Posts

Showing posts with the label திரைப்படம்

பைரவா – சினிமா விமர்சனம்

Image
அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைப்பாளர் என்றதும் டரியலே ஆகிவிட்டேன். டீசரும் ட்ரைலரும் கொஞ்சநாட்களாக விஜய்க்குள் தூங்கிக்கொண்டிருந்த ‘காடுனா புலி! வூடுனா கரடி’ விஜயை மொத்தமாக ஏலமெடுத்தது போலிருக்க, பாடல் மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. காலையில் பிகைன்ட் வூட்ஸ் மற்றும் சில ப்ளாக்கர்களின் விமர்சனங்கள், இதுக்கு சுறாவே தேவலாம் என்ற ரீதியில் வெளிவர, இருமனமாகவே திரையரங்குக்குள் சென்றேன்.   கதையை என்னவென்று சொல்வது; தலயும் தளபதியும் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது. யாருக்கோ நடக்கும் பிரச்சனையில் வான்டேடாக வண்டியிலேறி ரவுடி அவதாரம் எடுப்பதையே கடந்த சில திரைப்படங்களாக இருவரும் கையான்டு வருகின்றனர். அதேரீதியில் தான் காதலிக்கும் பெண்ணிற்கு இருக்கும் பிரச்சனையை தானே தலையிலேற்றி (‘விக்’க சொல்லல) அதை வழக்கம்போல தீர்த்து சுபம் போட்டுவிடுகிறார்கள். இடையிடையே காமெடியைப் பொழிய நண்பன், காதலியுடன் காதல் எபிசோட், ஆக்சன் எபிச...

MALENA (18+) – சினிமா விமர்சனம்

Image
பொறாமை – தன் சகமனிதன் தன்னைவிட எதாவது ஒருவகையில் உயர்ந்தவராய் இருந்தால் நமக்குள் அரிப்பெடுத்து அலையும் உணர்ச்சி. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம். அதேநேரம் நம்மைவிட எதாவது ஒருவகையில் உயர்ந்தவராய் இருந்தால் ஆண்களின் எண்ணம் அதை அடைந்தே ஆகவேண்டும் என்ற கோரவெறி. அடைய முடியாவிட்டால் உயர்ந்தவரை தாழ்மைப்படுத்த வேண்டும் என்ற சிறுமைத்தனம்.  இது எல்லா மனிதர்களுக்குள்ளும் புதைந்துகொண்டிருக்கும் மிருகத்தனத்தின் எச்சம். அது வெளிப்பட்டால்? அதனால் பாதிக்கப்பட்டால்? அப்படி பாதிக்கப்பட்டவள் தான் மலெனா. அதற்குமுன் உலகசினிமாக்களில் ஈரானியத் திரைப்படங்களைத் தவிர வேறு எந்த மொழிப்படங்களைப் பார்ப்பதாய் இருந்தாலும் தனியாகவே பாருங்கள். அற்புதமான படம் என்பதால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் (!) என்று நினைத்தால் ஜிகிர்தண்டாவில் வரும் வேட்டையாடு விளையாடு கிளைமேக்ஸ் தான் உங்கள் வீட்டிலும் நடக்கும். அதிலும் இத்தாலிய, ப்ரெஞ்ச் திரைப்படங்கள் என்றால் ஹெட்போனை மாட்டிக்கொண்டே பாருங்கள். எந்த இடத்தில் இருந்து காம மொனகல்கள் வரும் என்று எதிர்பார்க்கவே முடியாது. பேசிக்கொண்டே இருப்பார்கள்; பட்டென்று ...

