TRIANGLE - விமர்சனம் + அலசல்
கிறிஸ்டோபர் ஸ்மித்
அப்டினு ஒரு டைரக்டர் . அவர் எழுதி இயக்கிய திரைப்படம் தான் இது . இந்த மனுஷனுக்கு
விமர்சனம் எழுதறவங்க மேல என்ன காண்டோ தெரியல . எவனுமே விமர்சனம் எழுதிடக்கூடாதுன்னு
கங்கணம் கட்டி ஒரு படம் எடுத்துருக்காரு . இந்த படத்த எங்க ஆரம்பிக்கறது , எங்க முடிக்கறது
, எப்படி எழுதறதுனேத் தெரியலை . இருந்தாலும் இப்படத்தின் வாயிலாக நான் உணர்ந்ததை எழுதுகிறேன்
.
ஜெஸ் என்பவள் அறிமுகமாகிறாள்
. அவளுக்கு ஆட்டிசம் எனும் மனநோய்க்குறைபாடுள்ள ஒரு மகன் இருக்கிறான் . அவள் வீட்டில்
காலிங்பெல் அடிக்க , சென்று பார்க்கிறாள் . ஆனால் யாருமில்லை . சிறிதுநேரத்தில் வேறொரு
உடையில் தன் மகனிடம் பயப்படவேண்டாம் என்றுகூறி ஆறுதல் சொல்கிறாள் .
அடுத்த காட்சியில்
ஒரு படகைக்காட்டுகின்றனர் . TRIANGLE எனப்படும் அந்த படகின் உரிமையாளன் கிரேக் . அவனும்
ஜெஸ்ஸும் தோழிகள் என்பது அவர்களின் உரையாடல்களிலேயேத் தெரிகிறது . அவளின் மகன் எங்கே
எனக்கேட்கும் கிரேக்கின் வேலையாள் விக்டரிம் , பள்ளிக்குச்சென்றிருக்கிறான் எனக்கூறுகிறாள் . ஆனால் சனிக்கிழமை பள்ளி விடுமுறை
நாள் .விக்டர் , கிரேக், கிரேக்கின் தோழி சேல்லி ,அவளின் கணவன் டௌனி , அவர்களின் தோழி
ஹீதர் ஆகியோருடன் கடலில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறாள் ஜெஸ் .
படகு ஓரிடத்தில்
காந்தப்புயலில் (ROCK WAVES) சிக்கிக்கொள்கிறது . அப்போது உதவி கேட்டு கோஸ்ட் கார்டிற்கு
வயர்லஸ்ஸில் தகவல் அனுப்ப முயற்சிக்கும் கிரேக்கிற்கு , வேறொரு இணைப்பு கிடைக்கிறது
. அதில் ஒருபெண் , தங்களைக்கொலை செய்ய ஒருத்தி முயற்சிப்பதாகத் தெரிவிக்கிறாள் . அதேநேரம்
புயலில் படகு கவிழ்ந்துவிட அதில் ஹீதர் காணமல்
போக மற்ற ஐவரும் மூழ்கிய படகில் நின்று உதவிக்காக் காத்திருக்கிறார்கள் .
அப்போது AEOLUS
எனும் மாபெரும் கப்பல் ஒன்று வருகிறது . அதைப்பார்த்ததும் ஜெஸ்ஸிற்கு எப்போதோ பார்த்தது
போன்று தோன்றுகிறது . அந்த கப்பலில் இருந்து ஒரு உருவம் இவர்களைக்காண்கிறது . அதேநேரம்
அந்த கப்பலில் எல்லோரும் ஏறிவிடுகிறார்கள் . கப்பலில் ஏறியபின் பார்த்தால் , அந்த கப்பலில்
யாருமே இல்லை . கப்பலில் உள்ள அறைகளை எல்லோரும் பார்வையிடுகிறார்கள் . அப்போது கிரேக்கிடம்
, தான் இந்த கப்பலில் ஏற்கனவே இருந்தது போல தோன்றுகிறது என்கிறாள் ஜெஸ் . அதேநேரம்
, அந்த கப்பலில் ஜெஸ்ஸின் செயின் டாலர் ஒன்று கிடைக்கிறது . அவள் கிரேக்கிடம் இதைப்பற்றி
சொல்லும்போது , கிரேக் அவளைத்திட்டுகிறான் . அவன்மீது கோபம் கொண்டு , மற்றவர்கள் இருந்த
டைனிங் ஹாலுக்குச்செல்கிறாள் . அங்கே விக்டர் மிகமோசமாக அடிபட்டு , ஜெஸ்ஸைக்கொல்லவருகிறான்
. அவள் தப்பிக்கும்போது , தவறுதலாக விக்டர் இறந்துவிடுகிறான் . திடீரென துப்பாக்கிச்சத்தம்
கேட்க , ஜெஸ் அந்த சத்தம் வந்த திசையை நோக்கிச்செல்கிறாள் . அது ஒரு தியேட்டர் .
