மீத்தேன் ஆபத்தும் இந்திய விவசாயமும்
இந்திய விவசாயிகள் கடனில் பிறந்து , கடனில் வாழ்ந்து , கடனில் இறந்து கடன்விட்டுபோக பிறந்துள்ளார்கள் .
தமிழகத்தில் இணையத்தில்
மாத்திரம் மாபெரும் எதிர்ப்பலைகள் கிளம்பி வரும் மீத்தேன் எதிர்ப்பை பற்றி பார்க்கும்
முன் நமது இந்திய விவசாயத்தை பற்றி சில வரிகள் பார்க்கலாம் . மேலே கூறப்பட்ட வாக்கியமே
இந்திய விவசாயத்தையும் விவசாயியைப் பற்றியும் எளிதாக ஒரே வாக்கியத்தில் நமக்குப்புரிய
வைத்துவிடும் . இந்தியாவில் நடக்கும் விவசாயத்தை ‘பருவக்காற்றின் சூதாட்டம் ‘ என்றுதான்
அழைப்பார்கள் . அதன் காரணம் உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தைப்பிடித்திருக்கும்
நாம் , நீர்வளத்தில் 133 (4%) வது இடம் .இதைவைத்துக்கொண்டு உலகின் 10 சதவீதத்துக்கும்
அதிகமான மக்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமெனில் பருவமழை மாத்திரமே கைக்கொடுக்கும்
. ஆனால் பருவக்காற்றுகள் ஆனது கொடுத்தால் ஒரேயடியாகவும் , இல்லையெனில் தலையில் இருப்பதையும்
வழித்துக்கொண்டு சென்றுவிடும் . உலகவங்கியானது நமது விவசாயத்தினைப்பற்றி கூறுவதைக்கேட்டால்
அவ்வளவு அசிங்கமாய் இருக்கிறது .’தண்ணீர் திறனற்ற , கிடைப்பதை
தக்கவைத்துக்கொள்ள இயலாத மற்றும் நியாயமற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது ’.
அதாவது நமக்கு முதலில் தண்ணீருக்கான வக்கே இல்லை ; அப்படியே கிடைத்தாலும் அதை முறையாக
சேமிக்க யோக்கிதை இல்லை ; அப்படியே சேமித்தாலும் அதை முறையாக பிரித்துக்கொடுக்க முடியாத
ஒரு திறம் இல்லாத நாடாகத்தான் நமது நாடு இருக்கிறது என்பதைத்தான் உலகவங்கி கூறியுள்ளது
. நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , நமது நாட்டின்
வருங்கால உணவுபற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சேமிப்புக்கிடங்குகளில்
60 % அதிகமான உணவுப்பொருட்கள் பயன்படுத்த இயலாத நிலையில் தரமற்றுபோய் இருக்கிறது என்று
ஒரு பேட்டியில் வருத்தப்பட்டார் . இதிலிருந்து உலகவங்கியின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை
உணரலாம் .
உங்களில் காதலர்
தினம் எப்போதென்று தெரியும் . சிலருக்கு அன்னையர் தினம் , குழந்தைகள் தினம் போன்றவையெல்லாம்
தெரிந்திருக்கும் .யாருக்காவது உழவர் தினம் எப்போதென்று தெரியுமா ? (எனக்குமே இக்கட்டுரை
எழுதும்போதுதான் தெரிந்தது . உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்டில் தெரிவியுங்கள் ) .