JAFFER PANAHI-யின் THE WHITE BALLOON – சினிமா விமர்சனம்

Image
சினிமா என்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல; அது ஒரு கலை. காவியத்திற்கு சரிசமமான மற்றொரு உறுதியான, எளிமையான வடிவம். அது நாம் சார்ந்த இனம், மொழி, மதம், நாடு என எல்லாவகையான பரிமாணங்களையும் கலாசாரத்தோடும் பாரம்பரியத்தோடும் பிண்ணப்பட்டிருக்க வேண்டும். இதை ஈரானியர்கள் உணர கிட்டத்தட்ட 60 வருடங்கள் பிடித்தது. ஒரு குறிப்பிட்ட அழுத்ததிற்கு மேல் வெடித்துச் சிதறும் எரிமலையாய் 90-களில் வெடித்து சிதறியது ஈரானிய சினிமா அலை. உலகின் மிகக் கட்டுபாடுகளுக்குட்பட்டு திரைப்படங்கள் எடுக்கப்படும் இடமாக தாரளமாக ஈரானை சொல்லலாம். ராணுவ ஆட்சி, மதக்கட்டுப்பாடு, பழமைவாதிகள், போர், அரசியல் காரணங்கள் என வெளிப்படையான பல பிரச்சனைகளுக்கிடையே கதை எழுதுவதிலிருந்து சென்சார் வரை என ஏகப்பட்ட மறைமுக பிரச்சனைகளைத் தாண்டியே ஒவ்வொரு ஈரானியத் திரைப்படமும் இன்றுவரை வெளியாகிறது. உதாரணமாக நீங்கள் ஒரு கதை எழுதியிருக்கிறீர்கள் எனில் நேரடியாக தயாரிப்பாளரை அணுகி படத்தை எடுத்துவிட முடியாது. கதையை அரசிடம் காட்டி அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக செய்யவேண்டும். எனக்குத் தெரிந்து எழுதும் கதைக்கே தணிக்கை குழு இருந்த ஒரே சினிமா ஈரானிய ...

SOURCE CODE - சினிமா விமர்சனம்

Image
இந்த ஹாலிவுட்காரர்கள் இருக்கிறார்களே! நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் நான் எடுத்த படத்தில் முயலுக்கு இரண்டே இரண்டுகால் தான் என்று நம்மை நம்பவைத்துவிடுவார்கள். இவர்களிடம் சிக்கிய சயின்ஸ் பிக்சன் ஜானரானது நமக்குள்ளே இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அதுவே தன்னை நினைத்து ஆச்சரியம் கொள்ளவைக்கும் அளவு ஏகப்பட்ட பிக்சன்காளால் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த ‘நேரம்’ என்ற வஸ்துவை வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே! இன்னும் நேரம் என்றால் என்னவென்று தெளிவான அறிவியலைக் கண்டறிவதற்குள்ளே தங்களின் மூளையை உபயோகித்து  இவர்கள் திரைப்படத்தில் காட்டும் விசயங்களைப் பார்க்கும்போது அறிவியலறிஞர்களே வாயைப் பிளந்துவிடுகிறார்கள். சும்மா பேச்சுக்காக இதைச்சொல்லவில்லை. இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் பணியாற்றிய விஞ்ஞானி கிப் தோர்ன் , திரைப்படத்தில் வெளியான விசுவல் எஃபெக்ட்களை வைத்து வார்ம்ஹோல் பற்றிய தனது ஆய்வினை விரிவுபடுத்தியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஏற்கனவே டைம் லூப் பற்றிய பல திரைப்படங்களைப் பார்த...

தில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்

Image
சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபின் வெளிவந்த முதலிரண்டு படங்களும் சுமாராகவே செல்ல , மூன்றாவதாக தமிழ்சினிமாவின் இன்றைய கலெக்ஷன் ஜானரான ஹாரர்ரைக் கையில் எடுத்திருக்கிறார். அதுவும் அவருக்கு பக்காவாகவே கைக்கொடுத்திருக்கிறது. கதை என்று பெரிதும் அலட்டிக்கொள்ளாமால் , நம்மிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது காமெடியைத் தான் என்று நன்குணர்ந்து ஒரு பக்காவான காமெடி கம் ஹாரர்ரை திகட்டத் திகட்ட தந்திருக்கின்றனர் ராம்பாலாவும் சந்தானமும். சிவன்மலைக்கோட்டை எனும் ஊருக்கு ஒருகாலத்தில் வியாபார விசயமாக வந்த திபெத்திய மகாராஜாவை வசியம் செய்து திருமணம் செய்துகொள்கிறாள் ஒரு வசியக்காரி. ராஜா வியாபாரத்துக்கு வெளியூர் போகும்போதெல்லாம் தன் கள்ளக்காதலனுடன் சரசம் செய்து அவன்மூலம் ஒரு பையனை பெற்றெடுத்து ராஜாவுக்கு தெரியாமல் வளர்க்கிறாள். ஒருநாள் அறிந்துகொள்ளும் ராஜா அவளின் கள்ளக்காதலனையும், குழந்தையையும் கொன்றுவிட்டு, அவளுக்கு கடுமையான தண்டனையைக் கொடுக்கும்படி ஆனையிட்டுவிட்டு , தன் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கே கிளம்பிவிடுகிறார். பழிவாங்கவேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் அந்த வசியக்காரி, ...