அங்கே கிரேக் குண்டடி
பட்டு கிடக்க , சேல்லியும் அவள் கணவன் டௌனியும் கிரேக்கை நீதான் சுட்டாய் எனக்கூறுகிறார்கள்
. அப்போது திடீரென ஒரு உருவம் தாக்க , அவர்களிருவரும் இறக்கிறார்கள் . சுட்ட உருவத்தைத்தொடர்ந்து
சென்று சண்டைபோடுகிறாள் ஜெஸ் . கடைசியில் அந்த உருவம் இறக்கும்போது ‘நீ வீட்டுக்குப்போக
வேண்டுமெனில் , இங்கிருப்பவர்கள் அனைவரையும் கொன்றாக வேண்டும்’ என சொல்லி கடலில் விழுந்துவிடுகிறது
. அதன்பின் என்ன ஆனது ? யார் கொலையாளி ? ஜெஸ் தப்பித்தாலா ? என்பதையெல்லாம் திரைப்படத்தைப்பார்த்து
குழம்பி கொள்ளுங்கள் .
இதுவரை படித்தது
விமர்சனம் . இதற்கு கீழ் படித்தால் படத்தைப்பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால்
இத்துடன் முடித்துக்கொண்டு , படம் பார்க்காதவர்கள் மீண்டும் கருப்பு நிறத்தில் இருக்கும்
பத்திகளை மட்டும் படியுங்கள் . சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பத்திகள்
, ஏற்கனவே படம் பார்த்து குழம்பித்திரிபவர்களுக்காக .
அதன்பின் தூரத்தில் யாரோ கத்தும் குரல் கேட்க , அத்திசை நோக்கிப்பார்க்கிறாள்
. அங்கே சிறிதுநேரத்திற்குமுன் , இறந்த அனைவரும் படகின்மீது நின்றுகொண்டு இக்கப்பலைப்பார்த்து
உதவுமாறு கையசைக்கிறார்கள் . அதாவது , படகு கவிழ்ந்தபின் , உதவிக்குத் தவித்துக் கொண்டிருந்த
5 பேர் தான் . இன்னும் புரியவில்லையா ?
// மற்ற ஐவரும் மூழ்கிய படகில் நின்று உதவிக்காக் காத்திருக்கிறார்கள்
. அப்போது AEOLUS எனும் மாபெரும் கப்பல் ஒன்று வருகிறது . அதைப்பார்த்ததும் ஜெஸ்ஸிற்கு
எப்போதோ பார்த்தது போன்று தோன்றுகிறது . அந்த கப்பலில் இருந்து ஒரு உருவம் இவர்களைக்காண்கிறது
. அதேநேரம் அந்த கப்பலில் எல்லோரும் ஏறிவிடுகிறார்கள் .//
இந்த
காட்சி மீண்டும் ரிப்பீட் ஆகுகிறது . ஆனால் இம்முறை இதை ஜெஸ் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்
. அதேநேரம் அங்கும் இருக்கிறாள் . அதாவது LOOP (நடந்ததே மீண்டும் நடப்பது .) எனப்படும்
முறை இங்கு நடக்கிறது . இப்போது அவர்கள் அனைவரும்
கப்பலுக்கு வருகிறார்கள் . தேடுகிறார்கள் . அவர்கள் பார்வையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு
முதல் ஜெஸ் ஓடும்போது , அவளின் டாலர் கீழே விழுந்து விடுகிறது . அவள் ஓடி விக்டரைப்பார்க்கிறாள்
. விக்டரிடம் இங்கு இருப்பவர்கள் அனைவரும் சாகப்போகிறார்கள் எனக்கூறுகிறாள் . அதைநம்ப
மறுக்கும் விக்டரிடம் புரியவைக்க முயற்சிக்கிறாள் . அப்போது எதிர்பாராதவிதமாக விக்டருக்குத்
தலையில் அடிபடுகிறது . அங்கிருந்து ஜெஸ் ஓடுகிறாள் . ஓரிடத்தில் சில காகிதங்கள் கிடக்கின்றது
