Posts

Showing posts from March, 2016

BATMAN v SUPERMAN : DAWN OF JUSTICE – சினிமா விமர்சனம்

Image
ஒவ்வொரு வருடமும் ரிலிசாகும் படங்களில் கண்டிப்பாக இந்த இந்த படங்களுக்கெல்லாம் தியேட்டருக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற ஒரு லிஸ்ட் நம்மிடம் இருக்கும்; நானும் அம்மாதிரியே தான் இருந்தேன். ஆனால் இந்த ஆண்டு, ஒரே ஒரு திரைப்படம் மட்டும் பார்க்கவே கூடாது என்று ஆண்டின் தொடக்கத்திலேயே முடிவெடுத்தது இத்திரைப்படத்திற்குத்தான். முக்கிய காரணம் கிறிஸ்டோபர் நோலன். பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோவை மக்கள் மத்தியில் ஒரு லெஜன்டாக உருவாக்கிவிட்டு அவர் சென்றார். பேட்மேனை ரீபூட் செய்த மாதிரி சூப்பர்மேனையும் ரீபூட் செய்தால் நன்கு கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்த வார்னர் பிரதர்ஸ் அதையும் சக்ஸசாக நிறைவேற்றியது. சூப்பர் மேனின் ரீபூட் வெர்சனனான மேன் ஆஃப் ஸ்டீல் 2013-ல் வெளிவந்து சூப்பர்மேனுக்கு உயிர்கொடுத்தது. சூப்பர்மேனின் இரண்டாம் பாகத்திற்காக வார்னர் பிரதர்ஸ் செய்த கொடுமை தான் இந்த படம். முதலில் இந்த திரைப்படத்தைப் பார்க்கும்முன் அவசியம் பார்க்கவேண்டிய இரண்டு திரைப்படங்களை இங்கு கூறிவிடுகிறேன். ஸ்னைடர் இயக்கத்தில்  2013-ல் வெளிவந்த மேன் ஆஃப் ஸ்டீல் மற்றும் ஜேய் ஓலிவா இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த அனிமேச

THE BUTTERFLY EFFECT – சினிமா விமர்சனம்

Image
என்.டி.ஆரின் நானக்கு ப்ரேமதோ திரை விமர்சனத்தை எழுதும்போது இடையில் இத்திரைப்படத்தைப் பற்றி எதேச்சையாக குறிப்பிட்டேன். இந்த திரைப்படம் நினைவுக்கு வந்ததும் உடனே இந்தபடத்தைப் பற்றி இத்தனை நாள் எழுதாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம்தான் தோன்றியது. அப்படி ஒரு ஸ்பெசல் ட்ரீட்மென்ட் தான் இத்திரைப்படம். உங்களுக்கு பல சர்ப்பரைஸ்களைக்கொடுக்கும் வல்லமை வாய்ந்தது இந்த பட்டர்ப்ளை எஃபெக்ட். ஏற்கனவே நானக்கு ப்ரேமதோ திரைப்படத்தைப் பற்றிய பதிவிலே கேயாஸ் தியரியைப்பற்றியும் அதன் கோட்பாடுகளில் ஒன்றான பட்டர்ஃப்ளை எஃபெக்ட் பற்றியும் பார்த்தோம். அந்த கான்செப்டை அப்படியே வைத்து ஒரு பக்காவான திரைக்கதையை எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் இந்த திரைப்படம். கேயாஸின்படி குத்துமதிப்பான நிகழ்காலம் குத்துமதிப்பற்ற எதிர்காலத்தை உருவாக்காது என்பதைவைத்து நாம் நம் இறந்தகாலத்தை மாற்றமுனைந்தால் என்னவாகும் என்பதே இத்திரைப்படம். நினைத்துப்பாருங்கள்; உங்கள் வாழ்க்கையின் மிகமுக்கியமான இறந்தகாலத்துக்கு இப்போது உள்ள நீங்கள் சென்றால் என்ன செய்வீர்கள்? எடுத்துக்காட்டாக ஒரு ஐந்தாண்டுகளுக்குமுன் நீங்கள் ஒருகொலையைச் செய்க