உழவர் தினத்தைப்பற்றி தெரிந்துகொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் தான் நம்மில்
பலருக்கும் இருக்கும் . விவசாயத்தில் ஈடுபடுபவன் அவனுக்கான கூலியைப்பெறுகிறானே ? அதன்பின் எதற்கு
அவனைப்பற்றி நாம் நினைக்கவேண்டும் ? இதேபோல் ஆசிரியர்களை நாம் நினைக்கமுடியுமா ? ஆசிரியர்கள்
தங்களின் வேலையான பாடங்களை மட்டும் சொல்லிக்கொடுத்துவிட்டு சென்றிருந்தால் , நம்மில்
பலர் வெறும் ஏட்டறிவோடுதான் அழைந்திருக்கமுடியும் . அதேபோல் தான் விவசாயியும் . நமக்கு
அத்தியாவசியமானது முதலில் உணவு தான் . மானத்தை துறந்து வேசியாகும் பலர் உணவுக்காகத்தான்
அதைசெய்கிறார்கள் என்பது தான் நிதர்சனம் . ஆனால் நாமோ அடிப்படை தேவைகளை மறந்து விட்டு
(அ) மறுத்து விட்டு பொழுதுபோக்கும் விஷயங்களை அடைவதிலேயே பெரும்சுகம் அடைகின்றோம்
. அரிசியின் வகைகளை அறியாத நமக்கு , ஆன்ட்ராய்டு வெர்சன்கள் அத்தனையும் அத்துப்படி
. HOME பற்றி கவலைப்படாத நாம் , CHROME ல் பிரச்சனை ஆனால் வருத்தப்படுகிறோம் . தொழில்நுட்ப
அறிவு அவசியம்தான் . ஆனால் நம்முடைய இருப்பினை உணர்ந்து , அடிப்படைகளை தாண்டிய தொழில்நுட்ப
அறிவு தான் நமக்குத்தேவை . நம் வீட்டில் இருக்கும்
நம் அம்மாவிற்கோ , மனைவிக்கோ ஒரு நாள்கூட சமையல் உதவியாக ஒரு பூண்டு கூட உரிக்காத பலர்
தான் பெண்ணியம் பேசி கண்ணியம் காப்பாற்றி வருகிறார்கள் . அதையேதான் இங்கும் செய்கிறோம்
. முதலில் நம் அம்மாவை கவனித்துவிட்டு ஊரில் இருக்கும் மற்ற தாய்களை கவனியுங்கள் .
அதற்காக விவசாயிகளுக்கு வருடாவருடம் பாராட்டுவிழா நடத்தவேண்டாம் . அவர்களின் துயரப்படும்போது
அவர்களுக்கு துணையாய் போராடசெல்வோம் . ஒரு நடிகரின் திரைப்படம் ரிலிசாகவில்லை என்றால்
தெருதெருவாய் உண்ணாவிரதம் இருக்கும் நாம் , விவசாயிகளுக்காக போராடவில்லையெனில் வாழ்நாள்
முழுதும் உண்ணாவிரதம் இருக்கவேண்டியதுதான் .
இந்தியப்பொருளாதாரத்தின்
முதுகெலும்பு என்றழைக்கப்படும் விவசாயித்தின் இன்றைய நிலைமை தெரியுமா ? 1951 – ல் மக்கள்
தொகையில் 72 % பேர் விவசாயத்தை நம்பியிருந்தனர் . ஆனால் இன்று 58.1 % மக்கள் நம் நாட்டில்
விவசாயத்தை நம்பி இன்று இருக்கிறார்கள் . மேலும் இன்றைய நாட்களில் விவசாயத்தினை விட்டுப்போக
40 % மக்கள் ,மாதம் 5000 ரூபாய் சம்பளம் கிடைத்தால் போதும் என்று தயாராய் இருக்கிறார்கள்
. அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை . விவசாயிகளுக்கு மானியம் என்ற ஒன்றே இல்லை . விவசாய
மானியம் என்ற பெயரில் உரக்கம்பனிகளுக்கும் பூச்சிமருந்து நிறுவனங்களுக்கும் டிராக்டர்
நிறுவனங்களுக்கும் வாரி வழங்கிவருகிறது அரசு . நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக
நேருவின் தலைமையில் ஐந்தாண்டு திட்டங்கள் என்பதனை அறிமுகப்படுத்தினர் . முதல் ஐந்தாண்டு
திட்டத்தின்போது விவசாயத்திற்காக , மொத்தநிதியிலிருந்து 15% ஒதுக்கினர் . ஆனால்
10-வது ஐந்தாண்டு திட்டத்தில் 1.3% நிதியை தாராளமாக ஒதுக்கியிருந்தனர் . அந்த திட்டத்திற்காக
ஒதுக்கப்பட்ட மொத்தநிதி 14,21,711 கோடி . கடைசியாக 12-வது ஐந்தாண்டு திட்டத்திற்கான
நிதி ஒதுக்கீட்டினை கேட்டால் தலைசுற்றும் . மொத்தம் 47 லட்சத்து 70 ஆயிரம் கோடி . இதில்
1 சதவீதத்துக்கு கீழ்தான் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டது என்பது வருந்ததக்கது . 1951
