Friday, 5 December 2014

CN’s - THE PRESTIGE – மறக்கமுடியாத திரைப்படம்கீழே உள்ளது  பிரஸ்டீஜ் படத்தின் துவக்கத்தில் வரும் வசனம் . அதில் மேஜிக் எனும் இடத்தில் சினிமா என்று மாற்றிப்படித்தால் பிரஸ்டீஜ் படத்திற்கு அப்படியே பொருந்தும் .

In magic circles, every great trick consists of three acts. The first is called The Pledge, where the magician shows you something ordinary but it probably isn’t. The second act is called The Turn, where the magician makes his ordinary something do something extraordinary. And the third act is called The Prestige, the part with the twists and turns that hides the secret and allows you to see something shocking you’ve never seen before .
மெமென்டோ பற்றிய பதிவில் நான் – லீனியர்ர திரைக்கதை பற்றி பார்த்திருக்கிறோம் . மெமென்டோ படத்தை நான் – லீனியரின் உச்சம் என்றால் , பிரஸ்டீஜ் திரைப்படத்தை , நான் – லீனியரின் ஒரு மணிமகுடம் என்றே கூறலாம் . ரசிகர்களுக்கு புரிந்தாலும் சரி , புரியவில்லையாயினும் சரி என்ற நோக்கில் நோலன் திரைக்கதை எழுதிய படமே பிரஸ்டீஜ் . மெமென்டோவில்  ,முதல்பாதி  காட்சிகள் முன்னோக்கி நகரும் வண்ணமும் , கருப்பு வெள்ளைக்காட்சிகள் பின்னோக்கியபடியும் அமைத்திருப்பார் . ஆனால் , இப்படத்தில் , அப்படியெல்லாம் கிடையாது. ஒன்றுக்கொன்று துளி சம்பந்தமும் இல்லாமல் காட்சிகள் நகரும் . ஆனால் , அதை நோலன் , பிளாஷ்பேக்கினுள் ஒரு பிளாஷ்பேக் என்ற வகையில் எழுதியிருப்பார்  மஹாபாரதம் படித்த பலரும் அதில் ஆச்சரியப்படும் விஷயமாக நினைப்பது கிளைக்கதைகள் . அதாவது , ஒரு கதை நடக்கும்போது , அதனுள் ஒரு கதையும் , அந்த கிளைக்கதையில் ஒரு கதையும் நடப்பதை அறிவர் . அப்படிப்பட்டதே இந்த பிரஸ்டீஜ் .

