Sunday, 31 August 2014

சலீம் – சினிமா விமர்சனம்

‘நான்’ என்ற சிறந்த கிரைம்-திரில்லரில் நடித்த விஜய் ஆண்டனியின் இரண்டாம் படம் . படத்தைப்பற்றி பார்க்கும்முன்  , நம்மை கொஞ்சம் நோக்குவோம் . நம்மில் எத்தனை பேர் , சிக்னலில் 0 SEC எனக்காட்டி , பச்சை சிக்னல் விழுந்தபின் , நம் வாகனத்தை , சிக்னலில் இருந்து கிளப்பியுள்ளோம் ? ஒன்வே ரோட்டில் , எதிராக ஒருமுறையேனும் பயணிக்காதோர் எத்தனை பேர் உள்ளனர் ? லஞ்சம் பற்றி வாய்கிழிய கூவும் நாம் ,  நமக்கென்று ஏதேனும் தேவைப்படும்போது , லஞ்சம் கொடுக்காமல் இருந்திருக்கிறோமா ?

நாம் சிக்னலை சரியானபடி பின்பற்ற நினைத்தாலும் , பின்னாலிருப்பவன் விடமாட்டான் . ஓயாமல் ஹார்ன் அடித்து , ஏதேனும் வசைபாடி விட்டு , சிக்னல் விழும்முன்னே பறப்பான் . அவனின் ஏச்சுபேச்சுகளுக்கு பயந்தே நம் வாகனத்தை எடுத்துக்கொண்டு , விதிகளையும் மனக்குமுறல்களையும் விழுங்கியபடி செல்வோம் . நாம் எவ்வளவுதான் நல்லவனாக இருக்கவேண்டும் என்று நினைத்தாலும் , நம்மைச்சுற்றியுள்ள சமூகம் , அப்படி இருக்கவிடாது . அதையும்மீறி இருப்பவனை , ‘வேஸ்ட் , அட்டு , மொக்கை’ என்று பட்டம் சூட்டி மகிழ்வார்கள் . திடிரென ஒருநாள்  நமக்கு இச்சமூகத்தின்மீது கோபமேற்பட்டால் , அமைதியாக போய் வீட்டினுள் மனதினுள் குமுறிக்கொண்டே உறங்கிவிடுவோம் . அதைத்தட்டிக்கேட்க , நமக்கு ‘மல்டிபள் பெர்சனாலிட்டி டிசார்டரோ’  ‘விதவித காஸ்ட்யூம் கெட்அப்புடன் , ஆயுதங்களோ’ இல்லை .அதைவிட மிகமுக்கியம் , குடும்பபொறுப்பு.

கதை :

சலீம் , ஒரு அமைதியான , விதிக்களை பின்பற்றும் அச்சடித்த அக்மார்க் நல்லவன் . டாக்டராக வேலை செய்கிறான் .பிற உயிர்களுக்கு தீது செய்யாதவன் .அனாதையாக வாழும் அவனுக்கு காதலி கம் வருங்கால மனைவி கிடைக்கிறாள் .எதிலும் பொறுமையுடன் , மனிதாபிமானத்துடன் இருக்கும் சலீமை , நாள் செல்ல செல்ல அவள் வெறுக்கிறாள் . ஒருகட்டத்தில் ,’நீ ரொம்ப நல்லவன்’. சோ நாம பிரிஞ்சிடலாம்னு அசால்டாக சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறாள் .இன்னொரு பக்கம் , சலீம் வேலை செய்யும் மருத்துவமனையில் , அவனை டிஸ்மிஸ் செய்துவிடுகிறார்கள் . கோபத்தில் சரக்கடித்து , ஹாஸ்பிட்டல் எம்.டியையும் அவரின் அல்லகைக்களையும் அடித்துவிட்டு , ரோட்டில் கத்திக்கொண்டே செல்கிறார் . ஒன்வேயில் வரும் ஒருவனிடம் ரூல்ஸ் பேச , அவனோ போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் .ஸ்டேசனில் அவனை வைத்திருக்க , சலீமின் காதலியின் தகப்பனாரிடம் இருந்து  போன் வர , வேறுவழியின்றி ஸ்டேசனை விட்டு எஸ் ஆகிறார் . மீண்டும் போலிஸ்பிடியில் மாட்ட , அந்த எஸ்.ஐ யோ , உனக்கு இரண்டு வருடம் ஜெயில் தான்டியோய்னு மிரட்ட , மனுஷன் காண்டாகி , எஸ்ஐயை அடித்துபோட்டு அவனின் துப்பாக்கியை லபக்கிவிட்டு , எஸ் ஆகிறார் . இரண்டு ஆண்டுகள் ஜெயிலில் வாழ்வதற்குபதில் , ஒரே ஒரு நாள் , நமக்குபிடத்தமாதிரி நாம் வாழலாம் என்று முடிவெடுக்கிறார் . தப்பித்து நேராக ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார் .4 பசங்களை கடத்துகிறார் . அதில் ஒருவன் , உள்துறை அமைச்சரின் மகன் . அவர்களை எதற்காக கடத்தினார் ? கடத்தி என்ன டிமான்ட் செய்கிறார் ? அந்த பசங்களின் கதி என்ன ? கடைசியில் , ஹீரோ என்ன ஆனார் ? என்பதே படத்தின் மிச்சமீதி கதை .
இப்போது வரும் படங்களில் முதல்பாதியில் செலுத்தும் கவனத்தை , இரண்டாம் பாதியில் படுக்கவைத்துவிடுகிறார்கள் .ஆனால் , இப்படத்தில் , முதல்பாதியில் ஏனோதானோவென்று இழுத்து இரண்டாம் பாதியில் நன்றாக கொண்டு சென்றுள்ளார்கள் .படத்தில் இசை மிகச்சுமார் ரகமே . ஒரே ஒரு குத்து பாட்டும் , ஒரு மெலடியுமே மட்டுமே ஓகே ரகமாக உள்ளது .பிண்ணனி இசை முழுமையும் ‘நான்’ படத்தில் வரும் இசையே . திரைக்கதை , முதல்பாதியில் மிக மெதுவாக நகருவதால் , கொஞ்சம் அலுப்பு தட்டிவிடுகிறது. ஒளிப்பதிவு ஓ.கே ரகம் . ஹீரோயின் என்ற பெயரில் திரிஷாவையும் , சோனாவையும் கலந்து கட்டிய ஒரு ஆன்டியை நடிக்கவைத்துள்ளார்கள் . அவரின் மேக்கப்பை கொஞ்சம் குறைத்திருக்கலாம் .கண்ணால் , காண முடியவில்லை. விஜய் ஆன்டனி வழக்கம்போல , ஒரு மெலோடி  பாடலில் , ஆஸ்கார் வாங்கிய ஏ.ஆர் .ரஹ்மானை போல , கையை மெதுவாக வானத்தை நோக்கி டான்ஸ் நடக்கிறார் . ‘உர்’ ரென்று படம் முழுவதும் முகத்தை வைத்தபடியே வருகிறார் .

மொத்தத்தில் ,


மிகச்சுமாரன படம் தான் .கிளைமேக்ஸ் வரும்முன்னே , நாமே யூகித்துவிடலாம் . முன்பாதி , கொஞ்சம் டல்லாக சென்றாலும் பின்பாதி ஓ.கே ரகம் . ’நான்’ போன்ற கிரைம்-திரில்லர் எதிர்பார்ப்பில் சென்றால் , கடுப்பாக , வாய்ப்புகள் அதிகம் . அவசியம் பார்க்கவேண்டியதில்லை. வேறுவழியில்லையெனில் பார்க்கலாம் .

Saturday, 30 August 2014

பயணம் @ டைம் மெஷின் - 5

பயணம் @ டைம்மெஷின்-1ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம்மெஷின்-2ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம்மெஷின் -3ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம் மெஷின் - 4ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
அத்தியாயம் -3

கிமு 2-ம் நூற்றாண்டுபகுதி -3

கலகமும் பயணமும்
கல் தோன்றிய பின்பே , மண் தோன்றும் என்பது நில இயல்பு. நிலங்களுல் குறிஞ்சிநிலமே முதலில் தோன்றிய நிலமாதலால் ,மக்கள் தங்கள் வாழ்க்கையை முதலில் ஆரம்பித்த இடமும் அதுவே . மக்களின் உடலை வளர்த்து  , உயிர்காக்கவல்ல உணவுப்பொருட்களை , அம்மக்களின் உழைப்பை எதிர்நோக்காமல் தரவல்ல ஒரே இடம் குறிஞ்சிநிலமாகும். காயும், கனியும் ,கிழங்கும் , மக்கள் விரும்பி உண்ணும் ‘மா’வினங்கள் என அனைத்தும் வெகு எளிதாக கிடைத்ததால் ‘நாளைத் தேவை’ என்ற சேமித்துண்ணும் தனியுடைமை பொருள் நிலை , அம்மக்களுக்கு இல்லை. ஆனால் , அந்நிலை அம்மக்களுக்கு நீடிக்கவில்லை. வருடங்கள் உருண்டோட , மக்கள் தொகை பெருகிற்று , ‘மா’க்கள் தொகை குறுகிற்று .  உண்ண ஆட்கள் அதிகமானதால் , உணவுப்பற்றாக்குறையும் அதிகரிக்க ஆரம்பித்தது.


இந்நிலையில்தான் மக்கள் , மலைநாட்டிற்கும் , காடு நாட்டிற்கும் இடைப்பட்ட பாலைக்கு பிழைக்கச்சென்றனர் . ஆனால் , பாலையோ வளமின்றி வாடிய இடம் என தெரிந்த மக்களுல் பலர்  அவ்விடத்தை விட்டு முல்லைநிலத்திற்கு புகுந்தனர் . அங்கு குறுங்காடுகளை அழித்து , புன்செய் பொருள்களை விழைவித்தனர் .ஆடு , மாடு , எருமை போன்ற நிரைகளை வளர்த்து , வாழ்ந்தனர். அதனால் குறிஞ்சி போன்ற பொதுவுடைமை நிலை மறந்து , தனக்கு மட்டும் என்ற தனியுடைமை நிலை உருவானது .


இந்நிலையில் , வாழவே வழியற்ற பாலையில் பரிதவித்த மக்கள் ,பழி பாவங்களை எண்ணாது , அப்பாலையை கடந்து செல்வாரை பாடையில் ஏற்றிவிட்டு , அவர்களின் உடைமைகளை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். ‘ருசி கண்ட பூனை’ யான பாலைவாழ்மக்கள்  , நிரைகளுடன் வாழும் முல்லை நிலத்தில் அவ்வப்போது புகுந்து முல்லைவாழ்மக்களின் உடைமைகளை களவாடினர் . முல்லை நில ஆடு,மாடுகள் குறிஞ்சிநிலத்தின் மான் , வரையாடு போல் தானாக வளராமல் , அந்நிலத்தின் மக்களால் வளர்க்கப்பட்டதால் ,அம்மக்கள் பாலை நிலத்தவருடன் பெருஞ்சினம் கொண்டு , போராட முடிவெடுத்தனர் . அதுமட்டுமின்றி , முல்லைவாழ்மக்கள் தங்களின் பசு முதலிய நிரைகளை பாதுகாக்கவும்  , பாலைநிலத்தவரின் தொல்லைகளுக்கு எதிராக தங்களை வழிநடத்தவும் , தமக்கொரு தலைவனை தேர்ந்தெடுத்துக்கொண்டனர். இதே பார்முலாவை பின்பற்றிய பாலை நிலத்தவரும் தமக்கென ஒரு தலைவனை உருவாக்கினர் . தலைவன் அரசனான் . உரிமைப்போராட்டம் , போர் ஆனது . இவ்வாறு காலம் காலமாக , போர்புரிந்து காத்து வரும் அம்முல்லை நிலகுடிகாவலனான , ஆத்திமலர் அணிந்த சோழமாமன்னனின் வீரர்கள் , எதிர்வரும் காட்டுமிராண்டிகளி்ன் குருட்டுப்’போரை’ வரவேற்க தயராக இருந்தனர். 


