Posts

Showing posts from March, 2015

FAST & FURIOUS சீரிஸ் - ஒரு பார்வை -3

Image
இந்த FF தொடரை எழுத ஆரம்பித்த நேரமோ என்னவோ , நேற்று ஒருவரின் வீரசாகசத்தை நேருக்குநேர் பார்க்கவேண்டியிருந்தது . டீசல் காரை வைத்திருந்ததால் மனதில் வின் டீசல் என்ற நினைப்பு வந்துவிட்டதோ என்னவோ ! நேற்று ஒருவர் அட்டகாசமானதொரு ட்ரிஃப்டைச்செய்யப்போய் மூஞ்சுமுகரையெல்லாம் பேற்றுக்கொண்டு 108 – ல் அள்ளித்தூக்கிப்போட்டுக்கொண்டு சென்றார்கள் . அப்படி   ஒன்றும் அவர் ரேஸ் செய்யவேண்டுமென்ற நினைப்பிலெல்லாம் செய்யவில்லை . மனதில் குடியை நினைக்காமல் குடியில் வண்டியை ஓட்டினார் . வண்டியின் முழுவேகத்தில் எங்கள் கிராமத்தைக்கடக்க முயன்றபோது குறுக்கே ஒரு நாய் புகுந்துகொள்ள தலைவர் ஸ்டேரிங்கை வளைக்க ,   வண்டி எப்படியும் ஒரு 20 சுற்றுகள் சுற்றி ஒரு டீக்கடைக்குள் தஞ்சம் புகுந்தது . நல்லவேளையாக உயிர்ச்சேதம் எதுவுமில்லை . நாய்க்கன்பட்டி என்ற எங்களின் ஊர்ப்பெயரைப்பார்த்தாவது உஷாராகியிருக்கலாம் . சரி , சமூகப்புரட்சியிலெல்லாம் ஈடுபட்டு சமூகப்பதிவர் , புரட்சிவாதியென்று பெயரெடுக்கும் ஆசையெல்லாம் எனக்கில்லை என்பதால் நேராக படத்திற்குச்செல்