ஆம்பள & டார்லிங் – சினிமா விமர்சனம்

 .


சுந்தர்.சி யின் இயக்கத்தில் ஒரு படம் என்றதுமே எனக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது . பொங்கலுக்கு முதலில் இத்திரைப்படத்திற்குத்தான் செல்வதாய் இருந்தேன் . ஆனால் சிலபல காரணங்களால் ஐ –க்கு போகவேண்டியதாகிவிட்டது . இப்போதைய சுந்தர்.சி படங்கள் எதிலுமே கதை என்பதைக்காணவே முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் இப்படம் . முழுக்க முழுக்க காமெடி மாத்திரமே . அவருக்கு நன்றாய் வரும் காமெடி ட்ரீட்மென்டை சரியாய் பயன்படுத்தி , அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் சுந்தர் . ஊட்டியில் கூட்டத்திற்கு ஆள்சேர்க்கும் வேலையைச்செவ்வனே செய்துவரும் விஷால் , ஒரு கட்டத்தில் தந்தையைத்தேடி மதுரைக்கு வருகிறார் . ஊரின் பெரியமனிதராய் இருக்கவேண்டிய விஷாலின் தந்தை பிரபு , ஒரு திருடனாய் இருக்கிறார் . அவரையும் தன்னுடைய இரு சகோதரர்களையும் சந்திக்கும் விஷால் , தன் தந்தையின் பிளாஷ்பேக்கை அறிகிறார் . தவறுதலாக தன் தந்தையைக்கொன்றுவிட்டதாகவும் , தங்கைகளின்மேல் இருக்கும் பாசத்தால் சொத்துகளை தங்கைகளுக்கு எழுதிவைத்ததாகவும் தெரிவிக்கிறார் பிரபு . தந்தையைக்கொன்றதால் பிரபுவை வெறுத்து ஒதுக்கும் மூன்று தங்கைகளையும் சமாதனப்படுத்தி , அவர்களின் மகள்களை விஷாலும் அவரின் தம்பியரும் திருமணம் செய்வதுதான் கதை .

படத்தில் மெய்ன் ஹீரோ என்றால் அது சந்தானம் தான் . இவரைத்தவிர்த்து பார்த்தால்  , சத்தியமாக படத்தைப்பார்க்கவே முடியாது . மனிதர் டீ ப்ரொமோட் ஆகும் காட்சிகளிலும் , வில்லனை சமாதானப்படுத்த செய்யப்போய் அது உல்டாவாகும் காட்சிகளில் கும்மியெடுத்துருக்கிறார் . இவருக்கு அடுத்து , சதீஷின் இயல்பான நகைச்சுவை நிறைந்த ஒலைன்னர்கள் ஆங்காங்கே வொர்க் அவுட் ஆகிறது .ஒருவகையில் சுந்தர்.சி , ஜாக்கிஜானின் பாதையைப்பின்பற்றுவதை இப்படத்தில் நன்றாக உறுதிசெய்துகொள்ளலாம் . ஜாக்கிஜான் காமெடிக்குள் கிளாமரை நாசுக்காக உள்புகுத்தியிருப்பார் . அதேபோல் தான் சுந்தர் .சியும் . ஹன்சிகாவின் கிளாமரை காட்டுவதைப்போன்ற பல காட்சிகள் கடுப்பைத்தான் வரவைத்தன .இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழா , சிறப்பான பாடல்களைக்கொடுத்துள்ளார் . பாடல்களில் இரைச்சலைக்குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . பெரும்பாலான சுந்தர்சியின் படங்கள் , இசை பெரிதளவு எடுபடாமல் போயிருக்கும் . ஆனால் இப்படம் கொஞ்சம் பரவாயில்லை .

இந்த படம்  ஒரு ஆக்சன் படம் என்று சொன்னால் , சாம் ஆன்டர்சனே விழுந்து விழுந்து சிரிப்பார் . மேன் ஆஃப் ஸ்டீலில் கூட இப்படியொரு சண்டைக்காட்சிகளை நான் பார்த்ததில்லை .தம்மு படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் போடும் சண்டைக்காட்சிகளைப்பார்த்து நான் வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன் . எப்படியோ , தமிழில் இம்மாதிரி யாரும் முயற்சிக்கவில்லை என்று ஆறுதலாய் இருந்த எனக்கு ஆப்படிக்கும் விதமாய் ஜூனியர் என்.டி.ஆரின் சண்டைக்காட்சிகளையே விஷால்  தூக்கிசாப்பிட்டுவிட்டார் . மற்றவர்களைப்பற்றி பெரிதாய் சொல்ல எதுவுமில்லை . பிரேமில் வரும் நடிகர்கள் தங்களின் பணியைச்சிறப்பாக செய்துள்ளனர் .