. அதில் ‘IF THEY BOARD , KILL THEM ALL’ என எழுதியிருக்கிறது . அது சாட்சாத் அவளுடைய
கையெழுத்துதான் . அப்போதுதான் உணர்கிறாள் , அங்கு நடக்கும் விஷயங்கள் சுத்தி சுத்தி
ஒரே முடிவில் நிற்கிறது . அதாவது இரண்டாவது முறை அவர்கள் கப்பலில் ஏறியபின் ,ஜெஸ்ஸைத்தவிர அனைவரும் இறக்கிறார்கள் . கடைசியில்தான் உணர்கிறாள்
, அனைவரையும் கொல்வது ஜெஸ் தான் . அனைவரும் இறந்தபின் மீண்டும் அதே மாதிரி அனைவரும்
கப்பலில் ஏறுகிறார்கள் . சாகிறார்கள் . இப்போது நன்றாய் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால்
,
// சுட்ட உருவத்தைத்தொடர்ந்து சென்று சண்டைபோடுகிறாள் ஜெஸ்
. கடைசியில் அந்த உருவம் இறக்கும்போது ‘நீ வீட்டுக்குப்போக வேண்டுமெனில் , இங்கிருப்பவர்கள்
அனைவரையும் கொன்றாக வேண்டும்’ என சொல்லி கடலில் விழுந்துவிடுகிறது .//
என்று
கூறியிருந்தேன் அல்லவா ? அந்த கடலில் விழுந்த உருவம் ஜெஸ் தான் .
கடலில்
விழுந்த அவள் ஒரு கரையில் எழுந்திரிக்கிறாள் . அங்கிருந்து தனது வீட்டிற்குச் செல்கிறாள்
. அங்கே அவளுடைய இன்னொரு உருவத்தைக்காண்கிறாள் (இன்டர்ஸ்டெல்லர் கிளைமேக்சை ஞாபகத்தில்
கொள்க) . அவளது முன்னாள் உருவம் , தனது மகனை
அடித்து திட்டுகிறது . அதைப்பார்த்த பின் ஜெஸ் சென்று காலிங்பெல்லை அடிக்கிறாள் . அவளுடைய
உருவம் கதவைத்திறக்கிறது .
// ஜெஸ் என்பவள் அறிமுகமாகிறாள் . அவளுக்கு ஆட்டிசம் எனும் மனநோய்க்குறைபாடுள்ள
ஒரு மகன் இருக்கிறான் . அவள் வீட்டில் காலிங்பெல் அடிக்க , சென்று பார்க்கிறாள் . ஆனால்
யாருமில்லை .//
இந்த
பத்தியை மனதில் கொள்க . அந்நேரத்தில் வீட்டின் பின்புறம் செல்லும் ஜெஸ் , ஒரு கோடாரியை
எடுத்துவந்து தனது உருவத்தை கொல்கிறாள் . அதைப்பார்த்து மிரளும் மகனிடம் ஆறுதல் கூறுகிறாள்
.
//சிறிதுநேரத்தில் வேறொரு உடையில் தன் மகனிடம் பயப்படவேண்டாம்
என்றுகூறி ஆறுதல் சொல்கிறாள் . //
அதன்பின்
இறந்த உருவத்தைக்காரின் டிக்கியில் ஏற்றிக்கொண்டு , தன் மகனுடன் கிளம்புகிறாள் . வழியில்
ஒரு பறவை , காரில் அடிபட்டு இறந்துவிடுகிறது . அதை கொண்டு சென்று ஒரு இடத்தில் போடுகிறாள்
. அங்கே ஏராளமான பறவைகள் இறந்து கிடக்கின்றன ( அதாவது ஏற்கனவே ஜெஸ் பல LOOP களால்தை
எடுத்துப்போட்டிருக்கிறாள் . ) பின் தன் மகனுடன் பயணிக்கும் போது , ஒரு சாலை விபத்து
ஏற்படுகிறது . அதில் ஜெஸ்ஸின் மகன் இறந்துவிடுகிறான் . ஏற்கனவே இறந்துகிடந்த ஜெஸ்ஸின்
உடல் அங்கு கிடக்கிறது . ஆனால் கார் ஓட்டிய ஜெஸ் மாத்திரம் சர்வசாதாரணமாய் நின்று பார்க்கிறாள்
. பின் அவள் கிரேக் இருக்கும் இடத்திற்கு செல்கிறாள் .
