தமிழ் பேய்த்திரைப்படங்கள் – ஒரு பார்வை




சமீபகாலமாக தமிழ்சினிமாவிற்கு பேய் ஜுரம் பிடித்தாற்போல் , வரிசையாக ஒரே பேய்த்திரைப்படங்களாக இறக்குமதி செய்து தியேட்டர்களில் அலறவிடுகிறார்கள் . அவற்றில் ‘ர’ , ‘ஆ’ , ‘பிசாசு’ , ‘யாமிருக்க பயமே’ , ‘அரண்மனை’ ஆகிய படங்களைப்பற்றி எனதுஎண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு . முதலில் பேய்ப்படங்கள் எடுக்கப்படும் விதங்களை நான் பார்த்த பேய்ப்படங்களை கொண்டு கீழே வகைபடுத்தியுள்ளேன்.


1. ஒரு வீடு . புதிதாக குடியேறும் குடும்பம் . அவ்வீட்டில் ஏற்கனவே இறந்த ஆத்மாக்கள் அவர்களைப்பீதிக்குள்ளாக்கி கொல்லுவது அல்லது தனது பழியைத்தீர்ப்பது . (எகா . THE CONJURING ,முனி ,  )

2. மறுபடியும் ஒருவீடு . அந்த வீட்டின் ஓனர் , அவ்வூரில் ஒரு பெண்ணைக்காதலிக்க , அவள் அசந்தர்பவசமாக கொல்லப்பட்டு , அந்த வீட்டினுள் புதைக்கப்படுவாள் . அந்த வீட்டினுள் இருக்கும் இளம்பெண்ணின் உடலில் புகுந்து கிராபிக்ஸ் வெறியாட்டங்களைச்செய்வாள் . (எகா . அரண்மனை , மாசாணி)

3. மீண்டும் ஒரு வீடு . அங்கே எப்போதோ யாரோ ஒரு மந்திரவாதி , தனக்கு சக்திக்கிடைக்கும் எனும் பொருட்டில் நரபலி கொடுப்பார் . அதன்பின் அதை அறியாதவர்கள் அவ்வீட்டினுள் குடியேற , அதைத்தொடர்ந்து நடக்கும் கொடூரங்கள் . ஆங்கிலப்படங்களில் பெரும்பாண்மை இவ்வாறு தான் இருக்கும் .(எகா . THE HAUNTING IN CONNECTICUT , Amityville , வில்லா ,  )

4. இது இல்லாமல் ஒரு சபிக்கப்பட்ட பொருளை வாங்கி வருவதனால்  , அல்லது வூஜா போர்டு கேம்கள் ,பேய்கள் அட்டகாசம் செய்வது ( எகா . DRAG ME TO HELL , DEATH SILENCE)

5. இவைகளை எல்லாம் ஓரங்கட்டிவிடும் வண்ணம் புது ட்ரெண்டாக ஒன்றை RING எனும் படத்தின்மூலம் கொண்டுவந்தார்கள் . அதாவது வீடியோ கேசட்டை போட்டு பார்த்தால் பேய் வருவது . இதேபாணியை பின்பற்றி ONE MISSED CALL போன்ற படங்கள் பின்னே வந்தது .



6. இவைகளைத்தவிர வகைபிரிக்க முடியாத பேய்ப்படங்களாக THE SHINING, THE CABIN IN THE WOODS , 1408 , PARANORMAL ACTIVITY , THE FOURTH KIND , THE SIXTH SENSE  போன்றவற்றையும் சொல்லலாம் . ZOMBIE வகையறா படங்களை இந்த லிஸ்ட்டில் சேர்க்கமுடியாது . இது தவிர பேய்ப்படங்களை கலாய்த்து எடுக்கும் படங்களும் அவ்வப்போது வந்து அமைதியாக வெற்றிபெற்று செல்கின்றன .