19 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த , ஆஞ்சியர் மற்றும் பார்டன் என்ற இரு மேஜிக் கலைஞர்களின் பிரஸ்டீஜ் பிரச்சனையே இப்படம் . ஆஞ்சியரும் பார்டனும் ஒரே மேஜிக் கம்பனியில் வேலை செய்பவர்கள் . ஆஞ்சியருக்கு தொழிலாக தெரியும் மேஜிக் , பார்டனுக்கு கலையாக தெரிகிறது .மேஜிக்கிற்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கலாம் என்று வாழ்பவன் பார்டன் . ரசிகர்களிடமிருந்து கைத்தட்டல் வாங்கினால் போதும் என்பவன் ஆஞ்சியர் .  ஒரு மேஜிக் ஷோவின் போது , பார்டன்  செய்த தவறினால் ஆஞ்சியரின் காதலி உயிரிழக்கிறாள் . பார்டனின் தவறைப்பற்றி ஆஞ்சியர் கேட்கும்போது , ‘நடந்தது என்ன என்று தெரியவில்லை’ என்று பார்டன் கூறுகிறான் . அப்போது இருவரும் பிரிகிறார்கள் . ஆஞ்சியர் ஒரு பெரிய மேஜிக் கலைஞனாக மாறுகிறான் . பார்டனோ , சிறு சிறு ஷோவினை நடத்தி பிழைப்பு ஓட்டுகிறான் . இவையெல்லாம் நடக்கும்போதே பார்டன் தான் காதலித்தவளை திருமணம் செய்துகொண்டு நிம்மதியான வாழ்க்கையை துவக்குகிறான் . தன் காதலியைக்கொன்றுவிட்டு அவன்மட்டும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதா என்று கோவம் கொள்ளும் ஆஞ்சியர் , அவனின் மேஜிக் ஷோவினுள் புகுந்து குழப்பம் விளைவிக்கிறான் . அதேபோல் பார்டனும் ஆஞ்சியரின் ஷோவினுள் புகுந்து குழப்பி , ஆஞ்சியரை அவமானப்படுத்துகிறான் . ஒருமுறை பார்டனின் ஒரு மேஜிக் ஷோவினுள் புகும் ஆஞ்சியர் , பார்டனின் மேஜிக்கை கண்டு அதிர்ச்சியாகிறான் . THE TRANSPOTED MAN எனும் பெயரில் , பார்டன் , ஸ்டேஜின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு நொடியில் இடம்பெயரும் அவ்வித்தையை பார்த்தவுடன் , ஆஞ்சியரும் அதேபோல் செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறான் . அதுபற்றி தனது என்ஜினியரான கட்டரிடம் வினவும் ஆஞ்சியருக்கு , கட்டர் அது ஒரேமாதிரியான உருவம் உடைய இரண்டுபேர் சேர்ந்துசெய்யும் மேஜிக் என்று கூறுகிறார் . அதை நம்ப மறுக்கும் ஆஞ்சியர் , தன்னைப்போன்றே உருவம் உடைய ஒரு குடிகாரனை கண்டறிகிறார் . அவனைக்கொண்டு , ஆஞ்சியரும் THE TRANSPORTED MAN ஷோவினை நடத்தி வெற்றி காணுகிறான் . ஒருகட்டத்தில் தன் புதுகாதலியை பார்டனிடம் அனுப்பி வேலைக்கு சேரவைத்து அவனின் டைரியை திருடிவரச்சொல்கிறான் . ஆனால் , அவளோ கடைசியில் பார்டனை விரும்பி ஆஞ்சியரின் சீக்ரெட்டை உடைக்கிறாள் .  அதனால் பார்டன்  ஆஞ்சியரின் உருவத்துடன் இருக்கும் குடிகாரனை வைத்து , ஆஞ்சியரின் மேஜிக் ஷோவினுள் புகுந்து ஆஞ்சியரை  பெரும்அவமானத்திற்கு உட்படுத்திவிடுகிறான் . அந்நிகழ்ச்சியின்போது ஆஞ்சியரின் கால் உடைந்துவிடுகிறது . கடுப்படைந்த ஆஞ்சியர் , பார்டனின் என்ஜியரை கடத்துகிறான் . பார்டனும் , தன் எஞ்சினியரைக்காப்பாற்றுவதற்காக தன்னுடைய ஷோவின்  ரகசியம் ‘டெஸ்லா’ எனும் விஞ்ஞானிதான் என்று சொல்கிறான் .  எடிசன் காலத்தில் வாழ்ந்த அவ்விஞ்ஞானியை சந்திக்கும் ஆஞ்சியர் , டெஸ்லாவின் ஆராய்ச்சிக்குத்தேவையான பணத்தை தான் கொடுப்பதாகவும் , மின்சாரத்தின் மூலம் மனிதனை மறையவைக்கும் இயந்திரத்தை கண்டறிந்து தருமாறும் வேண்டுகிறான் .  பலபோராட்டங்களுக்கு பின் ஒரு இயந்திரம் கிடைக்கிறது . ஆனால் அது அப்படியே மனிதனை ஜெராக்ஸ் செய்து தருகிறது . இடையில் பார்டன் திடீர் திடீரென மனம் மாறுகிறான் . ஆஞ்சியரின் முன்னாள் காதலியான ஒலிவியாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறான் . அவனுடைய நடத்தையினால் கடுப்பாகும் பார்டனின் மனைவி , தற்கொலை செய்துகொள்கிறாள் . ஆஞ்சியரோ , தன்னுடைய புது மெஷினின் உதவியுடன் மீண்டும் மேஜிக் ஷோ நடத்தி வெற்றிபெறுகிறான் . ஆஞ்சியரின் தந்திரத்தை அறிய வரும் பார்டனை  வஞ்சகமாக தூக்குமேடைக்கு ஆஞ்சியர் அனுப்புகிறான் . கடைசியில் பார்டன் தப்பித்தானா ? ஆஞ்சியர் என்ன ஆனான் ? பார்டனின் குழந்தை என்ன ஆனது ? போன்ற பலகேள்விகளுக்கு ஒரு பட்டாசான கிளைமேக்சை கொண்டு நோலன் முடித்திருப்பார் .
ஆஞ்சியராக X-MEN புகழ் HUGE JAGMAN மற்றும் பார்டனாக CHRISTIAN BALE நடித்திருப்பார்கள் . பேட்மேன் படங்களில் ஆல்பிரட்டாக வந்த  MICHEL CAINE தான் , இதில் கட்டராக நடித்திருப்பார் . ஏற்கனவே நாம் பார்த்திருந்த படி நோலனின் தயாரிப்பு நிறுவனமான syncopy தான் இப்படத்தினை தயாரித்தது .நோலன் சகோதரர்கள் இணைந்து திரைக்கதை எழுதியிருப்பார்கள் . இப்படத்தில்  RICKY JAY எனும் புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் , படத்தில் வரும் மேஜிக் காட்சிகளின் ட்ரிக்குகள் மற்றும் காட்சியமைப்புகளை வடிவமைத்துக்கொடுத்துள்ளார் . இதேபோன்றுதான் நோலனின் தற்போதைய படமான இன்டெர்ஸ்டெல்லரிலும் ஒரு விஞ்ஞானியை நோலன் பயன்படுத்தி இருப்பார் . இந்த படத்தை உற்றுநோக்கினால் , வில்லனும் ஹீரோவும் இல்லாத ஒரு படமாகத்தான் தெரியும் . நம் மனதிற்கு யார் ஹீரோவாக தெரிகிறார்களோ , அவரையே நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் . முன்னமே கூறியபடி இத்திரைப்படம் ஒரு பக்கா நான் – லீனியர் ஸ்கிரிப்டில் உருவாகியிருந்தாலும் , எது நிகழ்காலம் எது கடந்த காலம் என்று உணர்வதற்குள்ளேயே படம் முடிந்துவிடும் . இன்னொரு முக்கியமான விஷயம் , நோலன் திரைப்படங்களில் எப்போதுமே கிளைமேக்ஸ் வரும்முன் வரை ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கியிருப்பார் . ஆனால் கிளைமேக்சின் முடிவில் அந்த நம்பிக்கை அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு புதிதான ஒரு மாற்றத்தை கொடுத்திருப்பார் . அதாவது 2 மணிநேர படத்தில் , 1.55 மணிநேரம் நம்மை ஒருவழிக்குக்கொண்டுவந்து நம் மனதையும் இதுதான் கதை , இதுதான் முடிவு என நம்பவைத்துவிட்டு பின் கடைசி 5 நிமிடத்தில் வைப்பார் பாருங்கள் ட்விஸ்ட் . அவ்வளவு நேரம் நாம் நம்பியது அனைத்தும் பொய் , இதுதான் இப்படத்தின் முடிவு என நம் நம்பிக்கையை அப்படியே மாற்றிவிடுவார் . இப்படத்திலும் அது அருமையாக அமைந்திருக்கும் . அதுவும் ஒன்று , ரெண்டு ட்விஸ்டுகள் அல்ல ! ஏராளம் .இன்சோம்னியா மற்றும் பேட்மேன் ட்ரையாலஜி நீங்கலாக மற்ற அனைத்து படங்களிலும் இதே வியூகத்தில்தான் படத்தை முடித்திருப்பார் .

