Posts

Showing posts from January, 2016

கொலை - சிறுகதை

Image
நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது; ஓருயிரின் அருமைத் தெரியாமல் இருந்தது எவ்வளவு பெருந்தவறு ! ஏன் அதைச் செய்தேன் என்று யோசித்தால் ஒருபக்கம் சூழ்நிலை எனும் காரணி இருப்பினும் மறுபுறம் அதை நான் என் முழுமனதுடன்தான் செய்துள்ளேன். சிறிதுநேரத்திற்குமுன் இதே இடம்; இதே அறை; இதே இருளை விரட்டும் மின்குழல் விளக்கு. ஆனால் சிறு மாற்றம் , மனிதர்களுக்காக கணக்கிடப்படும் இல்லாவொன்றான காலமும் நானும் தான். அப்போதைக்கும் இப்போதைக்குமான என் சிந்தனை வெவ்வேறு. எனக்குள் ஒரு மாற்றம். நல்லதா? கெட்டதா ? எனப்பகுத்தறியக் கடினமான மாற்றம். ஆனால் இம்மாற்றாத்தால் எனக்கு நன்மையோ இல்லையோ, என்னைச் சுற்றியிருப்பவைகளுக்குச் சிறிதேனும் நன்மையைத் தரும் என எண்ணுகிறேன். என் ஆசைப் பூனை; இதோ, என் மடிமேல் இறுகிய கம்பளிப் போர்வையில் சுருண்டு படுத்திருக்கும் இந்த பூனையால்தான் எல்லாம். அது மட்டும் அப்போது சத்தமிடவில்லையெனில் என்மனம் இவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்காது. என்வேலைகளை முடித்துவிட்டு அறையில் நுழையும்போது இதே பூனைதான் கத்தியது. ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் என்னையும், அறையின் மேற்பகுதியையும் பார்த்து, தொடர்ந்தா