– இந்த படம் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு ஆவலாக இருந்தது . பரவாயில்லையே , ஆங்கிலத்தனம் அதிகமில்லாத புதுவகையான பேய்ப்படமாகவும் , அதேநேரம் டெக்னிக்கலாகவும் அருமையாக இருக்கிறதே என்று . என் அத்தனை எண்ணங்களையும் குழிதோண்டி புதைப்பது போல் அமைந்தது கிளைமேக்ஸ் . அற்புதமாக நகர்ந்து கொண்டிருந்த திரைக்கதை , கிளைமேக்ஸ் ட்விஸ்ட் எனும் பெயரில் கொலைகளெல்லாம் நடந்தது சதியினால் தான் . பேயினால் அல்ல என்று ஒரு சர்ப்பரைஸ் ட்விஸ்ட் வைத்தது மட்டுமின்றி , ஏதோ ஆங்கில ZOMPIE படங்களைபோல் முடித்ததெல்லாம் கடுப்பைத்தான் வரவழைத்தது . RED DOOR , ஹிப்னாடிசத்தின்வழி ஆத்மாவின் உலகிற்கு நுழைதல் , LOOP எனும் 4TH டைமன்சனில் மாட்டிக்கொள்வது போன்று எக்கச்சக்க விஷயங்களை அழகாய் கொண்டு வந்து , ஏன்தான் கிளைமேக்சை சொதப்பினார்களோ ! இப்படத்தின் கிளைமேக்ஸ் யூகிக்க முடியவில்லையென்றே வைத்துக்கொண்டாலும் , கிட்டத்தட்ட தமிழுக்கு ஓரளவு அலுக்காத கிளைமேக்ஸ் என்றாலும்  , இம்மாதிரியான கிளைமேக்ஸ் ஆடியன்சுக்கு திருப்தி தராது என்பதே உண்மை . அந்த கிளைமேக்ஸ் விஷயத்தை கொஞ்சம் மேக்கப் செய்திருந்தால் , கிட்டத்தட்ட இன்டர்ஸ்டெல்லர் போன்றதொரு கிளைமேக்சை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கலாம் . கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது .


–  இந்த படம் பார்த்து முடித்தபின் எனக்குள் எழுந்த சந்தேகம் என்னவென்றால் இப்படத்தின் கதை என்ன ? ஒரு நண்பன் பெட் கட்டுகிறான் என்பதால் உலகமெங்கும் அலைந்து திரிந்து பேயைத்தேடிச்செல்லும் மூவர் என்று ஆரம்பத்திலேயே ஒருவாறு விளங்கியதால் அதையே ஒருவாறு கதையாக ‘கொல்’லளாம் . ஆனால் இதுக்காக உலகம் முழுக்க எதுக்குடா அலையுறிங்க ? தமிழ்நாட்டுல இல்லாத ஜமின் பேய் பங்களாவா ? இல்ல பேய்க்கதையா ? கடலுக்குப்போறாங்க , அங்க பெர்முடா ட்ரையாங்கல் கான்செப்ட வச்சி ஒரு அரைமணிநேரம் போகுது . அடுத்தது ஜப்பானுக்கு போறாங்க , ஆஸ்பத்திரில பேய் இருக்குனு அரைமணிநேரம் . அடுத்து துபாய்க்குப்போறாங்க , அங்க ஒரு அரைமணிநேரம் . அடுத்து மறுபடியும் ஒரு ATM வச்சி அரைமணிநேரம் . அப்புறம் படம் முடிஞ்சிடுச்சி . . படத்தின் ஒளிப்பதிவே ஏதோ டாகுமென்ட்ரி மாதிரி இருப்பதால் , படத்தைப்பார்க்க கொஞ்சம் அலுப்புத்தட்டுகிறது . நம்மூரில் கூறப்படும் பேய்க்கதைகளையெல்லாம் ஒன்றினைத்து THE FOURTH KIND மாதிரியான ஒரு படத்தைத்தர முயன்றிருக்கின்றனர் . ஆனால் என்னவோ இது இழு,இழு,இழுவையான பேய்களாக இருப்பதால் கடுப்பாகிறது .


அரண்மனை – எனக்கு பயங்கர போர் அடிக்கும்போது , நான் பார்க்கும் பெரும்பாலான படங்கள் சுந்தர்.சியிதாகத்தான் இருக்கும் . எவ்வளவு டென்சனாக படம்பார்க்கச்சென்றாலும் , சிரிக்கவைத்து அனுப்புவார் . அதுவும் அவ்வப்போது நகைச்சுவையூடே கிளாமரையும் சேர்த்து , கல்லா கட்டிவிடுவார் . வழக்கமான அவருடைய பாணியில் பேய்ப்படம் . பேயிற்காகவோ , கதைக்காகவோ எல்லாம் இப்படத்திற்கு போகவில்லை . நான் எதிர்பார்த்த காமெடியை முடிந்தவரை தந்துள்ளார் . ஆனால் பல காட்சிகள் செம போர்தான் . கொஞ்சம் டிஸ்ஸப்பாய்ன்ட்மென்ட் .


