Wednesday, 31 December 2014

வதந்திகள் – சிறுகதை


அவனா ? கண்டிப்பா சான்ஸே இல்ல ’ என்றேன் அழுத்தத்துடன் .

அவனே தான் . நா என்னட ரெண்டு கண்ணால பாத்தேன் . ரெண்டு காதாலயும் கேட்டேன் .

என்னால் நம்பமுடியவில்லை .அவன் மிகவும் நல்லவன் . அவனுக்கு அவனுடைய தந்தையை அவ்வளவாகப் பிடிக்காது என்பது உண்மை தான் . அவனுக்கு மட்டுமல்ல , யாருக்கும் அவனுடைய தந்தையின் உண்மையான முகத்தைக் கண்டால் பிடிக்காது . வீட்டிலேப் புலி , ஊருக்குப் பசு என இரட்டை வேடக்கபடதாரி . அவரைப் பொறுத்தவரை , அவருடைய வீட்டில் அவர்தான் எல்லாம் தெரிந்தவர் . அவர் பேச்சைக்கேட்கவில்லை என்றால் அவ்வளவு தான் . திட்டித்திட்டியே சாகடிப்பார் . நாம் என்ன சொல்லவருகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் , அவராக ஒன்றை கற்பனை செய்து , அதை அவரே ஏற்றுக்கொண்டு ஊரெல்லாம் பரப்பி விடுவார் . பலமுறை அவருக்கும் பிரபுவுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டதை நானே பார்த்துள்ளேன் . ஆனால் இம்முறை பிரபு தன் தந்தையை அடித்துவிட்டான் என்ற செய்தியை நம்பமுடியவில்லை .

‘சும்மா அரகுரயாப் பாத்துட்டு உளராத பிரியா .’

பிரியா . என் தங்கை . +2 முடித்து இரண்டுவருடமாய் வீட்டில் இருப்பவள் . சுத்தஜாதகமாய் பிறந்து தொலைத்ததால் , இன்னும் வரன்பார்க்கும் படலத்திலேயே இருப்பவள் . அவளுக்கு மூன்று விஷயம் மிகவும் பிடிக்கும் . ஒன்று அரட்டை அடிப்பது , இரண்டு ஒட்டுக்கேட்பது , மூன்று புறம்பேசுவது . சோளக்காட்டில் லுங்கியும் நைட்டியுமாக மாட்டிய ராமன் , சந்தியா கதையிலிருந்து , ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் 2014 – ஆம் ஆண்டிற்கான வார்த்தையான ‘VAPE’ வரை அப்-டு-டேட்டாக இருப்பவள் .

‘யாரு ஒளரது ?  நானா ? அவன் யாருனு உனக்குத்தெரியுந்தான ? காலேஜ் படிக்கும்போது போலிஸ் ஸ்டேசன் வாசல்லயே வச்சி , கூட படிக்கற பையன அடிச்சவன் .’

அவள் கூறுவதும்  உண்மைதான் . இதுமட்டுமல்ல , அவனைப்பற்றிய எண்ணற்ற வதந்திகள் அவ்வப்போது வரும் . அவன் பள்ளியில் படிக்கும்போதே , அருகிலுள்ள மகளிர் பள்ளிக்கு பைக்கில் சென்று கேட்டை உடைத்து , கிளாஸ் ரூமில் புகுந்து டீச்சரை மிரட்டி , ஓரு பெண்ணிடம் சண்டை போட்டான் . அதன்பின் தன் பள்ளியிலேயே இருந்த மணமாகாத கம்ப்யூட்டர் டீச்சரிடம் ஏதோ சில்மிஷம் செய்து , பின் அவள் அதை வெளியில் சொல்லவேண்டாம் என்று இவன் காலில் விழுந்து அழுதாள் . அதேநேரம் பள்ளியில் இருக்கும் ஒரு பி.டி வாத்தியாரை மிரட்டி , அந்த மனிதரை வேலையை விட்டே ஓடச்செய்தவன் . இவன் அட்டகாசம் தாங்கமுடியாமல்  , இவனை சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்த்தனர் . அங்கு சென்ற முதல்நாளே , குடித்துவிட்டு  வார்டனுடன்  சண்டை , இரண்டாம் ஆண்டு மாணவர்களுடன் ஹாஸ்டலில் மோதல் , இவ்வளவு ஏன் , சென்னை சட்டக்கல்லூரியில்  நடைபெற்ற ஜாதிச்சண்டையில் கூட இவனுக்குத்தொடர்பு இருக்கிறது  போன்ற எண்ணற்ற செய்திகள் என் காதுக்கு வந்தது . இது பற்றி அவன் லீவில் ஊருக்கும் வரும்போதெல்லாம் கேட்பேன் . அவன் ஆமாம் என்றும் சொல்லமாட்டான் ,  இல்லை என்று மறுக்கவும் மாட்டான் . சிறு புன்னகையை அளித்துவிட்டு நகர்வான் . இப்போது படிப்பை முடித்துவிட்டு , வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறான் .


‘அவன் அவங்க அப்பாவ அடிச்சிருப்பான்னு என்னால நம்பமுடியல ப்ரி .  ’

நம்பித்தான் ஆகனும் . இனிமேல் அவன்கூடல்லாம் சேர்ந்துகிட்டு டூட் ,கீட்னுகிட்டு ஊர சுத்திட்டு இருக்காத .’

அவன் என் மிகச்சிறந்த நண்பன் . எனக்கு பல நேரத்தில் பற்பல உதவிகள் செய்துள்ளான் .  எனக்கென்றால் கிட்டத்தட்ட உயிரையும் கொடுக்கும் உண்மையான நண்பன் . அவன் ஒருவேளை அவன் தந்தையை அடித்தது உண்மைதானா ? எனக்கு பலவிதமான குழப்பம் ஏறிட்டது . இனியும் நம்மண்டைக்குள் இவ்விஷயத்தைப்போட்டு குழப்புவதற்கு பதில் அவனிடம் நேரிலேயே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்து அவனுடைய வீட்டை நோக்கி நடந்தேன் .

அவனுடைய வீடு என்றுமில்லாமல் மயான அமைதியாய் இருந்தது . பக்கத்து வீட்டின் இயந்தரத் தறி , யாருக்கோ மானத்தைக்காப்பாற்றும் பொருட்டு சேலையை உற்பத்திச் செய்துகொண்டிருந்தது . அவனுடைய தந்தைக் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தார் . அருகில் அவன் தாய் , அவருக்கு  ஒரு ஸ்டெய்ன்லெஸ் ஸ்பூனின் வழியாக , சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள் .  அவனுடைய தந்தையின் முகத்திலும் கையிலும் , புதிதாகப் போடப்பட்ட  காட்டன் கட்டுகள் தங்களின் வெண்மையைத் தின்மையாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தன . ஆங்காங்கே மஞ்சள் நிற ஃபெர்ராக்ரைலம் , அந்தவெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வண்ணம் , வட்டவட்டமாய் காயங்களைச்சுற்றி இருந்தது . அவனுடைய தந்தை அடிபட்டது உண்மை தான் . எங்கள் ஊரின் விக்கிப்பிரியா சொன்னது உண்மைதானோ ? அந்நேரத்திற்குள் பிரபுவின் தாய் என்னருகே வந்து தனியாக வருமாறு சைகை செய்தாள் .

‘எங்கம்மா பிரபு ?’

பக்கத்து ரூம்ல இருக்காம்பா  . அவனோட அப்பா வேற அவன கிளம்ப சொல்லிட்டாருப்பா . அவனும் கோபத்துல கிளம்பறேன்னு துணியெல்லாம் எடுத்துவச்சிகிட்டு இருக்காம்பா . நீதான் அவங்கிட்ட பேசி போகவேண்டாம்னு சொல்லனும் . ஏற்கனவே , அவன் வீட்டப்பிரிஞ்சி 4 வருஷம் அநாத மாதிரி இருந்தது போதும்பா . ’ என்றாள் கம்மிய குரலில் . அவளின் குரலில் உண்மையான தாயன்பும் , மகனைப்பிரியும் வலியும் இருந்ததை என்னால் உணரமுடிந்தது . ராமனைப்பிரியும் நேரத்தில் தசரதன் எப்படியிருந்தாரோ , அந்நிலையில் அவள் இருந்தாள் . ஆனால்  இவன் ராமனாயில்லையே . தந்தையையே அடித்த மாபாதக ராவணனாக அல்லவா இருக்கிறான் .

‘நா பாத்துக்கிறன்மா’  என்று அவளிடம் கூறிவிட்டு அவனது அறையை நோக்கி நகர்ந்தேன் . உள்ளே அவன் பேக்கிங் வேலைகளில் பிஸியாய் இருந்தான் .

‘டூட்’ என்ற எனதுக்குரலைக்கேட்டதும் திரும்பினான் .

வா டூட் . சென்னைக்குப்போலாம்னு இருக்கேன் . அதான் ரெடியாயிட்டு இருந்தேன் . ரெடியாயிட்டு உனக்கு கால் பண்ணலாம்னு நினச்சேன் . அதுக்குள்ள நீயே வந்துட்ட .’

இவனிடம் முதலில் நம் சந்தேகங்களையெல்லாம் கேட்டுத்தெளிவாகிவிட வேண்டும் . அதன்பின் அவன் தந்தைக்கும் அவனுக்கும் நடந்ததைத் தெரிந்துகொள்ளவேண்டும் . எதற்குப் பழைய சந்தேகங்களை கேட்க வேண்டும் . நேராய் நேற்று நடந்ததைப்பற்றியே கேட்கலாமே ? வேண்டாம் . அதுதான் தெரிந்துவிட்டதே ! இவன்தான் செய்தான் என்று . எனக்குள் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது .

டூட் . எங்கூட வா . உங்கிட்ட கொஞ்சம் பேசனும் .

அவன் ஏன் ? என்ன ? எதற்கு என்று ஒரு கேள்வியும் என்னிடம் கேட்காமல் என்னுடன் வந்தான் . வழக்கமாக நான் தம்மடிக்கும் சின்னு டீக்கடையை நோக்கி நடந்தோம் . இரண்டு சிகரெட்டை வாங்கி , ஒன்றை அவனிடம் தந்தேன் . ‘மூட் இல்ல டூட்’ என்ற வழக்கமான பதில் அவனிடமிருந்து வந்தது .

‘டூட் . எனக்கு ரொம்பநாளா குழப்பிக்கிட்ருந்த மேட்டர உங்கிட்ட கேட்கப்போறேன் . நீ ஒழுங்கா உண்மைய சொல்லனும் . இது என்மேல ப்ராமிஸ் . நீ பொய் சொன்னா நா செத்துடுவேன் .’

‘லூசு . இதுக்கெதுக்குடா ப்ராமிஸ் ? உனக்கென்ன குழப்பம் ?’

‘உன்னப்பத்தி வந்த ரூமர்ஸ் எல்லாம் உண்மையா ?’

‘என்ன ரூமர்ஸ் டூட் ?’

‘நீ ஸ்கூல் படிக்கும்போது , கேர்ள்ஸ் ஹை ஸ்கூல்ல பைக்ல போயி கலாட்டா பண்ணது , கம்ப்யூட்டர் மிஸ்ஸுக்கும் உனக்கும் நடந்த விஷயம் , அந்த பி.டி வாத்தியார மிரட்டி ஸ்கூல்ல விட்டு ஓடவிட்டது , காலேஜ்ல ஹாஸ்டல் வார்டன அடிச்சது , போலிஸ் ஸ்டேசன் முன்னாடியே வச்சி ஒரு பையன அடிச்சது , லா-காலேஜ்ல வந்த பிரச்சனைக்கும் உனக்கும் இருக்க ரிலேஷன் னு இதப்பத்தி எல்லாம் எங்கிட்ட நீ சொல்லியாகனும் .

‘மச்சி ! இதெல்லாம்  ஒரு விஷயமாடா .  வா . லேட்டாகுது . ஊருக்கு வேற போகனும் .’