// அடுத்த காட்சியில் ஒரு படகைக்காட்டுகின்றனர் . TRIANGLE எனப்படும்
அந்த படகின் உரிமையாளன் கிரேக் . அவனும் ஜெஸ்ஸும் தோழிகள் என்பது அவர்களின் உரையாடல்களிலேயேத்
தெரிகிறது . அவளின் மகன் எங்கே எனக்கேட்கும் கிரேக்கின் வேலையாள் விக்டரிம் , பள்ளிக்குச்சென்றிருக்கிறான் எனக்கூறுகிறாள் . ஆனால் சனிக்கிழமை பள்ளி விடுமுறை
நாள் .விக்டர் , கிரேக், கிரேக்கின் தோழி சேல்லி ,அவளின் கணவன் டௌனி , அவர்களின் தோழி
ஹீதர் ஆகியோருடன் கடலில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறாள் ஜெஸ் .//
-------- சுபம் --------
சத்தியமாக
உங்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது என்று நினைக்கிறேன் . அதனால் தான் கூறினேன் .
//கிறிஸ்டோபர் ஸ்மித் அப்டினு ஒரு டைரக்டர் . அவர் இயக்கிய திரைப்படம்
தான் இது . இந்த மனுஷனுக்கு விமர்சனம் எழுதறவங்க மேல என்ன காண்டோ தெரியல . எவனுமே விமர்சனம்
எழுதிடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி ஒரு படம் எடுத்துருக்காரு . இந்த படத்த எங்க ஆரம்பிக்கறது
, எங்க முடிக்கறது , எப்படி எழுதறதுனேத் தெரியலை . இருந்தாலும் இப்படத்தின் வாயிலாக
நான் உணர்ந்ததை எழுதுகிறேன் .//
சரி
, இப்போது குழப்பங்களுக்கான விடைகள் .
1.
கடைசியாக ஜெஸ்ஸிற்கு எல்லாம் தெரிந்திருக்க , அவள் எதற்காக மறுபடியும் போட்டில்
ஏறுகிறாள் ?
ஒருவேளை
அவள் மீண்டும் அனைவரையும் உயிருடன் காணும் பொருட்டு ஏறியிருக்கலாம் . அல்லது அடுத்த
அட்டம்ட்டில் தங்களின் நண்பர்கள் மற்றும் தன் குழந்தையினைக்காப்பாற்ற ஏறியிருக்கலாம்
. அல்லது படத்தின் திரைக்கதையை எழுதியவர் , எத்தனைமுறை பார்த்தாலும் உங்களுக்கு புரியவே
கூடாது என்ற தொணியில் எழுதியிருக்கலாம் .
2.
அப்படி அவள் ஏறியிருக்கும்போது அவளுக்கு முன்னர் நடந்த அனைத்தும் ஞாபகம்
வந்திருக்கவேண்டுமே ? ஏன் வரவில்லை ?
இந்த
இடத்தில்தான் திரைக்கதை ஆசிரியரும் , இயக்குநருமான கிறிஸ்டோபர் ஸ்மித் சறுக்கிவிட்டார்கள்
. ஒருவேளை படத்தின் திரைக்கதைக்காக அனைவரும் பாராட்டவேண்டும் என்பதற்காக அப்படியொரு
லாஜிக் மிஸ்டேக்கை உண்டாக்கியிருக்கலாம் . அதனால் தான் பிரமாதமான ஒரு திரைப்படம் கொண்டாடப்படாமலே
போய்விட்டது என்பது என் அவதானிப்பு. ஒருவேளை அவள் மனநோயாளியாக இருப்பாள் என்று நினைப்பதற்கும்
வாய்ப்பில்லை . ஏனெனில் அவளின் மனநோய்ப்பற்றிய சிறுதுளி காட்சிகள் கூட படத்தில் இல்லை
. அல்லது , அடுத்தமுறை LOOP நிகழும் போது அதை அவள் வெளிப்படுத்தியிருக்கலாம் அல்லது
, அடுத்தமுறை LOOP நிகழும் போது அதை அவள் வெளிப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்தாலும்
அதற்கும் வாய்ப்பில்லை . அதற்கான காரணம் , ஏற்கனவே பலமுறை அவள் அந்த LOOP- ல் சிக்கிக்கொண்டாள்
என்பதனை , அந்த டாலர் காட்சியிலும் , காகிதங்களின் வாயலாகவும் நமக்கு காட்டிவிடுகிறார்கள்
. எனவே திரைக்கதையை வெளிப்படுத்தும் பொருட்டு , இந்த காட்சியில் இயக்குநரின் பிழை வெட்டவெளிச்சமாய்த்தெரிகிறது
.