 அரேபியக்குதிரைகளையே அடக்கி ஓட்டும் குதிரைப்படை வீரர்களோ , எதிர்வரும் காட்டுமிராண்டி கும்பலை ஒழித்துக்கட்டிவிடும் முனைப்புடன் , வாள்களை கையில் கொண்டு பரபரத்துக்கொண்டிருந்தனர் .அம்மதிலின் உச்சத்தில் , இருபுறமும் நின்றிருந்த வில் பயின்ற வீரர்களோ , தங்களின் வில்களில் அம்புகளைப்பொருத்தி ,அதை எதிரியின் நெஞ்சில் இறக்க ,தயாராகியிருந்தனர் .காலாட்படை வீரர்களோ, தங்களின் இரும்புக்கேடையங்களை மார்பு வரை மறைத்து ,கையில் கூரிய வேல்களை கொண்டு , எதிரிகளின் நெஞ்சிற்கு நேராக வரவேற்பளிக்க காத்திருந்தனர் . எப்படியும் முந்நூறு சொச்சம் வீரர்கள் , வீரமரணம் அடைந்தாலும் பரவாயில்லை என்று போர்புரிய ஆவலுடன் காத்திருந்தனர். பிணந்தின்னி கழுகுகள் , வலம் வர ஆரம்பித்தன . இன்று அவைகளுக்கு சரியான வேட்டை தான்


அக்குதிரையில் முதலில் சென்ற வீரன் , சில வீரர்களை அழைத்துவந்தான் .அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்த வீரன் , வேறு யாருமில்லை. பாலாவையும் , சந்துருவையும் வழிமறித்துக்கேட்டனே ,அவனேதான் இப்போர்வீரர்களை வழிநடத்திக்கொண்டிருந்தான் . எதிரிகள் கையில் , கட்டை , கடப்பாறை , கவசம் என , ஆதிகாலத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்த அத்துனை பொருட்களையும் வைத்திருந்தனர் .அக்கூட்டத்தை தலைமையேற்று நடத்தி வந்தவன் ஏதோ கத்த , அனைவரும் சோழவீரர்களை நோக்கி ஓடி வந்தனர் .

‘தாக்குங்கள்’ என்ற முதன்மை காவலனின் குரல் கேட்டதும் , அம்புகளை வரிசையாகவும் சரமாரியாகவும் , மதிலிலிருந்து வான்நோக்கி எய்தனர் வில் வீரர்கள் .அடுத்து 3 நொடிகளில் , அவ்வம்புகள் எதிரிகளின் தலையையும் , கண்ணையும் கிழித்துக்கொண்டு தாக்கியபடியே கீழிறங்கியது . இருநூறுக்கும் மேற்பட்ட அக்காட்டுவாசிகளில் , பத்து சதவீதம் பேர் , வில்லுக்கு இறையாயினர். இதற்குமேலும் அம்புகளை பயன்படுத்தினால் , வாள்களும் , வேல்களும் கோவம் கொண்டு துருப்பிடித்து விடும் என்ற காரணத்தால் , காலாட்படை வீரர்கள் , தங்கள் தாயின் தாய்ப்பாலின் சக்தியை காட்டுவதற்காக , எதிரிகளை நோக்கி ஓடினர்  ; அவ்வணிக இளைஞனும் தான் . காலாட்படை வீரர்கள் , எதிரிகளின் கவச நெஞ்சில் தங்களின் கூரிய வேல்களால் இறக்கிய போது ஏற்பட்ட ‘சதக் சதக் சதக்’ என்ற சத்தத்தில் , கானகத்தில் குடியிருந்த அத்தனை பறவைகளும் தங்களின் சிறகுகளை அடித்துக்கொண்டு அங்கிருந்து பறந்தன . வாள்வீச்சில் புகழ்பெற்றவீரர்களின் வாள்சுழற்சியினால் , அக்காட்டுமிராண்டிக்கள் உயிரை விட்டுக்கொண்டிருந்தனர் .அந்த இடமே புழுதிக்காடாகவும் , அங்கு புதிதாக உதித்த ஆற்றின் நிறம் குருதி நிறமாகவும் மாறியது .ஒருமணிநேரத்திற்குபின் போர் முடிந்தது . அங்கு இறந்து கிடந்த உடல்களை ஓரிடத்தில் அடுக்கினர் .அதுவே , மதில்சுவரைக்காட்டிலும் , பெரியதாக இருந்தது. வணிகனுக்கு , கையில் சிற்சில காயங்களுடன் பலரை கொண்றெடுத்த வாளுடன் திரும்பி வந்தான் . அங்கே ஒரு சோழவீரன் , புலம்பிக்கொண்டிருந்தான் .

ஐயகோ ! என் முதுகில் காயம் பட்டுவிட்டதே ! இது இழிகுடிப்பிறவிகளின் போர்முறையல்லவா ! என்னை கொன்றுவிடுங்கள் . நான் வாழத்தகுதியற்றவன்

வழிநடத்திய வீரன் அவனிடம் , ‘இது போர் அன்று .இது ஒரு கலகம்’ என்று பலவாறாக கூறி அவனை சமாதானப்படுத்தினான்.

வணிகன் , தன் வாகணத்தின் அருகில் வந்தான் .சில நிமிடங்களுக்கு முன் , வேகவதி ஆற்றின்கண் செல்லும் ஓடையில் கழுவிய முகத்தில் , நீர் மெல்ல வடிந்து கொண்டிருந்தது .பாலாவையும் , சந்துருவையும் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தபடி ,

நாம் , இவ்வழியில் செல்ல இயலாது. எனவே மாற்றுவழியில் சென்று பின் ,சாலையின் ஊடே பயணிக்கலாம்

ம் என்று தலையை ஆட்டிவிட்டு இருவரும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் . திடீரென 200, 300 பேர் வராங்க. சண்ட போடுராங்க. ஒருமணிநேரத்துல செத்துபோயிடறாங்க.அப்பப்பா , இந்த ஆளு என்னடானா , அப்பாவி மாதிரி இருந்துகிட்டு , அத்தன பேத்த அசால்டா போட்டுத்தள்ளிட்டானே ! நம்ம காலத்துல , துப்பாக்கி , பீரங்கி , நியூக்ளியர விட, ரொம்ப கொடூரமா இல்ல இருக்கு. துப்பாக்கில சுட்டா உடனே மரணம் , சேதாரமும் கிடையாது. ஆனா, இவங்க , தலையைவே வெட்டியெடுத்துட்டானுங்க ! உண்மையாலும் இவனுங்கதா காட்டுமிராண்டிகளோ ? என்று பலவாறாக மனதினுள் எண்ணத்துவங்கினர். அவர்களுல் இருந்த பல எண்ணங்கள் மாறின . இதுவரை , யாரோ ஒருவன் என்ற ரீதியில் இருந்த , அவணிகன் , இப்போது பாலாவுக்கும் , சந்துருவுக்கும் பயம்கொடுக்கும் மனிதனான்.

என்னங்க சந்து ? எதுவும் பேசமாட்டோம் என்ற முடிவெடுத்துவிட்டீர்களா ?’

இல்லைங்க ! அப்படியெல்லாம் இல்லை

இல்லை ,நம் பயணத்தை ஆரம்பித்து தோராயமாக நண்பகலை நெருங்கிவிட்டோம் . பசிக்கவில்லையா உங்களுக்கு ?

இருவரும் கோரசாக ‘இல்லைங்க’.

சரி .பசித்தால் கூறுங்கள் .அமர்ந்நு அனைவரும் உண்ணலாம்

நீங்க சாப்டலாமே ?’ என்ற சந்துருவின் கேள்விகளுக்கு , சிறுபுன்சிரிப்புடன் ,

இல்லை சந்து . என் சகோதரர்களை தனியே விட்டு நான் மட்டும் எப்படி புசிப்பது ? அது மா’க்கள் கூட செய்யாத செயல் அல்லவா ?

அப்புறம் ஏங்க அத்தன பேர அப்படி கொன்னிங்க ?’

சந்துரு, அவசரப்பட்டு தன் மனதில் இருந்த கேள்விகளை கேட்டுவிட்டான் .அதன்பின் உணர்ந்ததும் அவனுக்கு கிட்டத்தட்ட எமன் உருவத்தில் தெரிந்தான் அவ்விளைஞன் . ஆனால் , இக்கேள்விக்கும் வழக்கம்போலவே சிரித்துக்கொண்டே பதிலளித்தான் , அவ்விளைஞன் .

அது போர்நீதி. போரில் இது சாதாரணம் .எதிர்த்து வருபவனின் தலையை கொய்யவேண்டும் .இல்லையெனில் வீரமரணம் அடைய வேண்டும் .நம் நாடும் தாயும் ஒன்றல்லவா ? தாய் ஈன்றெடுக்கிறாள் . ஆனால் , ஈன்றெடுக்கும் தாய்க்கும் , நமக்கும் வாழ்வளிப்பது , தாய்நாடுதானே ? . அவ்வாறு உள்ள நாட்டிற்கு , ஏதேனும் தீங்கு நேரிட்டால் , அதைக்கண்டு ஒளிந்து கொண்டிருப்பவன் ஒர் ஆண்மகனே இல்லை . சாதாரண குடிமகனாக என் கடமையை , என் நாட்டிற்கு செய்தேன் .அவ்வளவே ! அதற்காக , நீங்கள் இருவரும் என்னை கொலையாளானாகப் பாவித்து பார்ப்பது , என் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போலுள்ளது . அதே , எதிராளிகள் இன்முகத்துடன் என்னை அணுகி , என் சொத்தை  ,யாசகம் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன் . ஆனால் , கையல் ஆயுதங்களுடனும் , முகத்தில் வெறியுடனும் என் நாட்டை அபகரிக்க பார்த்ததால் , அவர்களுக்கு சிவலோகப்பதவி அளித்தேன்

அனுடைய பேச்சில் , பாலாவும் சந்துருவும் தெளிவு பெற்றார்கள் .போரில் நடக்கும் கொலைகள் , பாவங்கள் ஆகாது என உணர்ந்தனர். மேலும் அவ்விளைஞனின் வார்த்தைகள் அவர்களை மனமிளக செய்தது . அவ்வளவு நேரம், அவர்களுக்கு பேயாக கண்களுக்கு தெரிந்த அவ்விளைஞன் , ஒருநொடியில் பெருமைக்குரியவனாய் தெரிந்தான் .

சாரிங்க !! நீங்க ஃபைட் பண்ணத பாத்ததும் தப்பா நினச்சிட்டோம் .ப்ளீஸ் ஃபர்கிவ் மீ ’ என்ற இருவரும் , தம் தமிங்கிலிஸை எண்ணி வெட்கமுற்று மீண்டும் , அவர்களுக்கு தெரிந்த தமிழில் வருத்தமுற்று கூறினார்கள் .

பரவாயில்லை .கோவம் கடந்ததா ? உணவருந்தலாமா?

இவ்வார்த்தையை கேட்கும்முன்பில்லாத பசியை , இவ்வார்த்தைக்குப்பின் உணர்ந்தார்கள் . உடனே , ஒரு ஓடையின் அருகினில் பயணித்து , அங்கு மதிய உணவாய் கேப்பைக்கலியை உண்டனர். தங்களை சுமந்து வந்த எருதுகளை , வண்டியிலிருந்து கழட்டிவிட்டு , கயிற்றால் கட்டி , வனத்தில் மேயவிட்டிருந்தனர். பின் மதிய நேர அயர்ச்சியின் காரணமாக , மெல்ல கண்மூடி உறங்கினர்.

இரண்டு மணிநேரத்திற்குப்பின் , அனைவரும் எழுந்து , கைகால் அலம்பி , மாடுகளை வண்டியில் பூட்டி , தங்களின் பயணத்தை தொடங்கினர் . இன்றைய காலை நேர பிரச்சினையில் , இவர்கள் கடந்த தூரத்தைப்பற்றியோ , இடத்தைப்பற்றியோ கூற நேரமில்லாமல் போய்விட்டது.  காலையில் கலகம் முடிந்த போது சூரியன் உதித்து விட்டிருந்தான். அதுவுமின்றி , கொன்று குவித்த உடல்கள் அனைத்தும் , இவர்கள் செல்ல வேண்டிய சாலையிலேயே இருந்ததது. அடக்கம் செய்ய நேரமாகும் என்பதால் , இவர்கள் காட்டின் வழி பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அக்காலத்தில் , வாணிபம் மிகச்சிறப்புற்றிருந்ததால் ,பற்பல சாலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு காட்டுவழிச்சாலையை தேர்ந்தெடுத்து பயணித்துக்கொண்டிருந்தனர். வணிகன் மாட்டுவண்டியை செலுத்தும்வேலையை செய்ய , அவனின்பின் கிட்டத்தட்ட பத்து மூட்டைகளில் , வாணிப பொருட்களும் , அதன்மேல் இவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர். இரு எருதுகளும் , தங்களின் திடங்கொண்ட திமிலுடன் , திமிராக இவர்களை சுமந்துகொண்டு பயணித்தது .இரண்டு இஞ்ச் அளவிலான , தேக்கு மற்றும் வேப்பமர கட்டைகள்  , அவர்களின் எடையைத்தாங்கி கொண்டிருந்தன .

ஏங்கணா ! தஞ்சாவூர்ப்போக இன்னும் எவ்ளோ நேரமாகும்’ –பாலா .

இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்

ரெண்டு நாளா ?

என்று வாயைப்பிளந்தான் பாலா .

ஆமா ! காலைல சண்ட போட்டவங்கலாம் எந்த ஊருக்காரங்க ?’ – சந்துரு.