‘நீ எதுக்கு ஊரவிட்டுப்போறேன்னு எனக்குத்தெரியும் . போறதுக்கு முன்னாடி சொல்லிட்டுப் போ .’

‘மச்சி’

‘இனிமே மலுப்ப முடியாது டூட் . நீ சொல்லிட்டு எங்கவேணா போ .’
ஒருநிமிடம் யோசித்தவன் ஒருவாறு தீர்க்கமான முடிவெடுத்தவனாய் என்னை நோக்கி அவன் வாயைத்திறந்தான்  .

ஓ.கே டூட் .  என் பிரண்டு மணிய உனக்குத்தெரியும் .ஸ்கூல் படிக்கும்போது , அவன் ஒரு பொன்ன சின்சியரா லவ் பண்ணான் . ஆனா அந்த பொண்ணு ஒத்துக்கல . அன்னைக்குனு பாத்து நா எங்க மாமாவோட பைக்க எடுத்துட்டு வந்திருந்தேன் . அப்போலாம் எனக்கு கியர் வண்டி ஓட்டி அவ்வளவா பழக்கமில்ல . இவனோ , அந்தபொண்ணு சொன்னத நினச்சி அன்னைக்கே சரக்கப்போட்டு மத்தியானம் வண்டிய எடுக்கச்சொன்னான் . நானும் சரி எங்கயாவது கட் அடிச்சிட்டு போலாம்னு நினச்சி அவனையும் தியாகுவையும் உக்காரவச்சிகிட்டு போனேன் . கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் வந்தப்போ , மணி வண்டி ஸ்டேரிங்க பிடிச்சித் திருப்ப , அந்தநேரம் வாட்ச்மேன் கேட்ட திறக்க , கிட்டத்தட்ட கேட்ட ஒடச்சிகிட்டு வண்டியோட உள்ளப்போய் மூனுபேரும் விழுந்தோம் . மணி உடனே அந்த பொண்ணு படிக்கிற கிளாஸ்க்கு போய் சத்தம்போட , அவன நா சமாதானப்படுத்த , கடைசில அந்த பழி எம்மேல விழுந்திடுச்சி . ’

 ‘சரி கம்ப்யூட்டர் டீச்சர் மேட்டரு ?’

அதுவும் கிட்டத்தனட்ட இதேமாதிரி தான் .என்னோட பர்த்டேக்கு வீட்ல சண்டபோட்டு புதுசா கேமரா மொபைல் வாங்கிட்டு ஸ்கூல்லுக்கு போயிருந்தேன் . அங்க பசங்க கிட்டலாம் கெத்தா காட்டுனேன் . கம்ப்யூட்டர் பீரியட் வந்துச்சி . அன்னைக்குனு பாத்து நா , அந்த பீரியட கட் அடிச்சிட்டு க்ரௌண்ட்ல விளையாடிட்டு இருந்தேன் . தியாகு என்னோட ஃபோன கேட்டான் . அவன நம்பிக்கொடுத்தேன் .  கரெக்டா இன்டர்வல் வந்ததும் அவங்கிட்ட இருந்து என்னோட போன வாங்குனேன் . கடைசி பீரியட்ல திடீர்னு மொபைல் இன்ஸ்பெக்சன் வந்து என்னோட மொபைல சீஸ் பண்ணணிட்டு போய்ட்டாங்க . அன்னைக்குனு பாத்து ஸ்கூல்ல மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுனு சட்டம் போட்டுட்டாங்க . எதுக்காக என்னோட மொபைல சீஸ் பண்ணாங்கனு கேட்டதுக்கப்றம்தான்  எனக்கே உண்மைத்தெரிஞ்சது . இந்த தியாகு , கம்ப்யூட்டர் டீச்சர் பாடம் எடுக்கறப்போ , அவங்கள போட்டோ எடுத்துருக்கான் . அத கிளாஸ்ல இருந்த எல்லாப்பசங்கக் கிட்டயும் காட்டிருக்கான் . ஆனா ஒரு பையன்கிட்ட காட்டல . அவன் கோவத்துல போயி , ஓரு ரூபா காய்ன்பாக்ஸ்ல இருந்து எச்.எம்க்கு போன் பண்ணி சொல்லிட்டான் . சொன்னவன் என்னோட போன்னு சொல்ல , நா மாட்டிக்கிட்டேன் . தியாகு என்னோட கால்ல விழுந்து கெஞ்சுனான் . வேறவழி இல்லாம , நானே பழிய ஏத்துக்கிட்டேன் . அந்த நேரத்துல கம்ப்யூட்டர் டீச்சர் , நா அவங்களோட சீக்ரெட் போட்டோஸ் எடுத்ததா நினச்சி , என்ன தனியா கூப்ட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க . எனக்கு மனசெல்லாம் கஷ்டமாகிடுச்சி . ஆனா , யார்கிட்டயும் தியாகுவப்பத்தி சொல்லல .  இன்னைக்கு நினச்சாலும் அந்த மிஸ்ஸோட முகம் எனக்கு ஞாபகமிருக்கு டூட் . சம்டைம்ஸ் , அவங்க அழுகறது என்னோட கனவுல வரும் . ரொம்ப கஷ்டமாயிருக்கும் . ’

‘சரி ! அப்போ ஹாஸ்டல் மேட்டரு ?’

‘காலேஜ் சேந்தப்போ , முதல்நாளே நம்ம ஊர்க்கார சீனியர் பசங்க எல்லாம் ட்ரீட் வைக்க சொன்னாங்க . அப்போ என்னையும் சரக்கடிக்க சொன்னாங்க . எனக்கு அதெல்லாம் ஒடம்புக்கு ஒத்துக்காது டூட் . அவங்க கம்பல் பண்ணி குடிக்க வச்சிட்டாங்க . அதுனால வாமிட் வந்துடுச்சி . வசரத்துல நா வார்டன் ரூம்முன்னாடி வாமிட் பண்ணிட்டேன் .  அதுல இருந்து அவரு என்ன டெரர்ரா பாக்க ஆரம்பிச்சிட்டாரு .’

அவன் கூறுவதும் கிட்டத்தட்ட உண்மைதான் . இதுவரை என்னுடனோ , எங்கள் ஊரின் பிற நண்பர்களுடனோ என்றும் அவன் குடித்ததில்லை . பிராண்ட் சரியில்லை , வீட்டுல மாட்டிப்பேன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்துவிடுவான் . அதன்பின் ஒவ்வொன்றாய் அவன் என்னிடம் விளக்கி சொன்னான் . போலிஸ் ஸ்டேசன் வளாகத்தில் நடந்த பிரச்சனையில் கூட இவன் ஒரு விட்னஸ் தான் . இன்னும் சொல்லப்போனால்  , எவனோ சண்டையிட்டு இவன் பேரில் பழி விழுந்துள்ளது . லா காலேஜ் பிரச்சனை கூட , மற்றொருவருக்காக இவன் லா காலேஜ் ஹாஸ்டல்  செல்ல , அங்கே சின்னப் பஞ்சாயத்து நடந்திருக்கிறது . இவன் சூதானமாய் அதிலிருந்துத் தப்பித்து வர  , அடுத்த நாளே அந்த ஜாதிக்கலவரம் ஏற்பட்டிருக்கிறது . அதில் இவன் பேரும் அடிபட்டுள்ளது . இவன் கூறுதிலிருந்து நேற்று நடந்ததற்கும்  , இவனுக்கும் கூட எந்தச்சம்பந்தமுமில்லை என்று என் மனம் நம்பத்துவங்கியது .

‘சரி ! நேத்து நைட் என்ன நடந்துச்சி ?’

‘ஒன்னும் நடக்கலயே டூட் . ஆல்ரெடி டைம் ஆகுது டூட் . ட்ரெய்ன் வேற 11.30 க்கு . இப்பவே 10.40 ஆகிடுச்சி .

‘நீ சொல்லிடுப்போ டூட் .  ’ என்றேன் ஆவலாய் .


எதுவுமே ஆகல டூட் .’


டேய் சும்மா கத அளக்காத  . அப்றம் எப்டிடா உங்கப்பா அங்க அடிபட்டு கிடக்கிறார் .’ என்றேன் காட்டமாய் .

மச்சி !  அத ஏன்டா கேட்கற ?  யாரோ  இவர் ஃப்ரண்டோட பையனுக்கு வேலை கிடச்சிடுச்சாம் . அத எங்கிட்ட சொல்லி , நீ தண்டம் எதுக்குமே லாயக்கில்ல . உருப்படவே மாட்டானு கத்திக்கிட்டிருந்தாரு .  எனக்கு செம கோவம் வந்து நாளைக்கே வேலைக்குப்போறேன்னு கத்திட்டு வந்து , ரிலாக்ஸ் ஆகறதுக்காக ஒரு ஹாலிவுட் படத்த , வூஃபர் போட்டுப் பாத்துட்டு இருந்தேன் . இவரு என்னத்திட்டிகிட்டே  கிச்சனுக்கு போயிருக்காரு . அப்போ பூரிக்கட்டைய மிதிச்சி , ஓடிட்ருந்த கிரைண்டர் மேல வுழுந்துட்டாரு . அப்பறம் இவரு அலற ஆரம்பிச்சதும் , நா கத்திகிட்டே ஓடி அவர எழுப்பிக் கொண்டுவந்து படுக்கவச்சேன் . அவ்வளவு தான் மச்சி . இப்போ வேலைக்காக தான் சென்னை கிளம்பிட்ருக்கேன் ’ என்று கூறிமுடித்ததும் என்னையே நான் நொந்துகொண்டேன் .  அதேநேரம் என் தங்கை இதை எவ்வாறு புரிந்துகொண்டாள் என்பதை நினைத்துக்கடுப்பும் வந்தது .

‘அப்போ . நீ உங்கப்பாவ அடிக்கலயா ?’

‘அடப்பாவி . நா எதுக்குடா எங்கப்பாவ அடிக்கப்போறேன் ?’

அதன்பின் என் தங்கை என்னிடம் கூறியதை அவனிடம் ஒப்பித்தேன் . சின்ன வருத்தமுற்றவன்  , பரவாயில்லை விடுடா என்றவாறு கிளம்பினான் . அவன் தாயிடம் சமாதானம் சொல்லிவிட்டு , அவனை ரயிலில் ஏற்றி விடச்சென்றேன் . கடைசியாய் ஒரு சந்தேகம் .

‘எதுக்கு மச்சி நீ செய்யாத தப்புக்கு பழிய ஏத்துக்கிட்ட ?’

இந்த மாதிரி விஷயங்கள் வரும்போது ,எல்லாரும் என்ன கெத்தா பாக்க ஆரம்பிச்சிகிட்டாங்க டூட் . அந்த கெத்துக்கோசரம் தான்   .’

ஒருவாறு தெளிந்த மனதுடன் அவனை வழியனுப்பிவிட்டு  வீட்டிற்கு வந்தேன் . முதலில் பிரியாவிடம் உண்மையைச்சொல்லி விளக்கவேண்டும் என்று அவளைத்தேடினேன் .

