Posts

Showing posts with the label சிறுகதை

சிறந்த பக்தன் - சிறுகதை

Image
‘இன்றும் ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன். ‘கடலம்மாவிற்கு நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத் தேற்ற முயன்றான் களமன். அந்த பெரிய மரக்கலம் ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலில் இரண்டு நாட்களாக ஊசலாடிக்கொண்டிருந்தது. இருப்பினும் இன்னும் ஒரு மீனைக்கூட  பிடிக்கமுடியவில்லை. ‘என்ன சிந்தனை முத்தண்ணா?’ ‘எல்லாம் உன் தமக்கையை எண்ணித்தான்.’ ‘அவளுக்கென்ன? பரதவர்களில் வலிமையான உமக்கல்லவா மணம்புரிந்து கொடுத்துள்ளோம். பின் என்ன கவலை?’ ‘நீ அறியாததா? இக்கடல்மாதா தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். பாவம் என்னவள்; பசிப்பிணி எனும் பாவியால் சூழப்பட்டிருப்பாள். ’ ‘இது இறைவனின் திருவிளையாடலேயன்றி வேறெண்ண சொல்ல?’ ‘நம் தலைவர் ஏதோ குற்றம் புரிந்திருப்பாரென்று நினைக்கிறேன்’ ‘என்ன மூடத்தனமிது? நம் பரதவக்குலத்தலைவர் மீது பழிசுமத்தினால் உண்ண ஒருபருக்கை நெல்லும் கிடைக்காது முத்தண்ணா’ ‘இப்போது மட்டும் இங்கே என்ன வாழ்கிறது?’ ‘சரி வா. வீசிய வலையை எடுக்கலாம். ’ என்றவாறே இருவரும் அங்கிருந்து கலத்...

கொலை - சிறுகதை

Image
நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது; ஓருயிரின் அருமைத் தெரியாமல் இருந்தது எவ்வளவு பெருந்தவறு ! ஏன் அதைச் செய்தேன் என்று யோசித்தால் ஒருபக்கம் சூழ்நிலை எனும் காரணி இருப்பினும் மறுபுறம் அதை நான் என் முழுமனதுடன்தான் செய்துள்ளேன். சிறிதுநேரத்திற்குமுன் இதே இடம்; இதே அறை; இதே இருளை விரட்டும் மின்குழல் விளக்கு. ஆனால் சிறு மாற்றம் , மனிதர்களுக்காக கணக்கிடப்படும் இல்லாவொன்றான காலமும் நானும் தான். அப்போதைக்கும் இப்போதைக்குமான என் சிந்தனை வெவ்வேறு. எனக்குள் ஒரு மாற்றம். நல்லதா? கெட்டதா ? எனப்பகுத்தறியக் கடினமான மாற்றம். ஆனால் இம்மாற்றாத்தால் எனக்கு நன்மையோ இல்லையோ, என்னைச் சுற்றியிருப்பவைகளுக்குச் சிறிதேனும் நன்மையைத் தரும் என எண்ணுகிறேன். என் ஆசைப் பூனை; இதோ, என் மடிமேல் இறுகிய கம்பளிப் போர்வையில் சுருண்டு படுத்திருக்கும் இந்த பூனையால்தான் எல்லாம். அது மட்டும் அப்போது சத்தமிடவில்லையெனில் என்மனம் இவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்காது. என்வேலைகளை முடித்துவிட்டு அறையில் நுழையும்போது இதே பூனைதான் கத்தியது. ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் என்னையும், அறையின் மேற்பகுதியையும் பார்த்து, தொடர்ந்தா...