அவர்கள் யார் ? எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது . இதே போல் கூட்டமாக சேர்ந்து தாக்குவார்கள் . எனக்கென்னவோ , உங்களிடம் முன்பு கூறனேனே ! அந்த கோசனின் படை வீரர்கள்தான் என்று தோனுகிறது . அவர்கள் இங்கேயே வனத்தில் தங்கி , இவ்வேலையை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் .பாண்டிய தேசத்திலும் இதே போன்றதொரு நிகழ்ச்சியை கண்டிருக்கிறேன் . ’

ஆமா ! அண்ணே . உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா ?

‘புரியவில்லை பாலா

உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா ?

ஆகிவிட்டது பாலா  ! மனைவியும் பிள்ளையும்  சீத்தலையில்தான் இருக்கிறார்கள்

ஓ.கே ணா ! ஓ. சாரி . சரிங்ணா


அவர்களின் பயணம் மெல்ல தொடர்ந்தது. சில்லோடைகளையும் , பசுமைப்பூக்களையும் , வானொடிந்த மரங்களையும் , ஆங்காகங்கே வரும் ஆயர் என்றழைக்கப்படும் மக்கள் வாழும் சில கிராமங்களையும் கடந்து பயணித்தனர் . இரவு நெருங்கியது. காட்டின் நடுவே இருந்த ஒரு குக்கிராமத்தில்  , அன்றைய இரவை கழிக்க முடிவு செய்தனர் . வழிப்போக்கர்களின் மண்டபத்திற்கு சென்று பொருட்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு , பின் அவ்வூரில் , ஹோட்டல் எங்குள்ளது எனத்தேடியபடியே விசாரித்தார்கள் . ஒரு பெண்மணி , பொருளுக்காக உணவு பரிமாறுவாள் என்பதனை அறிந்து அவள் வீட்டிற்கு சென்றனர் . கானகத்தின் நடுவே அவள் வீடு இருந்தது. வீட்டின்முன் நின்று

அம்மா !! பசியில் வாடி வந்துள்ளோம் . உணவு வேண்டும் தாயே !’ என்ற வணிகனின் குரலுக்கு , எவ்வித பதில்குரலும் வரவில்லை . மாறாக காட்டின் நடுவில் இருந்து ஒரு பெண்மணியும் , கூடவே கோடாரியுடன் , ஆலமரம் போன்ற தேகத்துடன் ஒருவனும் வந்தான் .

தாயே ! உண்ண வந்துள்ளோம் .’

இருங்க சாமி . மாமா ! நீங்க போய் அந்த கட்டைய வெட்டிட்டு வந்துடுங்க . சாமி .நீங்களாம் கை கழுவிட்டு வந்துடுங்க’

சரி தாயே !
என்ற வணிகன் , பாலாவையும் சந்துருவையும் அழைத்து , அருகில் இருக்கும் பானையில் , தங்களின் கரம் ,சிரமெல்லாம் சிரத்தையுடன் கழுவினர் .பின் மெல்ல , வாசலின் அருகில் வந்து நின்றனர் .

தாயே ! உள்ளே வரலாமா ?

வாங்க சாமி . எல்லாம் தயார் பன்னிட்டேனுங்க . மூவருக்குத்தான் சோறா ?

ஆமாம் தாயே  ! அது மட்டுமின்றி நாங்கள் அனைவரும் வெளியூர் பிரயாணத்தில் இருக்கிறோம் .நாளை காலை மற்றும்  மதியவேளை உணவையும் தயார் செய்து தந்தீர்கள் என்றால் மிகவும் மகிச்சியுடன் செல்வோம்


பன்னிடறேனுங்க சாமி’
என்றவாறே வீட்டினுள் நுழைந்தார்கள் .குடிசை வீடுதான் . ஆனால் , சாணிகொண்டு மொசைக் போல் மெழுகப்பட்டிருந்தது .தேடினாலும் குப்பை கிடைக்கா வண்ணம் சுத்தமாக இருந்தது . கொல்லைப்புற கதவு ஒன்று திறந்திருந்தது .

அவள் கூறி விட்டு , வாழை இலையை போட்டு விருந்து பரிமாற ஆரம்பித்தாள் . அவர்கள் உணவருந்தி முடியும்வரை அவர்கள் அருகிலே இருந்து பரிமாறினாள் .பாலாவுக்கும் சந்துருவுக்கும் , இரண்டு நாட்களாக உண்ணும் உணவினில் , ருசி வித்தியாசமாக இருப்பதை அறிந்துள்ளாகள் ;அதில் இருக்கும் சத்துகளையும் தான் .உணவருந்தியதும் , ஒரு கயிற்றுக்கட்டிலை எடுத்து வெளியே போட்டு அவர்கள் மூவரையும் அமரவைத்துவிட்டு , வீட்டினுள் முரத்தினைக்கொண்டு அரிசியை பதம்பார்த்துக்கொண்டிருந்தாள் .தூரத்தில் , கோடாரியால் வெட்டும் சத்தம் கேட்டது.அவளின் கணவனாகத்தான் இருக்கவேண்டும்ம.இவள் கருப்பாக இருந்தாலும் முகப்பொலிவிலோ , உடல்வாகிலோ , பேரழகியைப்போலதான் இருந்தாள் .ஓ மை காட் அடுத்தவன் பொண்டாட்டிய வர்ணிக்ககூடாது .அதுனால இது போதும் .

இவர்கள் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ,திடீரென அப்பெண் திட்டும் சத்தம் காதில் விழுந்தது .

எத்தன தடவை சொல்லிருக்கேன் . இங்கலாம் வரக்கூடாதுனு .அறிவில்ல ‘என்றபடியே  ‘சொத் சொத்’ என்ற அடிவிழும் சத்தமும் கேட்டது . இவர்கள் வெளியே இருந்து உள்ளே சென்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கச்சென்றார்கள் .திடீரென வீட்டினுள் இருந்து , ஒரு கொழுத்த புலி வெளியே ஓடியது . அதைத்தொடர்ந்து அப்பெண்ணும் , அப்புலியை துரத்திக்கொண்டு வந்தாள் .பாலாவுக்கும் , சந்துருவுக்கும் டர்ராகியது .கண்ணெதிரே , கொழு கொழு என்று ஓடிய புலியை பார்த்ததும் .அவளோ , கையில் முரத்தை எடுத்துக்கொண்டு விளாசியபடியே துரத்தினாள் .
சிறிதுநேரத்திற்குபின் , அவள் மீண்டும் வந்து இவர்களைப்பார்த்து சிறிய சிரிப்பை உதிர்த்துவிட்டு வீட்டினுள் சென்றாள் . ஒரு மணிநேரத்திற்கு பின் , அவள் சமையல் வேலைகளை முடித்துவிட்டி , அவர்களுக்கு , பார்ணல்களை செய்து கொடுத்தாள் .அந்நேரத்தில் , அவளின் கணவனும் வந்தான் . மூவரும் அவர்களிடம் இருந்து விடைபெற்று மண்டபத்தை அடைந்தார்கள் . மண்டபத்தில் அமர்ந்த அவர்கள் , சில கதைகளை பேசியவாறே கண்ணுறங்க ஆரம்பித்தார்கள் .

ஓ! இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் , அந்த காட்டுவாசிகளின் தோற்றமுடைய கூட்டத்தை பற்றி சொல்ல மறந்துவிட்டேன் .அவர்கள் தான் பின்னாளில் , சிறுகசிறுக சேர்ந்து ,மூன்று மாமன்னர்களையும் ஏமாற்றி வீழ்த்தி , சுடர்மிகு தமிழகத்தை , இருட்டிற்கு வார்த்த களப்பிரர்கள் .


இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே அழுத்துங்கள்


(நண்பர்களே ! இந்த பயணம் தொடர்கதையை முடிந்தவரை வேகமாகவும் சிறப்பாகவும் எழுதலாம் என்றுதான் எழுதிவருகிறேன் . உங்களின் கருத்துகள் எனக்கு மிகவும் அவசியமாகும் .உங்களின் கருத்துகளை மறக்காமல் இட்டு செல்லுங்கள் .மாதம் இரண்டு பதிவுகளாக வெளியிடலாம் என்றுதான் நினைத்து எழுத தொடங்கினேன். நண்பர்கள் சிலரால் , மாதம் மூன்று பதிவுகளை இடலாம் என்று முடிவு செய்துள்ளேன் .தொடர்ந்து ஆதரவளித்துவரும் தோழர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.)


Saturday, 23 August 2014

THE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்
2010-ல் , சில்வர்ஸ்டர் ஸ்டாலோனின் முதல் எக்ஸ்பாண்டபுள்ஸ் பாகம் ரிலிசாகி , இந்தியாவில் சக்கைப்போடு போட்டது . அதன்பின் , 2012-ல் ரிலிசான இரண்டாம் பாகம் , ஓரளவு சுமாராகவே ஓடியது .ஆனால் , இதன் மூன்றாம் பாகம் மற்ற இரண்டு பாகங்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டது. மனுஷன் ,ஏற்கனவே தனியா நடிச்ச  ராம்போ சிரியஸ்கள , ஒரு 5000 பேரயாவது கொன்னுருப்பாரு. இப்போ வயசானதாலோயோ என்னவோ , இன்னும் ஒரு 8 பேரக் கூட்டிகிட்டு , தாருமாறா கொல்றாரு. ஆனால் , அஞ்சான் படம் மாதிரி ஆடியன்ச கொல்லாம , படத்துல வர்ற வில்லனுங்களதான் கொல்றாரு.

கதை

அட என்னத்தப்போய் கதை. இவங்க டீம்ல 5 பேரு. ஒரு மிஷன்க்கு , மெஷின்கன் எடுத்துட்டு போராங்க. அங்க வில்லன பாக்கறாங்க. அங்க ஒரு ட்விஸ்டு. வில்லன் , ஏற்கனவே , ஸ்டாலனோட எக்ஸ்பேண்டபுள்ஸ் டீம்ல இருந்து விலகுனவர். அவரு , ஸ்டாலனோட டீம் மெட் ஒருத்தர , பெட்டக்ஸ்ல சுட்டரராறு. வில்லன் தனியா ராணுவமே வச்சிருக்க அளவுக்கு பெரிய ஆள். அங்க போனா சாவு நிச்சயம்னு முடிவு பண்ண ஸ்டாலன் , தன் டீம் மெட்களை கழட்டி விட்டுட்டு , புதுசா 4 பேர வச்சி ஒரு டீம் ரெடி பன்றாரு . அப்போ , வில்லன் தன்னோட பிசினஸ்க்காக , ஒரு ஹோட்டல்ல இருக்காரு. புது டீம கூட்டிகிட்டு வில்லன போட்டுத்தள்ள போறாரு ஹீரோ. புது டீம்ல எல்லாம் , நம்மள மாதிரி ‘யூத்’துங்க .அதுங்க ப்ளான் படி வில்லன தூக்கிடறாங்க .போற வழியில , வில்லனோட ஆளுங்க , ஹெலிகாப்டர் எடுத்துட்டு வந்து பாம் போட , அந்த டைம்ல ஸ்டாலோன்  ஆத்துல விழுந்தடறாரு. அந்த யூத்துங்கள , வில்லன் அலேக்கா தூக்கிட்டு வந்துடறான் .அவங்கள மீட்க ஸ்டாலோன் போக , அவருக்கு உதவியா , பழைய சூப்பர்ஸ்டாருங்களாம் ஒன்னு சேர்ராங்க. எல்லோரும் சேர்ந்து , வில்லனோட ,இடத்துக்கு போறாங்க . அங்க , இவங்களுக்குனே நேர்ந்துவிடப்பட்ட ஒரு 500 பேர்க்கு மேல இருக்காங்க அப்புறம் என்ன , ஒரே டமால் டுமில் , சதக் சதக் , கும் கும் , டம் டம் தான்.இதுல , யார் யாரோ நடிச்சிருக்கானுங்க . எல்லாத்தையும் சொன்னா , இன்னும் 50 போஸ்ட்தான் போடனும் . இந்தபடத்துல புதுசா இன்ட்ரோ ஆகிருக்க ஆன்டோனியா , பட்டாசு கிளப்பிருக்காரு. அப்புறம் BLADE TRIOLOGY – யில் கலக்கிய விஸ்லியும் , இதில் நன்றாக நடித்துள்ளார் . புதுசா வர்ரவங்க முகத்தையெல்லாம் , எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்றெல்லாம் குழப்பிக்கொண்டிருந்தால் படத்துடன் ஒன்ற இயலாமல் போய்விடும். அப்புறம் அர்னால்டு ரசி்கர்கள் யாரேனும் இருந்தால் , ரொம்ப எதிர்பார்க்கவேண்டாம் .இரண்டாம் பாகத்தினை போலவே , ஏதோ போஸ்டரில் போடும் பெயருக்காக இரண்டு காட்சியினை வைத்திருக்கார்கள் . MEL GIPSON , வில்லனாக அசத்தியிருக்கிறார் .
முதல் ரெண்டு பாகத்தையும் கம்பேர் பண்ணும்போது , இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .வழக்கமான ஸ்டாலோன் கிளிஷே காட்சிகள் இருந்தாலும் , படம் அசத்தலா தான் இருந்துச்சி. ராம்போ-4 , EXPENDABLES முதல் பாகங்களை காட்டிலும் வன்முறை குறைவு (சொல்லப்போன , வன்முறையே இல்ல) . கிராபிக்ஸ் , DI எல்லாம் கலக்கல் . தமிழ் டப்பிங்லாம் செமையா பன்னிருக்காங்க . ஜாலியா , ஒரு கலர்புல் ஆக்சன் சினிமா பாக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு , இது வொர்த்தான படம்.