– ல் மொத்த ஏற்றுமதியில் 55.4 சதவீதமாக இருந்த விவசாயத்துறை தற்போது வெறும் 14.2 சதவீதம்
தான் இருக்கிறது . சரி , விவசாயத்தை மேம்படுத்த திட்டங்கள் எதுவும் இல்லையா என நீங்கள்
கேட்பது புரிகிறது . கிரிஸ்லி சார்மிக் சுரக்ஷா யோஜனா (2001) , வர்வு பீமா திட்டம்
(2004) போன்ற திட்டங்கள் பெயரளவிற்கு கொண்டுவரப்பட்டு , அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
அதிகார மையங்களால் அமுக்கப்பட்டது தான் மிச்சம் . விவசாய நலனுக்காக 1990களில் , அப்துல்கலாம்
இரண்டாம் பசுமைபுரட்சி (RAINBOW REVOLUTION) எனும் திட்டத்தை பரிந்துரைந்தார் . ஆனால் அதை நடைமுறைப்படுத்த
நம் நாட்டில் காட்டப்பட்ட மெத்தனம் போல் உலகில் வேறெங்கும் இல்லை . அத்திட்டம்
2004 –ல் தான், போனால் போகிறது என நடைமுறைப்படுத்தப்பட்டது . இந்த இழவை கடந்து நீர்பாசனத்திற்கு
சென்றாலும் அதிலும் ஒரு மண்ணாங்கட்டியும் இதுவரை நம்நாட்டில் உருப்படியாய் செய்யவில்லை
. விவசாயம் செய்யும் நிலங்களில் வெறும் 52.6 சதவீதம் தான் நீர்பாசனம் செய்து தந்துள்ளது
. மீதமுள்ளவர்கள் மழையை நம்பியே சாகவேண்டியதுதான் . இன்று நம்நாட்டில் இருக்கும் நிலப்பரப்பில்
வெறும் 37.05 சதவீதம் அளவிற்கு தான் விவசாய நிலங்கள் இருக்கிறது . இப்போது நம் நாட்டில்
இருக்கும் பொருளாதாரத்தைப் பீற்றி்ககொள்ளும்முன் , ஆங்கிலேயே ஆட்சிகாலத்தில் நமதுநாடு பொருளாதாரத்தின் உச்சியில் இருந்தது என்பதனை
மறக்கவேண்டாம் . அதற்கான காரணம் அன்றைய விவசாய உற்பத்திதான் . அடிமையாய் இருந்தபோது
கூட இப்போது இருக்கும் பொருளாதாரத்தினைக்காட்டிலும் ஐந்துமடங்கு வலிமையாய் இருந்தோம்
.
சரி, சரியான பொருளாதார
திட்டங்கள் தான் இந்த நிலையில் இருக்கிறதென்றால் , விவசாயத்திற்காக நம்நாட்டில் உருவாக்கப்பட்ட
இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம் எல்லாரையும் தூக்கி சாப்பிடுவது போல் இருக்கிறது .
நம்மில் பலருக்கு விவசாய ஆராய்ச்சிக்கழகம் இருக்கிறது என்பது எப்படி தெரியாதோ , அதேபோல்
நாமெல்லாம் இந்தியாவில் தான் இருக்கிறோம் என்பது அவர்களு்ககு தெரியாது . இவிஆ கழகத்தைப்பொறுத்தமட்டில்
பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் மாத்திரமே விவசாயம் நடைபெறுகிறது . மற்ற மாநிலங்கள்
எல்லாம் இவ்விரண்டு மாநிலங்களையும் நம்பிதான் இருக்கறது என்ற நினைப்பில் அம்மாநிலங்களை
விட்டு நகரமறுக்கிறார்கள் . சரி விவசாயக்கடன் தான் இருக்கின்றதே ! அதைவைத்தாவது பிழைப்பு
நடத்திவிடலாம் என்ற விவசாயியின் கனவுக்கும் ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து ஆப்படித்தது
அரசு . கிசான் கிரெடிட் கார்டு திட்டம்
என்ற அத்திட்டத்தின் படி வழங்கப்படும் கடனளவு 5000 ரூபாய் . பீர்விற்பவனுக்கு 5000
கோடி , உணவளிப்பவனுக்கு 5000 ரூபாய் . எப்படி நமது நாட்டின் தொலைநோக்கு பார்வை ? அந்த
பணத்தைக்கட்டமுடியாமல் தற்கொலை செய்தவர்கள் எக்கச்சக்கம் .1997 – 2008 க்கு இடைப்பட்ட
காலத்தில் நமது நாட்டில் தற்கொலைசெய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 82
ஆயிரத்து 936 பேர் . ஆனால் 2008 லிருந்து 2013 வரை மாத்திரம் தற்கொலை செய்தவர்களின்
எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தைத்தாண்டியுள்ளது . திட்டங்கள் , சட்டங்கள் , மானியங்கள்
என விவசாயிக்கு காட்டப்பட்டு கடைசியில் உழவனுக்கு அரசு , ஊம்பதான் கொடுத்தது .