‘மேட்டர் தெரியுமா ? உன்னோட ஆருயிர்த்தோழர் திரு.பிரபுவ , அவங்க வீட்ட விட்டுத்துரத்திட்டாங்கலாம் . நம்ம அப்பாவா இருந்தா , அவன் செஞ்ச காரியத்துக்குக் கொன்னே போட்ருப்பாரு . இவன்லாம் உன் பிரண்டு’ –என்றாள் நக்கலாக .தொடர்புடைய சிறுகதைகள்


Monday, 29 December 2014

A SEPERATION - சினிமா விமர்சனம்
தமிழில் உலகசினிமா வரவேண்டும் என்றால் உலகத்திரைப்படங்களைப் பார்ப்பதால் மட்டுமோ , தமிழ் மற்றும் உலகஇலக்கியங்கள் படிப்பதால் மட்டுமோ வந்துவிடாது .  முதலில் நாம்  சார்ந்துள்ள சமூகத்தின் நிலையை நன்கு உணரவேண்டும் . நம் சூழ்நிலையையும் , நம் மக்களின் பிரச்சனைகளையும் மனப்பூர்வமாக உணர்ந்தாலே , உலகப்படைப்புகளுக்கு நிகரான திரைப்படங்களைத் தமிழ் இயக்குநர்களால் கொடுக்கமுடியும் . ஆனால் அந்தமாதிரியான படங்கள் தமிழ்நாட்டில் கலெக்சன் எடுக்குமா என்பது சந்தேகம் தான் . காரணம் ரசிகர்களாகிய நாம் முதலில் ஒன்றை மனதில் நிறுத்தவேண்டும் . நமக்கு , நேரத்தைக்கடத்த உதவும் கமர்சியல் படங்களும் தேவை . அதேநேரம் நாம் என்னமாதிரியானதொரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதனை உணரும் பொருட்டு இம்மாதிரியான படங்களையும் ஊக்கப்படுத்தவேண்டும் .  


நான் முதன்முதலில் ஆங்கிலம் தவிர மற்றையமொழி படங்களைப்பார்க்க ஆரம்பித்தது ஒரு கிரேக்க படத்தினால் தான் . ஆனால் அந்த படத்தைப்பார்த்ததும் ‘ஆள வுடுங்கடா சாமி’ ரேஞ்ச்-க்குச் சென்று விட்டேன் . அதன்பின் CHILDRENS OF HEAVEN எனும் ஈரானிய படத்தின் மூலம் , மீண்டும் எனது உலகசினிமாக்களைப் பார்க்கும் ஆரவம் அதிகரித்தது . இப்போது ஸ்பானிஷ் மற்றும் ஈரானியப்படங்களைப் பார்க்க ஆரம்பித்ததால் , இனி விமர்சன உலகம் முழுக்க அனைத்துவகையான திரைப்படங்களைப்பற்றியும் உங்களிடம் மொக்கைப்போடலாமென்று இருக்கிறேன் . அதில் முதலாவதாக ஒரு சாம்பிள் தான் இந்த A SEPERATION .உலகளவில் பாராட்டுகளைப்பெற்ற பெரும்பாலான ஈரானியப்படங்களின் கதை , ஒரு சின்னவிஷயமாகவே இருக்கும் . ஆனால் அந்த சின்னவிஷயங்களினால் மனிதர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி அலசுவதே இப்படங்களின் நோக்கமாக இருக்கும் . A SEPERATION படமும் அவ்வகையைச்சார்ந்தது தான் .

இந்த படத்தில் கதை என்று எதை எழுதுவது என எனக்குத்தெரியவில்லை . அதனால் எளிமையாகக் கூறவேண்டுமென்றால் , ஒரு பிரச்சனை ஆகிறது . அதைத்தொடர்ந்து சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன .  இவற்றின் தொகுப்பே இத்திரைப்படம் .நடேர் – நடுத்தர மேல் வர்க்கத்து ஆண் . அல்ஜைமர் எனும் ஞாபகமறதி மற்றும் தன்னிலை மறக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் தந்தையின் மீது உயிரையே வைத்திருப்பவன் . எங்கும் எதிலும் நேர்மை , ஞாயம் பேசுபவன் . தன் 11 வயது மகள் டெர்மா உடனும் மனைவி சிமினுடனும் வாழ்ந்து வருகிறான் .

சிமின் – தம் குடும்பத்தின் எதிர்காலம் கருதி , தன் கணவனை வெளிநாட்டிற்கு வருமாறு வற்புறுத்துகிறாள் . ஆனால் அவன் அதை மறுக்கவே , விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கிறாள் . ஒரு பிரச்சனை என்றால் , அதன் பின்விளைவுகளை யோசித்து , அதிலிருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்றுநினைப்பவள். தான் விவாகரத்துக்கேட்டால் உடனே தந்துவிடுவதா என்று மனதினுள் குமுறுபவள் .

டெர்மா – தாயும் தந்தையும் பிரிந்துவிடக்கூடாது என்று நினைத்து , தன் தந்தையுடன் இருக்கிறாள் . அப்போதுதான் தன் தாய் , தன் தந்தையை விட்டு வெளிநாடு செல்லமாட்டாள் என்றுணர்ந்தவள் .

ரஸியா – நாலரை மாத கர்ப்பிணி . தன் கணவனுக்கும் , தன் மதத்திற்கும் அடங்கி ஒடுங்கி வாழ்பவள் . வேலையின்றி 11 மாதங்களாக கஷ்டப்படும் தன் கணவனுக்காக , ஏதாவது ஒரு வேலைசெய்து பிழைப்பை ஓட்டலாம் என்று எண்ணுபவள் . அந்தமாதிரி ஒரு சமயத்தில் தான் நடேரின் வயதான தந்தையை கவனித்துக்கொள்ளும் வேலை அவளுக்கு கிடைக்கிறது .

ஹோட்ஜட் – ரசியாவின் கணவன் . கோபக்காரன் . மதத்தை உண்மையாக நம்புபவன் . வேலையின்மையின் காரணமாய் சமூகத்தின்மீது வெறுப்பில் இருப்பவன் .


இப்போது கதை இதுதான் .  நடேர் வேலைக்குச்சென்று வீட்டிற்கு திரும்பும் போது , நடேரின் தந்தை கீழே விழுந்து கிடக்கிறார் . அந்நேரம் ரசியா வர , என் தந்தையை விட்டு எங்கே சென்றாய் என கோவமடைகிறான் . அவளை வீட்டை விட்டு அனுப்பும்பொருட்டு , நீ திருடிவிட்டாய் என்று பொய் சொல்லி வீட்டை விட்டு அனுப்புகிறான் . அப்போது தவறுதலாய் கீழே விழுந்துவிடுகிறாள் ரசியா .

அடுத்தநாள் , சிமின் தன் கணவனிடம்  , ரசியாவின் கரு கலைந்துவிட்டது என்று போனில் கூறுகிறாள் . மருத்துவமனையில் சென்று பார்க்கும் நடேருக்கு , ரசியாவின் கணவனுடன் மோதல் ஏற்படுகிறது . கருவைக்கொன்ற குற்றத்திற்காக , நடேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றான் . அங்கு வழக்கை விசாரிப்பவரிடம் , ரசியா கர்ப்பமாக இருப்பது தனக்குத்தெரியாது என்று கூறுகிறான் . அதன்பின் அந்த வழக்கு என்ன ஆனது ? யார்மீது குற்றம் ? நடேரும் சிமினும் என்ன ஆனார்கள் என்பதை அழகாய் , அதேநேரம் திரில்லராய் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் Asghar Farhadi .

மேலே இருக்கும் கதாபாத்திரங்களில் அனைவரையும் நாம் அறிந்திருப்போம் . இதில் ஒரு கதாபாத்திரம் கூட நமக்கு புதிதானவர்கள் இல்லை . நம் குடும்பத்தில் , நம் உறவினர் , நண்பர் என்ற ஏதாவதொரு நிலையிலாவது மேற்குறிப்பிட்டவர்கள் நம்முடன் பழகியிருப்பார்கள் . கதையைப்படித்தால் ஒன்றும் பெரிதாய் இல்லையே ? எதற்கு இந்த படத்தைப்பார்த்துக்கொண்டு என்று  நினைக்கத்தோன்றும் . ஆனால் நான் முதலிலேயே கூறியது போல் , கதைக்காக பார்க்கும் படமல்ல . மனித உணர்வுகளுக்குள் நடைபெறும் போராட்டங்களை உணர்த்தும் படம் இது .


ரசியா , முதல்நாள் வேலைக்கு வரும்போது நடேரின் தந்தை , தன்னுடைய உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறார் . அதை அவரால் உணரமுடியாது . அவரை பாத்ரூமில் அழைத்துச்சென்று , அவரிடம் குளிக்குமாறு சொல்கிறாள் ரசியா . ஆனால் அதையும் உணராத அவர் அப்படியே நின்று கொண்டிருக்கிறார் . அவரைத்தான் தான் குளிப்பாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவள் , போன் செய்து மதகுருமார்களிடம் கேட்கிறாள் . அவர்கள் சரி என்றபின்னே , அவள் சென்று அந்த வயதானவரைக்குளிப்பாட்டுகிறாள் . அப்போது , அவளின் மகள் , ‘பயப்படாதம்மா . நா அப்பாகிட்ட சொல்லமாட்டேன்’ என்கிறாள் .

‘உங்க அப்பாவ விட்டுட்டு வாங்க .’ என்று சொல்லும் சிமினிடம் , நடேர் ‘என் தந்தையை விட்டு என்னால் வர முடியாது’ என்கிறான் . ‘நீங்க என்னதான் அவர பாத்துகிட்டாலும் , அவருக்கு நீங்கதான் பாத்துக்கிரிங்கனு தெரியாது ’ என்று கூறும் மனைவியிடம் நடேர் இவ்வாறு கூறுகிறான் ‘ஆனால் எனக்குத்தெரியும் . அவர் தான் என் தந்தை ’

இதுமாதிரி,  படம் முழுதும் ஏகப்பட காட்சிகள்  படத்தில் ஜொலிக்கின்றன . இத்திரைப்படம் ஒரு நாட்டின் கலாசாரம் , மதத்தின் மீதான நம்பிக்கைகள் , சட்டத்தின் முரண்பாடுகள் , ஆணாதிக்கம் மற்றும் பெண்ணாதிக்கம் , வர்க்க வாரியான குடும்பத்தின் நிலை  என்று பலவிதமான குறியீடுகள் மற்றும் காட்சியமைப்புகளை கொண்டுள்ளது. தன் வீட்டிலுள்ள பிற ஆண்கள் முன்னிலையில் வர மறுக்கும் ரசியாவின் குடும்பத்தில் நிலவும் ஆணாதிக்கத்தைக்கண்டிக்கும் அதேநேரம் , தன் கணவன் முன்னிலையிலே ஒரு காட்சியில் புகை பிடித்துக் கொண்டிருப்பாள் சிமின் .

இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாம் நடிகர்கள் என்று குறிப்பிடுவது தவறு . அனைவரும் கலைஞர்கள் . ஒருவருக்குக்கூட நடிக்க ஸ்கோப் இல்லை என்று சொல்லிவிடமுடியாது . நடேர் பாத்திரத்தில் நடித்த PEYMAN MOAADI , சிமின் வேடத்தில் நடித்த லைலா ஹெடாமி , தெர்மேவாக நடித்த SARINA FARHADI  என அனைவரும் அருமையான நடிப்பினை வழங்கியுள்ளார்கள் . இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும்விதமாக , படத்தில் ஆங்காங்கே வலம் வரும் பெரியவர் , உண்மையில் நடிகர்தானா என்ற சந்தேகம் வருமளவிற்கு தூள் கிளப்பியிருக்கிறார் . கதை முழுதும் அவரைச்சுற்றியே நடைபெறுகிறது என்பதைக்கூட உணரமுடியாதவராக அவர் வருவது அற்புதம் . இசை மற்றும் ஒளிப்பதிவு கூடுதல் பலம் . இயக்குநர் அஷ்கார் பர்ஹதி-கு இது மூன்றாவது திரைப்படம் . படத்தின் முழுகிரெடிட்டும் அவருக்குத்தான் . இந்த படத்திற்காக எண்ணற்ற விருதுகளை வாங்கி வீட்டில் அடுக்கமுடியாமல் தவித்துப்போய் விட்டார் . ஆஸ்கார் , கோல்டன் குளோப் , ஆசிய திரைப்பட விருது , ஆசிய – பசுபிக் திரைப்பட விருது , பெர்லின் என உலகம் முழுதும் விருதுகளை அள்ளியுள்ளது இத்திரைப்படம் .Jodaí-e Nadér az Simín  எனும் பாரசீக டைட்டிலை , ஆங்கிலத்திற்கு ஏற்றவாறு A SEPERATION என வைத்துள்ளார்கள் .மொழிப்பிரச்சனை என்றெண்ணி பார்க்காமல் விட்டுவிடாதீர்கள் . இது மொழியையும் கடந்து உணரும் திரைப்படம் . மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான திரைப்படம் .  ஒரு வித்தியாசமான உணர்வை இந்த படம் கண்டிப்பாய் தரும் . இந்த படத்தின் கிளைமேக்ஸ் வழியாக உங்களையே நீங்கள் புரிந்துகொள்ளலாம் . படத்தைப்பார்த்து , கிளைமேக்ஸ் புரியவில்லை என்று நீங்கள் நினைத்தால் , இப்படத்தை சினிமா கண்ணோட்டத்தில் நீங்கள் அனுகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம் . ஒருவேளை ‘என்னடா இது ? கிளைமேக்சே இல்லை’ என்று நினைத்தால் , நீங்கள் ஒரு ஐந்தறிவு கொண்ட அற்புத மனித உயிர் என்று அர்த்தம் .