Thursday, 21 August 2014

BURIED (Eng-2010) – சினமா விமர்சனம்


BURIED - ENGLISH 2010
தமிழில்  வெளிவந்த இருவர் மட்டும் என்ற படத்தில் , ஹீரோ , ஹீரோயின் என இருவர் மட்டுமே , மொத்தப்படத்திலும் நடித்திருப்பார்கள் . இதே போன்று கிட்டத்தட்ட ஹீரோவை மட்டுமே சுற்றி நகரும் படங்களில், வில் ஸ்மித் நடித்த AFTER LIFE படத்தையும் குறிப்பிடலாம்(ஆனால் , இந்தப்படத்தில் ப்ளாஸ்பேக் காட்சிகளில் பலர் வருவார்கள்) . CAST AWAY , 127 HOURS , LIFE OF PIE , GRAVITY போன்ற படங்களிலும் , பெரும்பான்மையான காட்சிகள் ஒருவரைச்சுற்றியே நடப்போது போல் காட்டினாலும் , அந்த படங்களில் , ஒரு சின்ன வேடத்திலாவது, வேறொருவரை ஒரு காட்சியில் காட்டிவைத்துவிடுவார்கள் . ஆனால் , முழுக்க முழுக்க , வெறும் ஒருவர் மாத்திரமே நடித்த படம் ஒன்றெனில் , எனக்குத்தெரிந்தவரை இது ஒன்று மட்டுமே. அப்படியே வேறு படங்கள் இருந்தாலும் , இந்த படத்தில் வரும் இன்னொரு சிறப்பு , கண்டிப்பாக அந்த படங்களில் இருக்காது . காரணம் , இந்த படம் முழுக்க முழுக்க ஒரே லொகேசனில் எடுக்கப்பட்டது .

2006 , அமெரிக்கா , ஈரான் மீது போர்த்தொடுத்த காலம் . அச்சமயத்தில் , அமெரிக்காவிலிருந்து , கான்ட்ராக்ட் அடிப்படையில் ட்ரைவர் , சமையல்காரர் , போன்ற ஆட்கள் இராணுவத்திற்கு உதவும் பொருட்டு நியமிக்கப்பட்டிருப்பார்கள் . ஈரானில் அடிக்கடி நடக்கும் தீவிரவாத சண்டைகளின்போது , இராணுவத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு ,மிஞ்சுபவர்களை கடத்திக்கொண்டு சென்றுவிடுவார்கள் தீவிரவாதிகள். அப்படி கடத்தப்பட்டவர்களை , ஒரு சவப்பெடிய்யில் அடைத்து , ஆழமாக நிலத்தினுள் புதைத்துவிடுவார்கள் . புதைக்கப்பட்டவர்கள் , தங்கள் உறவினர்களை தொடர்புகொண்டு பேச ஒரு செல்போனும் , ஒரேஒரு லைட்டும் வைத்துவிடுவார்கள் . புதைந்து இருப்பவர்களுக்கு , தீவிரவாதிகள் போன் செய்து , அமெரிக்க அரசிடம் தொடர்பு கொண்டு பணம் வாங்கித்தருமாறு  மிரட்டுவார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார் படத்தின் ஹீரோ பால் .

கதை -
படத்தின் ஆரம்ப காட்சியில் ,பால் விழித்துப்பார்ப்பார் . தன் கையில் இருக்கும் லைட்டரின்மூலம் , தான் இருக்கும் இடத்தைப்பார்ப்பார் .சவப்பெட்டியில் அடைக்கப்பட்டிருப்பதை உணருவார் .இடையில் தீவிரவாதிகளிடம் இருந்து போன் வரும் .அப்போதுதான் , தான் கடத்தப்பட்டதையும் , மாலை 6 மணிக்குள் 5மில்லியன் டாலர் பணம் தந்தால் பிழைக்கலாம் என்பதையும் அறிவார் .முதலில் தன் வீட்டிற்கு போன் செய்வார் . யாரும் எடுக்கமாட்டார்கள் .யார் யாருக்கோ போன் செய்து கடைசியில் நாட்டின் முக்கிய அதிகாரிகளிடம் தன் நிலையை கூறுவார். ஆனால் , அமெரிக்கா , எப்போதும் தீவிரவாதிகளின் நிபந்தனைக்கு செவிசாய்த்து பணம் தந்த தாக சரித்திரம் இல்லை, கவலைப்படவேண்டாம் ,உங்களை மீட்டுவர அதிகாரிகளை அணுப்புகிறோம் என்று கூறுவார்கள்.  அந்த அதிகாரியின் போன் நம்பரும் கிடைக்க ,அதைக்கொண்டு அவரை தொடர்பு கொள்வான். அவர்களும் வருவதாக கூறுவார்கள். இடையிடையே அவன் மனைவிக்கு போன் , செய்துகொண்டே இருப்பான். ஆனால் , அவன் மனைவி , போனை எடுக்கவே மாட்டாள் . போன் நம்பரை வைத்து ட்ராக் செய்யலாமே என்றாலும் அது ப்ளாக்பெர்ரி வகை போன் .ட்ராக் செய்வது கடினம். போனில் சார்ஜ் வேறு குறைந்துகொண்டே இருக்கும் .இன்னொரு பக்கம் , சவப்பெட்டியுனுள் ஒரு பாம்பு வேறு புகுந்துவிடும் . தீவிரவாதி வேறு போன் செய்து ஆயா , அம்மா என்று திட்டுவான் . இன்னொரு பக்கம் மீட்புக்குழு இவன் இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறுவார்கள். அதே நேரத்தில் , ஆரம்பத்தில் இவன் சவப்பெட்டியை உடைக்க முயற்சித்ததால் , மணல் உள்ளே புக ஆரம்பித்திருக்கும் .கடைசியில் என்ன ஆனான் ? மீட்கப்பட்டானா ? இல்லையா ? என்பதே கிளைமேக்ஸ் .இவை அனைத்தும் , நாம் உணருவது , அவன் மற்றவர்களுடன் பேசும் செல்போன் பேச்சுகளால் மட்டுமே. ஒவ்வொரு படத்திலும் , யாராவது ஒருவர் மாத்திரமே தனியே ஒளிரும்படி தன் வேலைகளை செய்திருப்பார்கள் .ஆனால் ,இப்படத்தை பொறுத்தவரை , எல்லோரும் மிகமிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் பால்-ஆக நடத்திருக்கும் ரியன் ரெனால்ட்ஸ்-ன் நடிப்பு , அவ்வளவு அற்புதமாக இருக்கும். மனுசன் , தன்னந்தனியா நடிச்சு ,மொத்தப்படத்தையும் தூக்கி வச்சிருக்கார். ஒரு காட்சியில் தன்னைப்பெற்ற தாய்க்கு போன் பண்ணுவார் .

‘அம்மா , நான் தான் பால் பேசுறேன்’

‘எந்த பால் ?’

‘அம்மா , உங்களுக்கும் , உங்க ஹஸ்பன்ட்ல ஒருத்தருமான (ஒருவரின் பெயர்) அவருக்கு புறந்த பையன்மா’

‘ஓ அப்படியா ? சரி’

இப்படி ஒரு காட்சியில் , ஹீரோவின் முகபாவனைகள் அவ்வளவு ஏக்கமாக காட்டிருப்பார்கள்.
மொத்தத்தில் , எளிமையாக ஒரு உலகத்திரைப்படம் பார்க்கவேண்டும் என்றால் இதை கண்டிப்பாக காணலாம் . காட்சிகள் குழப்பமில்லாமல் , தெளிவான திரைக்கதை மூலம் அழகாக நகரும்.இயல்பான வசனங்கள் , நமக்கு , கதையை நன்கு உணர்த்தும். ஒரே லொகேசன் என்பதால் போர் அடிக்கும் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள் .படத்தில் ஒரு இடத்தில்கூட போர் அடிக்காது. இந்தப்படம் பார்க்கும்போது என் மனதில் , நாம இவன் இடத்துல இருந்தா யாருக்கு போன் பன்னிருப்போம் , ஆமா, சித்தப்பாவுக்கு பண்ணாதான் வந்து நம்மள காப்பாதுவாரு. இல்ல , தம்பிக்கு போன் பண்ணலாம் , இல்ல நண்பனுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சிட்டேதான் பார்த்தேன் . அந்த அளவுக்கு கதையுடன் ஒன்றவைத்த திரைப்படம். மிஸ் பண்ணாம பாருங்க . 


படத்தின் ட்ரைலரை கீழே காணவும் :-

நன்றி - YOUTUBE , GOOGLE IMAGES , 


Tuesday, 19 August 2014

பயணம் @ டைம் மெஷின் - 4

பயணம் @ டைம்மெஷின்-1ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம்மெஷின்-2ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம்மெஷின் -3ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

அத்தியாயம் -3
கி.மு. 2-ம் நூற்றாண்டு

பகுதி-2
காஞ்சிபுரம்இருட்டின் பிடியில்  , மெல்ல மெல்ல சிக்கிக்கொண்டிருந்த அவ்வூரை அடைந்ததும் ,பாலாவும் , சந்துருவும் தங்களின் வேகத்தை துரிதப்படுத்தினர் .அவர்களின் கால்களை சுமந்து , அவர்களின் பயணத்திற்கு பாதையை காட்டியது அந்த மண்சாலை . அச்சாலையை ஒட்டிய இருபுறமும் ,பனைஓலையில் வேயப்பட்ட குடிசைகள் தென்பட ஆரம்பித்தன.. மிக நேர்த்தியாக , ஒரு பனங்கீற்றுக்கூட தெரியாத அளவிற்கு குடிசைகள் தென்பட்டன . பத்து, பதினைந்து குடிசைகளுக்கு இடையே ஆங்காங்கே , களிமண்ணை , கருங்கல்லுடன் புனைந்து கட்டப்பட்ட மாளிகைகள் , தங்களின்  ஒற்றை அடுக்கை மிகமிடுக்காக காட்டிக்கொண்டிருந்தன. பெரும்பாலான வீடுகள் , திண்ணையை  உரிமையாகபெற்றிருந்தன .குடிசைகளுக்கும் , மாளிகைகளுக்கும் உள்ளே ,  சில குடும்பத்தலைவிகள் சமையலில் கண்ணும் கருத்துமாய்  இருக்க, சிலரோ வீட்டைக்கூட்டியபடி இருந்தனர். அனைவரின் வீடுகளிலும் சற்றுநேரத்திற்குமுன் , லட்சுமிதேவியை வரவேற்பதற்காக ஏற்றிய விளக்கெண்ணெய் விளக்குகள் , தன் தீச்சுடரின் ஒளியால் , அவ்வீட்டின்கண் இருப்பவரை , இருளின்பிடியிலிருந்து காத்து, அரவணைத்துக்கொண்டிருந்தது.  அவ்வீடுகளின் கதவினுக்கருகில் வயதான பெண்மணிகள் , நெல்புடைக்கும் முரத்தினால் நெல்லிலிருந்து  கல் ,குருடுகளை நீக்கியபடி இருக்க , வயதான ஆண்கள் , திண்ணையில் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். ஒருசில வீடுகளில் , தம் கணவன்மார் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்துடன் வாசலில் அமர்ந்து தம் மன்னவன் வரவை எதிர்நோக்கி சில பெண்மணிகள் காத்திருந்தனர். அந்த தெருவின் வழியே சிலர் கலப்பை சகிதமாக , கழைப்புடன்  சேறுதின்ற உடல் கணக்காய் , தத்தம் வீட்டிற்கு செல்லும் முனைப்புடன்  காணப்படிருந்தனர். ஒருசிலர் மாடுகளை ஓட்டியபடி செல்ல , இன்னும் சிலர் முகத்தில் சந்தோஷத்துட்டன் கையில் மல்லிகை சரத்தை எடுத்துக்கொண்டு , தன் புதுதாரத்தின் தலையில் சூடுவதற்காக ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்தனர்.  அந்த குறுகிய சாலை , உள்ளே செல்ல செல்ல விரிவடைந்து கொண்டே சென்றது. கூடவே மாடமாளிகைகளின் எண்ணிகையும் அதிகரித்துக்கொண்டே சென்றது.