‘இந்திய விவசாயிகள் , விவசாயத்தை விட்டு வேறுவேலைகளுக்கு செல்வதைப்பற்றி சிந்திக்கவேண்டும் ’
இந்த கூற்றைக்கூறியவர் மாபெரும்
பொருளாதார மேதையும் , முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் .
இந்தியாவில் 1991 –ல் வெளிநாட்டு கம்பனிகளுக்கு வாயிற்கதவை திறந்து விட்டு ,
அமெரிக்காவிற்கு விளக்குப்பிடித்த மாபெரும் பொருளாதார மேதை . ‘பார்த்தீனியன்’ எனும்
விஷச்செடியை , கோதுமையுடன் கலந்து கொடுத்து இந்தியாவின் மண்வளத்தை அடியிலிருந்து அறுத்தெடுத்த
அமெரிக்காவுடன் கூட்டுசேர்ந்து இந்த வாக்கியத்தை கூறினார் . இன்று கட்டித்தழுவிக்கொண்டிருக்கும்
அமெரிக்கா , ஒரு காலத்தில் இந்தியாவை பிச்சைக்கார நாடு என்று கேவலப்படுத்தியது .
1966 – 1967 காலகட்டங்களில் இந்தியாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது . அப்போது , இந்தியாவிற்கு
உதவிசெய்வதாய் கூறிய அமெரிக்கா கப்பலின் வழியே உணவுப்பொருட்களை அனுப்பி வைத்தது . அக்காலகட்டத்தில் அமெரிக்க பத்திரிக்கைகள் அனைத்தும்
‘கப்பலலிருந்து இந்தியருக்கு உணவு’ என்று கேலிச்சித்திரங்கள்
வெளியிட்டன .
சரி , இப்போது
தமிழகத்திற்கு வருவோம் . இந்தியாவிலேயே நகரமயமாக்கலில் முதலிடம் தமிழகம்தான் . அப்படியே தமிழனின் பெருமை உள்ளுக்குள் பூரிக்கின்றதா ? ஆனால்
தமிழகத்தில் விவசாயம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு 9407 ரூபாய் தேவைப்படுகிறதாம் . அதே மத்தியபிரதேசத்தில்
வெறும் 700 ரூபாய் தான் . இந்தியாவிலேயே விவசாயம் செய்ய அதிகளவு கடன்வாங்கும் மாநிலம்
தமிழகம் தான் . விவசாயம் செய்ய நீர் இருந்தால் தானே ? பாலாற்றில் , நாய் போன ஆயைக்கூட
விடாமல் சுரண்டி எடுத்து மணல்மாபியா சாதனை செய்தாகிவிட்டது . பால் போல் நுரை பொங்கி
வரும் ஆற்றை , மணலாறு என்ற பெயர் கொண்டு அழைக்கும்படி உருவாக்கியாயிற்று . மணல் மாபியாக்கள்
செய்ததற்கு நாங்கள் என்ன செய்யமுடியும் என்கிறீர்களா ? வாஸ்தவம்தானே ! உங்களுக்கு நேராதவரை
அது செய்திதானே ! மணல் மாபியாக்கொள்ளைகள் நடக்கும்போது போராடியிருக்கலாம் . அதைவிட்டுவிட்டு
வெட்டிநாயம் தானே பேசிக்கொண்டிருந்தோம் .போராட்டத்துலயே ‘போர்’ இருக்கு . அப்புறம்
எப்படி ஆர்வத்தோடு செய்யமுடியும் . நம் தமிழகத்தில் 1993 -1994 ஆம் வருடங்களில் விவசாயத்துறையின்
பங்கு 25 சதவீதம் . தற்போது வெறும் பத்து சதவீதம் .