யாமிருக்க பயமே -  இந்த படம் ரிலிசான அடுத்தநாளே என் நண்பன் தியேட்டர் பிரிண்ட் கொண்டுவந்துகொடுத்தான் . முதல் 20 நிமிடம் பார்த்ததும் அதை டெலிட் செய்துவிட்டு அடுத்தநாள் தியேட்டருக்குச்சென்று பார்த்தேன் . அந்தளவு ஜாலியாய் இருந்தது  . நான் வேறு வெறித்தனமான SCARY MOVIE ரசிகன் . அம்மாதிரியான ஸ்பூஃப் படங்கள் தமிழில் வராத என ஏங்கிக்கிடக்கும் போது , அதைவிட பெட்டராக வந்த படம் இது . இந்த ஆண்டில் எதிர்பாராத வெற்றி பெற்ற திரைப்படங்களுல் இது முதன்மையானது . இதுவும் ஒரு கொரியப்படத்தின் காப்பி என்ற செய்தி வெளிவந்தாலும் , உள்ளுக்குள்ளே அமுக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டு பெற்றது .




பிசாசு - ஏற்கனவே இத்திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிவிட்டமையால் இப்படத்தின் சிறப்புகளையும் , சில குறைகளையும் காணலாம் . பிசாசு படத்தில் பேய் என்பதை வேறுவிதமாய் மிஷ்கின் காண்பித்திருக்கிறார் . THE HAUNTING IN CONNECTICUT எனும் ஆங்கிலத்திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று . படம் முழுதும் ஒரு பேய்தான் எல்லாமே செய்கின்றது என நம்பவைத்து , கடைசியில் அந்த பேய் மிகவும் நல்ல பேயாகவும் ,அது அழிவைத்தடுக்கும்பொருட்டே அவ்வாறெல்லாம் செய்தது எனும் மாதிரியில் எடுக்கப்பட்டிருக்கும் .உண்மை தெரியும் வரையில் நமக்கெல்லாம் கிலியாக இருக்கும் . தெரிந்தவுடன் அந்த பேயை நினைத்தால் பாவமாய் இருக்கும் .  இதேபோல் தமிழில் ‘ அலை ‘ எனும் அட்டுப்படத்தைக்கொடுத்த இயக்குநர் அற்புதமான பேய் படத்தை மாதவனைக்கொண்டு ‘யாவரும் நலம்’ என்ற பெயரில் கொடுத்திருப்பார் . HAUNTING IN CONNECTICUT திரைப்படம் கிராபிக்ஸ் மற்றும் இசையால் நமக்குள் பீதியைக்கொடுக்கும் வண்ணம் இருக்கும் . ஆனால்  ‘யாவரும் நலம்’ பி.சி.ஶ்ரீராமின் கேமராவாலேயே நம்மைத்திகிலடையச் செய்யும் . ஆனால் பிசாசு ப்படி கிடையாது . எப்போது பார்த்தாலும் பேய் என்பது பழிவாங்குவதற்காக மட்டுமே படைக்கப்பட்டது என்பதை ஆணித்தரமாக மறுத்திருக்கிறார் . இன்னும் சொல்லப்போனால் உயிருடன் இருக்கும் நாம்தான் பிசாசு என்று கூறியிருப்பார் . மிஷ்கினின் சமூகசிந்தனைகள் குறித்த வெளிப்பாடு , பிசாசு என்ற பெயரில் வெளியாயிருக்கிறது எனலாம் . இப்படைப்பை உருவாக்கிய வகையில் பாராட்டு பெறும் மிஷ்கின் , திரைக்கதையை எதற்காக இழுக்கும் வகையில் எழுதியிருக்கிறார் என்று புரியவில்லை . ஹீரோ பீரை வாங்கிவரும் லாங்ஷாட் அவ்வளவு நீளத்துக்கு இழுக்க வேண்டியதில்லை .  லாங் ஷாட் தேவை தான் எனினும் , அதற்காக ரசிகர்களை சோதனைக்குள்ளாக்கும் அளவிற்கு வைக்ககூடாது . தமிழர்கள் ஒன்றும் , வாரம் ஒரு ஈரானியப்படமோ , மாதம் ஒரு கொரியப்படமோ பார்ப்பவர்கள் கிடையாது . அதிலும் இலக்கியப்பரிட்சையம் என்பது தமிழர்களுக்குச்சுத்தமாய் கிடையாது . அப்படி இருப்பவர்களை உலகத்திரைப்படங்களைப்பார்க்க வைப்பது மிஷ்கின் என்பவரிடம் மட்டும் தானுள்ளது . பாலாவையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம் என்றாலும் , அவரை விட பெஸ்ட் மிஷ்கின் என்பது என் எண்ணம் . இப்படி உலகசினிமாக்கள் என்றாலே ‘ போர் ‘ எனப்புழுங்கும் தமிழனுக்கு துளித்துளியாய் , உலகசினிமா அறிவைப்புகுத்தவேண்டும் . அதன்காரணமாய் சில தேவையில்லாத லாங்ஷாட்டுகள் , பிசாசு வரப்போகிறது என்ற பாவனையில் இழுத்தடிப்பது , நடிப்பவர் யாரென்றாவது தெரியும்பொருட்டு சிறிது முகத்தை நம்மிடம் காட்டுவது போன்றவைகளெல்லாம் காட்டியிருக்கலாம் . மேலும் உலகசினிமா என்றாலே ஒருவித டார்க் தீமில் தான் எடுக்கப்படவேண்டும் என்ற விதி ஏதும் இருக்கிறதா ? எப்போது பார்த்தாலும் இருட்டு , இருட்டு என இருட்டையே கட்டிக்கொண்டு அழவேண்டுமா மிஷ்கின் ? இதெல்லாம் நாம் சொன்னால் , ஏன் வைக்கக்கூடாது ? நீ யார் என் படத்திற்கு விமர்சனம் எழுத ? என் படத்தைப்பார்க்கவருமாறு உன்னைக்கூப்பிட்டேனா என்று சண்டைக்கு வந்துவிடுவார்  . ஆனால் , சென்ற ஆண்டின் சிறந்த பேய்ப்படம் பிசாசு என்பதில் துளியும் சந்தேகமில்லை .