காதலும் கடந்து போகும் - சினிமா விமர்சனம்

Image
சில பிறமொழித்திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘ச்சே! இப்படி ஒரு மேக்கிங் தமிழ்ல இல்லயே’ என்று நம்மையே ஃபீல் பண்ணவைத்துவிடும். ஆனால் அந்த மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நம் மொழியில் ரீமேக் செய்யப்படும்போது கொத்திக்குதறி கொத்துப்பரோட்டா போட்டு கொடுப்பார்கள். என்னடா இது என்று நம்மை பந்தாடாத குறையாக தியேட்டரைவிட்டு அனுப்பி வைப்பார்கள். ஆனால் ஒரு திரைப்படத்தின் மூலக்கதையை மட்டும் வைத்து அதை அழகியல் காட்சிப்படுத்தலுடன் ஸ்மூத்தாக நகர்த்தியிருக்கிறார் நலன் குமாரசாமி. குறும்படத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் முதல் திரைப்படத்திலேயே கமர்சியல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி; உச்சத்திற்கு சென்ற முதல் டைரக்டர் நலன். 2013-ல் சூது கவ்வும் வந்தபோது எப்படியாவது முதல்நாளே பார்த்துவிடவேண்டும் என்று நைட்ஷோ சென்று பார்த்தபோது ‘ஓ.கே. தமிழ்சினிமாவின் எதிர்காலம் இந்த திரைப்படத்தின்மூலம் வேறு லெவலுக்கு நகர்த்திச் செல்லப்படபோகிறது’ என்று மனதினுள் பிக்ஸ் செய்தேன். அதேபோல் அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட பல புதுமுக இயக்குநர்களின் திரைப்படம் மட்டுமில்லாமல் பல மூத்த இயக்குநர்களும் தங்களின

RATATOUILLE – சினிமா விமர்சனம்

Image
அது 2005 என்று நினைக்கிறேன்; பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது நான் படித்துக்கொண்டிருந்த  பள்ளிக்கு, அருகிலுள்ள கல்லூரியில் இருந்து எம்.பி.ஏ மாணவர்கள் தங்களின் ப்ராஜெக்ட்காக புத்தகங்களை விற்க வந்தார்கள். “Whitakers world of facts” எனும் அப்புத்தகத்தின் வண்ணப்படங்களைப் பார்த்ததுமே வாங்கிவிடவேண்டும் என்ற ஆவல் எனக்குள் மலர்ந்தது. மேலும் அக்காலக்கட்டத்தில் பொது அறிவிலும் புத்தகங்கள் படிப்பதிலும் எனக்கு அதீத ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்டரி படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பாவின் வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் படித்து முடித்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். காமிக்ஸ், அரசியல் வரலாற்றுக்கட்டுரைகள், ஆச்சரியங்கள், அதிசயங்கள், விண்வெளி என எதைப்பற்றிய செய்தி கிடைத்தாலும் படித்துவிட்டுத்தான் மறுவேலை. அப்படியொரு அறிவுப்பசியில் (இப்போ இல்ல; அப்போ) திளைத்துக்கொண்டிருந்த எனக்கு அப்புத்தகம் பெரும் பொக்கிசமாகவே பட்டது. ஆனால் விலை கொஞ்சம் அதிகம்; எப்படி வாங்குவது? அன்று வீட்டிற்கு வந்ததுமே என் நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தேன்; முகத்தை சோகமாக வை

NTR’s 25- NANNAKKU PREMATHO – சினிமா விமர்சனம்

Image
(முன்குறிப்பு – இக்கட்டுரை திரைப்படம் வந்தபோது எழுதியது.  வேலைப்பளுவின் காரணமாக போஸ்ட் செய்ய இயலவில்லை. இது கொஞ்சம் பெரிய கட்டுரை. ஆனால் போர் அடிக்காமல் செல்லும் என நினைக்கிறேன். எனக்கு கட்டுரையெல்லாம் வேண்டாம், திரைப்படத்தைப்பற்றி மட்டும் பார்த்தால் போதும் என்பவர்கள் கடைசி 6 பாராவை மட்டும் படியுங்கள்.) தெலுகு சினிமா என்றாலே நம் ஊர் ஆட்களுக்கு சிறிது இளக்காரம் என்றே சொல்லலாம். ‘என்னய்யா  படமெடுக்கறாய்ங்க? கிளிப்பச்ச கலர் சட்ட, கடல்நீல கலர் ஃபேண்டுல அவிய்ங்கள பாத்தாலே சிரிப்பு தாங்கல. இது போதாதுனு பண்ணுவானுங்க பாரு ராவடி, குதிரைய படுக்கப்போட்டு வீலிங் அடிக்கறது, தொடய தட்டி முன்னாடி போற ரயில்ல ரிவர்ஸ்ல போக வைக்கறதுனு யப்பா! ஆளவிடுங்கடா சாமி’ என்பதே பெரும்பாலோனோர் தெலுகு சினிமாக்களைப் பற்றிய பொது அபிப்ராயமாக இருக்கும். காரணம் நம் ஆட்கள் தெலுகு திரைப்படங்களில் இதுமாதிரி வரும் அட்டுக் காட்சிகளை மட்டும் காட்டிவிட்டு இதுதான் தெலுங்கு படம் என்ற முடிவுக்கு உடனுக்குடன் வந்துவிடுவதே. என்னிடம் யாராவது வந்து பக்காவான கமர்ஷியல் படம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்க்கவேண்டும் என்று க