நம் தமிழகத்தை
போல் ஒரு முட்டாப்பயல்களின் மாநிலம் இந்தியா
எனும் நாட்டிற்கு மட்டுமல்ல , உலகில் எந்த நாட்டிற்கும் கிடைக்காது . இல்லாமலா இரண்டு
அணுஉலைகள் , ஐந்து அனல்மின் நிலையங்கள் அமைப்பார்கள் . இந்த ஏழும் வெடித்ததென்றால்
தமிழகம் மட்டுமல் தென் இந்தியாவே புல் பூண்டு கூட அடுத்த 50 ஆண்டுகளுக்கு
முளைக்காது . நம் தமிழர்கள் மீண்டும் நான்காம் தமிழ்ச்சங்கத்தை கடற்கோளில் அழிந்த கபாடபுரத்தில் தான் நடத்தவேண்டும்
. இதுமட்டுமா ? ஒரு நாட்டில் , இருமாநிலங்களுக்கிடையேயான நதிப்பங்கீட்டை தீர்த்துவைக்க
40 வருடங்கள் இழுத்தடிப்பது இந்தியாவில் மட்டும்தான் . இலங்கை தமிழர் ஆகட்டும் , ஆஸ்திரேலிய
தமிழர் ஆகட்டும் தமிழன் எங்கு அடிவாங்கினாலும்
கவலையில்லை . ஆனால் , ஒரு பஞ்சாபி அடிவாங்கினான்
என்றால் உடலை சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு கிளம்பிவிடும் தாய்மையுணர்வு கொண்டதுதான்
நம் நாடு . புறதீபகர்ப இந்தியன் தான் ஏமாற்றுகிறான் என்றால் நம் தமிழகத்தில் இருப்பவன் அதற்குமேல் இருக்கிறான்
. ரியல் எஸ்டேட் செய்ய தரமான புன்செய் நிலங்களை தேர்ந்தெடுப்பதிலேயே அவனுடைய திறமை
வெளிப்படுகிறது .
சரி இப்போது மீத்தேனுக்கு வருவோம் . மீத்தேன் (CH4)
என்றால் என்ன ? இயற்கைவாயு என்றழைப்படுவது தான் மீத்தேன் . அதாவது குப்பைகள் , மனிதக்கழிவு
, தாவர எண்ணெய் , கழிவுப்பொருட்கள் போன்ற வீணாய்ப்போன பொருட்கள் மக்கியோ மக்காமலோ இருக்கும்போது
அதனுள் இருந்து வெளிப்படும் வாயுதான் மீத்தேன் . ஒரு சிறந்த குப்பை எனப்படுவது அழுகிய
முட்டை வாசத்தை கொடுக்கும் . ஆனால் மீத்தேன் என்பது நமக்கு மூச்சுத்திணறலைக்கொடுக்கும்
. இதன் திண்ம வடிவத்தைத்தான் நிலக்கரியாய் நாம் வெட்டி எடுக்கிறோம் . கிட்டத்தட்ட வருங்கால
மரபுசார் எரிபொருட்களில் முதலிடத்தில் இருப்பது இந்த மீத்தேன் தான் . மீத்தேனில் இருந்து
எடுக்கப்படும் LNG (LIQUFIED NATURAL GAS)
வாயுவைதான் எதிர்காலத்தில் நாம் சமையல் எரிபொருளாக பயன்படுத்தப்போகிறோம் . இந்த மீத்தேன்
இப்போது பெரும்பிரச்சனையல்ல , பிரச்சனை வெட்டியெடுக்கப்படும் இடம் .
புதுவை மாநிலத்தின்
பாகூர் முதல் , தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் (திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி
வரை) , 1 லட்சத்து 64 ஆயிரத்து 819 ஏக்கரில் (691 சதுரகிமீ) இந்த மீத்தேன் வாயு நிலத்துக்கடியில்
காணப்படுகிறது .ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குமுன்பே இதை இந்திய ஆயுள் கார்ப்பரேசன் கண்டுபிடித்துவிட்டாலும் அதற்கான அப்ரூவல் வாங்க 2010 ஆகிவிட்டது . மத்திய
அரசானது GREAT EASTERN ENERGY COMPAY எனும் கம்பனியின் மூலம் (அமெரிக்க நிறுவனம் .
இந்தியாவில் தலைமையிடம் ஹரியானா மாநிலம்) ஜூலை 2010 – ல் ஒரு ஒப்பந்தம் போட்டது . அதாவது
நிலத்திற்கடியில் காணப்படும் மீத்தேனை கொண்டு
, சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகியவற்றை தயாரிப்பதே அந்த புரிந்துணர்வு
ஒப்பந்தம் . இதன் மூலம் 6.5 லட்சம் கோடி லாபம் கிடைக்கும் எனவும் இதற்கான காலம் 35
ஆண்டுகள் தான் எனவும் மகிழ்ச்சிக்கடலில் மத்திய அரசு அறிவித்தது .