78 ரூபாய் – சிறுகதை

Image
‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்.’ அவரின் குரல் என்னை ஈர்த்தாலும் என்னுடைய அப்போதைய நிலை அவர் கூறுவதை ஒன்றமறுத்தது. ஒரு அவசரகாரியமாக வெளியில் கிளம்பிய எனக்கு மழையின் வடிவில் தடை ஏற்பட ஒரு வீட்டின் முற்றத்தில் அடைக்கலமானேன். ஓரிரு நிமிடங்களில் அவரும் தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் நனைந்தும் நனையாமலும் நான் இருக்குமிடத்தை அடைந்தார். அவ்வீட்டின் உரிமையாளர் எனக்கு சொந்தமென்பதால் அவருடன் துளிகூட ஈடுபாடில்லாமல் மழையைப் பற்றிய மொன்னையான விவாதங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் வந்து சேர்ந்தார். அவரின் காக்கி பேண்டும் சர்ட்டும் அவர் வொயர்மேன் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது. ‘புதுசா வந்துருக்கிங்களா சார்’ எனது அருகிலிருந்த வீட்டின் உரிமையாளன் அவரிடம் கேட்டான். ‘ஆமா தம்பி. அத்தனூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர். அதுக்குமுன்னாடி…..’ என்று ஆரம்பித்து பல்வேறு விதமான அனுபவங்களைக் கூறிக்கொண்டே...

தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை

Image
செவ்வாயின் நேரப்படி மணி மாலை 4.30ஐத்தொட்டதும் , தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேறி , புதிதாய்  வாங்கியிருக்கும் தன்னுடைய ஹைட்ராலிக்ஸ் காரினுள் புகுந்தான் சிவராஜன் . காரினுள் இருக்கும் தொடுதிரையில் டார்கெட் எனும்கேள்விக்கு ரெட் மௌன்டைனில் இருக்கும் தன்னுடைய வீட்டினைக் குறிப்பிட்டு ஆட்டோபைலட் மோடில் பறக்க ஆரம்பித்தான் . பூமியில் ஆக்ஸிஜன் உற்பத்திசெய்யும் அவனுடைய நிறுவனம் செவ்வாயிலும் தனது காலடியை எடுத்துவைத்தது . ஏற்கனவே செவ்வாயில் குடியேறிவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் , செவ்வாயின் நிலவுகளில் ஒன்றான தைமஸில் மனிதர்கள் குடியேறத்தேவையான வசதிகளை நிறுவிக்கொண்டிருந்தார்கள் . அதன் ஒரு அங்கமாக அங்கு ஆக்ஸிஜனை உற்பத்திச்செய்து நிலைநிறுத்தும் பணி இவன் வேலைசெய்யும் கம்பனி வாங்கியது . ஏற்கனவே செவ்வாயில் அவன் செய்திருந்த சிறப்பான பணியால் அவனை டீம்ஹெட்டாக மாற்றி , தைமஸிற்கு அனுப்பியிருந்தார்கள் . இன்னும் பத்து நிமிடங்களில் அந்தகார்  5000 கிலோமீட்டரைக்கடந்து அவனின் வீட்டினைச்சென்றடைந்துவிடும் . நாளை பொங்கல் என்பதால் , டிடிஎச்சில் ரிலிஸாகும் புதுத்திரைப்படத்தின் சந்தாவை க...

பேய்க்கதை - சிறுகதை

Image
‘ மச்சி . நா பேய பாக்கனும்டா . ’ என்ற ஹரியை அதிசயித்துப்பார்த்தான் ராம் . ‘என்னடா திடீர்னு ? பைத்தியம் பிடிச்சிடுச்சா ?’ ‘இல்ல மச்சி . கண்டிப்பா நா பார்த்தே ஆகனும் .’ இனி ஹரியிடம் வாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது ராமுக்குத்தெரியும் . ‘அப்படினா உனக்கு ஏத்த சரியான ஆளு பேயடிச்சாமி தான்டா . அந்தாளபோயி பாரு . அவரு உனக்கு எல்லாம் தெளிவா சொல்லுவாரு .’ என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் ராம் . ஹரிக்கு இந்த எண்ணம் கடந்த 3 நாட்களாகத்தான் இருந்தது .பேயைப்பார்க்க அவன் எதற்கு விரும்பினான் என்று அவனுக்கேத்தெரியவில்லை . ஆனால் பேய் எப்படி இருக்கும் என்று பார்த்தேயாகவேண்டும் .ராம் சொன்ன பேயடிச்சாமியைப்பார்க்க கிளம்பினான் .எங்கும் வனம் . இருட்டு வேறு பயமுறுத்தியது . எங்கோ தூரத்தில் ஒரு கொடூரமான மிருகத்தின் உறுமலோ இறுமலோ இவனை மேலும் திகிலாக்கியது . ‘மச்சி , அவர சாய்ங்காலத்துலதான் பாக்க முடியும் .எல்லையோரத்துல இருக்க காட்டுல தான் அவரோட இடம் இருக்குது . பகல்ல அவரு வேற எங்கயோ போயிடுவாருனு சொல்லிருக்காங்க .’ ‘எங்க போவாரு மச்சி ?’ இருட்டு என்றால் பயம...

