Posts

Showing posts from April, 2015

AVENGERS 2 – சினிமா விமர்சனம்

Image
AGE OF ULTRON இப்படத்தின் இயக்குநர் ஜோஸ் வேட்டன் மீது சென்ற வாரம் ஒரு புகார் எழுந்தது . அதாவது தலைவர்  2012-ல் எழுதிய CABIN IN THE WOODS எனும் பேய்த்திரைப்படம் , தன்னுடைய கதையைத் திருடித்தான் எழுதப்பட்டது என ஒருவர் வழக்குத்தொடுத்திருந்தார் . என்னடா இது என்று அதிர்ந்து நின்றேன் . பின்ன ! தலைவர் யாரு ? 2012 –ல் உலகையே கலக்கிய அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தை எழுதி, இயக்கிவர் . அப்பேர்பட்டவர்மேல் அபாண்டமாக பழிசுமத்துகிறார்களே என்று பொங்கி எழுந்தேன் . அதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்று இன்றுதான் புரிந்துகொண்டேன் . உண்மையாகவே இவர் கதையைத்திருடியிருப்பாரோ என்று சந்தேகப்படுமளவுக்கு என்னை வதக்கியெடுத்து விட்டார் . அதற்குமுன் ஒரு சிறுகுறிப்பு . இது என்னுடைய பார்வையில் எழுதும் பதிவு . இப்பதிவில் வந்து ‘யோவ் ! நீ சீட்டுக்கு அடியில படுத்துகினு படம்பாரு யா . இது ஒரு அற்புதமான காவியம் ’ என்றெல்லாம் கமெண்ட வேண்டாம் . அப்படி கமெண்ட ஆசையிருந்தால் என்னுடைய நம்பருக்கு டிக்கட் சார்ஜ் 70 + பார்க்கிங் டோக்கன் 10 + பெட்ரோல் சார்ஜ் 30 என மொத்தம் 110 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்துவிட்டு , பின் கமெண்டலாம் .

THE DEPARTED – ஒரு பார்வை

Image
ஒருசில படங்களைப்பார்க்கும் போது நம்மை அப்படியே கட்டி இழுத்துக்கொண்டு செல்வார்கள் . ஆனால் நாம் அசந்த நேரம் பார்த்து அப்படியே நம்மை நிலைகுலையவைக்கும் விதமாக ஒரு முடிவினைத் தருவார்கள் . நம்மால் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்கவே முடியாது . எப்படிச்சொல்லலாம் என்றால் நாம் காதலிக்கும் பெண் நம் காதலை ஏற்றுக்கொள்ளாமல் போகும்போது , அவளுடைய அழகான தோழி நம்மைக்காதலிப்பதாக   சொன்னால் நமக்கு எப்படியிருக்கும் ?  நம் காதலியையும் மறக்கமுடியாமல் , வழிய வந்தவளையும் விட்டுவிடமுடியாமல் ஒருவித பதற்றநிலைக்குத்தள்ளப்படுவோமே ! அம்மாதிரியான நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் . ROAD TO PERDITION திரைப்படம் பார்க்கும்போது , எல்லாப்பிரச்சனையையும் டாம் ஹேங்ஸ்   சால்வ் செய்துவிட்டு , கடைசியில் தன் மகனுடன் அமைதியான வாழ்க்கையை வாழ முற்படுவார் . நாமும் ‘ அப்பாடி ! எப்படியோ ஹீரோ தப்பிச்சிட்டாரு . இனிமேலாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்னு ’ மனதினுள் வாழ்த்துவோம் . நாம் வாழ்த்தி முடிப்பதற்குள் உள்ளே ஒரு கொலைகாரன் புகுந்து டாம்ஹேங்சைப்போட்டுத் தள்ள