இப்போது இந்த மீத்தேன்
எடுக்கப்படும் முறைதான் நம்மை நடுநடுங்கவைக்கும் பயங்கரத்தை கொண்டுள்ளது . நல்ல செழிப்பான
புஞ்சை நிலங்களாய் பார்த்து 2000 இடங்களில் , 6 கி.மீ ஆழத்திற்கு நிலத்தினடியில் ஓட்டைப்போடவேண்டும்
. இதற்காக பாறைகளை துளைத்தெடுக்கும் HYDRALICS FRAUCTURING மெஷின்களை பயன்படுத்தப்போகிறார்கள்
. 1.5 கி.மீ அளவிற்கு பூமியனடியில் துளையிட்டாலே , பூமியின் மேலோட்டில் பலவிதமான மாற்றங்கள்
ஏற்படும் . அதன்பின் 600 கெமிக்கல்ஸ்களை பூமியினடியில்
செலுத்துவார்கள் . இந்த 600 கெமிக்கல்சும் உள்ளே சென்றால் பலவதமான ரசாயணமாற்றங்களுக்கு
நிலத்தை ஆழ்படுத்தி , பாழ்படுத்திவிடும் .
மேலும் ஓட்டையைப்போடுவதால் ஏற்கனவே மரணபாதலத்தில் இருக்கும் நிலத்தடி நீர் , இல்லாமலே
போய்விடும் . ஏற்கனவே தண்ணீர் இல்லை . பின் அப்படியே மெல்ல மெல்ல கடல்நீர் உட்புகும்
. வண்டல்மணலில் உவர்ப்பேறி எதற்கும் உதவாத பாலையாக நிலம் மாறும் .இம்சை அரசன் படத்தில்
வரும் அக்காமாலா தயாரிப்பது எப்படியிருக்குமோ , அப்படி இருக்கிறது இதன் செய்முறை விளக்கம் . இப்போது
ஓட்டை போடுவதற்கான வேலைகளை அக்கம்பனி செவ்வனே ஆரம்பித்துவிட்டது .இப்படித்தான் ஓட்டையைப்போட்டுஆட்டையைப்போட
பார்க்கிறார்கள் .
ஆனால் மத்திய அரசைப்பாராட்டியே
ஆகவேண்டும் . இத்திட்டத்தின்மூலம் ஒரே கல்லில் இரண்டுமாங்காய் . ஒன்று , மின்சாரத்தேவை
மற்றும் ஆட்சிமாறினாலும் நிலையான கமிஷன் . மற்றொன்று சைலன்டாக தமிழர் என்ற இனத்தை அழித்துவிடலாம்
. எப்படியும் இத்திட்டம் நிறைவேறினால் காவிரடெல்டா பகுதிக்காரர்கள் பாதிபேர் வறுமையிலேயே
செத்தொழிந்துவிடுவார்கள் . சென்னையோ ஏற்கனவே
தோசைக்கல் கணக்காய் எரிந்து கொண்டிருக்கிறது . ஒருபுறம் நிலநடுக்கம் , மற்றொருபுறம்
கடல்சீற்றம் ; எப்படியும் 35 ஆண்டுகளில் சென்னை அழிவின்விளிம்பிற்கு சென்றுவிடும்
. மதுரை , ராமநாதபுரம் மக்களும் நீரின்றி மெல்ல மெல்ல செத்தோ , அல்லது நாடுதேடி பிழைப்பிற்கோ
சென்றுவிடுவார்கள் . சேலம் கோவை , தேனி பக்கமெல்லாம்
ஏற்கனவே கேரளத்தவர் இடம்பிடித்து கேரளாவை விரிவுபடுத்த ஆரம்பித்துவிட்டனர் . மீதமிருக்கும்
தமிழர்களை , ஈழஅகதிகள் என்றுகூறி இலங்கைக்கு
அனுப்பி பின்னாலேயே ராணுவ உதவியையும் அளித்து , அழித்துவிடலாம் . அதன்பின் தமிழர் என்றொர்
இனமுன்டு என்பது மாறி தமிழர் சாவதொர்க்கொரு இடமுன்டு என்று சேப்டரை முடித்துவிடலாம்
. என்னே ராஜதந்திரம் !!! பலே வெள்ளையத்தேவா !!! பலே !!!
