Posts

Showing posts with the label சமூகப்பிரச்சினைகள்

78 ரூபாய் – சிறுகதை

Image
‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்.’ அவரின் குரல் என்னை ஈர்த்தாலும் என்னுடைய அப்போதைய நிலை அவர் கூறுவதை ஒன்றமறுத்தது. ஒரு அவசரகாரியமாக வெளியில் கிளம்பிய எனக்கு மழையின் வடிவில் தடை ஏற்பட ஒரு வீட்டின் முற்றத்தில் அடைக்கலமானேன். ஓரிரு நிமிடங்களில் அவரும் தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் நனைந்தும் நனையாமலும் நான் இருக்குமிடத்தை அடைந்தார். அவ்வீட்டின் உரிமையாளர் எனக்கு சொந்தமென்பதால் அவருடன் துளிகூட ஈடுபாடில்லாமல் மழையைப் பற்றிய மொன்னையான விவாதங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் வந்து சேர்ந்தார். அவரின் காக்கி பேண்டும் சர்ட்டும் அவர் வொயர்மேன் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது. ‘புதுசா வந்துருக்கிங்களா சார்’ எனது அருகிலிருந்த வீட்டின் உரிமையாளன் அவரிடம் கேட்டான். ‘ஆமா தம்பி. அத்தனூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர். அதுக்குமுன்னாடி…..’ என்று ஆரம்பித்து பல்வேறு விதமான அனுபவங்களைக் கூறிக்கொண்டே...

REQUIEM FOR A DREAM - சினிமா விமர்சனம்

Image
டேரன் அரவ்னாஸ்கி – நோலனுக் கு சவால் விடும் சமகாலத்து இயக்குநர்களில் அதிமுக்கியமானவர் . இவருடைய ஸ்பெஷல் என்னவென்றால் , ஒரேமாதிரியான கதை , திரைக்கதை , கிளிஷேக்காட்சிகளை எங்கும் இனம்கண்டுபிடிக்கமுடியாத  மாதிரியான வித்தியாச வித்தியாசமான  படங்களைத்தருவதில் வல்லவர் இவர் . இவருடைய படங்கள் ஆரம்பத்தில் TVS 50 வேகத்தில்  நகரும் படம் , கிளைமேக்ஸ் நெருங்கும்போது ராக்கெட் வேகத்தில் இருக்கும் . PI , BLACK SWAN , THE FOUNTAIN என இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் . என் விமர்சனங்களில் , ஆரம்பத்தில் என்னை ஓரளவு வலையுலகில் நிலைநிறுத்திய விமர்சனம் என்றால் அது THEFOUNTAIN தான் . BLACK SWAN பற்றி ஓரிரு வரிகள் எழுதியிருந்தாலும் , இன்னும் அப்படத்தினைப்பற்றி பெரிதான ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது . நோலன் தொடர் முடிந்ததும் , இவருடைய படங்களை வரிசையாக எழுதவேண்டும் என்ற முடிவில்தான் இருந்தேன் . INCEPTION எழுதி முடிக்கவே இன்னும் இருவாரம் ஆகும் பட்சத்தில் , நோலன் தொடர்களை முடிக்க எப்படியும் இரண்டு மாதம் ஆகுமென்பதால் , இத்திரைப்படத்தைப்பற்றி மட்டும் எழுதிவிடலாம் என்றுதான்...

பாரதியும் மதமாற்றமும்

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மதமாற்றம் என்பது தாருமாறாக நடந்துவருகிறது . அதுவும் தமிழகத்தில் நிம்மதியாய் ஒரு பஸ் ஸ்டாண்டை கடந்து செல்லமுடியாது . டிப்டாப்பாக வரும் ஆசாமிகள் திடீர் பிரச்சார பீரங்கிகளாய் மாறி நம்மிடம் ரத்தம் கக்கிச்சாகுமளவிற்கு சாத்தானின் கதைகளை அள்ளித்தெளிக்கிறார்கள் . உங்களுக்கு குடும்பத்தில் பிரச்சனையா ? மாறுங்கள் எங்கள் மதத்திற்கு ! உடனே உங்கள் பிரச்சனை , கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று எர்வாமேட்டின் பாணியிலான இவர்களின் பிரச்சாரங்களால் மக்கு மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள் . உலகில் பிரச்சனையில்லாதவன் எவனுமில்லை . உயிர்போனபின் என்ன பிரச்சனை என்று நமக்கு தெரியாததால் , சாகும் வரை பிரச்சனைக்குப் பழக்கப்பட்டவர்களாய்த் தானிருக்கிறோம் .  இதற்காக நான் ஒன்றும் பிறமதங்களின் எதிரி என்று அர்த்தமில்லை . என் மதம் எனக்கு முக்கியம் . அதைக்காக்க என்னாலான பணியைச்செய்வேன் . அது பிற மதங்களுக்கு எதிரானதாக இருக்கலாம் .   கீழ்கண்ட நிகழ்ச்சி மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு எனும் நாலில் இருந்து பெறப்பட்டது . ஒருமுறை பாரதியைக்காண , அவருடைய நண...