இப்படத்தில் ஆஞ்சியராக நடித்திருக்கும் ஜாக்மேன் , ஒரு ஆஸ்திரேலிய நடிகர் . மெமென்டோ படத்தின் GUY PIERCE கூட ஆஸ்திரேலிய நடிகர் தான் . இப்படத்திற்காக , பல மேஜிக்களை கற்ற ஜாக்மேன் , படத்தின் ஷூட்டிங் முடிந்த பின் தன்னுடைய மகளுக்காக ஒரு ப்ரைவேட் மேஜிக் ஷோவினை நடத்தினார் . ஆனால் , அவருடைய மேஜிக்களை அவருடைய மகள் கண்டுபிடித்தது தனி விஷயம் . படத்திற்காக அந்தளவு இன்வால்வ்மென்ட் ஆனாராம் .
இப்படத்தில் வரும் மேஜிக் காட்சிகளுக்காக ஜொனதன் உட்பட அனைவருமே மிக ஆர்வமாக உழைத்தார்கள் . ஆனால் நோலன் மாத்திரம் ஜாலியாய் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார் .காரணம் , நோலனுக்கு மேஜிக்கின்பால் தனி ஈடுபாடு . அதன் உண்மைகளை அறிந்தால் , மேஜிக்கின்மீது இருக்கும் ஈடுபாடு சென்றுவிடும் என்பதே இதைப்பற்றிய அவருடைய கருத்து .