‘கில்’மா – சிறுகதை

Image
‘ஒரு எலி , தான் வாழனும்னா தாவரங்கள சாப்ட்டாகனும் . ஒரு பாம்பு , அதோட வாழ்க்கைக்காக,  எலிய சாப்டும் . கழுகு , பாம்ப சாப்டும் . இதுக்குப்பேருதான் உணவுச்சங்கிலி . ’  அஷோக் பள்ளி வகுப்பறைக்கு நுழையும் நேரத்தில்  அந்த ஆசிரியை பொறுமையாகவும் அழகான தன் குரலாலும்  விலங்கியலைப்பற்றி  மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தாள் . அஷோக் வந்ததைப் பார்த்ததும் ,தன் பாடத்தைநிறுத்திவிட்டு  அவளின் கால்கள் அவனிருந்த திசைநோக்கி வந்தது . அவள் சென்றதும் துவரை அமைதியாய் இருந்த மாணவர்கள் , அந்த கேப்பை உபயோகப்படுத்தி தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர் . ‘ஏன் சார் உங்க பையன் ஒருவாரமா ஸ்கூலுக்கு வரல ?’ ‘ இல்ல மேடம் .கொஞ்சம் பிரச்சன . இன்னைலருந்து ஒழுங்கா ஒந்துடுவான் .’ என்றுகூறியவாறே அவன் கண்களில் கெஞ்சினான் . அதன்பின் அவன் மகனை வகுப்பறையில் அவள் அழைத்துச்சென்று உட்காரவைத்துவிட்டு ஒரு சைலன்ஸ் சொன்னாள் . அதைப்பார்த்துவிட்டு கண்களால் நன்றிசொல்லிவிட்டு கிளம்பினான் . அவளுக்கு எப்படித்தெரியும் ? ஒருவாரத்திற்குப்பின் இன்றுகாலைதான் அவன் ஜெயிலில் இருந்து வெளிவந்திருந்தான் . வீட...

வதந்திகள் – சிறுகதை

Image
‘ அவனா ? கண்டிப்பா சான்ஸே இல்ல ’ என்றேன் அழுத்தத்துடன் . ‘ அவனே தான் . நா என்னட ரெண்டு கண்ணால பாத்தேன் . ரெண்டு காதாலயும் கேட்டேன் . ’ என்னால் நம்பமுடியவில்லை .அவன் மிகவும் நல்லவன் . அவனுக்கு அவனுடைய தந்தையை அவ்வளவாகப் பிடிக்காது என்பது உண்மை தான் . அவனுக்கு மட்டுமல்ல , யாருக்கும் அவனுடைய தந்தையின் உண்மையான முகத்தைக் கண்டால் பிடிக்காது . வீட்டிலேப் புலி , ஊருக்குப் பசு என இரட்டை வேடக்கபடதாரி . அவரைப் பொறுத்தவரை , அவருடைய வீட்டில் அவர்தான் எல்லாம் தெரிந்தவர் . அவர் பேச்சைக்கேட்கவில்லை என்றால் அவ்வளவு தான் . திட்டித்திட்டியே சாகடிப்பார் . நாம் என்ன சொல்லவருகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் , அவராக ஒன்றை கற்பனை செய்து , அதை அவரே ஏற்றுக்கொண்டு ஊரெல்லாம் பரப்பி விடுவார் . பலமுறை அவருக்கும் பிரபுவுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டதை நானே பார்த்துள்ளேன் . ஆனால் இம்முறை பிரபு தன் தந்தையை அடித்துவிட்டான் என்ற செய்தியை நம்பமுடியவில்லை . ‘சும்மா அரகுரயாப் பாத்துட்டு உளராத பிரியா .’ பிரியா . என் தங்கை . +2 முடித்து இரண்டுவருடமாய் வீட்டில் இருப்பவள் . சுத்தஜாதகமாய் பிறந்து தொலைத்ததால் ...