THE PURGE – சினிமா விமர்சனம்

Image
சயின்ஸ் பிக்சன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அந்த சயின்ஸ் பிக்சனிலேயே நெறைய வகையறா உள்ளது. ஸ்பேஸ் அட்வெஞ்சர், டைம் ட்ராவல், எதிர்காலத்தில் நிகழும் த்ரில்லர், க்ரைம் என எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளிவந்த ஒரு சீட்எட்ஜ் ஹார்ரர் கம் த்ரில்லர் தான் இந்த பர்ஜ். 2022-ல் அமெரிக்கா மிகசுத்தமாக இருக்கிறது. க்ரைம் ரேட் 1 சதவீதமாக குறைந்து நாடே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எப்படி? வருங்கால அமெரிக்கர்கள் குற்றங்கள் குறையவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒரு தினத்தை ஆண்டவன் பெயரில் அறிவிக்கிறார்கள். அதுதான் பர்ஜ். அந்த தினத்தில் மனதில் உள்ள துவேஷத்தையும், கொலைவெறியையும், வஞ்சத்தையும் இன்னபிற கெட்டவை அனைத்தையும் தீர்த்துக்கொள்ளலாம். அன்றிரவு 7 மணியிலிருந்து அடுத்தநாள் 7 மணி வரை போலிஸ் கிடையாது; மருத்துவமனை கிடையாது; இவ்வளவு ஏன்? அரசாங்கமே  12 மணிநேரம் செயல்படாது. அன்றைய தினம் யாரும் யாரையும் கொலை செய்யலாம்; யாரை வேண்டுமானாலும் ரேப் செய்துகொள்ளலாம்.  கொலை செய்வதற்குக்கூட குறிப்பிட ஆயுதங்களைப் பயன்படுத்த அரசாங்கமே பரிந்துரை செய்ய...

X-Men : APOCALYPSE – சினிமா விமர்சனம்

Image
வெல், X-MEN சீரிஸ்களைப் பற்றித் தனியாக சொல்லத்தேவையில்லை. ஹாலிவுட் ரசிகர்கள் அனைவருக்கும் பரிட்சயமான பெயர்களில்  மிகமுக்கியமான ஒன்று X-MEN. சூப்பர்ஹீரோக்கள் என்றாலே உடனுக்குடன் நியாபகம் வரும் மார்வல் காமிக்ஸ் படைத்த மிகமுக்கியமான காமிக்ஸ்களில் எக்ஸ்மேனும் ஒன்று. காமிக்ஸ் உலகபிதாமகன் ஸ்டான் லீயால் 1963 உருவாக்கப்பட்ட X-MEN இன்று 2016-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 10 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. அதற்கு மிகமுக்கிய மூன்று காரணங்கள் என்று பார்த்தால் இயக்குநர் ப்ரைன் சிங்கர், FIRST CLASS-ன் இரண்டாம் படைப்பான DAYS OF FUTURE மற்றும் இதுவரை சூப்பர் ஹீரோக்கள் கண்டிராத மிகபலசாலியான வில்லன் என் சபா நர் என்றழைக்கப்படும் அபோகலிப்ஸ்.  வெளிவர இருக்கும் அபோகலிப்சை, உருவான இடமான அமெரிக்காவிற்கு முன்பே நாம் காண இருக்கிறோம். ஆம், இத்திரைப்படம் உலகெங்கும் வெளியாகுவதற்குள் ஒருவாரம் முன்பே இந்தியாவில் ரிலிஸ் செய்யப்படுகிறது. இந்தியாவில் X-MEN ஃப்ரான்சீஸ்களுக்கென மிகப்பெரிய ஃபேன் பேஸ் இருப்பதால் இந்தியாவில் முதலில் ரிலிஸ் செய்வதாக ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. (இப்போதெல்லாம் ரில...