தொடர்புடைய இடுகைகள்BURIED - சினிமா விமர்சனம்


ROAD TO PERDITION - சினிமா விமர்சனம்


LIFE IS BEUTYFUL - சினிமா விமர்சனம்


IT'S A WONDERFUL LIFE - சினிமா விமர்சனம்


THE PIANIST - சினிமா விமர்சனம்


THE PRESTIGE - சினிமா விமர்சனம்


Friday, 26 December 2014

ஐ படத்தின் கதை


விக்ரம் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் . சிறுவயதிலிருந்தே அர்னால்ட் போன்று பாடிபில்டராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் , ஜிம்மே கதி என்று இருக்கிறார் . ஒரு கட்டத்தில் ஷூட்டிங்’கிற்காக வரும் மாடல் அழகியான எமி ஜாக்சனை சந்திக்கிறார் . பார்த்தவுடன் எமியின் மேல் காதல் வருகிறது . ஆனால் மாடல் அழகியான எமிக்கு , விக்ரமைப்பிடிக்கவில்லை .அவளை எப்படியாவது காதலிக்கவைக்கவேண்டும் என்று மாடலிங் துறையில் நுழைகிறார் . ஆனால் அவர் எதிர்பார்த்தது போல  , மாடலிங் துறை ஒன்றும் சாதாரணமானது கிடையாது என்று உணருகிறார் . அப்போதுதான் பிரபல ஆராய்ச்சியாளரான வில்லனைச்சந்திக்கிறார் . வில்லன் , விக்ரமை ஒரு சர்வதேச மாடலாக மாற்ற ஒரு மருந்தைத் தான் கண்டுபிடித்ததாக கூறுகிறான் .  அவனை நம்பும் விக்ரம் அந்த மருந்தை எடுத்துக்கொள்கிறார் . வில்லன் கூறியதுபோலவே , விக்ரம் அழகான இளைஞராக மாறிவிடுகிறார் .அதன்பின் புது விக்ரம் மீது எமிக்கு காதல் வந்துவிடுகிறது . இருவரும் வெறித்தனமாக காதலிக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் , அந்த  மருந்தின் பின்விளைவுகளால் விக்ரம் கொடூரமானவராக மாறுகிறார் . எமியிடம் இருந்து விலகி , தனக்கான ஆன்டிடோட்டை தேடி அலைகிறார் . இப்போதுதான் உண்மையான பிரச்சனையே உண்டாகிறது . வில்லன் எமியைக்காதலித்தவர் . விக்ரம் போனதும் எமியிடம் தன்னைக்காதலிக்குமாறு  சொல்கிறார் . ஆனால் விக்ரமைக்காதலிக்கும் , அதை மறுத்துவிடுகிறார் . கடுப்பான வில்லன் , இவள் அழகாய் இருப்பதால் தான் இவ்வளவு திமிராய் இருக்கிறாள் என்றெண்ணி , அவளுக்கும் விக்ரமுக்கு கொடுத்த மருந்தை கொடுத்து விகாரமாக்க நினைக்கிறான் . இதை அறிந்துகொள்ளும் விக்ரம் , அதிலிருந்து எப்படி எமியைக்காப்பாற்றி , தானும் பழைய நிலைமைக்கு திரும்புகிறார் என்பதே கதை .

இந்த பதிவு முழுக்க ஒரு யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதே ! WHATS APP மற்றும் FACEBOOK-ல் பலரும் எழுதியிருந்தனர் . அதையும்  ட்ரைலரையும் வைத்துப்பார்க்கும்போது , திரையிலும் இந்த கதைதான் வரும் என எண்ணத்தோன்றுகிறது . பொங்கல் வரைப் பொறுத்திருந்து பார்க்கலாம் !!!Thursday, 25 December 2014

TRIANGLE - விமர்சனம் + அலசல்
கிறிஸ்டோபர் ஸ்மித் அப்டினு ஒரு டைரக்டர் . அவர் எழுதி இயக்கிய திரைப்படம் தான் இது . இந்த மனுஷனுக்கு விமர்சனம் எழுதறவங்க மேல என்ன காண்டோ தெரியல . எவனுமே விமர்சனம் எழுதிடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி ஒரு படம் எடுத்துருக்காரு . இந்த படத்த எங்க ஆரம்பிக்கறது , எங்க முடிக்கறது , எப்படி எழுதறதுனேத் தெரியலை . இருந்தாலும் இப்படத்தின் வாயிலாக நான் உணர்ந்ததை எழுதுகிறேன் .

ஜெஸ் என்பவள் அறிமுகமாகிறாள் . அவளுக்கு ஆட்டிசம் எனும் மனநோய்க்குறைபாடுள்ள ஒரு மகன் இருக்கிறான் . அவள் வீட்டில் காலிங்பெல் அடிக்க , சென்று பார்க்கிறாள் . ஆனால் யாருமில்லை . சிறிதுநேரத்தில் வேறொரு உடையில் தன் மகனிடம் பயப்படவேண்டாம் என்றுகூறி ஆறுதல் சொல்கிறாள் .

அடுத்த காட்சியில் ஒரு படகைக்காட்டுகின்றனர் . TRIANGLE எனப்படும் அந்த படகின் உரிமையாளன் கிரேக் . அவனும் ஜெஸ்ஸும் தோழிகள் என்பது அவர்களின் உரையாடல்களிலேயேத் தெரிகிறது . அவளின் மகன் எங்கே எனக்கேட்கும் கிரேக்கின் வேலையாள் விக்டரிம் , பள்ளிக்குச்சென்றிருக்கிறான்  எனக்கூறுகிறாள் . ஆனால் சனிக்கிழமை பள்ளி விடுமுறை நாள் .விக்டர் , கிரேக், கிரேக்கின் தோழி சேல்லி ,அவளின் கணவன் டௌனி , அவர்களின் தோழி ஹீதர் ஆகியோருடன் கடலில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறாள் ஜெஸ் .

படகு ஓரிடத்தில் காந்தப்புயலில் (ROCK WAVES) சிக்கிக்கொள்கிறது . அப்போது உதவி கேட்டு கோஸ்ட் கார்டிற்கு வயர்லஸ்ஸில் தகவல் அனுப்ப முயற்சிக்கும் கிரேக்கிற்கு , வேறொரு இணைப்பு கிடைக்கிறது . அதில் ஒருபெண் , தங்களைக்கொலை செய்ய ஒருத்தி முயற்சிப்பதாகத் தெரிவிக்கிறாள் . அதேநேரம் புயலில் படகு கவிழ்ந்துவிட   அதில் ஹீதர் காணமல் போக மற்ற ஐவரும் மூழ்கிய படகில் நின்று உதவிக்காக் காத்திருக்கிறார்கள் .

அப்போது AEOLUS எனும் மாபெரும் கப்பல் ஒன்று வருகிறது . அதைப்பார்த்ததும் ஜெஸ்ஸிற்கு எப்போதோ பார்த்தது போன்று தோன்றுகிறது . அந்த கப்பலில் இருந்து ஒரு உருவம் இவர்களைக்காண்கிறது . அதேநேரம் அந்த கப்பலில் எல்லோரும் ஏறிவிடுகிறார்கள் . கப்பலில் ஏறியபின் பார்த்தால் , அந்த கப்பலில் யாருமே இல்லை . கப்பலில் உள்ள அறைகளை எல்லோரும் பார்வையிடுகிறார்கள் . அப்போது கிரேக்கிடம் , தான் இந்த கப்பலில் ஏற்கனவே இருந்தது போல தோன்றுகிறது என்கிறாள் ஜெஸ் . அதேநேரம் , அந்த கப்பலில் ஜெஸ்ஸின் செயின் டாலர் ஒன்று கிடைக்கிறது . அவள் கிரேக்கிடம் இதைப்பற்றி சொல்லும்போது , கிரேக் அவளைத்திட்டுகிறான் . அவன்மீது கோபம் கொண்டு , மற்றவர்கள் இருந்த டைனிங் ஹாலுக்குச்செல்கிறாள் . அங்கே விக்டர் மிகமோசமாக அடிபட்டு , ஜெஸ்ஸைக்கொல்லவருகிறான் . அவள் தப்பிக்கும்போது , தவறுதலாக விக்டர் இறந்துவிடுகிறான் . திடீரென துப்பாக்கிச்சத்தம் கேட்க , ஜெஸ் அந்த சத்தம் வந்த திசையை நோக்கிச்செல்கிறாள் . அது ஒரு தியேட்டர் .

அங்கே கிரேக் குண்டடி பட்டு கிடக்க , சேல்லியும் அவள் கணவன் டௌனியும் கிரேக்கை நீதான் சுட்டாய் எனக்கூறுகிறார்கள் . அப்போது திடீரென ஒரு உருவம் தாக்க , அவர்களிருவரும் இறக்கிறார்கள் . சுட்ட உருவத்தைத்தொடர்ந்து சென்று சண்டைபோடுகிறாள் ஜெஸ் . கடைசியில் அந்த உருவம் இறக்கும்போது ‘நீ வீட்டுக்குப்போக வேண்டுமெனில் , இங்கிருப்பவர்கள் அனைவரையும் கொன்றாக வேண்டும்’ என சொல்லி கடலில் விழுந்துவிடுகிறது . அதன்பின் என்ன ஆனது ? யார் கொலையாளி ? ஜெஸ் தப்பித்தாலா ? என்பதையெல்லாம் திரைப்படத்தைப்பார்த்து குழம்பி கொள்ளுங்கள் .இதுவரை படித்தது விமர்சனம் . இதற்கு கீழ் படித்தால் படத்தைப்பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் இத்துடன் முடித்துக்கொண்டு , படம் பார்க்காதவர்கள் மீண்டும் கருப்பு நிறத்தில் இருக்கும் பத்திகளை மட்டும் படியுங்கள் . சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பத்திகள் , ஏற்கனவே படம் பார்த்து குழம்பித்திரிபவர்களுக்காக .

  அதன்பின் தூரத்தில் யாரோ கத்தும் குரல் கேட்க , அத்திசை நோக்கிப்பார்க்கிறாள் . அங்கே சிறிதுநேரத்திற்குமுன் , இறந்த அனைவரும் படகின்மீது நின்றுகொண்டு இக்கப்பலைப்பார்த்து உதவுமாறு கையசைக்கிறார்கள் . அதாவது , படகு கவிழ்ந்தபின் , உதவிக்குத் தவித்துக் கொண்டிருந்த 5 பேர் தான் . இன்னும் புரியவில்லையா ?