எல்லாம் நடந்துமுடிந்து
கொடிபிடிப்பவன்தான் தமிழன் என்பதனை மீண்டும் நாம் உணர்த்தியிருக்கிறோம் . எப்படியோ
சில விஷக்கிருமிகள் அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய புரட்சிபோராட்டத்தால் விழிப்புணர்வு
பெற்ற மக்கள் , அந்த கம்பனியின் வாகனங்கள் வந்தாலே துரத்தியடிக்க ஆரம்பித்தனர் . ஆனால்
நம் அரசாங்கத்தின் ராஜதந்திரம் பற்றி தெரியாததோ ! நம் அரசாங்கமே சொந்த செலவில் பெட்ரோல்
போட்டு , பெட்ரோல் எடுக்கும் வண்டிகள் (இந்தியன் ஆயுள் கார்ப்பரேசன் , ONGC) அனுப்பி
, அதன் வழியே தன் வேலையை ரகசியமாக ஆரம்பித்துவிட்டது .
சரி . இந்த மீத்தேனில்
நன்மைகள் இல்லாமலேயே போய் விட்டது . வருங்கால மின்சாரத்திற்கு எதைப்பிடித்துக்கொண்டுஅலைவாய்
என்று கேட்கிறீர்களா ? உலகில் மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன . அமெரிக்கா
, கனடா , ஆஸ்திரேலியா , சீனா , ரஷ்யா போன்ற நாடுகளில் அவை இருந்தாலும் , மக்கள் வாழுமிடங்களில்
அவை இல்லை . அந்நாடுகளில் மக்கள் தான் முதன்மையானவர்கள் . தொழில் இரண்டாவதுதான் . ஆனால்
இந்தியாவை பொறுத்தமட்டில் மக்கள் ஒரு எறும்புக்கூட்டம் . ஓட்டுப்போடும் வெத்துவேட்டுகள்
. அதனால் தான் நம்மை இலக்காரமாய் எண்ணி , 1 கோடி தமிழர்கள் வசிக்கும் பகுதியில் , அவர்கள்
செத்தாலும் கவலையில்லை என்பதைப்போல் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள் . உங்களுக்கெல்லாம்
இந்தியாவின் மாசுக்கட்டுப்பாட்டு தினமாய் டிசம்பர் 2 –ஐ எதற்கு கொண்டாடுகிறார்கள் என்பது
தெரியும் . 1984 ஆம் ஆண்டு போபாலில் நடந்த விஷவாயு தாக்கத்தால் தான் அந்நாளை இப்படி
கடைபிடிக்கிறார்கள் . அந்நிகழ்வின்போது மக்களை கொன்ற விஷவாயு எது தெரியுமா ? மீத்தேனின்
உருமாற்றமான மெத்தில் ஐசோ சயனைடு எனும் வாயுதான் .
கட்டுப்பாடான ஜப்பான் நாட்டில் , 1952 ஆம் ஆண்டு மினாமிட்டா எனும் கிராமமே அழிந்தது
. அதற்கு காரணம் அக்கிராமத்தில் உள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய பாதரசம் , பாக்டிரியங்களால்
மெத்தில் மெர்க்குரி எனும் நஞ்சாக மாற்றப்பட்டதே !
நம் அண்டை நாடான சீனாவில் வாரம் 10 பேர் , மீத்தேன் வாயு தாக்கி இறக்கிறார்கள் .சென்ற
மாதம் கூட க்சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேலைசெய்யும்போது ,
மீத்தேன் வாயு கசிந்து 21 பேர் மரணம் . ரஷ்யாவின் மாஷ்கோவில் , செமரோவா எனுமிடத்தில்
உள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளிப்பட்டு பெரும்வெடிவிபத்து
ஏற்பட்டது . அந்த வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்க செல்லும் மீட்பு படை என்ன கூறியது
தெரியுமா ? எங்களை உள்ளே அனுப்புவதும் , மரணக்குழியில் பிடித்து தள்ளுவதும் ஒன்றுதான்
. அதுதான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது . மீத்தேன் திட்டம் வருவதும் ஒன்றுதான்
, எங்களின் தமிழனத்தை வேறோடு அழிப்பதும் ஒன்றுதான் . மீத்தேனின் உருமாற்றங்களான எத்தில் ப்ரோமோஅசிட்டேட் ,
ஹெக்சா மெத்திலின்ரமின் , எத்தில் ஐயோடோஅசிடேட் , எத்தில் டைக்ளோரெசின் , N
– எத்தில் கார்சோல் போன்றவை அனைத்தும் அணுகுண்டுக்கு நிகரானதொரு விபத்தினை ஏற்படுத்தக்கூடியவை
. இவைகளை கொண்டுதான் முதல் உலகப்போரே நடந்தது . மேலும் மீத்தேனின் மற்றொரு உருமாற்றமான
DTP (DICHLORO DIPHENOL TRICHLORO ETHANE) என்பது பூச்சிக்கொல்லி
மருந்து . நிலத்தினடியில் வேதியியல் ரசாயன மாற்றத்திற்குட்பட்டு மேற்கொண்டவைகளாக மாறினால் , தமிழ்நாடு சுடுகாடுதான்
.