இது தவிர இருக்கு ஆனா இல்ல , 13-ம் பக்கம் பார்க்க, 1 பந்து 4 ரன் 1 விக்கெட் போன்ற படங்களை பார்க்காததால் அதைப்பற்றியெல்லாம் எழுதவில்லை .


தொடர்புடைய இடுகைகள்









Comments

  1. சுந்தர்.சி தான் பெஸ்ட்...?

    ReplyDelete
    Replies
    1. பாலா ஒருவகையில் சொதப்பி விடுகிறார் என்பது என் கருத்து அண்ணா . தேவையே இல்லாமல் பாடல் வைப்பது , வலிந்து திணிக்கப்படும் சில காட்சிகள் , ஒரு சில காட்சிகளில் வேண்டுமென்றே போலிசாரை இழிவு படுத்துவது ,லாங் ஷாட் , நம்பவேமுடியாத காட்சியமைப்புகள் போன்றவற்றால் சொதப்பிவிடுகிறார் . மிஷ்கினும் ஆரம்பகாலங்களில் இதுபோன்ற தவறுகளைச்செய்தாலும் , இப்போது வரும் மிஷ்கினின் படங்கள் , ஓரளவு அந்தமாதிரியான காட்சிகளை தவிர்த்துவிடுகிறார் . பாலாஜி சக்திவேலும் திறமையான இயக்குநர் தான் . அவரைப்பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன் .

      Delete
  2. இதிலிருந்து இவர்கள் நிகழ் காலத்தின் அவலங்களை சொல்ல பயந்து கொண்டு இல்லாததை ஒன்றை காட்டி மற்றவர்களை பயமுறுத்தகிறார்கள்.பயந்தாங் கொள்ளி கலைஞர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படினும் சொல்லிவிடமுடியாது ணா ! நிகழ்கால அவலங்களை யார் சென்று பார்க்கிறார்கள் . மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மாதிரி சமூகத்தை செருப்பால் அடித்த படத்திற்கு , மிஷ்கின் போஸ்டர் ஒட்டவேண்டிய நிலைக்குத்தானே செல்லப்பட்டார் . அவ்வபோது இம்மாதிரியும் எடுக்கலாம் , வயிற்றுப்பிழைப்புகாக . தப்பே இல்லை .

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே

      Delete

Post a Comment

Popular posts from this blog

PERFUME – ஒரு பார்வை

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்