சாலையில் வாலிப இளைஞர்கள் தன் ஆண்மைத்தனத்தை நிருபிக்கும் பொருட்டு சிலம்பாட்டத்தில் ஒன்றிபோயிருந்தனர். அவர்களைச்சுற்றி ஊக்குவித்துக்கொண்டிருந்த நண்பர்களின் வார்த்தைகளை கவனிக்காமல் , கூட்டத்திற்கு அப்பால் செல்லும் தன் காதலிகளை , கண்ணில் வலை வீசித்தேடிக்கொண்டிருந்தனர். இளம்பெண்களோ , நேர்த்தியான சேலையுடன் மிடுக்கான மார்பகங்களை முழுதும் மறைத்து  , கண்களில் கனிவு கரைபுரண்டோடிட , வெட்கத்திற்கு முகத்தை வார்த்துவிட்டு ஆற்றின் நீரை பானையில் மோந்து , கொடியிடையினுனுள் பொருத்தி ஊர்க்கதை பேசியவாறே சிரித்துக்கொண்டு சென்றனர். அவர்களை உற்றுநோக்கினால் , அவர்கள் ஊர்க்கதை ஆர்வமெல்லாம் வெளியுலகிற்காக என்பது புரியும். ஒவ்வொருத்தியும் , தங்கள் மாமன்மகனோ , அத்தைமகனோ அல்ல காதல்மகனோ சுழற்றும் சிலம்பத்தை கண்டு அவன் பார்வையை பார்க்கத்தடுமாறி , வெட்கத்தில் மிதந்து மீண்டும் கண்களாகிய உதடுகளினால் ஆற்றங்கரைக்கோ , மலர்வனத்திற்கோ வருமாறு யாருக்கும் கேட்கவண்ணம் கூறிவிட்டு சென்றுகொண்டிருந்தனர்.  தன் காதலி தன்னைப்பார்ப்பதாலயோ என்னவோ , இளைஞர்கள் அனைவரும் மேலும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் சிலம்பைக்கொண்டு வித்தைக்காட்டினர்.


சின்னஞ்சிறு பொடியர்கள் , ஆங்காங்கே பத்துபத்து பேராக , சடுகுடு ஆட்டத்தில் ஓடுவதும் விழுந்தெழுந்து  , போர்க்களத்திற்கு செல்லும் மாவீரன்போல் பாய்வதுமாக இருந்தனர். சின்னஞ்சிறு பெண்பிள்ளைகள் , நொண்டி ஆட , அவர்களைச்சுற்றி சில பெண்பிள்ளைகள் தங்களின் தம்பியையோ , தங்கையையோ இடுப்பில் சுமந்தவாறு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தனர்.

அவ்வூரின் உள்ளே செல்ல செல்ல , ஒரு நகரத்தின் பரிணாமம் , அவர்களிருவரையும் வரவேற்று நின்றது. உள்ளே , பெரும்பாலான வீடுகள் மாளிகைகள். பெண்கள் அனைவரும் , தங்க ஆரபணங்கள் அணிந்த தங்கமாய் மின்னிக்கொண்டிருந்தனர். ஆண்களோ , மிடுக்குடன் திரிந்து கொண்டிருந்தனர்.  அங்கு கூட்டம் அலைமோதியது. நியமம் என்று அன்றழைத்த கடைத்தெரு அது. அங்கிருக்கும் சந்தையை , அன்றைய மக்கள் அங்காடி என்று அழைத்தனர் .  நாளங்காடி எனும் பகல் பொழுது கடைகள் மூடுவதற்கு ஆயத்தமாக இருக்க  , அல்லங்காடி எனும் இரவு நேரக்கடைகள் திறக்கவும் ஆரம்பித்திருந்தன. அக்கடைகளின் ஊடே உணவுப்பொருட்கள் தாண்டி எண்ணற்ற பொருட்கள்  இருந்தன. மக்கள் , தம்மிடம் இருக்கும் நெல்லை குடுத்து , துவரையை வாங்கியபடியும் , கேழ்வரகு மூட்டையை கொடுத்து துணியையும் வாங்கிய வண்ணம் இருந்தனர்.  ஒவ்வொரு அங்காடியினிலும் ஒரு விதப்பொருள் பெறப்பட்டு, பதிலாய் மற்றொரு பொருள் பெற்றுக்கொண்டு சென்றனர் .இப்பண்டமாற்று முறையை வியப்புடன் பார்த்துக்கொண்டே வந்த பாலாவையும் , சந்துருவையும் தடுத்து நிறுத்தினான் , அரேபியக்குதிரையின் மேல் திடகாத்திரமாக இருந்த அவ்விளைஞன்.

யார் நீங்கள் ? எங்கிருந்து வருகிறீர்கள் ?

‘நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள் . நாங்க மயிலாப்பூர்ல இருந்து வரோம்

மயிலாப்பூர் என்றால் வடநாடா ?’

ஆமாங்க ’

அப்படியாயின் நீங்கள் இருவரும் வடநாட்டு ஒற்றர்களா ? வேவு பார்க்க , சென்னிவளவன் ஆளும் தொண்டை மண்டலத்திற்கு வந்திருக்கிறீர்களா ?’
என்று கோவத்துடன் கேட்டவாறே , தன் இடுப்பை ஒட்டி இருக்கும் உறையினுள் உறங்கிக்கொண்டிருந்த வாளை எடுத்தான் .

‘நாங்க ஒற்றர்கள் இல்லைங்க .நாங்க சோழ அரசர பாக்க வந்தோம் . வழியில இங்க தங்கிட்டு போக வந்தோம்’-என்ற பயமுற்றிய குரலுக்கு சொந்தக்காரன்  சந்துரு.

உங்களை எவ்வாறு நம்புவது?

‘வேனும்ணா இந்த மூட்டையில இருக்க ஓலைச்சுவடிகள படிச்சு பாருங்க . இத காமிச்சு , சோழ ராசாகிட்ட பரிசு வாங்க தான் வந்தோம்

தம் மூட்டையில் இருக்கும் ஓலைச்சுவடிகளை அவனிடத்தில் தந்தான் சந்துரு. அதை வாங்கிப்படித்த அந்த காவலன் , ஒன்றும் புரியாத காரணத்தால்

‘சரி சரி செல்லுங்கள் .ஆமாம் கழுத்தில் என்ன அது?

‘ கோல்ட் செயினுங்க

‘அதை எடு . பார்க்கலாம்

சந்துரு தன் செயினை கழட்டி அவனிடத்தில் கொடுத்தான் . அந்த செயினில் இருந்த முருகன் டாலரை பார்த்த காவலன் ,

அற்புதம் . சேயோனின் உருவம் .நீங்கள் சித்தர் போகரின் சீடர்களா ?

‘ஆமாங்க

அந்த சூழலில் எது கேட்டிருந்தாலும் அவர்களின் பதில் , இதுவாகத்தான் இருக்கும் .

‘குன்றின்வேந்தன் சேயோனின் திருக்கோவில் வேலை பழனியில் நடைபெறுவதாக அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன் . நானும் குறிஞ்சிநில மாந்தன் தான் . என் அப்பனின் திருக்கோவில் பணி சிறப்பாக நடைபெறட்டும் சாமியடிகளே . நீங்கள் தாரளமாக செல்லலாம் .பாடலைகாண்பித்து பரிசில் பெற வேண்டாம் . எம் சோழமன்னனிடம் , கைலாய வேந்தன் சிவனின் மைந்தன் திருக்கோவிலுக்கு உதவி வேண்டும் என்றாலே அள்ளிக்கொடுப்பார் .’  ,என்று அவர்களிடம் கூறிவிட்டு , செயினை கொடுத்துச்சென்றான் , அவ்வீரன் .

கடைத்தெருவை தாண்டி சென்ற அவர்களுக்கு எங்கே தங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டது.வேறு வழியின்றி ஒரு நாளங்காடி கடையினில் வந்து நின்றனர்.

‘யாரய்யா தாங்கள்

நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள் . நாங்க தஞ்சாவூர்க்கு போகனும் .இன்னைக்கு நைட் இங்க ஸ்டே பண்ண ஏதாச்சும் லாட்ஜ் கிடைக்குமா ?’ என்ற சந்துருவின் வார்த்தைகளை புரியாமல் விழித்த அந்த கடையின் உரிமையாளரிடம்

‘இன்று இரவு தங்க இடம் வேண்டும்’ என்று புரிய வைத்தான் பாலா .

‘நானும் சோழதேசத்திற்குத்தான் செல்கிறேன். வாருங்கள் என்னுடன் தங்கிக்கொள்ளுங்கள். நாளை வைகைறை யாமம் சேர்ந்தே பயணிப்போம். எனக்கும் பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தவாறு ஆயிற்று’

இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் . பின் கடையின் உரிமையாளரான அந்த இளைஞன் , கடையை பூட்டி தன் உதவியாளனிடம் கொடுத்துவிட்டு , தொழில்நிமித்தமாக செல்வதையும் எடுத்துரைத்தான். பின் ,இருவர்களையும் கூட்டிக்கொண்டு , தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்றான் .

‘நம்மைப்போன்ற வழிப்போக்கர்கள் தங்கிக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட மண்டபம் .வசதிகள் குறைவாயினும் தரமானதாக இருக்கும் . ஆமாம் நீங்கள் இருவரும் யார் ? மொழியும் உடலும் நிறமும் வித்தியாமானதாக இருக்கிறீர்கள் ?’

‘நாங்களும் தமிழர்கள் தாங்க .ஆனா ,எங்கள பத்தி சொன்னா புரியாது.’

சந்துரு பதில் அளித்தவாறே , அம்மண்டபத்தை பார்த்தான் .முழுமையும் பாறாங்கற்களால் ஆனா , திறந்தவெளி மண்டபம். நன்று நீளமாக இருந்தது. மேற்கூரை மாத்திரம் எதில் வேய்ந்திருப்பார்கள் என்று புரியவில்லை. இவர்களைப்போல பலர் அந்த மண்டபத்தில் தங்கியிருந்தனர் .ஒரே சமயத்தில் 50 உறங்கும் அளவிற்கு பெரியதொரு மண்டபவமாக காட்சியளித்தது. தங்கியிருந்தவர்களை உற்று நோக்கினால் , சில புத்த சாமியார்களும் , சமண மத துறவிகளும் நிறைய தென்பட்டனர் .

‘ஓ ! யவனத்திசையிலிருந்த சிறிதுகாலம்முன் வந்த மாயத்தமிழ்க்குடியினரா ?’

‘இல்லைங்க அவங்களாம் இல்ல . ஏற்கனவே ஒருத்தர் ரொம்ப எங்கள விசாரிச்சுட்டார்.  தயவு செஞ்சு கேட்காதிங்க .ஆமா ,  அவங்க யாரு’மாயத்தமிழன்  ?’

‘முன்னொரு காலத்தில் , நம் தமிழகம் குமரிக்கண்டம் என்ற பெயரில் பரந்து விரிந்து இருந்தது . அச்சமயத்தில் குமரிக்கண்டத்தின்பால் எண்ணற்ற காதல்கொண்ட கடலன்னை , குமரிக்கண்டத்தினை அணைத்துக்கொள்ள ஆழிப்பேரலைகளை அனுப்பினாள் . அதன்காரணமாக நிலம்போல , தமிழர்களும் சிதறுண்டார்கள் . இன்றைய வடநாட்டில் ஒரு குடியினரும் , வடநாட்டைத்தாண்டி , யவணர்கள் வாழ்ந்த பகுதியை நோக்கிச்சிலரும் சென்றார்கள். அவர்களால் யவணர்களை கண்டுபிடிக்கவில்லை ஆயினும் , நடுவில் தமிழகத்தை ஒத்த வளமுடைய ஒரு நாட்டில் அவர்கள் வாழ ஆரம்பித்தனர் . அவர்கள் மாய மந்திரங்களை பெரிதும் நம்பியபடியால் தங்களை மாயன் என அழைத்துக்கொண்டனர் . பின் ஏதோவொரு காரணத்தால் பல்லாயிரம் ஆண்டுகட்கு பின் தாய்தேசத்திற்கே திரும்பினார்கள் .’