உங்களுக்கு
இப்படத்தில் வேறேதெனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட்டில் தெரிவியுங்கள் . என்னால் முடிந்தால்
நான் உங்களுக்கு விளக்குகிறேன் .
இந்த படத்தில்
திரைக்கதைக்கு அடுத்தபடியாக பெரிதும் பாராட்டப்படவேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் ராபர்ட்
ஹம்ப்ரிஸ் மற்றும் எடிட்டர் ஸ்டூவர்ட் ஆகிய
இருவரும் தான் . சான்சே இல்லாத அளவிற்கு ரம்மியமான ஒளிப்பதிவு . தமிழில் இதுபோன்ற கலரைசேன்
படங்கள் வந்துள்ளதா என்பது சந்தேகம் தான் . இந்த படத்தின் எடிட்டருக்கு இன்னும் பைத்தியம்
பிடிக்காமல் இருப்பது ஆச்சரியம் தான் .
இந்த படத்தின்
இயக்குநர் , மெமன்டோ மாதிரியான ஒரு திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்ற ஆசையில் எடுத்தபடம்
தான் இது . அதற்கேற்றாற்போல் மெமன்டோவிற்கு சிறிதும் குறைவில்லாமல் இப்படத்தை எடுத்துள்ளார்
. ஆனால் மெமென்டோவில் இருந்து , இதில் இல்லாமல் போனது மேலே பார்த்த அந்தவொரு பிரச்சனைதான்
. மெமன்டோவில் , நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் . ஆனால் இப்படத்தில் முடிவு என்பது
எதுவுமே கிடையாது . ஆரம்பமே படத்தில் கிடையாது . TRIANGLE என்பதற்கு பதில் CIRCLE என்று
டைட்டில் வைத்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் . ஆனால் எப்படி பார்த்தாலும்
வெறும் 11 கோடியில் இப்படியொரு அட்டகாசமான திரைப்படத்தைக்கொடுப்பது கடினமான விஷயம்
தான் .
இந்த
படத்தைத்தாண்டிய இன்னொரு விஷயத்தை்ககுறிப்பிடுகிறேன் . உங்களில் பலர் பெர்முடா முக்கோணம்
பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் . மனிதர்கள் என்னதான் GPS , GPRS னு கண்டுபிடித்தாலும்
, இயற்கையின் ரகசியங்களில் அவை செயல்படாது என்பதற்கு அதிசிறந்த உதாரணம் தான் பெர்முடா
முக்கோணம் . வட அமெரிக்காவின் கிழக்கே இருக்கும் பனமா கால்வாயில் அதைந்துள்ள ஒரு தீவு
தான் பெர்முடா . அதைச்சுற்றியுள்ள முக்கோணப்பகுதியே பெர்முடா முக்கோணம் . இந்தவழியில்
பயணித்த கப்பல்கள் என்ன ஆனது என்பது இன்னும் புரியாத மர்மமாகவே உள்ளது . கப்பல் தான்
இப்படினு ப்ளேன்ல அந்த வழியா புறப்பட்டவங்களும் அப்ஸ்காண்ட் ஆகிட்டாங்க . அதிலிருந்து
தப்பிப்பிழைத்ததாக கூறிய ப்ரூஸ் எனும் விமானியின் கதையைக்கேட்டால் , கண்டிப்பாய் நம்ப
மாட்டிர்கள் .
