BIG - சினிமா விமர்சனம்

ஏற்கனவே தமிழில் காபி அட்டம்ப்ட் என்று எக்கச்சக்கமான படங்களை பலர் கிழித்துத்தொங்கப்போட , நாமும் ஏன் இந்தவேலையைச் செய்யவேண்டும் என்று ஒதுங்கியிருந்தேன் . சரி , ஒரு திரைப்பட விமர்சகராக நாமும் ஒரு காபி அட்டம்ப்ட்டை எழுதி , நம் சமூக கடமையை ஆற்றிவிடவேண்டும் என்ற முனைப்பின் பிரதிபலிப்புதான் இத்திரைப்படத்தின் விமர்சனம் . நம்மூரில் குஷ்புவுக்கு கோயில் கட்டி தமிழர்கள் என்று தலைநிமிர்ந்தார்கள் . ஆனால் ஹாலிவுட்டில் டாம் ஹேங்சுக்கு கிடைத்த புகழின்முன் இதெல்லாம் தூசி எனலாம் . அந்த மனிதரின் பெயரில் விண்வெளியில் ஒரு குறுங்கோளுக்கு டாம்ஹேங்ஸ் எனப் பெயர் வைத்து புகழாரம் சூட்டியுள்ளார்கள் நாசா விஞ்ஞானிகள் . 5 ஆஸ்கார் நாமிநேசன்கள் , 2 தொடர்ச்சியான ஆஸ்கார் விருதுகள் என ஆஸ்கார் அவையை அதிரவைத்த இவர் தான் இன்று உலகளவில் அதிக செல்வாக்குள்ள மற்றும் பவர்ஃபுல்லான நடிகர் . இவரின் படங்கள் 480 பில்லியனைத்தாண்டி வசூல் செய்துள்ளன . இவருக்கு இருக்கும் மார்க்கெட் , உலகளவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாதது . நடிப்பு என்பதற்கு வேறு பெயர் டாம்ஹேங்ஸ் எனக்கூறும் அளவிற்கு சிறப்பான நடிகர் .பீல்குட் படங்க...