அங்கிள் ஆக்கிய ஆன்ட்டி

நேற்று ஆதார் கார்டு விண்ணப்பிப்பதற்காக , சேலம் வட்டார ஆட்சியர் அலுவலகத்திற்குச்சென்று வீடு திரும்புவதற்காக 3 ரோடு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன் . என் நேரமோ என்னவோ , வழக்கம்போல ஒருமணிநேரம் ஆகியும் பஸ் வரவில்லை . கடுப்புடன் நின்றுகொண்டிருந்த நேரம் , என் அருகில் ஒரு பெண்மணி வந்தார் . அவர் கையைப்பிடித்தவாறே ஒரு ஐந்துவயது பெண்குழந்தையும் , ‘ம்மா ச்சாக்கி மா’ என்றவாறு அவளின் இடுப்பில் 3 வயது பெண்குழந்தையும் இருந்தன . நின்று கொண்டிருந்த குழந்தையோ ‘மா ஐஸ்கிரீம் வாங்கித்தா மா’ என்று கெஞ்ச , இந்த பெண்மணியோ அடித்துவிடுவேன் , அப்பாவிடம் சொல்லிவிடுவேன் , சளி பிடித்துக்கொள்ளும் என்று ஏதேதோக் கூறி அக்குழந்தைகளின் ஆசைக்குத்தடை போட்டார் . எப்போதும் பெண்குழந்தைகளின் மழலை மொழிகளை உன்னிப்புடன் கவனிக்கும் எனக்கு , அக்குழந்தைகளின் வாடியமுகத்தைப்பார்த்தபோது பேசாமல் நாமே ஐஸ்கிரிம் வாங்கிக்கொடுக்கலாமா என தோன்றியது . அச்சோ அப்படி ஏதாவது நாம் செய்து அந்த பெண்மணி திட்டிவிட்டால் என்னசெய்வது என்று பயந்தவாறே நான் என் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு நின்றுகொண்டிருந்தேன் . அப்போதுதான் நான் ஒன்றை கவனித்தே...

மீத்தேன் ஆபத்தும் இந்திய விவசாயமும்

Image
இந்திய விவசாயிகள் கடனில் பிறந்து , கடனில் வாழ்ந்து , கடனில் இறந்து கடன்விட்டுபோக பிறந்துள்ளார்கள் . தமிழகத்தில் இணையத்தில் மாத்திரம் மாபெரும் எதிர்ப்பலைகள் கிளம்பி வரும் மீத்தேன் எதிர்ப்பை பற்றி பார்க்கும் முன் நமது இந்திய விவசாயத்தை பற்றி சில வரிகள் பார்க்கலாம் . மேலே கூறப்பட்ட வாக்கியமே இந்திய விவசாயத்தையும் விவசாயியைப் பற்றியும் எளிதாக ஒரே வாக்கியத்தில் நமக்குப்புரிய வைத்துவிடும் . இந்தியாவில் நடக்கும் விவசாயத்தை ‘பருவக்காற்றின் சூதாட்டம் ‘ என்றுதான் அழைப்பார்கள் . அதன் காரணம் உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தைப்பிடித்திருக்கும் நாம் , நீர்வளத்தில் 133 (4%) வது இடம் .இதைவைத்துக்கொண்டு உலகின் 10 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமெனில் பருவமழை மாத்திரமே கைக்கொடுக்கும் . ஆனால் பருவக்காற்றுகள் ஆனது கொடுத்தால் ஒரேயடியாகவும் , இல்லையெனில் தலையில் இருப்பதையும் வழித்துக்கொண்டு சென்றுவிடும் . உலகவங்கியானது நமது விவசாயத்தினைப்பற்றி கூறுவதைக்கேட்டால் அவ்வளவு அசிங்கமாய் இருக்கிறது . ’தண்ணீர் திறனற்ற , கிடைப்பதை தக்கவைத்துக்கொள்ள இயலாத மற்றும் நியாயமற்ற ம...