‘ஓ. சரிங்க . இங்க நாங்க வர்ரப்ப , எங்கள வடநாட்டுகாரங்களானு மிரட்டுனாங்க .ஏதோ , ஒற்றர்களா நீங்கனு மிரட்டுனாங்க . எதுக்கு அப்டி மிரட்டுனாங்க ? ’

அது வேறொன்றுமில்லை . சில காலத்திற்கு முன் , மோரியன் என்ற  அரசன் மிகப்பலம் வாய்ந்தவனாய் வடநாட்டில் உதித்தான். அவன் தன்னை சந்திரனின் மகனாய் பாவித்துக்கொண்டான் . அவனுக்கு தீவிர மண்ணாசை. மண்ணிற்காக , அறங்கெட்ட செயல்களைகூட செய்தான். அதன்காரணமாக வடுகரின் நாடு உட்பட பல நாடுகளை வென்று வந்தான். அப்போதும் அவனுக்கு ஆசை தீராததால் , தமிழ்த்தாய் குடிகொண்டிருக்கும், இவ்வீரதேசத்தை நோக்கி படையெடுத்து வந்தான். அவன் படையை வழிநடத்தி வந்தவன் கோசன் எனும் தளபதி. அவன் ஈவு இரக்கமற்றவன் . அவன் நாமிருக்கும் இந்த தொண்டை மண்டலம் வரை கைப்பற்றினான். அவன் போர் செய்வதைப்பார்த்த அவ்வட நாட்டு வீரர்கள் , அவனை சிங்கம் என்று முழங்கினர் . அவ்வெறிபிடித்த , நாகரிகம் அறியாத மனித மிருகம் , அடுத்து தாக்க திட்டமிட்டத்து , சோழ நாட்டைத்தான் . ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் , சிங்கத்தின் கோட்டையில் சென்று வீரப்போர் புரிந்து அக்கோசனை கொய்துவிட்டு வந்தது , ஒரு சோழப்புலி. அவர்தான் , இளங்கோட்சென்னி . மோரியரை ‘பாழி’ எனும் நகரத்தில் வீழ்த்தியதால் , அம்மாமன்னருக்கு செருப்பாழி எறிந்த இளங்கோட்சென்னி என்ற பெயரும் உண்டாயிற்று . அதன்பின் , இந்நகரம் உட்பட சோழராஜ்ஜியத்தில் பல நகரங்கள் கட்டுக்குள் வந்தது. இப்போது, அந்த மோரிய வம்சத்தின் கடைசி அரசன்  பிரகதத்தன் என்பானை சுங்கன் என் ற அமைச்சன் கொன்றுவிட்டு  அரியணை ஏறியதாக தகவல் வந்துள்ளது. ஒருவேளை , அந்த சுங்கனும் இங்கு போர்தொடுத்து வரலாம் என்பதால்தான் ,இத்தகைய கட்டுப்பாடு. ’

‘அதுனால தான் இவ்ளோ கட்டுப்பாடா ?’

‘ஆமாம்’

‘சரி . நீங்க என்ன செய்றிங்க ?’

பாலாவின் கேள்விகளுக்கு , அவ்வணிகன் மறுமொழியிட்டான்

‘நான்  ஒரு வணிகசாத்துகன் . சோழநாட்டின் சீத்தலை கிராமம் எனது சொந்த ஊர் . பொன்விழையும் திருவாரூர் தலைநகரில் இருந்து நெல் , முதலான தானிய வகைகளை கொண்டுவந்து , தொண்டை மண்டலம் முதல் சேரநாடு , பாண்டிய நாடு என அனைத்து நாடுகளிலும் விற்பேன் .பதிலுக்கு கிடைக்கும் பட்டு , தந்தம் , தங்கம் , மிளகு , இலவங்கம் போன்றவற்றை  என் தேசத்தில் விற்றுவிடுவேன் .இதுவே என் தொழில் .ஒரு வாரகாலமாக நான் இங்கிருந்து செய்த வாணிபத்தினால் கிடைத்துள்ள பொருட்களை இன்னும் முத்தினத்திற்குள் திருவாரூர் சேர்க்கவேண்டும் ’

‘ஓ ! சரிங்க . நீங்க சாப்டிங்களா? எனக்கு பயங்கரமா பசிக்குது. ’ -பாலா

‘கொண்டு வந்த புளிசோறும் தீந்துடுச்சி மச்சி ‘ -சந்துரு

‘கவலை கொள்ளவேண்டாம் . இங்கு வழிப்போக்கர்கள் சாப்பிடுவதற்கான விடுதி ஒன்றை முதியவள் ஒருவள் வைத்துள்ளாள். அவளை அனுகினால் கிடைக்கும் .வாருங்கள் செல்லலாம்’ .

கூறியவன் , அவனிடத்தில் இருந்த பெட்டியிலுருந்து  ஒரு சேலையை எடுத்தான் .30 வயதுதான் இருக்கும் அவனுக்கு . முகமெங்கும் அமைதியின் உருவமாய் திகழ , மெல்லிய புண்சிரிப்புடன் காணப்பட்டான்
‘எதுக்குங்க சேலை ?’ -பாலா

‘நாம் உணவருந்த தான்’

‘அதுக்கெதுக்கு சேலை .?’

‘இங்கு நாணயப்புழக்கம் இன்னும் வரவில்லை .அதனால் , இன்னும் பண்டமாற்று முறைதான்’

இருவரும், அவ்வணிகனை பின்தொடர்ந்து கடைவீதியில் சென்றார்கள் .மக்கள் அனைவரும் தத்தம் உணவு உண்டு , பெரியவர்கள் அனைவரும் வீட்டின் வாயலில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் .சிறுபிள்ளைகள் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருக்க , கணவன் மனைவி சம்பாஷணைகளும் வந்து கொண்டிருந்தன . ஆங்காங்கே சிலர் குதிரையிலும் ,தம் காலாலும் நடந்து கொண்டு , கையில் தீஜுவாலையைக்கக்கும் பந்தங்களுடன் காவலில் இருந்தனர் .உடல் கடன்களை முடிப்பதற்காக செல்வதாக கூறி காதலை வளர்க்கும் வண்ணம் இளம்கன்னிகளும் , வேட்டைக்கு செல்வதாக இளம் காளைகளும் புறப்பட்டுக்கொண்டிருந்தனர் . அல்லங்காடி கடைகள் ஓரிரண்டு திறந்தபடி கிடந்தன .பெரும்பாலான கடைகளும் , அதன் உரிமையாளர்களைப்போல் தூங்கிக்கொண்டிருந்தன . ஒரு குடிசைக்கு அருகில் , அச்சாத்துகன் நின்றான் .

‘அம்மையே ! உணவருந்த தீராப்பசியுடன் வந்துள்ளோம்’

‘பொறும் அப்பனே ! வருகிறேன் .கைச்சுத்தம் செய்துவிட்டு வாரும் .’

மூன்றுபேரும் கரம் ,கால், சிரம் கழுவி , அக்கிழவி சமைத்த கேழ்வரகு கலியையும் தட்டைப்பயிர் கூட்டையும் உண்டுவிட்டு , பதிலிற்கு அவளுக்கு அச்சேலையை காணிக்கையாக்கிவிட்டு , விடைபெற்று சென்றார்கள் .மண்டபத்திற்கு சென்று உறங்க ஆரம்பித்தார்கள் .நாள் முழுதும் பயணம் செய்த அலுப்பினால் , தூக்கம் இருவரையும் இனிதே வரவேற்றது.

‘அய்யா ! எழுந்திரியுங்கள்.  நீராடிவிட்டு வாருங்கள் . நாம் சோழதேசத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவேண்டும்’

குரல் கேட்டு விழித்தவர்களுக்கு , அவ்வணிக இளைஞன் , இன்முகத்துடன் காட்சியளித்தான்.

‘நல்ல தூக்கம் போலிருக்கிறது ?’

‘ஆமாங்க ’ -சந்துரு

‘சரி .வைகறை முடியப்போகிறது. பொழுது விடிதற்குள் நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும். முதலில் நீங்கள் நீராடி , உடற்கடன்களை முடித்துவிட்டு வந்தால் , பிரயாணத்தை தொடங்கலாம் ’

இருவரும் அரைத்தூக்கத்துடன் எழுந்து  பார்த்தார்கள். நீலநிறத்திற்கு அந்நகரம் வாழ்க்கைப்பட்டது போலிருந்தது. தூரத்தில் வீனஸ் கிரகம் , தன் இருப்பை காட்டிக்கொண்டிருந்தது. நிலவு , பூமித்தாயை விட்டு பிரியப்போகிறோமே என்ற கலக்கத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது.இரவு பார்த்த காவலர்கள் , இன்னும் உறங்காமல் தீப்பந்தத்தை அணைத்துவிட்டு , நகரை காவல்காத்துகொண்டிருந்தனர்.

‘ஆமா, குளிக்கறதுக்கு ஆத்துக்கு தான் போகனுமா ?’ -பாலா

‘இல்லையில்லை.  வேகவதி ஆற்றில் குளிப்பது மதம்கொண்ட யானையின்காலுக்கு கீழ் படுப்பதற்கு சமம் .நீங்கள் இவ்வூருக்கு இதற்கு முன் வருகை புரிந்ததில்லையா ?’

‘நாங்க வர்ரப்ப , இப்படி ஊர் இல்லைங்க ’ என்று சந்துரு தன் குடும்பத்துடன் கைலாசநாதர் கோவிலுக்கும் , காமாட்சி அம்மன் தரிசணத்திற்கும் வந்ததை நினைவுபடுத்திக்கூறினான் .

‘இம்மாநகரம் ஏரிகளுக்கு புகழ் பெற்றது. நீங்கள் கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் .’
அவர்கள் எழுந்து அம்மண்டபத்தின் இறுதிப்பகுதி நோக்கி சென்றனர் .அங்கே ,  ஏரி ,அதுமட்டுமின்றி சுற்றியும் ஆங்காங்கே , பதின்ம வயது முகத்தில் கானும் பருவைப்போல , ஏராளமான ஏரிகள் . அவர்களின் கண்களில் ஆச்சரியத்தை கொடுத்த வண்ணம் சலசலப்பின்றி உறங்கிக்கொண்டிருந்தது .பலவிதமான பறவைகள் , அங்குமிங்குமாய் பறந்துகொண்டு இருந்தன. அந்த ஏரி , பறவைகளுக்கென்று நேர்ந்துவிடப்பட்டது எனும் எண்ணுமளவிற்கு , பறவைகள் இருந்தன . குளித்துமுடித்து ,வேறு உடை இல்லாமல் அதே உடையை அணியச்சென்றவர்களை தடுத்து அவர்களுக்கு புது உடையை வழங்கினான் , அந்த வணிகன் .அவர்கள் இருவரும் , தங்களிடம் எதுவும் கொடுப்பதற்கு இல்லை என்ற மனவருத்ததில் சிக்கிக்கொண்டிருக்க , அவர்களைத்தேற்றி

‘உங்கள் இருவரையும் பார்க்கும்போது ,என் சகோதரர்களைப்போல் தான் தெரிகிறீர்கள் .அதுமட்டுமின்றி நான் உங்களுக்கு உதவிதான் செய்தேன் .உபகாரமோ, வணிகமோ இல்லை.  எதிர்பார்த்து செய்வதன் பெயர் உபகாரம் .தயவு செய்து என்னை தரம்தாழ்த்த வேண்டாம்’

அதுவரை உதவி என்பதற்கான அர்த்தத்தைதுளியளவும் அறியாத அவர்களின் கண்கள் , மெல்லிய பாசக்கலக்கத்தில் நனைந்து இருந்தது . குளித்து முடித்து மெல்ல கிளம்பும்போது , சூரியன் தான் வருவதை பறைசாற்றும் பொருப்பு தன் கதிர்களை படரவிட்டிருந்தான். இரு பொலி எருதுகளை பூட்டிய ஒரு மாட்டுவண்டி , மூட்டைகளையும் மூன்று மாந்தர்களையும் தன்னுள்ளே ஏற்றிக்கொண்டது. அந்த தினவெடுத்த எருதுகளோ , அவ்வளவு எடையையும் அசால்ட்டாக சுமந்து , ஜாலியாக இழுத்துச்சென்றது.  அதிகாலைக்காற்று மென்குளிருடன் நாசியில் ஏறத்துவங்கியதும் , உற்சாகம் பீறிட்டுக்கொண்டது. அதுவரை நாம் வசமாக மாட்டிக்கொண்டோம் , நமக்கு பெட்ரோல் தேவை என பதட்டத்தில் இருந்தவர்கள் இன்று காலையிலிருந்து அதை மறந்து , இச்சூழலையும் மனிதர்களையும் ரசிக்கத்துவங்கினார்கள். மாளிகைகளுக்கு அப்பால் , பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் நெல்லும் , கரும்பும், மஞ்சளும்  பச்சை , மஞ்சள் ,நீலம் என அந்தந்த கலர்களில் கொழுத்துகிடந்தன. நட்டு இரு மாதங்கள் ஆகியிருக்கவேண்டும் . நடுநடுவே குளங்களும் , தூரத்தில் எங்கோ , ஏரிகளும் காணப்பட்டன .நேற்று மாலையில் இவர்கள் வந்த பாதைக்கு எதிரில் இருந்த பாதையில் மாட்டுவண்டி சென்றுகொண்டிருந்தது. இப்பக்கத்தில் , ‘தடக் தடக்’ என்ற சத்தம் பலவீடுகளில் இருந்து வந்துகொண்டிருந்தன. உள்ளே குனிந்து பார்த்தால் ,வீட்டின் உள்ளே குழுவெட்டி , கைத்தறி வைத்து பட்டு நெய்து கொண்டிருந்தார்கள் . இப்பக்கமோ , பட்டுப்பூசிகள் வளர ஏதுவான செடிகள் , காடுகள் எங்கும் நிறைந்திருந்தன.  உற்சாகத்தின் எல்லைக்கு மட்டுமல் , அந்நகரின் எல்லைக்கும் சென்றனர் . எல்லையில் இருந்த காவலர்களிடம் பேசிவிட்டு , வண்டியை செலுத்தலாம் எனச்செல்லும் போது , திடீரென்று ஒரு ஆதிவாசிகள் கூட்டம் குதிரையிலும் , நடந்தும் வெறித்தனமாக எல்லையை நோக்கிவந்தது .

