Posts

Showing posts with the label பாலிவுட்

PK – சினிமா விமர்சனம்

Image
‘3 இடியட்ஸ்’ கூட்டணி ஒன்று சேர்ந்து மீண்டும் ஒரு திரைப்படம் . படத்தின் கரு என்னவென்றால் ‘மனிதம்’  . மனிதம் தான் முதலில் , மனிதத்துள் தான் மதம் இருக்கிறது என்பதை அழகாய் , அதேநேரம் நெற்றிப்பொட்டில் அடித்திருப்பது போன்றதொரு திரைப்படம் . வேற்றுகிரகவாசி அமீர்கான் . பூமிக்கு வந்து ரிமோட்டை திருட்டுக்கொடுக்கிறார் . ரிமோட் இல்லாமல் அவரால் திரும்ப தாய்க்கிரகம் செல்லமுடியாது . பூமியில் மனிதர்கள் பேசும் பாஷை அவருக்குப்புரியவில்லை .ஆனாலும் மனிதர்களின் உடை, நடை , செயல் ஆகியவற்றை ஓரளவு அறிந்துகொள்கிறார் . ஒருகட்டத்தில் சஞ்சய்தத்தை சந்திக்கிறார் . அமீர்கானுக்கு ‘டேட்டா ட்ரான்ஸ்வர்’ செய்யும் சக்தி உள்ளது . அவரால் , மற்றவர்களிடமிருக்கும் செய்திகளை , அவர்களின் கையைத்தொட்டே அறிந்துகொள்ளமுடியும் . ஒரு முறை ஒரு விபச்சாரியிடமிருந்து , அவளின் கையைத்தொட்டு , அவளின் பாஷையை ட்ரான்ஸ்பர் செய்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் . தன்னுடைய ரிமோட் தொலைந்துபோனதைப்பற்றி சஞ்சய் தத்திடம் தெரிவிக்க , அவரோ அதுமாதிரியான காஸ்ட்லியான பொருட்கள் எல்லாம் டெல்லியில் தான் திருடர்கள் விற்பார்கள் என சொல்லி , அமீரை டெல்லி ...