நையாண்டி பெண்களும் ஜொள்ளுத்தாத்தாக்களும் - ஊர்த்திருவிழா
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்ற தமிழ்முதுமக்களின் பொன்மொழியின்படி ஊருக்கு ஒரு கோவிலும் , காவல் தெய்வமும் இருக்கும் . எங்கள் ஊரிலோ அதையும்தாண்டி இரு கோவில்கள் , பல காவல் தெய்வங்கள் . ஒன்று பஸ் ஸ்டாப் அருகிலும் மற்றொன்று ஊருக்குள்ளேயும் இருக்கின்றன . சரி , ஒன்றுக்கு இரண்டாக உள்ளதுதானே ! நன்றாகக் கும்பிட்டு நல்வரத்தைப்பெற்று சந்தோஷமாக இருக்கவேண்டியதுதானே என்கிறீர்களா ? அதுதான் இல்லை . சேலத்தில் வன்னியசமூக மக்கள் அதிகமாய் வாழ்வது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்ததே . ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் எங்கள் ஊரில் நாடார் சமூகமக்கள் அதிகம் . பஸ் ஸ்டாப்பை ஒட்டிய பகுதிகளில் வன்னியசமூகத்தினரும் , ஊருக்குள்ளே நாடார் சமூகத்தினரும் வாழ்கின்றனர் . 1999 வரை , சாதிக்கலவரங்களுக்கு பெயர்பெற்றது எங்கள் ஊர் . எவனாவது பொழுதுபோகாதவன் ஏதாவது ஒன்றைத்தூண்டிவிட , அதன்பின் சாலையில் செல்லவேண்டிய சைக்கிள் ஆகாயத்திலும் , அடுப்பில் எரியவேண்டிய விறகுக்கட்டைகள் அடுத்தவன் இடுப்பில் எரியவைத்தும் கொண்டிருக்கும் . கருங்கற்கள் பலரின் மண்டையைப்பேத்தும் பசியடங்காத ஜீவன்களாய் மீண்டும் மீண்டும் பலரின் மண்டையை உடைத்துக் க...