கன்னாபிஸ் சாடிவாவும்    சில உண்மைகளும்

Image
கி.பி . 1866 – ல் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் எனும் ஸ்காட்லாந்து நாட்டு கவிஞர், நாவலாசிரியர் எழுதிய ஒரு நாவலே தி ஸ்ட்ரேஞ்ச் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெகில் அன்ட் மிஸ்டர் ஹைட் (The strange case of Dr.Jekyll and Mr.Hyde).இந்த நாவலின் கதைப்படி இரக்ககுணம் கொண்ட மருத்துவர் ஜெகில் தான் கண்டுபிடிக்கும் மருந்தினால் கொடூர குணம் கொண்ட ஹைடாக மாறுகிறார் . அந்த மருந்தின் தாக்கம் முடிந்ததும் டாக்டர் ஜெகிலாக மாறுகிறார் . அவருக்கு தான்தான் ஹைட் என்பதே தெரியாமல் இருக்கிறது . ஒவ்வொரு முறையும் அம்மருந்தை கொண்டு தூங்குவதாக கற்பனை கொள்ளும் ஜெகில் ,ஒரு முறை ஹைடாக மாறும்போது ஒருவரை கொலை செய்துவிடுகிறார் . அதன்பின் அது ஒரு துப்பறியும் நாவலாக சென்று முடிகிறது . அந்த மருந்தினால் ஜெகிலுக்கு ஏற்பட்ட விளைவுகளையும் அதனால் அவருக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் ஸ்டீவன்சன் அழகாய் விளக்கியிருப்பார் .நாவல் , பல எதிர்பார்க்காத வருந்ததக்க நிகழ்ச்சிகளுக்கு பின் சோகமாய் முடியும் . சிவபெருமான் ஒருமுறை சில குடும்ப பிரச்சனையால் கோபமுற்று காட்டில் வந்து அமர்ந்தாராம் . அந்த காட்டில் சில செடிகளே காணப்பட்டதாம் .வெயில் அதிகரித்...

கலப்பு ('க்'காதல்)'த்' திருமணங்கள் அவசியமா ?

எங்கள் கிராமத்தில் , இன்னும் எம்.ஜி.ஆர் , சிவாஜிக்குத்தான் ரசிகர்கள் அதிகம் . இன்னும் பண்டிகைக்காலங்களில் எள்ளிடி ,ஆப்ப கசாயாம் , வெள்ளம்புலி கறி ,  போன்ற தமிழர் மறந்த பலகாரங்கள் தான் வீட்டில் செய்து சாப்பிட்டு வருகிறார்கள் . சுருக்கமாய் சொல்லவேண்டும் எனில் , 1960 – களின் வாழ்க்கை நிலையை மதிக்கும் மக்கள் அதிகம் .எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்களை சுற்றியுள்ள பல சுற்றுவட்டார ஊர்களிலும் , இதே நிலை தான். உறவினர் அல்லாத , ஒரு பெண்ணோ பையனோ இரண்டு நிமிடம் சிரித்து பேசிவிட்டால் அவ்வளவு தான் . என் வயதில் இருக்கும் இளவட்டங்கள் , அவளின் நடத்தையைப்பற்றி “A” சர்டிபிகேட் கொடுக்குமளவிற்கு , கற்பனையில் வாய்கிழிய கிளப்பி விடுவார்கள் . நடுத்தர வயதினரோ , அப்பெண்ணை மிரட்டி , பையனை மரத்தில் கட்டிவைத்து அடித்த நிகழ்வுகளெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன் வரை நடந்து கொண்டிருந்தது . மாற்று சமூகம் என்றால் சொல்லவே வேண்டாம் . ஒருமுறை கவுண்டர் இனத்தைச்சார்ந்நத பையன் ஒருவன் , நாடார் இனப்பெண்ணுடன் ஓடிச்சென்றான் . அவனை பிடிக்க அவனுடைய தந்தை , டாட்டா சுமோக்கள் சகிதம் 40 பேருக்கு மேல் கிளம்பி அவனை விரட்டினார...