‘வந்துவிட்டார்கள் . தாக்குங்கள்’

என்ற , காவலர் ஒருவரின் சத்தம் கேட்டு அனைத்து வீரர்களும் ஒன்றுசேர ,ஒரு வீரன் குதிரையில் ஏறி நகரில் இருக்கும் மற்ற வீரர்களை அழைக்கச்சென்றான் . வணிகனும் இவர்களும் மாட்டுவண்டியை திருப்பி நகரைநோக்கி சென்றனர் .பாலாவும் , சந்துருவும் முதல்முறை போரைப்பார்க்க ஆவலாக வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .சிறிது தூரம் சென்ற வணிகன் , வண்டியை நிறுத்தி ,அக்காவலர்களிடம் சென்று ஒரு வாளை பெற்றுக்கொண்டு அக்கூட்டத்தினை எதிர்க்க தயாராய் நின்றான் . இதோ அவர்கள் எல்லையை அடையப்போகிறார்கள். அவர்கள் அனைவரின் முகத்திலும் ரத்தவெறி , மற்றும் பேராசை மின்னியது. அரக்கத்தனமாக இருந்தனர் . உடைகளில் சரியான கவனமின்றி , துளியும் நாகரீகமின்றி இருந்தனர் . சோழவீரர்கள் மற்றும் தொண்டைமண்டல வீரர்கள் அனைவரும் தங்களின் வேல் , வில் மற்றும் வாளை தயார் நிலையில் , எதிரிகளின் நெஞ்சில் பதிய ஆர்வத்துடன் இருந்தனர் .


பயணம் @ டைம்மெஷின் -5 ஐப்படிக்க  இங்கே அழுத்துங்கள்


‘’

Sunday, 17 August 2014

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை

சேலத்தில் மீண்டும் ஒரு இளைஞர் காணமல் போயிருப்பது , மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காணமல் போனவரின் பெயர் ,குமார். இதே போன்று மூன்று மாதங்களுக்கு முன் ஒரு இளைஞர் காணமல் போனது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வருடங்களில் , இவருடன் சேர்த்து 7 பேர் காணமல் போயுள்ளனர். காணமல் போனவர்களை பற்றிய ஒரு செய்தியும் , காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்பதுதான் பரிதாபம்.

----------------------------------------------------------------------------------------------------


ஹேமா ! அந்த பையன பாருடி . உன்னையே வெறிச்சு  பாக்குறான்

ஹே ,சும்மா இருடி.

அவன் பாக்குற பார்வைய பாத்தா , இன்னைக்கு உங்கிட்ட புரபோசல் பண்ணிடுவான் போலருக்கு”

அச்சோ ! அமைதியா வாடி .ப்ளீஸ்

தோழி , ஜெயாவிடம் கெஞ்சிக்கொண்டே வந்தாள் ஹேமா. தலைகுனிந்து புத்தகத்தை புரட்டுவதைப்போல அவனைப்பார்த்தாள். ஒரு நொடி பார்வையில் , அத்தனையும் அவளுக்கு வெளிச்சமாயிற்று. ஜெயா சொல்வது போலவே , அந்த ட்ரிம் செய்த மூஞ்சுக்கார இளைஞன் ,அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இவளின் ஒரு நொடி பார்வையை அறிந்து கொண்டவன் , ஏதோ விண்வெளி சாகசம் செய்து , நோபல் பரிசு வென்றவன் கணக்காக, சாதிப்பு பார்வையை வீசினான். ஹேமா , ஜெயாவைப்பார்த்து , ஒரு கள்ளச்சிரிப்பை வீசிவிட்டு புத்தகத்தை புரட்டினாள்.

மாணவர்கள் ,கட்டிடத்தொழிலாளர்கள், ஆபிஸ் பணியாளர்கள் ,பள்ளி சிறுவர்கள் ,வன்னியர் , நாடார், கவுண்டர் ,இந்து, கிறிஸ்டியன் ,முஸ்லிம் , தமிழன் ,தெலுங்கன் ,கன்னடன் என எப்பேதமும் பார்க்காமல் , அந்த பேருந்து அனைவரையும் தன்னுள் தாங்கி , ட்ரைவரின் காலுக்கு பணிந்து ஊர்ந்து சென்றது. அந்தப்பேருந்தினுள் முன்வாயிலை ஒட்டி , இரண்டு சீட்கள் தள்ளியிருந்த ஜன்னலோர சீட்டை, தற்காலிகமாக 5 ரூபாய் கொடுத்து , டிக்கெட் என்ற பெயரில் விலைக்கு வாங்கியிருந்தாள் , ஹேமா. அவளை , படிக்கட்டில் நின்று பந்தாவாக பார்வையிலேயே , கூனிக்குருக வைத்துக்கொண்டிருக்கும் ரவி தான் இக்கதையின் நாயகன் என்று சொல்லி தெரிவதில்லை.

சென்ற ஏப்ரலில் , இறுதித்தேர்வை முடித்துவிட்டு , அவன்மூளையை விரும்பாமல்  மார்க்கை விரும்பும் பல கம்பனிகளால் கேம்பஸ் இன்டர்வியூவில் நிராகரிக்கப்பட்டு விட்டு , தினந்தோறும் CNAUKRI, MONSTER , FRESHERWORLD போன்ற இணையதளங்களை மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு என்ஜினியர். வேலையை மனதினுள் தேடிக்கொண்டு , வீட்டில் சும்மா இருக்கிறான். படிப்பு முடித்து மூன்று மாதங்களே ஆவதால் , அவனுக்கு இப்போது வீட்டு கோர்ஸ்களான காய்கறி வாங்குவது, பால் பாக்கெட் முதல் மளிகை சாமான் வாங்குவது  போன்ற ஸ்பெசல் கோர்ஸ்களை ,தாயின் முன்னிலையில் கற்றுக்கொண்டு வருகிறான்.

ஒருநாள் TC வாங்குவதற்காக , 8.15 மணி பேருந்தில் ஏறியபோது தான் , இத்தேவதையைப்பார்த்தான். 4 வருடமும் கல்லூரி பேருந்திலேயே பயணத்தை ஓட்டியதால் ,இந்த ஹேமாவை பார்க்காமல் விட்டு விட்டான். அதன்பின் ஒவ்வொரு நாளும் , வீட்டில் ஏதாவது பொய்யைச்சொல்லி 8.15 பேருந்தில் பயணிக்க ஆரம்பித்து , இரண்டு வாரங்கள் முடிந்து விட்டன.

அவள் , சேலத்தில் புகழ்பெற்ற சித்த மருத்துவ கல்லூரி ஒன்றில், ஹோமியோபதி டாக்டர் ஆவதற்கான 4 வருடப்படிப்பில் ,3 வருடங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டிருக்கிறாள். தாய் , தந்தை சென்னை. பயங்கரமான இயற்கை ரசிகை. அதனாலோ என்னவோ, காலஜைவிட்டு 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் , சித்தர்கோவில் எனும் வனாந்திரப்பகுதியில் , வாடகை வீட்டில் தங்கியுள்ளாள். அமைதி விரும்பி. அளவாக , அழகாக உரையாடுவாள். பேஸ்புக் ஐடி கிடையாது. அவளின் கல்லூரியில் வந்த , அத்துனை புரோபோசல்களும் ,வீழலுக்கு இறைத்த நீராயிற்று. அவளின் பெண் நண்பர்களுக்கு கூட அவளின் போன் நம்பர் தெரியாது. மொத்தத்தில் அவள் ஒரு குடும்ப குத்து விளக்கு.

இப்படி அவளுடைய வரலாறு முதல் வீரம் வரை அனைத்தையும் , தன் ஊர்க்கார நண்பர்கள், பக்கத்து ஊர் நண்பர்கள் , 6 வருடங்களுக்கு முன் ஸ்கூலில் படித்த ஜூனியர் பையன் என இவர்கள் மூலமாக மேற்கண்ட பத்தியை அறிந்து கொண்டான்.

தினமும் காலை , 8.15 மணி பஸ்சில் ஏறி , அவள் பார்வையிலும் அவன் பார்வையிலும் படும்படி நின்று கொண்டு சைட் அடித்தல் , மாலை 3.15 மணிக்கு அவளின் கல்லூரி பஸ் ஸ்டாப்பிற்கு , தன் சைக்கிளையோ,தன் அண்ணன் பைக்கையோ எடுத்துக்கொண்டு வந்து , 3.45 மணி பஸ்சை பிடித்து மீண்டும் சைட் அடித்தல் மற்றும் அவளுக்கே தெரியாமல் அவளை ட்ராப் செய்தல் என அவனுக்கு ஒரு அன்றாட வேலை கிடைத்தது.


இரண்டுவார விடாமுயற்சிக்குப்பின் , இன்றுதான் அவளின் கரிசணம் இவனின்மேல் விழுந்திருக்கிறது. காந்தி ஜெயந்தியன்று ஓசியில் கிடைத்த பீரை கண்ட குடிமகன்போல் ,அவளின் பார்வையால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான். இன்று அவளிடம் எப்படியாவது பேசியாக வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தான்.பஸ்ஸில் கூட்டம் அதிகம் இருந்ததால் , மாலை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான்வளை மீண்டும் மனதின்கண் நிறுத்தி , சைட் அடிக்க ஆரம்பித்தான்.அதோ, இன்னும் இரண்டு நிமிடத்தில் பஸ் ஸ்டாப் வரப்போகிறது என்ற கவலை அவனை ஆட்கொள்ள ஆரம்பித்தது. இப்பேருந்து இப்படியே தன் பயணத்தை தொடரக்கூடாதா ? யாருமற்ற வனத்தில் , அவள் கண்களைப்பார்த்தவாறே , ஆயுள் முழுக்க பேருந்து பயணம் செல்லக்கூடாதா என்று அவன் மனதில் ஏக்கம் பிறந்தது.

“ **** காலேஜ் ஸ்டாப்புலாம் இறங்குங்க ”-என்ற கண்டக்டரின் குரல் அவன் மனதில் கடுப்பை கிளப்பியது. இதோ , ஹேமா வருகிறாள் . தினம் தினம் கனவில் கட்டியணைக்கும் காதல் தேவதை , என் முன்னே தலைகுனிந்தவாறு இறங்குகிறாள். அட, என்ன , அவள் என்னைப்பார்க்கிறாளா? இல்லை பிரமையா? ஆமாம் , அவள் அவனை ஒருமுறைப்பார்த்து விட்டு செல்கிறாள். அவள் செல்லும் வழி பூந்தோட்டமாகவும் , பூக்களின் நடுவே , வெண்சுடி அணிந்த பூ போல மெல்ல கல்லூரிக்குள் சென்று மறைந்தாள்.

மார்ச் 22 ஐவிட நெடியதொரு பகலாகவே அவனுக்கு அன்றைய தினம் இருந்தது . இரண்டுமுறை அவளால் , அவன் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. மென்சிரிப்பு , ஆங்காங்கே அவன் முகத்தில் தோன்றி மறைந்தன. அடிக்கடி கடிகாரத்தையும் , கண்ணாடியையும் பார்தவனுக்கு, பசி என்ற உணர்வு மரித்து, படபடப்பு மேலோங்கி இருந்தது. நேரம் நெருங்க நெருங்க ,ஆர்வத்துடன் ,பயமும் பெருகிற்று.

மணி 2.45 .குளித்தாயிற்று. அண்ணன் , கம்பனி மீட்டிங்கிற்காக வெளியூர் சென்றதால் , வண்டி இன்று நம் கையில். அம்மாவிடம் , நண்பன் வீட்டிற்கு செல்வதாய் கூறியாயிற்று. கல்லூரி அருகிலும் வந்தாயிற்று. படபடப்பு அதிகமாயிற்று. வண்டியை நிறுத்தியவன் , கல்லூரியை ஒருமுறைப்பார்த்தான். இன்னும் அரைமணிநேரமுள்ளது. அவளிடம்  புரபோசல் எப்படி செய்யலாம் ,என்ன பேசலாம் என காலையில் இருந்து மனப்பாடம் செய்த வசனங்களை அசைபோட்டான்.மணி அடித்த சத்தம் ,அவன் காதுகளில ஒலித்தது. இதோ , அனைவரும் கூட்டை விட்டு பறக்கும் புறாவைப்போல பறந்துகொண்டு வருகிறார்கள். எங்கே அவள் ?

வந்துவிட்டாள். காலையில் பார்த்ததை விட இப்போது கொஞ்சம் சோர்வாக இருக்கிறாள். பஸ் ஸ்டாப்பை நோக்கிதான் வருகிறாள். ஒருமுறை , வண்டியின் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக்கொண்டே நின்றான். அவனை , ஹேமாவும் நொடிப்பொழுதில் அடையாளம் கண்டுகொண்டாள். பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றாள். அவளை  அருகில் கண்டதும் மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளின் கோர்வைகள் மறந்தாயிற்று. எப்படியாயினும் காதலை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற உறுதி மட்டும் அவனுள் நிலைத்திருந்தது.