// மற்ற ஐவரும் மூழ்கிய படகில் நின்று உதவிக்காக் காத்திருக்கிறார்கள் . அப்போது AEOLUS எனும் மாபெரும் கப்பல் ஒன்று வருகிறது . அதைப்பார்த்ததும் ஜெஸ்ஸிற்கு எப்போதோ பார்த்தது போன்று தோன்றுகிறது . அந்த கப்பலில் இருந்து ஒரு உருவம் இவர்களைக்காண்கிறது . அதேநேரம் அந்த கப்பலில் எல்லோரும் ஏறிவிடுகிறார்கள் .//


இந்த காட்சி மீண்டும் ரிப்பீட் ஆகுகிறது . ஆனால் இம்முறை இதை ஜெஸ் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் . அதேநேரம் அங்கும் இருக்கிறாள் . அதாவது LOOP (நடந்ததே மீண்டும் நடப்பது .) எனப்படும் முறை இங்கு நடக்கிறது .  இப்போது அவர்கள் அனைவரும் கப்பலுக்கு வருகிறார்கள் . தேடுகிறார்கள் . அவர்கள் பார்வையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு முதல் ஜெஸ் ஓடும்போது , அவளின் டாலர் கீழே விழுந்து விடுகிறது . அவள் ஓடி விக்டரைப்பார்க்கிறாள் . விக்டரிடம் இங்கு இருப்பவர்கள் அனைவரும் சாகப்போகிறார்கள் எனக்கூறுகிறாள் . அதைநம்ப மறுக்கும் விக்டரிடம் புரியவைக்க முயற்சிக்கிறாள் . அப்போது எதிர்பாராதவிதமாக விக்டருக்குத் தலையில் அடிபடுகிறது . அங்கிருந்து ஜெஸ் ஓடுகிறாள் . ஓரிடத்தில் சில காகிதங்கள் கிடக்கின்றது . அதில் ‘IF THEY BOARD , KILL THEM ALL’ என எழுதியிருக்கிறது . அது சாட்சாத் அவளுடைய கையெழுத்துதான் . அப்போதுதான் உணர்கிறாள் , அங்கு நடக்கும் விஷயங்கள் சுத்தி சுத்தி ஒரே முடிவில் நிற்கிறது . அதாவது இரண்டாவது முறை அவர்கள் கப்பலில் ஏறியபின் ,ஜெஸ்ஸைத்தவிர  அனைவரும் இறக்கிறார்கள் . கடைசியில்தான் உணர்கிறாள் , அனைவரையும் கொல்வது ஜெஸ் தான் . அனைவரும் இறந்தபின் மீண்டும் அதே மாதிரி அனைவரும் கப்பலில் ஏறுகிறார்கள் . சாகிறார்கள் . இப்போது நன்றாய் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் ,

// சுட்ட உருவத்தைத்தொடர்ந்து சென்று சண்டைபோடுகிறாள் ஜெஸ் . கடைசியில் அந்த உருவம் இறக்கும்போது ‘நீ வீட்டுக்குப்போக வேண்டுமெனில் , இங்கிருப்பவர்கள் அனைவரையும் கொன்றாக வேண்டும்’ என சொல்லி கடலில் விழுந்துவிடுகிறது .//

என்று கூறியிருந்தேன் அல்லவா ? அந்த கடலில் விழுந்த உருவம் ஜெஸ் தான் .

கடலில் விழுந்த அவள் ஒரு கரையில் எழுந்திரிக்கிறாள் . அங்கிருந்து தனது வீட்டிற்குச் செல்கிறாள் . அங்கே அவளுடைய இன்னொரு உருவத்தைக்காண்கிறாள் (இன்டர்ஸ்டெல்லர் கிளைமேக்சை ஞாபகத்தில் கொள்க) . அவளது முன்னாள் உருவம்  , தனது மகனை அடித்து திட்டுகிறது . அதைப்பார்த்த பின் ஜெஸ் சென்று காலிங்பெல்லை அடிக்கிறாள் . அவளுடைய உருவம் கதவைத்திறக்கிறது .

// ஜெஸ் என்பவள் அறிமுகமாகிறாள் . அவளுக்கு ஆட்டிசம் எனும் மனநோய்க்குறைபாடுள்ள ஒரு மகன் இருக்கிறான் . அவள் வீட்டில் காலிங்பெல் அடிக்க , சென்று பார்க்கிறாள் . ஆனால் யாருமில்லை .//

இந்த பத்தியை மனதில் கொள்க . அந்நேரத்தில் வீட்டின் பின்புறம் செல்லும் ஜெஸ் , ஒரு கோடாரியை எடுத்துவந்து தனது உருவத்தை கொல்கிறாள் . அதைப்பார்த்து மிரளும் மகனிடம் ஆறுதல் கூறுகிறாள் .

//சிறிதுநேரத்தில் வேறொரு உடையில் தன் மகனிடம் பயப்படவேண்டாம் என்றுகூறி ஆறுதல் சொல்கிறாள் . //

அதன்பின் இறந்த உருவத்தைக்காரின் டிக்கியில் ஏற்றிக்கொண்டு , தன் மகனுடன் கிளம்புகிறாள் . வழியில் ஒரு பறவை , காரில் அடிபட்டு இறந்துவிடுகிறது . அதை கொண்டு சென்று ஒரு இடத்தில் போடுகிறாள் . அங்கே ஏராளமான பறவைகள் இறந்து கிடக்கின்றன ( அதாவது ஏற்கனவே ஜெஸ் பல LOOP களால்தை எடுத்துப்போட்டிருக்கிறாள் . ) பின் தன் மகனுடன் பயணிக்கும் போது , ஒரு சாலை விபத்து ஏற்படுகிறது . அதில் ஜெஸ்ஸின் மகன் இறந்துவிடுகிறான் . ஏற்கனவே இறந்துகிடந்த ஜெஸ்ஸின் உடல் அங்கு கிடக்கிறது . ஆனால் கார் ஓட்டிய ஜெஸ் மாத்திரம் சர்வசாதாரணமாய் நின்று பார்க்கிறாள் . பின் அவள் கிரேக் இருக்கும் இடத்திற்கு செல்கிறாள் .

// அடுத்த காட்சியில் ஒரு படகைக்காட்டுகின்றனர் . TRIANGLE எனப்படும் அந்த படகின் உரிமையாளன் கிரேக் . அவனும் ஜெஸ்ஸும் தோழிகள் என்பது அவர்களின் உரையாடல்களிலேயேத் தெரிகிறது . அவளின் மகன் எங்கே எனக்கேட்கும் கிரேக்கின் வேலையாள் விக்டரிம் , பள்ளிக்குச்சென்றிருக்கிறான்  எனக்கூறுகிறாள் . ஆனால் சனிக்கிழமை பள்ளி விடுமுறை நாள் .விக்டர் , கிரேக், கிரேக்கின் தோழி சேல்லி ,அவளின் கணவன் டௌனி , அவர்களின் தோழி ஹீதர் ஆகியோருடன் கடலில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறாள் ஜெஸ் .//

-------- சுபம் --------

சத்தியமாக உங்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது என்று நினைக்கிறேன் . அதனால் தான் கூறினேன் .

//கிறிஸ்டோபர் ஸ்மித் அப்டினு ஒரு டைரக்டர் . அவர் இயக்கிய திரைப்படம் தான் இது . இந்த மனுஷனுக்கு விமர்சனம் எழுதறவங்க மேல என்ன காண்டோ தெரியல . எவனுமே விமர்சனம் எழுதிடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி ஒரு படம் எடுத்துருக்காரு . இந்த படத்த எங்க ஆரம்பிக்கறது , எங்க முடிக்கறது , எப்படி எழுதறதுனேத் தெரியலை . இருந்தாலும் இப்படத்தின் வாயிலாக நான் உணர்ந்ததை எழுதுகிறேன் .//

சரி , இப்போது குழப்பங்களுக்கான விடைகள் .1.   கடைசியாக ஜெஸ்ஸிற்கு எல்லாம் தெரிந்திருக்க , அவள் எதற்காக மறுபடியும் போட்டில் ஏறுகிறாள் ?

ஒருவேளை அவள் மீண்டும் அனைவரையும் உயிருடன் காணும் பொருட்டு ஏறியிருக்கலாம் . அல்லது அடுத்த அட்டம்ட்டில் தங்களின் நண்பர்கள் மற்றும் தன் குழந்தையினைக்காப்பாற்ற ஏறியிருக்கலாம் . அல்லது படத்தின் திரைக்கதையை எழுதியவர் , எத்தனைமுறை பார்த்தாலும் உங்களுக்கு புரியவே கூடாது என்ற  தொணியில் எழுதியிருக்கலாம் .

2.   அப்படி அவள் ஏறியிருக்கும்போது அவளுக்கு முன்னர் நடந்த அனைத்தும் ஞாபகம் வந்திருக்கவேண்டுமே ? ஏன் வரவில்லை ?

இந்த இடத்தில்தான் திரைக்கதை ஆசிரியரும் , இயக்குநருமான கிறிஸ்டோபர் ஸ்மித் சறுக்கிவிட்டார்கள் . ஒருவேளை படத்தின் திரைக்கதைக்காக அனைவரும் பாராட்டவேண்டும் என்பதற்காக அப்படியொரு லாஜிக் மிஸ்டேக்கை உண்டாக்கியிருக்கலாம் . அதனால் தான் பிரமாதமான ஒரு திரைப்படம் கொண்டாடப்படாமலே போய்விட்டது என்பது என் அவதானிப்பு. ஒருவேளை அவள் மனநோயாளியாக இருப்பாள் என்று நினைப்பதற்கும் வாய்ப்பில்லை . ஏனெனில் அவளின் மனநோய்ப்பற்றிய சிறுதுளி காட்சிகள் கூட படத்தில் இல்லை . அல்லது , அடுத்தமுறை LOOP நிகழும் போது அதை அவள் வெளிப்படுத்தியிருக்கலாம் அல்லது , அடுத்தமுறை LOOP நிகழும் போது அதை அவள் வெளிப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்தாலும் அதற்கும் வாய்ப்பில்லை . அதற்கான காரணம் , ஏற்கனவே பலமுறை அவள் அந்த LOOP- ல் சிக்கிக்கொண்டாள் என்பதனை , அந்த டாலர் காட்சியிலும் , காகிதங்களின் வாயலாகவும் நமக்கு காட்டிவிடுகிறார்கள் . எனவே திரைக்கதையை வெளிப்படுத்தும் பொருட்டு , இந்த காட்சியில் இயக்குநரின் பிழை வெட்டவெளிச்சமாய்த்தெரிகிறது .
உங்களுக்கு இப்படத்தில் வேறேதெனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட்டில் தெரிவியுங்கள் . என்னால் முடிந்தால் நான் உங்களுக்கு விளக்குகிறேன் .


இந்த படத்தில் திரைக்கதைக்கு அடுத்தபடியாக பெரிதும் பாராட்டப்படவேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் ராபர்ட் ஹம்ப்ரிஸ் மற்றும் எடிட்டர் ஸ்டூவர்ட்  ஆகிய இருவரும் தான் . சான்சே இல்லாத அளவிற்கு ரம்மியமான ஒளிப்பதிவு . தமிழில் இதுபோன்ற கலரைசேன் படங்கள் வந்துள்ளதா என்பது சந்தேகம் தான் . இந்த படத்தின் எடிட்டருக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காமல் இருப்பது ஆச்சரியம் தான் .

இந்த படத்தின் இயக்குநர் , மெமன்டோ மாதிரியான ஒரு திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்ற ஆசையில் எடுத்தபடம் தான் இது . அதற்கேற்றாற்போல் மெமன்டோவிற்கு சிறிதும் குறைவில்லாமல் இப்படத்தை எடுத்துள்ளார் . ஆனால் மெமென்டோவில் இருந்து , இதில் இல்லாமல் போனது மேலே பார்த்த அந்தவொரு பிரச்சனைதான் . மெமன்டோவில் , நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் . ஆனால் இப்படத்தில் முடிவு என்பது எதுவுமே கிடையாது . ஆரம்பமே படத்தில் கிடையாது . TRIANGLE என்பதற்கு பதில் CIRCLE என்று டைட்டில் வைத்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் . ஆனால் எப்படி பார்த்தாலும் வெறும் 11 கோடியில் இப்படியொரு அட்டகாசமான திரைப்படத்தைக்கொடுப்பது கடினமான விஷயம் தான் .


இந்த படத்தைத்தாண்டிய இன்னொரு விஷயத்தை்ககுறிப்பிடுகிறேன் . உங்களில் பலர் பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் . மனிதர்கள் என்னதான் GPS , GPRS னு கண்டுபிடித்தாலும் , இயற்கையின் ரகசியங்களில் அவை செயல்படாது என்பதற்கு அதிசிறந்த உதாரணம் தான் பெர்முடா முக்கோணம் . வட அமெரிக்காவின் கிழக்கே இருக்கும் பனமா கால்வாயில் அதைந்துள்ள ஒரு தீவு தான் பெர்முடா . அதைச்சுற்றியுள்ள முக்கோணப்பகுதியே பெர்முடா முக்கோணம் . இந்தவழியில் பயணித்த கப்பல்கள் என்ன ஆனது என்பது இன்னும் புரியாத மர்மமாகவே உள்ளது . கப்பல் தான் இப்படினு ப்ளேன்ல அந்த வழியா புறப்பட்டவங்களும் அப்ஸ்காண்ட் ஆகிட்டாங்க . அதிலிருந்து தப்பிப்பிழைத்ததாக கூறிய ப்ரூஸ் எனும் விமானியின் கதையைக்கேட்டால் , கண்டிப்பாய் நம்ப மாட்டிர்கள் .
 புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது. அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது. வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு! (நன்றி - வால்பையன்)


எப்படி கதை நல்லா இருக்கா ? இதற்கு விஞ்ஞானிகள் ப்ளாக் ஹோல் , வார்ம் ஹோல்னு ஏதேதோ அடுக்கினாலும் , அதைப்பற்றிய துல்லியமான முடிவுகள் இன்னும் வரவில்லை என்பதே உண்மை .மொத்தத்தில் , பயங்கரமாக குழப்பவேண்டும் என்ற எண்ணத்திலும் , திரில்லர் , ஹாரர் டைப் படங்கள் பார்க்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற திரைப்படம் . கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள் . நல்ல குழப்ப அனுபவம் கிடைக்கும் . ரொம்ப மூளைக் குழம்பிடுச்சினா , நம்ம தளத்துக்கு வந்து படிச்சுப்பாருங்க . ஓரளவு புரியும்னு நினைக்கிறேன் . இதேமாதிரி குழப்பவல்ல ஒரு படமாக EVERYWHEN என்ற படத்தையும் பரிந்துரைக்கிறேன் .
தொடர்புடைய இடுகைகள்

FORREST GUMP – ஒரு பார்வைlife was like a box of chocolates. 
You never know what you're going to get.இந்த படத்தின் பெயரைப்பார்த்ததும் , ஒரு அடர்ந்த காடு , அங்கே செல்லும் ஒரு இளைஞர் பட்டாளம் . அங்கிருக்கும் ஒரு விநோதமான ஜந்துவின் தாக்குதல் . ஸ்லீவ்லெஸ்சும் , மினிஸ்கர்ட்டும் அணிந்த ஹீரோயின் மாத்திரம் கடைசியில் தப்பிப்பிழைப்பார் என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள் . ஏனெனில் இது ஒரு படமல்ல ! பாடம் . வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை கண்முன் நிறுத்தும் ஹீரோவின் பெயர் தான் ஃபாரஸ்ட் கம்ப் . அது என்ன பெயர் ? இவ்வளவு வித்தியாசமாக ? ஃபாரஸ்ட்டு , ஹில்ஸ்-னு லாம் யோசிக்காதிங்க . தன்னுடைய பெயருக்கான காரணத்தையும் இந்த ஃபாரஸ்ட் நம்மிடம் பகிர்ந்து கொள்வார் .

உடனே ஃபாரஸ்ட் என்பவர் கருணையுள்ளம் கொண்ட கோடிஸ்வரராகவோ , நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த ஒரு மாவீரனாகவோ , மாபெரும் கல்வியாளனாகோவா , வாரி வழங்கும் வள்ளலாகவோ , தன் குடும்பத்திற்காக உயிரைக்கொடுக்கும் பாசக்காரனாகவோ கருதவேண்டாம் . அவன் மிகவும் சாதாரணமானவன் . இன்னும் சொல்லப்போனால் , இந்த பதிவைப்படித்துக்கொண்டிருக்கும் உங்களையும் , எழுதிய என்னையும் விட குறைந்த IQ திறன் உள்ளவர் .


படத்தைப்பற்றி பார்க்கும்முன் உங்களிடம் சில கேள்விகள் .

1.   உங்கள் நண்பர் , உங்களிடம் ஒரு தொழிலைப்பற்றி கூறுகிறார் . ஐடியா முழுதும் அவருடையது. திடீரென அவர் இறந்துவிடுகிறார் .நீங்கள் அவர் சொன்னத் தொழிலைத் தொடங்கி , கடினமாக உழைத்து மாபெரும் பணக்காரர் ஆகிவிடுகிறீர்கள் .  இறந்த உங்களின் நண்பருக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் ?

2.   நீங்கள் மனப்பூர்வமாய் ஒரு பெண்ணைக் காதலிக்கிறீர்கள் . அவளும் உங்களைக் காதலிக்கிறார் எனினும் சில காரணங்களால் அதைத்தெரியப்படுத்தாமல் உங்களை விட்டுச் செல்கிறார் . அவரைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் சந்திக்கிறீர்கள் . அப்போதும் நீங்கள் காதலித்தபோது இருந்த மாதிரியே அவளின் குணம் இருந்தும் , அவளின் பழக்கவழக்கங்கள் , நடவடிக்கைகள் , சேர்க்கைகள் தவறாக இருக்கின்றது . அவளின் சூழ்நிலை உங்களுக்கு நன்றாய்த்தெரியும் . அவள் ஏன் அம்மாதிரி ஆனாள் என்பதும் உங்களுக்குத் தெரியும்  என்றால் , அந்நேரத்தில் என்ன செய்வீர்கள் ?


3.   நீங்கள் நாட்டிலேயே பெரும் பணக்காரர் . அதை ரோட்டில் போகும் ஒருவரிடம் சொல்லும்போது அவர் நம்ப மறுக்கிறார் . அப்போது என்ன செய்வீர்கள் ?

சரி , படத்திற்கு வருவோம் .ஒரு இறகு  காற்றில் பறந்து வருகிறது . அது நிலத்தை வந்தடையும் இடம் ஒரு பேருந்து நிறுத்தம் . அந்த இறகைக் கையிலெடுப்பவன் தான் கம்ப் .  அதை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்கிறான் . அவன் அருகில் ஒரு பெண்மணி , பேருந்துக்காக காத்திருக்கிறாள் . அவளுடைய ஷூவைப்பார்க்கிறான் கம்ப் . பின் அவளிடம் தன் கதையை விளக்குகிறான் . அதாவது அவனுடைய முதல் ஷூ அனுபவம் .

சிறுவயதில் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் , தன்னிச்சையாக நடக்கும் திறனை இழக்கிறான் கம்ப் .தந்தையில்லாத கம்பிற்கு  தாய் தான் எல்லாம் . அவனுடைய தாய்க்கும் உலகமே மகன் தான் . மருத்துவர் உதவியுடன்  LEG BRACE எனப்படும் ஷூவைக் காலில் அணிந்துகொள்கிறான் . அதன் உதவியுடன் தான் நடக்கவும் செய்கிறான் . கம்ப்பிற்கு பள்ளிவயது வந்ததும் , அவனுடைய தாய் பள்ளியில் சேர்க்க முயல்கிறாள் .அதற்காக அவ்வூரிலேயே மிகப்பெரிய மற்றும் திறமையான பள்ளியை அனுகுகிறாள் . ஆனால் அவனுடையக் குறைவான IQ திறை காரணம் காட்டி , அவனை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார் பிரின்சிபால் . அவரிடம் மன்றாடும் கம்ப்பின் தாய் , கடைசியில் தன் உடலை பிரின்சிபாலுக்கு இரையாக்கி , கம்ப்பைப் பள்ளியில் சேர்க்கிறாள் . இதை அறியும் திறனற்றவன் தான் கம்ப் .


முதல்நாள் பள்ளிக்குச்செல்ல , பள்ளி வேனில் ஏறுகிறான் . அங்கு நம்மைப்போல இருக்கும் சில சிறுவர்கள் , நடக்கும் திறனற்ற அவனுக்கு அமர இடமளிக்க மறுக்கிறார்கள் . அப்போது தான் ஜென்னியைப் பார்க்கிறான் . ஜென்னி ஒரு ஏழைக்குடும்பத்தைச் சார்ந்தவள் . பொறுப்பற்ற தந்தை . தாயில்லாமல் வளரும் அவள் அன்புக்கு ஏங்குகிறாள் . ஜென்னியும் கம்ப்பும் , நல்ல நண்பர்களாகின்றனர் . ஒருமுறை மாணவர்கள் சிலர் கம்பைக் கல்லால் அடிக்க , அவனை ஓடுமாறுப் பணிக்கிறாள் ஜென்னி . ஃபாரஸ்ட் ஓட ஆரம்பிக்கிறான் . அதுவரை கம்பிகள் உடைய ஷூவுடன் ( நடக்கும் திறனற்றவர்கள் அணியும் LEG BRACE) நடக்கும் பாரஸ்ட் , அதன்பின் நன்றாக நடக்க ஆரம்பிக்கிறான் . வருடம் ஓடுகிறது .  அதேபோல் மாணவர்கள் கல்லால் அடிக்க , பாரஸ்ட் ஓடுவதும் தொடர்கிறது . அப்படி ஒருமுறை பாரஸட் ஓடுவதைப்பார்க்கும் PT கோச் , அவனை பள்ளியின் ரக்பி அணியில் சேர்த்துக்கொள்கிறார் . இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க . கம்ப்பிற்கு ரக்பியைப்பற்றி எதுவும் தெரியாது . அவனை ஓடச்சொன்னால் , அவன் ஓடுவான் . நன்றாக ஓடுவான் . மிகவும் வேகமாக ஓடுவான் . அவ்வளவு தான் .

தேசிய அளவில் ரக்பி அணியில் இடம்பிடிக்கும் பாரஸ்ட் , ஒரு கல்லூரியில் சேர்கிறான் . அதேநேரம் , தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை , அதிபர் கௌரவப்படுத்த ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் . அங்கே செல்லும் அவனுக்கு திடீர் என சூச்சு வந்துவிடுகிறது . அதேநேரம் அதிபர் அவனிடம் வந்து ‘நீங்கள் எப்படி உணருகிறீர்கள் ?’ எனக்கேட்கிறார்  நாமாக இருந்தால் , ‘முகவும் பெருமையாக உணர்கிறேன் . தங்களைச் சந்தித்தில் மிகவும் சந்தோஷம் ’ என சொல்லுவோம் . ஆனால் கம்ப் அப்படியல்ல . யார் பெரியவர்கள் ? யாருக்கு மரியாதைக்கொடுக்க வேண்டும் ? எந்த இடத்தில் எப்படிப்பேச வேண்டும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது . ‘எனக்கு அவசரமாக ஒன்னுக்கு வருகிறது’ என்று அதிபரிடம் கூறிவிட்டு , பாத்ரூமுக்கு ஓடுவான் .


அதேநேரம் தந்தையை விட்டு பிரிந்த ஜென்னி , மகளிர் கல்லூரியில் படிக்கிறாள் . அவள் தன்னுடைய செலவுக்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள் . அப்போது அவளைக்காண வருகிறான் ஃபாரஸ்ட் .  அவனுக்காக தன் உடலைத்தர வருகிறாள் ஜென்னி . ஆனால் உடலுறவைக்கூட புரிந்து கொள்ளமுடியாத கம்ப் , மிரள்கிறான் .

கல்லூரி வாழ்க்கை முடிகிறது . அதேநேரத்தில் அமெரிக்கா வியட்நாம் போரில் ஈடுபட்டிருக்க , ராணுவத்தில் கட்டாய சேவை செய்யுமாறு ஒரு சட்டம் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டது . கம்ப் ராணுவத்தில் சேர்கிறான் . அங்கே புப்பா என்பவனைச் சந்திக்கிறான் . புப்பாவிற்கு மீன் பிடிப்பதில் தான் ஈடுபாடு . அவனுடைய குடும்பம் மீன்பிடி தொழிலைச்சார்ந்தது . புப்பாவின் பேச்சு எப்போதும் மீன்களைப்பற்றியும் , மீன்பிடித்தொழிலைப்பற்றியுமே இருக்கிறது . பின் இருவரும் வியட்நாமிற்கு அனுப்பபடுகிறார்கள் . அங்கே இவர்களின் மேலதிகாரியாய் டேன் என்பவர் இருக்கிறார் . அவர் குடும்பமோ , நாட்டிற்காக பரம்பரை பரம்பரையாக உயிர்நீத்தவர்கள் . ஒரு கட்டத்தில் எதிரி அணியினர் தாக்க , அப்போது டேன் கம்ப்பைப்பார்த்து ஓடுமாறு சொல்கிறார் .கம்ப் ஓடித்தப்பிக்கிறான் . ஆனால் அவசரத்தில் புப்பாவை மறந்துவிடுகிறான் . அதனால் புப்பாவைத்தேடி மீண்டும் செல்கிறான் . ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் செல்லும் வழியில் ,காயம்பட்ட மற்ற வீரர்களைக் காண்கிறான் . அவர்களைத்தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றுகிறான் . அதேபோல் டேன்-னும் அடிபட்டு கிடக்கிறார் . அவரைத்தூக்க செல்லும் கம்ப்பை வேண்டாமென்று டேன் உத்தரவிடுகிறார் .அவர் இருகால்களையும் இழந்துவிடுகிறார் .தன் உயிர் போர்க்களத்தில் சென்றால் தான் மரியாதை என கெஞ்சுகிறார் . கடைசியில் டேன்னையும் காப்பாற்றி விடுகிறான் கம்ப் . ஆனால் புப்பா இறந்துவிடுகிறான் .


இருகால்களையும் இழந்த டேனை , ராணுவம் விடுவிக்கிறது . போரின்போது சக வீரர்களைக்காப்பாற்றிய கம்ப்பிற்கு அதிபர் கையால் விருது கிடைக்கிறது.  ‘உனக்கு எங்கே அடிபட்டது ’  என கேட்கும் அதிபரிடம் , தன்னுடைய பின்புறத்தைக்காட்டுகிறான் கம்ப் . பின் ஓய்வின்போது டேபிள் டென்னிஸ் விளையாடப் பழகுகிறான் . அதிலும் அவனுடைய உண்மையான உழைப்பைக்காட்ட , மிகப்பெரிய டேபிள் டென்னிஸ் ப்ளேயர் ஆகுகிறான் . அதிலிருந்து அவனுக்குக் கிடைத்த பணத்தைவைத்து புப்பாவின் கனவான மீன்பிடி படகை வாங்குகிறான் . அந்நேரத்தில் டேன்-னை சந்திக்கும் கம்ப் , தன்னுடன் பார்ட்னராகும்படி டேன்னை வேண்டுகிறான் . இருவரும் சேர்ந்து மீன்பிடித்தொழிலை ஆரம்பிக்கிறார்கள்  . அவர்களின் அதிர்ஷ்டம் , அமெரிக்காவில் ஒரு HURRICANE புயல் தாக்க , அந்நேரத்தில் பெரும்பாலான படகுகள் எல்லாம் அழிந்துவிடுகிறது . இவர்கள் இருவரும் மீன்பிடித்தொழில் பெரும் பணக்காரர்கள் ஆகின்றனர் . டேன் , பணத்தை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் . அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் பாதியை , கம்ப் புப்பாவின் குடும்பத்திற்கு வழங்குகிறான் .


அதேநேரம் , ஜென்னியோ அன்றைய அமெரிக்காவின் ஹிப்பிக்கலாசாரத்தில் மாட்டிக்கொள்கிறாள் . அதாவது , இசைக்குழு என்ற பெயரில்  போதைமருந்து , விபச்சாரம் போன்றவற்றுள் அன்றைய அமெரிக்க இளைஞர்கள் பலர் மாட்டினர் . அவர்களின் கலாச்சாரமே ஹிப்பி என்றழைக்கப்பட்டது . மீண்டும் ஜென்னியை சந்திக்கிறான் . அதேநேரம் கம்ப்பின் தாய் இறந்துவிடுகிறாள் . ஜென்னி , கம்ப்புடன் இருபதாக கூறி ஒருநாள் மட்டும் அவனுடன் தங்குகிறாள் . அடுத்தநாள் கம்ப்பிடம் சொல்லாமலே சென்றுவிடுகிறாள் .


தாயும் இல்லை , தாயிற்கு அடுத்தவளும் இல்லை என்ற நிலையில் கம்ப் , ஓட முடிவெடுக்கிறான் . அவனுக்குத்தேவை மனநிம்மதி . அம்மாதிரியான சூழலில் நம்மில் பலர் டாஸ்மாக்கில் மூழ்கிக்கிடப்போம் . கம்ப்போ ஓடுகிறான் . மொத்த அமெரிக்காவையும் சுற்றி ஓடுகிறான் . கிட்டத்தட்ட  3 வருடங்களுக்கு மேல் ஓடுகிறான் . அவன் உலக அமைதிக்காக ஓடுகிறான் , எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஓடுகிறான் என்று பலர் பலவிதமாக பேசுகின்றனர் . ஆனால் , அவனுக்கு ஓடவேண்டும் என்று தோன்றியதால் தான் ஓடுகிறான் என்பது யாருக்கும் புரியவில்லை . அவன் ஓடுவதைப்பார்த்து அவனுடன் ஒரு கூட்டமும் ஓடுவருகிறது . திடீரென தன்னுடைய ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான் . வீட்டிற்குத்திரும்புகிறான் . அங்கே ஜென்னியின் கடிதம் சிக்குகிறது . ஜென்னியைத்தேடி , அந்த பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்திருக்கிறான் .


இவையெல்லாம் அந்த பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டு , கம்ப் அவன் பாட்டிற்கு சொல்லிக்கொண்டிருக்கிறான் .யார்ர கேட்டாலும் பரவாயில்லை , கேட்கவில்லையெனினும் பரவாயில்லை . அவனுக்கு அவன் கதையைச் சொல்லவேண்டும் எனத்தோன்றியதால் சொல்கிறான் .

கடைசியில் ஜென்னியைச்சந்திக்கிறான் . கூடவே தன் 4 வயது மகனையும் தான் . பின் ஜென்னியைத் திருமணம் செய்துகொள்கிறான் . டேன் தன்னுடைய செயற்கைக்காலுடன் , தன் வருங்கால மனைவியுடன் கம்ப்பின் திருமணத்திற்கு வருகிறார் . தன்னைக்காப்பாற்றியதற்கு நன்றி கூறுகிறார் . சில நாட்களில் எய்ட்ஸ் நோயால் ஜென்னி இறந்துவிடுகிறாள் . அவளின் கல்லறை முன் நின்று , தன் வாழ்க்கையில் மிகமுக்கியமானவர்களைப்பற்றி பகிர்ந்துகொள்கிறான் கம்ப் . பின் தன் மகனை , பள்ளிவேனில் ஏற்றிவிட்டு அவன் வருகைக்காக காத்திருக்கிறான் கம்ப் . அவன் காலடியில் ஒரு இறகு . அது மெல்ல வானத்தை நோக்கிப் பறக்கிறது . நம் மனதிலும் தான் . பாடம் முடிகிறது .

இப்போது கம்ப்பின் நிலையில் நாமிருந்தால் என்ன செய்திருப்போம் ?

மொத்தத்தில் நம் பார்வையில் , கம்ப் கிட்டத்தட்ட ஒரு முட்டாள் போன்றவன் தான் . ஒன்றுமே தெரியாத ஒரு வடிகட்டிய முட்டாள் . ஆனால் அவன் வாழ்க்கையில் பல சாதனைகளைச்செய்திருக்கிறான் . இத்தனைக்கும்  அவன் அதற்காக ஒன்றுமே செய்யவில்லை . தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மனமுவந்து செய்தான் . அதில் முழு ஈடுபாட்டுடன் இருந்தான் . வெற்றி வந்ததும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடவில்லை . பிறர் கேலி பேசியதால் மனமுடைந்து போகவும் இல்லை . தான் நேசிப்பவர்கள் தனக்கு எப்போதும் உண்மையாக இருக்கவேண்டும் என்று அவன் பேராசைப்பட்டதில்லை . பிறருக்காக தன்னை அவன் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளவில்லை . தனக்கு அது தெரியவில்லை , இது தெரியவில்லை என்று எப்போதும் வருந்தியதில்லை . தெரியாததை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டான் . தெரிந்ததை ஊருக்கல்லாம் தம்பட்டம் அடிக்காமல் தன்னுடன் நிறுத்திக்கொண்டான் .மற்றவர்கள் புகழும்போது பெருமிதம் அடையவில்லை . அதேநேரம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதை நினைத்துநினைத்து வருந்தி , தன்னைத்தானே சமரசம் செய்துகொள்ளவில்லை . தாயைத்தெய்வமாய் கருதினான் . காதலியை உயிராய் நினைத்தான் . நண்பர்களை இமைபோல் எண்ணினான் . பணத்தைத்தூசியாய் நினைத்தான் . புகழை ஏற்று பணத்தை விரும்பும் நமக்குக்கிடைக்காத இவ்விரண்டும் அவனுக்கு கிடைத்ததற்கு்க காரணம் அவன் இவையிரண்டையும் வாழ்வில் பெரிதாய்க் கொள்ளவில்லை என்பதாலேதான் .

இத்தனைக்கும் அவனுக்கு ஆகச்சிறந்த ஆசான் தந்தையில்லை . உடலைத்தனக்காகவே  வைத்திருக்கும் ஆசாரமான காதலியில்லை . நண்பர்கள் பட்டாளம் இல்லை . கோடிக்கணக்கான சொத்து இல்லை . மாபெரும் படிப்பில்லை. MNC – யில் வேலையில்லை என பல இல்லைகள் சொல்லிக்கொண்டே போகலாம் . அதேநேரம் அவனிடம் பொறாமை இல்லை . போட்டி இல்லை . துவேசம் இல்லை . போலித்தனமும் இல்லை .அடுத்து ஜென்னி . இவளுடைய வாழ்க்கையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டியக்கட்டாயம் உள்ளது . ஜென்னி ஏன் அவ்வாறு மாறவேண்டும் ? சிறுவயதிலேயே தந்தையினால் மனதளவில் பாதிக்கப்பட்டவள் . அவளுடைய சிறுவயது ஆசையெல்லாம் தனக்கு தேவதைகளுக்கு இருப்பதுபோன்று சிறகு இருந்தால் எங்காவது பறந்துவிடலாம் என்பதே . தந்தையின் பிடியிலிருந்து தப்பிப்பிழைத்த அவளுக்கு , மனப்பிரச்சனையில் இருந்து வெளிவரமுடியவில்லை என்பதே உண்மை . அதன் காரணமாய் தான் போதைப்பொருளுக்கு அடிமையாவது , அப்போதை மருந்துகளை வாங்குவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுவது போன்றவைகளைத்தொடர்ந்து எய்ட்ஸால் இறக்கிறாள் . நம் நாட்டிலும் சிறுவயதிலே பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாகும் குழந்தைகளின் மனநிலையை இதனுடன் ஒப்பிடலாம் .

படத்தின் பல காட்சிகளில் பலவிதமான குறியீடுகள் ஒழிந்திருப்பதைக்காணலாம் . அமெரிக்க வரலாறு நன்கறிந்தவர்கள் , அதனை கண்டுபிடிக்க இயலும் . வாட்டர்கேட் ஊழல் , ஆப்பிள் நிறுவனத்தின் அசுரவளர்ச்சி, கென்னடி மன்றோ விவகாரம் , அதிபர்களின் தொடர்கொலைகள் , வியட்நாம் போர் , அமெரிக்க – சீன உடன்படிக்கை போன்று எண்ணற்ற விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் .

படத்தில் பாரஸ்ட் கம்ப்-ஆக வாழ்ந்தவர் டாம் ஹேங்ஸ் . இந்த மனிதரைப்பற்றிய தனிப்பதிவு ஒன்று எழுதப்போவதால் ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறேன் . கடந்த இரு நூற்றாண்டுகளிலும் இவரைப்போன்று ஒரு மகோன்னதமான நடிகன் கண்டிப்பாய் உலகில் எங்கும் இருக்கமுடியாது . கெட்டப் சேஞ்ச் பன்றதில்லை , வித்தியாசமான நடிப்பு தருவதில்லை , ஒரேமாதிரியான நடிப்பு என்று எத்தனைக்குற்றச்சாட்டுகள் வைத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் . இவரின் கண் இமைகள் கூட நடிக்கும் .

இந்த படத்தைப்பற்றி எழுத்துகளால் வர்ணிக்கமுடியாது என்பதே உண்மை . பார்த்து மனதால் உணரக்கூடிய திரைப்படம் இது . இந்த படம் உங்களை சிரிக்க வைக்கும் . அழவைக்கும் . வலியில் ஆழ்த்தும் .சந்தோஷமானதொரு உணர்வினைக்கொடுக்கும் . பார்த்து முடித்ததும் , இவரைப்போல் நாமும் இருக்கவேண்டும் என்று ஒருமுறையாவது உங்களை நினைக்கச்செய்யும் . பொறுமையாக பாருங்கள் . அதேநேரம் அமைதியாய் பாருங்கள் .

படத்தில் நடித்தவர்கள் , வசனம் , திரைக்கதை , மூலநாவல் ,சிஜி , ஒளிப்பதிவு , வாங்கிய விருதுகள் (6 ஆஸ்கார்) போன்றவைப்பற்றி எழுதினால் இன்னும் பத்து பக்கங்கள் எழுதவேண்டி வரும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் . இயகுநர் ராபர்ட் செமிக்ஸ் மற்றும் டாம் ஹேங்சைப்பற்றிய பதிவு ஒன்றை தனியாய் எழுதுவதால் இத்துடன் விமர்சனத்தைமுடித்துக்கொள்கிறேன் . நீண்ட நாட்களாய் எழுதவேண்டும் என்று நினைத்திருந்த பதிவு இது .  மேலும் இந்த படத்தைப்பற்றித்தெரிந்து கொள்ள விக்கிலிங்க்கில் கிளிக்குங்கள்

life was like a box of chocolates. 

You never know what you're going to get.


தொடர்புடைய இடுகைகள்


Tuesday, 23 December 2014

IN TIME – சினிமா விமர்சனம்உலகில் இருக்கும் அனைவரும் வயதாகாமல் ,25 வயது இளைஞர்களாகவே இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள் . வேறமாதிரி இருக்கும் அல்லவா ? அதுதான் இப்படத்தின் கரு .எதிர்காலத்தில் மனிதர்கள் , மரபணு ஆராய்ச்சியில் ஒரு புதிய சாதனையைச் செய்கின்றனர் . மனிதர்களுக்கு 25 வயதுக்குமேல் ஆகாமல் , ‘என்றும் 25  ‘ஆக இருப்பதே அந்த சாதனை . அப்படியே இருந்திருந்தால் ஜாலியாய் தான் இருந்திருக்கும் . ஆனால் , 25 வயதைத்தாண்டிய பின் ஒரு வருடம் மாத்திரமே வாழமுடியும் . அதற்குமேல் வாழவேண்டுமெனில் உழைக்கவேண்டும் . புரியவில்லையா ?

இப்போது நான் பிறக்கிறேன் என்றால் , என்னுடைய 25 வயது வரை , இப்போது இருப்பதுப் போல சாதாரணமாகவே  வளர்வேன் . ஆனால் என்னுடைய 25 –வது வயதைக்கடந்த பின் , எனக்கு வயதாவது நின்றுவிடும். அதன்பின் எத்தனை ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும் , 25 வயதுடையவன் தோற்றம் போலவே இருப்பேன் . ஆனால் என் 25வது வயது முடிந்தபின் , எனக்கிருக்கும் வாழ்நாள் நேரம் வெறும் 1 ஆண்டுதான் . அதற்குமேல் வாழவேண்டும் என்றால் , நான் வேலைசெய்து எனக்கான வாழ்க்கைநேரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் .இப்போது இருப்பதுபோல் ,பணத்திற்காக வேலைசெய்வது போய், நேரத்திற்காக வேலைசெய்வது போன்று எதிர்காலத்தில் மாறிவிடும் . அதாவது , இப்போது நிறைய பணம் சம்பாதிப்பவன் , சந்தோஷமாய் நினைத்ததை வாங்கி ஆடம்பரமாய் திரிவான் . ஆனால் , எதிர்காலத்தில் ,பணத்திற்கு பதில் நேரத்தை சம்பாதித்து , அந்நேரத்தைகொண்டே ஆடம்பரமாய் இருப்பான் .அதற்காக அவர்களிடம் 20 ஆண்டுகள் வாழ்க்கை இருக்கிறது ; அதுவரை அவர்களுக்கு மரணமே இல்லை என்று அர்த்தம் கிடையாது . இயற்கையான மரணம் வருதற்குத் தான் 20 ஆண்டுகள் . நடுவில் செயற்கையாக இறந்துவிட வாய்ப்புகளுண்டு (யாராவது கொலை செய்துவிட்டாலோ , அல்லது தற்கொலையைத் தழுவினாலோ , அவர்களின் நேரத்திற்கு முன்பே இறந்துவிடுவார்கள்). நம்முடைய காலத்தில் ஒரு காபியின் விலை 10 ரூபாய் எனில் , வருங்காலத்தில் ஒரு காபியின் விலை 20 நிமிடம் . அதாவது ,இப்போது சாதாரணமாய் ஒரு 10 ரூபாய் சம்பாதிக்க நமக்கு ஆகும் நேரம் 20 நிமிடம் எனில் , வருங்காலத்தில் அந்த நேரம்தான் காபியின் விலையாய் இருக்கும் . பொருட்களின் விலை உட்பட அனைத்தும் நேரத்தைச் சார்ந்தே அமைந்திருக்கும் . இதுதான் இப்படத்தின் தெளிவான கரு .சரி , இப்போது கதைக்கு வருவோம் . வருங்காலத்தில் மனிதர்கள் வாழும் இடங்களை TIME ZONE –களாகப் பிரித்துக்கொள்கின்றனர் . அதாவது TIME – 0 அல்லது GREENWITCH TIME ZONE என அழைக்கப்படும் நேரமண்டலத்தில் வாழ்பவர்கள் , பெரும்நேரக்காரர்களாகவும் (பணம் தான் இப்படத்தில் இல்லையே !)  , TIME ZONE 2, 3, 4 போன்றவற்றில் வாழ்பவர்கள் அவர்களின் வாழ்க்கை நேரத்தைப்பொறுத்து , பிரித்து வைத்திருக்கிறார்கள் . அப்படியொரு சூழலில் வாழ்பவன்தான் ஹீரோ வில் சாலஸ் . அவனுடைய இளமையான தாயுடன் ஒரு வறுமையான நேரமண்டலத்தில் வாழ்ந்துவருகிறான் . ஒரு பாரில் , ஹாமில்டன் என்பவனை வில்லன் க்ரூப்பிடம் இருந்து காப்பாற்றுகிறான் . அந்த ஹாமில்டன் 105 வயது வாழ்ந்து ,வாழ்க்கையை வெறுத்துவிட்டதாகக் கூறுகிறான் . ‘வில்’லுக்குத்தெரியாமலேயே , தன்னிடம் இருக்கும் 106 ஆண்டுகளை வில்லுக்குத் தந்துவிட்டு ஹாமில்டன் இறந்து போகிறான் . அதன்பின் தன் தாயின் 75 –வது பிறந்தநாளைக்கொண்டாடலாம் என செல்பவனுக்கு , ஒரு அதிர்ச்சி . அவன் கண்முன்னே , கையிலேயே நேரம் முடிந்து இறந்துவிடுகிறாள் . அதன்பின் ஹீரோ , பெரும் நேரக்காரர்கள் வாழும் க்ரீன்விச் நேரமண்டலத்துக்கு சென்று , ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார் . அதேநேரம் டைம் கீப்பர்ஸ் எனப்படும் காவல் அதிகாரிகள் ,106 ஆண்டுகளை ஒரேநொடியில் எப்படிகைமாற்றப்பட்டது என்பதைத்தீவிரமாக ஆராய்ந்து வில் , ஹாமில்டனைக்கொன்றதாகக் கருதி அவனைத்தேடுகின்றனர் .

இங்கோ ஹீரோயினைச்சந்திக்கும் ஹீரோ,அவள் ஒரு பெரும் கோடிஸ்வர நேரக்காரரின் மகள் என்பதனை அறிந்துகொள்கிறான் .ஹீரோயினும் ஹீரோவும் காதலிக்க ஆரம்பிக்கும் சமயத்தில் டைம் கீப்பர்கள் வந்து வில்லைப்பற்றிய உண்மைகளைக்கூறி , அவனிடம் இருக்கும் நேரத்தையெல்லாம் அபகரித்துக்கொள்கிறார்கள் . அதன்பின் அவர்களிடமிருந்து ஹீரோயினைக்கடத்திக்கொண்டு  தப்பிக்கும் ஹீரோ என்ன ஆனார் என்பதை பக்கா ஆக்சன் கலந்த திரில்லராக எடுத்திருக்கிறார்கள் .

இது ஒரு துளிகூட லாஜிக் இல்லாத கான்செப்ட் எனினும் , அதை அழகாய் பயன்படுத்தி , ஒரு அமர்க்களமான சயின்ஸ் – பிக்சன் படத்தைத் தந்ததற்கு  இயக்குனர் ஆன்ட்ரூவைத் தாராளமாகப் பாராட்டலாம் . ஒரு சீன்கூட அலுக்கமால் போனது . டோட்டல் ரீகால் திரைப்படத்தினைப்போல் ஒரு அட்டகாசமான அனுபவத்தை இதுவும் கொடுத்தது .

ஒரு காட்சியில்   ஹீரோவிடம் , ஹீரோயினின் தந்தை தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைப்பார் . அந்த ஸ்னாப்ஸாட்டை இதில் அப்லோட் செய்கிறேன் பாருங்கள் .
பார்த்துவிட்டீர்களா  ? இப்போது  உங்களிடம் ஒரு கேள்வி . இதில் யார் ஹீரோயினின் அம்மா ? யார் ஹீரோயின் ? யார் ஹீரோயினின் பாட்டி ?

நடிகர்கள் பற்றியெல்லாம் பெரிதாய்க்கூற ஒன்றுமில்லை . டைம் கீப்பராக வருபவர் மாத்திரம் நமக்கெல்லாம் பேட்மேனில் ஸ்கேர் க்ரோவாக அறிமுகமாகிய சில்லியன் மர்பி . எல்லாரும் சிறப்பான நடிப்பைக்கொடுத்திருக்கிறார்கள் . ஒளிப்பதிவும் அருமை ரகம்  . பிண்ணனி இசைதான் படத்திற்கு முழுபலம் என்றே கூறலாம் .


ஆக்சன் விரும்பிகள் , சயின்ஸ் – பிக்சன் விரும்பிகள் , கமர்ஷியல் விரும்பிகளுக்கெல்லாம் படம் தாராளமாய் பிடிக்கும் .தொடர்புடைய இடுகைகள்