத்திவிடும் . காரணம் , விவாதம் . ஒரு இயக்குநரின் திரைப்படங்கள் மொத்தமும் சேர்ந்து 44 ஆஸ்காருக்கு வெவ்வேறு துறைகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா ? அக்கால சூப்பர்ஸ்டார்கள் மர்லன் ப்ரான்டோ , சீன் கானரி , ரிச்சர்ட் சீர் , பால் ந்யூமேன் , மைக்கேல் கெய்ன் போன்றோர்களெல்லாம் விரும்பி விரும்பி நடிக்க நினைத்த இயக்குநரை...

மாஸ் - சினிமா விமர்சனம்

Image
இது பேய்ப்படம் என்று பலர் கூறியபோது நான் நம்பவில்லை . வெங்கட்பிரபாவது  பேய்ப்படங்கள் எடுப்பதாவது . மனிதர் ஜாலியாக படம் எடுத்து பார்க்கவருபவர்களையும் ஜாலியாக இருக்கவைத்து , நிம்மதியாக அனுப்புவதில் வல்லவர் . அவர் போய் பேய்ப்படம் எடுக்கிறாரா ? அப்படியே எடுத்தாலும் கிளையேக்ஸில் பேயும் இல்லை , அது படுத்த பாயும் இல்லை என்பதுபோல் ஒரு ட்விஸ்ட் அடித்து முடித்துவிடுவார் என்று சென்றேன் .ஆனால் அந்நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கி உண்மையாகவே பேயை வைத்து படமெடுத்திருக்கிறார் வெங்கட் . அதுவும் ஒரு பேய் , இரண்டு பேயல்ல . படம் முழுதும் பேய்மயமாகவே இருக்கிறது . படத்தில் மனிதர்களைக்காட்டிலும் அதிகமாக திரையில் உலாவுவது பேய்கள் தான் . இது மட்டுமா ? எல்லாரும் அடிக்கடி வெங்கட் பிரபு என்றாலே ஒன்று சொல்லுவார்கள் . ‘கதைனா என்னனே அவருக்கு தெரியாது . அவர் படத்துல பெரிய கதைய கண்டுபிடிச்சா பொற்காசுகள் சன்மானம் ’ என்பதுபோல அடித்து விடும் ஆட்களுக்கு ஆப்படித்துவிட்டார் வெங்கட்பிரபு . முதன்முறையாக ஒரு ஆழமான கதையையும் உள்நுழைத்திருக்கிறார் . இதுமட்டுமா ? தலைவர் கதையினுள் சென்டிமென்ட் காட்சிகளையும் புகுத்தி, தன் ...

FLIGHT OF PHOENIX- சினிமா விமர்சனம்

Image
உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பயணம் என்றால் சத்தியமாக அது வான்வழிப்பயணம் தான் . இன்னமும் என்னதான் பந்தாவாக விமானத்தில் ஏறினாலும் , டேக் ஆஃப் ஆகும் போது நம் உயிர் டேக் ஆஃப் ஆகிவிடக்கூடாதென்று காயத்ரி மந்திரத்தையும் கந்த சஷ்டி கவசத்தையும் , பைபிளையும் மனதினுள் நினைத்துக்கொள்ளும் பலர் இருக்கின்றனர் . ரைட் சகோதரர்கள் தாங்கள் கண்டுபிடித்த ப்ளைட்டுக்கு எலுமிச்சை பழி கொடுக்காததாலோ என்னவோ இன்னும் விமானப்பயணத்தால் பலவிதமான விபத்துகள் நடந்தவாறே இருக்கின்றன . நீர் ,நிலம் . நெருப்பு , காற்று ஆகியவற்றால் அதுவரை மக்களைக் கொத்துகொத்தாக கொலைசெய்துகொண்டிருந்த ஹாலிவுட் இயக்குநர்களுக்கு   விமானங்கள் என்ற பெயரில் வரப்பிரசாதம் கிடைக்க அதன்வழியேயும் முடிந்தவரை மக்களைக்கொன்று வருகிறார்கள் . விமானக்கடத்தல் , மோசமான வானிலையில் சிக்கிக்கொள்ளும் விமானங்கள் , விமானத்தில் விஷஜந்து என்ற மேட்களையெல்லாம் கொண்டு அந்த தம்மாத்துண்டு விமானத்தை வைத்து படத்தை எடுத்துவிடுகிறார்கள் . 1972 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 2000 –க்கும் மேற்பட்டோர் விமான விபத்தில் இறந்துள்ளார்கள் . மலேசிய விமானம் , ஆல்ப்ஸ் மலையில் நொறுங்...

BLOOD DIAMOND - சினிமா விமர்சனம்

Image
படம் ஆரம்பிக்கும்போதே கதை நடக்கும் இடத்தையும் , அதன் சூழ்நிலையையும் நமக்குக் காட்டிவிடுகிறார்கள் . இருண்டகண்டம் என்றழைக்கப்பட்டதாலோ என்னவோ நம் மக்களுல் பெரும்பாலானோர் நைல் நதி பாயும் எகிப்து மட்டுமே சிறிது வளமான நாடு என்றும் மற்ற நாடுகள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் தகிக்கும் சஹாரா பாலைவனமாகவும் மீந்த இடங்கள் அவற்றின் எச்சமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் . ஆனால் உண்மையில் ஆப்ரிக்கா , இயற்கை வளங்களின் சொர்க்கம் . உலகின் மிகமுக்கியமான  விலையுயர்ந்த பலபொருட்களுக்குப் பிறப்பிடம் ஆப்பிரிக்கா தான் . அதனால் தான் என்னவோ அக்கண்டம் காலங்காலமாய் சோகத்தின் விளிம்பில் வாடுகிறது . அந்நாட்டு மக்கள் பிறக்கும்போதே சாவை எதிர்கொள்ளத் துணிகிறார்கள் . காரணம் , காலனி ஆதிக்கம்  மற்றும் ஏகாதிபத்தியம் . நாம் ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் பதிவில் பார்த்த ஏகாதிபத்தியத்தை ஒருமுறை நினைவிற்கு கொண்டுவாருங்கள் . ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தில் உலகமே ஒருமுறை அடங்கிக்கிடந்திருந்தாலும் , ஐரோப்பியர்களைக் காட்டிலும் அமெரிக்காவின் காலனியில் மாட்டிய நாடுகளின்  நிலை தான் மிகமிக மோசம் என்பது உலகறி...