எக்ஸ்கியூஸ் மீ ! நா உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசனும்

பேந்த பேந்த விழித்தாள் ,ஹேமா . இன்று பார்த்து ஜெயா , தன் கல்லூரி காதலனுடன், மதியமே கம்பியை நீட்டிவிட்டாள். சுற்றும் முற்றும் பார்த்து , யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை அறிந்த பின்னர் ,

சொல்லுங்க

தயக்கம் மிஞ்சியிருந்த வார்த்தைகள் , அவள் உதட்டின்வழி , வெளிவந்தது.

நீங்க இல்லாம என்னால இருக்கமுடியுமானு எனக்கு தெரில . ஆனா , எப்பவுமே உங்க கூட இருக்கனும்னு தோனுது, அட்லிஸ்ட் உங்க செருப்பாவாவது .எனக்கு எப்படி லவ்வ சொல்லனும்னு தெரிலைங்க, காட்டத்தான் தெரியும். உங்க கண்ணே என்ன கொல்லுது. அத பார்த்துகிட்டே சாகறதுக்கு தான் அந்த ஆண்டவன் என்ன படச்சானோனு நினப்பு வருது  உங்கள தோள்ல சாச்சுகிட்டு , ஒரு பூந்தோட்டத்துல முடிவில்லாத ட்ராவல்ல , வாழ்நாள் முழுக்க பன்னனும்னு நினைக்கிறேன் .இங்கிலிஷ்ல இதுவரைக்கும் நா யார்கிட்டயும் சொல்லாத வார்த்தய ,உங்ககிட்ட மட்டும் சொல்லத்தோனுது . ஐ லவ் யூ. வில் யூ மேரி மீ னு கேட்க தோனுது. ஆனா , என்னப்பத்தி எதுவுமே தெரியாத உங்க கிட்ட அத சொன்னா, அது தப்புதான. அதாங்க, இந்த லட்டர் உங்க கிட்ட கொடுக்கறேன் .படிச்சிட்டு வாங்க. நா , நாளைக்கு புரபோஸ் பன்றேன்


------------------------------------------ஒரு மாதத்திற்கு பின்-------------------------------------------------


எங்கடா இருக்க ?

வீட்டுல தாண்டி

சாப்டியா ?”

ம் . நீ சாப்டியா ?

சாப்டேன். ஆமா , ஏன்டா இன்னைக்கு காலேஜ் வரல . நீ வருவன்னு ஆசையா வெயிட் பன்னட்ருந்தேன் .போ , எங்கிட்ட பேசாத”

அச்சோ ! சாரி தங்கம் . இன்னைக்கு ஒரு இன்டர்வியூ அட்டன்ட் பன்னபோயிருந்தேன். ஆல்மோஸ்ட் சக்ஸஸ். அதுனால தாண்டா வரல

கங்கிராட்ஸ் டா . டேய் , யாருகிட்டயும் நம்ம லவ் பன்றத பத்தி சொல்லல தான?”

என் ஹேமா மேல பிராமிசா யார்கிட்டயும் சொல்லல

ம்.

தங்கம். நா நாளைக்கு காலைல சென்னை போகனும்டி. ஏதோ பார்மாலிட்டிகாக எம்.டிய மீட் பன்னனும்னு இன்டர்வியூல சொல்லிருக்காங்க”

சரிடா ! போய்ட்டுவா . எப்போ வருவ ?

2 நாள் ஆகும். இன்னைக்கு நைட் 11 மணி ட்ரெயினுக்கு தான் புக் பன்னிருக்கேன்”

என்னடா சொல்ற ? அப்போ 3 நாளைக்கு உன்ன பாக்க முடியாதா?

ம்

என்னால மூனு நாளைக்கு உன்ன பாக்காம இருக்கமுடியாதுடா

என்னாலயும் தான் தங்கம்

போ ! பேசாத

ஏன்டா தங்கம் ?

என்னதான் பாக்க மாட்டில . அப்பறம் எதுக்கு பேசுற ?

சரி , நா வேணா இப்ப வரட்டா ?

அச்சோ வேண்டாம் . யாராச்சும் பாத்தா வம்பாயிடும்

கவலையே படாத. நா யாருக்கும் தெரியாம வந்துடறேன் .நாம கொஞ்ச நேரம் பேசிட்டு …..”

பேசிட்டு ?

கிளம்படறேன்னு சொல்ல வந்தேன்டி

அதான பாத்தேன் . அந்த பயம் இருக்கட்டும். ரவி , நீ வாங்கிகொடுத்த சிம்ல சிக்னல் எடுக்கவே மாட்டேங்குது. வேற சிம் எடுத்துட்டு வரியா?”

சரி தங்கம் , சரி போன வை. நா உடனே வரேன்

அண்ணன் இன்னும் அலுவலகம் விட்டு வரவில்லை. சே, பைக் இல்லாம பஸ்ல எப்படி போறது? என்று தனக்குள் சலித்தவாறே, பஸ்ஸைப்பிடித்து கிளம்பினான். இன்னைக்கு நைட் , எப்படியாச்சும் வள கிஸ் அடிச்சிடனும் என்ற முடிவுடன் பஸ்சிலிருந்து இறங்கினான். பஸ் ஸ்டாப்பை ஒட்டிய வனம் அவன் கண்ணில் பட்டது. ரைகிலோ மீட்டர் தூரத்தில்தான் அவளது வீடு. முத்தத்தின் வேகம் அவனை தாக்க ,  கலோரிகளை எரிய வைத்து , கால்களை விரட்டினான். இதோ அவளது வீடு. யாரோ ஒரு பணக்கார புண்ணியவானின் , கோடைகால கெஸ்ட் ஹவுஸ், இப்போது ஹேமாவின் ரெண்ட் ஹவுஸாக பொலிவுடன் காணப்பட்டது. யாரோ ஒரு NRI-ன் பங்களா என்று ஹேமா சொன்னது, நியாபகத்திற்கு வந்தது. இதே போன்றதொரு வீடில் , ஹேமாவும் தானும் மடும் வாழவேண்டும் என்று அவனுக்கு தோன்றியதில் ஆச்சரியமில்லை. ஆனால் ,இங்கு ஹேமா மட்டும் எப்படி தனியாக இருக்கிறாள் என்பது அவனுக்கு , ஆச்சரியம்தான். வீட்டினுள் , சமையல் செய்து முடித்ததற்கான அறிகுறி , வாசல் வரை வாசம் வந்தது.  கதவை தட்ட , அவனின் தேவதே , பிங்க் கலர் நைட் சூட்டில் மின்னயது. அமைதியாக , குட்டிபோட்ட பூனைக்கணக்காய் வீட்டினுள் சென்றவன் , அவள் வீட்டை வைத்திருக்கும் அழகினைப்பார்தவாறே மெல்ல பேச ஆரம்பித்தான்.அவன் பேச்சு, இன்றைய  சென்னைப்பயணத்தில் ஆரம்பித்து , சினிமாவிற்கு சென்று முத்தத்தில் முட்டியது.

ஹேமா ! கொஞ்சம் வாட்டர் கொண்டு வா

அவள் தண்ணீரை கொண்டு வரும்போது , அப்படியே அவள் இடுப்பைப்பிடித்து, தன் பக்கத்தில்  இருக்கி , மெல்ல அவள் உதட்டை சுவைத்துவிடவேண்டும் .முடிந்தால் ,பக்கத்தில் இருக்கும் மஞ்சத்திலும் வீழ்த்த முயற்சி செய்யலாம். இப்படியாண நினைப்புகளில் புது உற்சாகம் , அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது .

‘டங்’ என்ற சத்தம் அவன் தலையிலிருந்து ரத்தத்துடன் வெளிவர , மயங்கி சரிந்தான். கண்விழித்தபோது , அரைபோதையில் அல்லாடிக்கொண்டிருப்பவனை போன்ற நிலையில்லா தன்மை , அவனுள் இருந்தது. அவனுக்கு அதை விட ஹேம என்ன ஆனாள் என்பதே பெரும் கவலையாக மனதினுள் கிடந்தது. தான் எங்கோ , வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்தான்.மெல்ல தன் பார்வைக்கு முழு கவனத்தையும் ஊட்டி , சுற்றும்முற்றும் பார்த்தான் ,ஏதேதோ கண்ணாடி பெட்டிகள் அவன் கண்களுக்கு காட்சியளித்தன . ஒரு மேஜையில் , இரும்பு சங்கிலியின்பிடியில் அவன் கைகளும் கால்களும் பினைக்கப்பட்டிருந்தன. அவன் மூளை சிறிது தெளிவை பெற்றபின் மீண்டும் ஒருமுறை , தன்நிலையை உணர ஆரம்பித்தான். வாய் அடைக்கப்பட்டு  இருந்த அவன் சுற்றிலும் மீண்டும் ஒருமுறை பார்த்தபோது தான் தெரிந்தது , அக்கண்ணாடி பெட்டிகள் ,மனித எலும்புகளை தன்னுள் அடைத்துக்கொண்டிருக்கும் நரகத்தின் சேவகர்கள் என்று. அய்யோ, ஹேமா என்ன ஆனாள் என்று நினைப்பதற்குள் , அவன்முன் ஹேமா, ஜெயாவுடன் வந்தாள். சிரித்தவாறே,

என்ன ரவி ! பயந்துட்டியா ? பயப்படாத . நா உன்ன எதுவும் பன்னமாட்டேன் . சும்மா உன்ன வச்சி ஒரு எக்ஸ்பிரிமென்ட் .

என்று கூறிவிட்டு , தன் மேஜையினுள் இருக்கும் கத்தியை எடுத்து , ரவியின் இதயத்தை நோக்கி சென்றாள் .

-----------------------------------------------------------------------------------------------------------


மீண்டும் சேலத்தில் பயங்கரம் .சேலம் மாவட்டம் , நாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் , ரவி . இவர்  , நேற்று இரவு நண்பனை பார்ப்பதற்காக , பக்கத்து ஊரிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் , காணாமல் போனதால் , அந்த பகுதியே பரபரப்புடன் காட்சியளிக்கிறது.இத்துடன் 8 பேர் காணமல் போனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து , காவல்துறை ஆய்வாளர் திரு.****** நமக்கு அளித்த பேட்டியில் ‘இது சைக்கோ கொலைகாரனோட செயலா இருக்கலாம்னு காவல்துறை சந்தேகப்படுது. இந்த செயலுக்கு பின்னால் இருப்பவர்களை கண்டிப்பாக காவல்துறை கைது செய்யும்’

யோவ் . அந்த பையன் கடைசியா , யார்கூடலாம் பேசிருக்கான்னு பாத்தியா ? என்ன ஏதுனு எதாச்சும் தகவல் கிடைச்சுதா?’

‘சார் , அவன் ஒரு மாசமா , ஒரு நம்பர்க்கு நிறைய தடவ போன் பன்னிருக்கான். ஆனா, அந்த நம்பர்லருந்து , ஒரு SMS கூட இல்ல . அந்த நம்பர , பிரபுங்ற பையன் பேர்ல சேவ் பன்னிருக்கான் . அது யார்னு விசாரிச்சதுல , அந்த பையனோட ஃப்ரூப்ல தான் , நம்பர் இருக்கு. . கடைசியா வீட்டவிட்டு போறப்போ , வீட்டுல போன வச்சிட்டு போயிருக்கான். இவனுக்கு முன்னாடி , காணாம போன பசங்களுக்கும் இவனுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. ஆனா, இதே மாதிரி தான் மத்த 7 பசங்களோட கேசும் காணாமப்போற பசங்க எல்லாரும் , வேலை கிடைக்காதவங்களா தான் இருக்காங்க. காலேஜ் முடிக்கிற ஸ்டேஜ்லயோ, இல்ல முடிச்சிட்ட ஸ்டேஜ்லயோ இருக்கற பசங்கதான் . ஒருவேளை சைக்கோ கொலைகாரனாடோ , செயலா கூட இருக்கலாம்‘ .


சரிய்யா! அப்டினா , சந்தேகப்படுற ஆளுங்களையெல்லாம் ,உடனே அள்ளிட்டு வா.

ஓ.கே சார்’

அதே நேரத்தில் , 8.15 மணி பஸ்ஸில் ,

‘ஹேய் ஹேமா !! அந்த பையன பாருடி . உன்ன விழுங்கற மாதிரி பாக்கறான்’

சும்மாவே இருக்க மாட்டியாடி. அமைதியா வா’

என்றவாறே , புது விருந்தாளியை , புதுப்பார்வை பார்த்தாள் ஹேமா. பார்த்துவிட்டு , ஜெயாவை பார்த்து மீண்டும் ஒரு கள்ளச்சிரிப்பினை உதிர்த்தாள்.