Posts

Showing posts with the label ராசாத்தி

ராசாத்தி – சிறுகதை – பாகம் - 2

Image
முதல்  பாகத்தைப்ப‍டிக்க‍  கீழே உள்ள‍ லிங்கை அழுத்துங்கள். http://vimarsanaulagam.blogspot.in/2014/11/1.html மீண்டும் அமைதியாய் அவள் முன்னேறிக்கொண்டிருந்தாள் . திடீரென நின்றவள் என்னை முன்போகுமாறு கண்ணாலயே பணித்தாள் . எனக்கு உறுதியானது ,அவளுக்கு என்னைப்பிடிக்கவில்லை . வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு பெண் என்னிடம் எதுவும் கூறாமல் போகிறாள் .எனக்கு மேலும் பேச மனம் வரவில்லை . கால்கள் துளிசுரனையற்று தாமாகவே நடக்க ஆரம்பித்தன .இன்றைய தினம் என்னை ஒரேயடியாய் மகிழ்ச்சியில் ஆழ்த்து , துக்கத்தில் தவிக்கவைத்த ஒரு மாபெரும் தினமானது . நான் முன்னாலே சென்றுகொண்டிருக்க ,ராசாத்தி பின்னால் வந்துகொண்டிருந்தாள் . ‘ஐயோ ’ – என்ற திடீர் கூச்சல் வர , ராசாத்தியின் கூச்சலில் என்ன ஆயிற்றோ என்று அவள் அருகில் சென்றேன் . ‘என்ன ஆச்சு ? ஏன் கத்துனிங்க ?’ ‘பாம்பு’ ‘எங்க ?’ ‘அது ஓடிடுச்சு ?’ ‘பாத்து வரமாட்டியா பா ?’ – என்ற கேள்வி என்னுள் இருந்து வெளிவந்ததும் , அவள் மீண்டும் ஒரு மந்திரப்புன்னகை   உதிர்த்தாள் . ‘பாம்பு ஓடுனது நான் வரும்போது இல்ல .நீங்க முன்னாடி போக...

ராசாத்தி - சிறுகதை - பாகம் - 1

Image
‘உன்னால மட்டும்   இல்ல பங்கு . உன்ன மாதிரி 10 பேர் வந்தாலும் அவள கரக்ட் பண்ண முடியாது’ என்ற மணிகண்டனின் வார்த்தை என்னுள் உறங்கிக்கிடந்த ஈகோவை , சுடுதண்ணீர் ஊற்றி எழுப்பியது என்றே கூறலாம் .சில ஜோதிடசாஸ்திரசிகாமணிகளின் பேச்சிலிருந்து , என் தந்தையின் ஜாதகத்தில் தற்காலிகமாக வாடகைக்கு வந்திருக்கும் ராகுவால் எனக்கும் என் தந்தைக்கும் மூன்றுமாதங்கள் மாபெரும் பிரச்சனைகள் வரும் என்ற வாக்கு கிடைத்தது . வேறுவழியின்றி என் தாய் பிறந்த வீட்டிற்கு மூன்றுமாதம் தற்காலிகமாக இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் . நகரில் கற்பழிக்கப்பட்ட இயற்கைத்தாய் , இங்கு தன் முழுபொழிவையும் புரட்டாசி பனியில் , காண்போர் கண்ணிற்கு வாரி வழங்கியிருந்தாள் .இவ்வமைதியான வனத்திற்கு வந்து இரு மாதங்கள் நெருங்கிவிட்டன . வனவாசம் , இப்போது எனக்கு பழம்வாசமாக மாறிவிட்டது . இவ்வனத்தை தாண்டி அமைந்திருந்த மலைகளில் , பழங்குடியினத்தவர் வர்க்கம் இன்றும் இயற்கைத்தாயின் முடிகளாம் மரங்களை அழித்து தன் வயிற்றை கழுவிக்கொண்டிருந்தன . என் தாயின் அண்ணன் மகன் பிரபு ,இம்மலைகளில் வாழும் பழங்குடியினர் பெண்ணை காதல் மணம் புரிந்தத...