Posts

Showing posts from May, 2016

X-Men : APOCALYPSE – சினிமா விமர்சனம்

Image
வெல், X-MEN சீரிஸ்களைப் பற்றித் தனியாக சொல்லத்தேவையில்லை. ஹாலிவுட் ரசிகர்கள் அனைவருக்கும் பரிட்சயமான பெயர்களில்  மிகமுக்கியமான ஒன்று X-MEN. சூப்பர்ஹீரோக்கள் என்றாலே உடனுக்குடன் நியாபகம் வரும் மார்வல் காமிக்ஸ் படைத்த மிகமுக்கியமான காமிக்ஸ்களில் எக்ஸ்மேனும் ஒன்று. காமிக்ஸ் உலகபிதாமகன் ஸ்டான் லீயால் 1963 உருவாக்கப்பட்ட X-MEN இன்று 2016-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 10 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. அதற்கு மிகமுக்கிய மூன்று காரணங்கள் என்று பார்த்தால் இயக்குநர் ப்ரைன் சிங்கர், FIRST CLASS-ன் இரண்டாம் படைப்பான DAYS OF FUTURE மற்றும் இதுவரை சூப்பர் ஹீரோக்கள் கண்டிராத மிகபலசாலியான வில்லன் என் சபா நர் என்றழைக்கப்படும் அபோகலிப்ஸ்.  வெளிவர இருக்கும் அபோகலிப்சை, உருவான இடமான அமெரிக்காவிற்கு முன்பே நாம் காண இருக்கிறோம். ஆம், இத்திரைப்படம் உலகெங்கும் வெளியாகுவதற்குள் ஒருவாரம் முன்பே இந்தியாவில் ரிலிஸ் செய்யப்படுகிறது. இந்தியாவில் X-MEN ஃப்ரான்சீஸ்களுக்கென மிகப்பெரிய ஃபேன் பேஸ் இருப்பதால் இந்தியாவில் முதலில் ரிலிஸ் செய்வதாக ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. (இப்போதெல்லாம் ரிலிசாகும் ப

24 - சினிமா விமர்சனம்

Image
வழக்கமாக நான் திரைப்படம் செல்வதென்றால் குறைந்தபட்சம் ஒரு ஆறுபேரையாவது உடன் அழைத்துச் செல்வதுதான் வழக்கம்.  பெரும்பாலும் என்னுடன் வருபவர்களும் நான் செலக்ட் செய்யும் திரைப்படத்திற்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த வாரம் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்டேன். ஒருபுறம் 24, இன்னொருபுறம் CAPTAIN AMERICA-CIVIL WAR. இரண்டுமே நான் மிகவும் எதிர்பார்த்திருந்த திரைப்படங்கள். அவெஞ்சர்ஸ் சீரீஸ்களில் நான் ரசித்துப்பார்க்கும் திரைப்படமே கேப்டன் அமெரிக்கா தான். வின்டர் சோல்ஜருக்கு அடுத்து மீண்டும் கேப்டனைப் பார்க்க 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேபோல் என்று 13B பார்த்தேனோ அன்றிலிருந்து விக்ரம் குமாரின் ஒரு திரைப்படத்தையும்  விடாமல் பார்த்துவருகிறேன். இப்படி ஒரு இக்கட்டான சிக்கலில் நான் 24-ஐ நண்பர்களுக்கு பரிந்துரைக்க, என்னுடன் ஒருவர் மட்டும் கைகோர்க்க, ஏறத்தாழ 5 பேர் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்யும் நிலையில் இருந்தனர். படம் நன்றாக இல்லையென்றால் டிக்கெட் காசை நான் கொடுத்துவிடுகிறேன் என்று கூறி இழுத்துச் சென்றேன்.  ஆனால் திரைப்படம் ஆரம்பித்து சரியாக 5-வது நிமிடத்தில் வாயைப் பொழந்து பார்க