மொத்தத்தில் , காமெடியால் இது ஆம்பள .



டார்லிங் ஒரு எதிர்பார்க்காத திரைப்படம் என்று தாராளமாய்ச்சொல்லலாம் . ஒரு சப்பைக்கதையை வைத்து , ஜாலியாக திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள் . ஒரு படம் ரசிகர்களுக்குப்பிடிக்க சி.ஜி , பிரம்மாண்டம் , 200 கோடி தேவையில்லை, நல்ல திரைக்கதை இருந்தால் போதும் என்பதை இப்படம் நிறுபித்துவிட்டது . ஹீரோ ஜ.வி.பிரகாஷ் , தன் நண்பருடன் தற்கொலைச்செய்ய முடிவெடுக்கிறார் . அவர்களுடன் ஹீரோயினும் , கருணாசும் இணைந்துகொள்கிறார்கள் . ஹீரோயின் , பிரகாஷை ஒருதலையாக காதலித்தவர் என்பதும் , அவளும் ஹீரோவின் நண்பரும் இணைந்து ஹீரோவின் தற்கொலையைத்தடுக்க முயற்சிக்கிறார்கள் .இதற்குள் ஹீரோயினுக்கு பேய் பிடித்துவிடுகிறது . ஒரு கட்டத்தில் ஹீரோயினின் உண்மையான காதலை அறிந்த ஹீரோ , அவளுடன் வாழ முடிவெடுக்கிறார் . ஆனால் ஹீரோயினுக்குள் இருக்கும் பேய் , அவர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்கிறது . கடைசியில் என்ன ஆனது என்பதே கதை . கதையைப்படித்தால் பெரிதாய் இருக்காது . ஆனால் திரைக்கதை , சலிப்படைய வைக்காமல் ஜாலியாய் நகர்கிறது . யாமிருக்க பயமே படம் கிட்டத்தட்ட ஃஸ்பூஃப் வகையறாவாக அமைந்திருக்கும் . இப்படம் காமெடியாய் அமைந்திருக்கும் . ஹீரோவாக வரும் ஜீ.வி.பிரகாஷைவிட , இசையமைப்பாளர் ஜ.வி.பிரகாஷ் அதகளப்படுத்தியிருக்கிறார் . பாடல்கள் மட்டுமின்றி பிண்ணனி இசையும் அருமை ரகம் . அதிகமான கேரக்டர்கள் இல்லாமல் , இயல்பாய் அதேநேரத்தில் பார்ப்பவர்களை குழப்பாமல் அமைதியான ஒரு படம் . கருணாஸ் மற்றும் ஹீரோவின் நண்பராய் வருபவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் ஜாலியாய் நகர்கின்றன . ஒரே காட்சிக்கு வந்தாலும் ரான் கடவுள் ராஜேந்திரனின் காமெடி , செம ராவடி .முக்கால்வாசிப்படம் காமெடியில் நகர , கிளைமேக்ஸ் சென்டிமென்டாக முடிவது திருப்தி . இயக்குனர் சாம் ஆன்டன் ஒரு பொழுதுபோக்கான திரைப்படத்தை இப்பொங்கலுக்குத்தந்திருக்கிறார் . என்னைப்பொறுத்தவரை இந்த பொங்கல் வின்னர் டார்லிங் தான் .

தொடர்புடைய இடுகைகள்






Comments

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !

      Delete
  2. வின்னருக்கு போகலாம் என்றுள்ளோம்...

    ReplyDelete
    Replies
    1. குடும்பத்துடன் சென்று மகிழுங்கள் அண்ணா !!!

      Delete
  3. ஆம்பள சுந்தர் சி யின் படத்தலைப்பு சம்பந்தமில்லாமல் இருக்கே.....
    டார்லிங் விமர்சனம் நல்லாவே எழுதுறீங்க நண்பா...
    தமிழ் Manam 3

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

PERFUME – ஒரு பார்வை

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்