மீத்தேன் திட்டம்
நமக்கு தேவை தான் . ஆனால் இப்போது இல்லை . வருங்காலத்தில் மின்சார உற்பத்தியே இல்லாமல்
போகும் காலங்களில் அதைத்தொடங்கலாம் . மீத்தேன் வாயுவினை இவ்வாறு பெறுவதற்கு பதில்
, சாதாரணமாய் ஒவ்வொரு வீட்டிலும் மீத்தேன் சமையல் எரிவாயுவை மானியத்தில் வழங்கலாம்
. அவ்வாறு செய்வதன் மூலம் நாட்டிலிருக்கும் பெரும்பான்மையான குப்பைகளை ஒழிக்கலாம்
. இத்திட்டத்தின்மூலம் 35 ஆண்டுகளில் கிடைக்கும் 6.5 லட்சம் கோடியை விட , அதே காலகட்டத்தில்
அவ்விடங்களில் விவசாயம் செய்வதன்மூலம் 3 மடங்கு அதிகமாய் ஏற்றுமதி செய்து சம்பாதிக்கலாம்
. உலக அரங்கில் இந்தியா பொருளாதார வளர்ச்சியினை நோக்கி வீறுநடை போடுகிறது என பீற்றிக்கொண்டிருக்கும்
இவ்வேளையில் தான் 40 சதவீத இந்தியக்குழந்தைகளுக்கு உணவு கொடுக்கமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது
. உலகில் உணவின்றி வாடும் 2.6 கோடி பேரில் , இந்தியாவில் மட்டும் 65 லட்சம் பேர் இருக்கின்றனர்
. எதிர்வரும் 2020 – ல் , இந்தியாவின் மக்கள்தொகை எப்படியும் 145 கோடியை எட்டிவிடும்
. அப்போதைய மக்களின் உணவுத்தேவை எப்படிப்பார்த்தாலும் 300 மில்லியன் டன்னாக இருக்கும்
. ஆனால் நம்நாட்டில் உற்பத்தியாவதோ வெறும் 220 – 250 மில்லியன் என்ற அளவில் தான் இருக்கும்
. மீதமுள்ள உணவுப்பொருளுக்கு மீண்டும் உலகநாடுகளை நோக்கி , கைகட்டி பிச்சையெடுக்கும்
கேவலநிலையில் தான் இந்தியா இருப்பதாக UNESCO நிறுவனம் தெரிவித்துள்ளது . மக்கள் நலனுக்கே
அரசு . எங்களுக்கு சோத்துக்கே வழியில்லை , குண்டிகழுவ பம்ப் செட் போட்டுத்தரவேண்டாம் .
(இதை திரைமணத்தில் வெளியிட்டமைக்கு
மன்னியுங்கள் . தமிழர்கள் சினமா பதிவு படிப்பதில் காட்டும் ஆர்வத்தினை இதில் காட்டமாட்டார்கள்
என்று தெரியும் . அதனால் தான் .)
Hats Off to you Friend, Because Im one of the person,
ReplyDeleteநன்றிங்க ! வெளிப்படையா நம்மீது உள்ள குற்றத்தை ஒப்புக்கொள்ள தனித்தைரியம் வேண்டும் . உங்களிடம் அந்த தைரியம் உள்ளது
DeleteThanks for your Article.. Hats off to you Comrade..
ReplyDeleteவெறுமனே படித்துவிட்டு செல்வதால் ஒன்றும் ஏற்படப்போவதில்லை நண்பரே ! முடிந்தவரை நம்முடைய எதிர்ப்பை காட்டியக வேண்டிய சூழ்நிலையில்இருக்கிறோம் !
Deleteஅப்படியே சுட்டு பள்ளியில் போட்டிக்கு கொடுக்கப் போகிறேன்
ReplyDeleteஹா ஹா !! நன்றி அண்ணா !
Deletehttps://www.facebook.com/val.paiyan/posts/10203495082152966
ReplyDeleteஷேர் செய்தமைக்கு நன்றி அண்ணே !!!
Deleteஅருமையான எதிர்கால சமூக வளர்ச்சியைக் குறித்த பதிவு நண்பரே சரி சிறுகதை என்றீர்கள் சிறுகதையே இப்படியென்றால் பெருங்கதை எப்படி இருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete