ஐ படத்தின் கதை






விக்ரம் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் . சிறுவயதிலிருந்தே அர்னால்ட் போன்று பாடிபில்டராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் , ஜிம்மே கதி என்று இருக்கிறார் . ஒரு கட்டத்தில் ஷூட்டிங்’கிற்காக வரும் மாடல் அழகியான எமி ஜாக்சனை சந்திக்கிறார் . பார்த்தவுடன் எமியின் மேல் காதல் வருகிறது . ஆனால் மாடல் அழகியான எமிக்கு , விக்ரமைப்பிடிக்கவில்லை .



அவளை எப்படியாவது காதலிக்கவைக்கவேண்டும் என்று மாடலிங் துறையில் நுழைகிறார் . ஆனால் அவர் எதிர்பார்த்தது போல  , மாடலிங் துறை ஒன்றும் சாதாரணமானது கிடையாது என்று உணருகிறார் . அப்போதுதான் பிரபல ஆராய்ச்சியாளரான வில்லனைச்சந்திக்கிறார் . வில்லன் , விக்ரமை ஒரு சர்வதேச மாடலாக மாற்ற ஒரு மருந்தைத் தான் கண்டுபிடித்ததாக கூறுகிறான் .  அவனை நம்பும் விக்ரம் அந்த மருந்தை எடுத்துக்கொள்கிறார் . வில்லன் கூறியதுபோலவே , விக்ரம் அழகான இளைஞராக மாறிவிடுகிறார் .



அதன்பின் புது விக்ரம் மீது எமிக்கு காதல் வந்துவிடுகிறது . இருவரும் வெறித்தனமாக காதலிக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் , அந்த  மருந்தின் பின்விளைவுகளால் விக்ரம் கொடூரமானவராக மாறுகிறார் . எமியிடம் இருந்து விலகி , தனக்கான ஆன்டிடோட்டை தேடி அலைகிறார் . இப்போதுதான் உண்மையான பிரச்சனையே உண்டாகிறது . வில்லன் எமியைக்காதலித்தவர் . விக்ரம் போனதும் எமியிடம் தன்னைக்காதலிக்குமாறு  சொல்கிறார் . ஆனால் விக்ரமைக்காதலிக்கும் , அதை மறுத்துவிடுகிறார் . கடுப்பான வில்லன் , இவள் அழகாய் இருப்பதால் தான் இவ்வளவு திமிராய் இருக்கிறாள் என்றெண்ணி , அவளுக்கும் விக்ரமுக்கு கொடுத்த மருந்தை கொடுத்து விகாரமாக்க நினைக்கிறான் . இதை அறிந்துகொள்ளும் விக்ரம் , அதிலிருந்து எப்படி எமியைக்காப்பாற்றி , தானும் பழைய நிலைமைக்கு திரும்புகிறார் என்பதே கதை .

இந்த பதிவு முழுக்க ஒரு யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதே ! WHATS APP மற்றும் FACEBOOK-ல் பலரும் எழுதியிருந்தனர் . அதையும்  ட்ரைலரையும் வைத்துப்பார்க்கும்போது , திரையிலும் இந்த கதைதான் வரும் என எண்ணத்தோன்றுகிறது . பொங்கல் வரைப் பொறுத்திருந்து பார்க்கலாம் !!!



Comments

  1. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!!

      Delete
  2. உங்க கதையே நல்லாத்தான் இருக்கு :)

    ReplyDelete
  3. ஆகா
    கோடம்பாக்கம் கதை இலாக்காவிற்கு ஒரு ஆள் ரெடி போல

    ReplyDelete
    Replies
    1. ஆஹா !! நீங்களே கொழுத்தி விட்ருவிங்க போல இருக்கே !! இந்த படத்தோட கதை என்னோடதுனு எவனாவது வருவான் . சரியா 13ந்தேதி கேஸ் போடுவான் .

      Delete

Post a Comment

Popular posts from this blog

PERFUME – ஒரு பார்வை

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்