புரூஸ்
மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது
தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல்
அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது. அவரது 15 வருட
விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில்
மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி
தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது. வேகமாக
அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து
கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16
கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு
அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க
பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து
வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக
இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த
தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ
மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின்
அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு! (நன்றி - வால்பையன்)
எப்படி
கதை நல்லா இருக்கா ? இதற்கு விஞ்ஞானிகள் ப்ளாக் ஹோல் , வார்ம் ஹோல்னு ஏதேதோ
அடுக்கினாலும் , அதைப்பற்றிய துல்லியமான முடிவுகள் இன்னும் வரவில்லை என்பதே உண்மை .
மொத்தத்தில் ,
பயங்கரமாக குழப்பவேண்டும் என்ற எண்ணத்திலும் , திரில்லர் , ஹாரர் டைப் படங்கள்
பார்க்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற திரைப்படம் . கண்டிப்பாக மிஸ் பண்ணாமல்
பாருங்கள் . நல்ல குழப்ப அனுபவம் கிடைக்கும் . ரொம்ப மூளைக் குழம்பிடுச்சினா ,
நம்ம தளத்துக்கு வந்து படிச்சுப்பாருங்க . ஓரளவு புரியும்னு நினைக்கிறேன் .
இதேமாதிரி குழப்பவல்ல ஒரு படமாக EVERYWHEN என்ற படத்தையும் பரிந்துரைக்கிறேன் .
யப்பா எப்படீப்பா இத்துணை பதிவு ...
ReplyDeleteகடைசியாக வந்து பியானிஸ்ட் படித்தேன்..
அதற்குள் இத்துணை படங்களா... வாவ்.
நல்ல படமாகத் தான் இருக்கும் என நினைக்கேன்..
நன்றி
த ம பட்டை என்ன ஆச்சு..
அண்ணா கொஞ்சம் ஃப்ரியா இருந்தேன் . அதான் டக்கு டக்கு டக்குனு எழுதி போஸ்ட் பண்ணிட்டேன் . கண்டிப்பா பாருங்க . ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்
Deleteபாஸ் இந்த படத்த நான் ஏற்கனவே பாதுட்டேன் பட் ஒண்ணும் புரியல, உங்க ரிவ்யு வாலா கொஞ்சம் தெளிவு கிடைச்சது, மிக நன்றி,
ReplyDeleteநானும் ரெண்டுதரவ பாத்து அலசுனங்க ! வேற யாராவது ரிவியு எழுதிருந்தா படிச்சாவது அந்த குழப்பத்த தீத்துக்கலாம்னு போனா , யாருமே எழுதல . தேடிப்பார்த்த ஆர்டிகல்ஸ் எல்லாம் மேலோட்டமாத்தான் இருந்திச்சி !
Deleteகருத்துக்கு நன்றிங்க
Predestination படம் பார்த்து விமர்சனம் எழுதுங்க!!! same type
ReplyDeleteஅது இன்னும் பாக்கலைங்க ஜீ ! பாத்துட்டு எழுதிடலாம் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல !!!
Delete??அப்படி அவள் ஏறியிருக்கும்போது அவளுக்கு முன்னர் நடந்த அனைத்தும் ஞாபகம் வந்திருக்கவேண்டுமே ? ஏன் வரவில்லை ?
ReplyDeleteஇந்த இடத்தில்தான் திரைக்கதை ஆசிரியரும் , இயக்குநருமான கிறிஸ்டோபர் ஸ்மித் சறுக்கிவிட்டார்கள் . ஒருவேளை படத்தின் திரைக்கதைக்காக அனைவரும் பாராட்டவேண்டும் என்பதற்காக அப்படியொரு லாஜிக் மிஸ்டேக்கை உண்டாக்கியிருக்கலாம்??
இந்த இடத்தில் நான் எந்த லாஜிக் மிஸ்டேக்கையும் பார்க்கவில்லை.. அவள் traingleக்கு வரும் வரை அனைத்தும் ஞாபகத்தில் இருக்கிறது.. அதன் பின் படகில் ஒய்வு எடுக்கும் போது ஆழ்த்த நித்திரைக்கு பின் அவளுக்கு நடத்தது எதுவும் ஞாபகத்தில் இல்லை (இதை சிறிய உரையாடல் முலம் இயக்குனர் தெரியப்படுத்துகிறார்). இப்படத்தை பார்த்த பின் நமக்குள் நிறைய கேள்விகள் ஏழும் இதுவே இப்படத்தின் வெற்றி. இந்த loopல் எந்தனை jess வருகிறாள் என சொல்ல முடியுமா?...