தெறி – சினிமா விமர்சனம்

Image
இளையதளபதி விஜய் – இன்று தமிழின் மிகமுக்கியமான 4 நடிகர்களில் ஒருவர். தமிழகம்தாண்டி கேரளாவிலும் சூப்பர்ஸ்டாராக ஒளிருபவர். தேமே என்று ஒரே ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த விஜயை, சிறிதளவு நடிப்பிலும் கதையிலும் மாற்றம் செய்ய முயற்சித்த திரைப்படம் என்றால் அது காவலன். அதற்குமுன்வரை காது கிர்ரென்று ஆகும்வரை மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்த விஜய் எனும் மாஸ் ஹீரோவை, நடிகர் விஜயாக அடையாளப்படுத்திய திரைப்படம் காவலன். அதன்பின் அவரது சினிமா கேரியரில் அவர் சூஸ் செய்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவருக்குள் இருக்கும் நடிகரையும், ரசிகர்கள் உண்மையாகவே எதிர்பார்த்த விஜயையும் திரையில் காட்டிக்கொண்டே வந்தது எனலாம். துப்பாக்கி, கத்தி, வேலாயுதம், நண்பண் என ஒவ்வொரு திரைப்படமும் விஜயை ஒவ்வொரு தளத்திற்கு கொண்டு சென்றது. சென்ற ஆண்டு வெளியான புலி சிறிது அதிருப்தியான திரைப்படம் எனினும் , ஒரு மாஸ் ஹீரோவான விஜய் குழந்தைகளுக்காக ஒரு படம் செய்த தில் அவ்வளவு எளிதாக மற்ற ஹீரோக்களுக்கு வராது.  ஆம்; நான் ஒரு தீவிர அஜித் ரசிகன்தான்; எனினும் விஜய் ஹேட்டர் கிடையாது. விஜயின் இடைப்பட்ட காலத்திரைப்படங்கள் மற்றும் அவர...

BATMAN v SUPERMAN : DAWN OF JUSTICE – சினிமா விமர்சனம்

Image
ஒவ்வொரு வருடமும் ரிலிசாகும் படங்களில் கண்டிப்பாக இந்த இந்த படங்களுக்கெல்லாம் தியேட்டருக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற ஒரு லிஸ்ட் நம்மிடம் இருக்கும்; நானும் அம்மாதிரியே தான் இருந்தேன். ஆனால் இந்த ஆண்டு, ஒரே ஒரு திரைப்படம் மட்டும் பார்க்கவே கூடாது என்று ஆண்டின் தொடக்கத்திலேயே முடிவெடுத்தது இத்திரைப்படத்திற்குத்தான். முக்கிய காரணம் கிறிஸ்டோபர் நோலன். பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோவை மக்கள் மத்தியில் ஒரு லெஜன்டாக உருவாக்கிவிட்டு அவர் சென்றார். பேட்மேனை ரீபூட் செய்த மாதிரி சூப்பர்மேனையும் ரீபூட் செய்தால் நன்கு கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்த வார்னர் பிரதர்ஸ் அதையும் சக்ஸசாக நிறைவேற்றியது. சூப்பர் மேனின் ரீபூட் வெர்சனனான மேன் ஆஃப் ஸ்டீல் 2013-ல் வெளிவந்து சூப்பர்மேனுக்கு உயிர்கொடுத்தது. சூப்பர்மேனின் இரண்டாம் பாகத்திற்காக வார்னர் பிரதர்ஸ் செய்த கொடுமை தான் இந்த படம். முதலில் இந்த திரைப்படத்தைப் பார்க்கும்முன் அவசியம் பார்க்கவேண்டிய இரண்டு திரைப்படங்களை இங்கு கூறிவிடுகிறேன். ஸ்னைடர் இயக்கத்தில்  2013-ல் வெளிவந்த மேன் ஆஃப் ஸ்டீல் மற்றும் ஜேய் ஓலிவா இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த அன...