இப்படம் நடக்கும் காலம் 19 – ம் நூற்றாண்டு .  ஆனால் நோலனுக்கு பீரியட் படம் எடுப்பதில் அவ்வளவாய் ஆர்வம் கிடையாது என்றே கூறினார் . காரணம் பிரஸ்டீஜ் ஒரு சுமாரான பட்ஜெட் உடைய திரைப்படம் . அந்த பட்ஜெட்டைக்கொண்டு 19 – ம் நூற்றாண்டை திரையில் காட்டுவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் . அதுவும் இங்கிலாந்து , 19 – ம் நூற்றாண்டில் உலகளவில் பெரியதொரு ராஜாங்கமாக உருவாகியிருந்த காலகட்டத்தில் கதை நடக்கிறது என்றால் எப்படியெல்லாம் செலவாகும். படத்தின் கதை நடப்பது இங்கிலாந்து எனினும் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டது லாஸ் ஏஞ்சலஸில் தான் . படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்கள் நிஜத்தில் பார்ப்பது போல் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். அதனால்தான் இப்படத்தின் கலைக்காக , கலை இயக்குனர்கள் நாதன் க்ரௌளி மற்றும் ஜூலி ஆகியோர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்..

இப்படத்தில் வரும் பல காட்சிகள் மேஜிக் கலைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் அர்ப்பணிப்பு , அன்றைய காலகட்டங்களில் இருந்த முதலாளி – தொழிலாளித்துவம் போன்ற கருத்துகள் , எடிசனுக்கும் டெஸ்லாவுக்கும் இடைப்பட்ட பிரச்சனைகள் , மேஜிக் ட்ரிக்குகள் என பல விஷயங்களை கண்முன்னே காட்டியிருப்பார் . வழக்கமாக நோலன் சாத்தியமில்லாத விஷயங்களைத்தான் திரையில் கொண்டு வந்து நம்மை திரைக்கதையால் நம்ப வைப்பார் . இந்த படத்திலும் மனிதையே க்ளோனிங் செய்யும் மெஷின் போன்ற விஷயங்களை கொண்டுவந்து நம்ப வைத்திருப்பார் .இத்தனைக்கும் இப்படத்தில் பல இடங்களில் க்ளூக்களை அள்ளித்தெளித்திருப்பார் . மேலே பதிவின் தொடக்கத்தில் ,நான் சொன்ன படத்தின் வசனத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள் .CHRISTOPHER PRIEST –ன் THE PRESTIGE நாவலை , திரைக்கதையாக மாற்ற , கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நோலன் சகோதரர்கள் உழைத்தார்கள்

இப்படத்தில் ஒரு சீனாக்கார மேஜிசியன் வருவார் . CHUNG LING SOO எனும் அவர் அக்காலகட்டங்களில் பிரபல மேஜிக் கலைஞர் . அவரின் மேஜிக் டெக்னிக் என்னவென்று வெறும் வார்த்தையால் மட்டும் விளக்கியிருப்பார்கள் . அதுவும் அருமையாக இருக்கும் . இந்த சூ தான் படத்தில் வரும் புல்லட் கேட்ச் மேஜிக்கை முயற்சி செய்து உண்மையில் மரணத்தை தழுவியவர் .


இப்படத்தில் HUGE JACKMEN மற்றும் CHRISTIAN BALE இருவரும் வாழ்ந்தே இருப்பார்கள் . ஜாக்மேனின் வெறி மற்றும் குரோதத்தை வெளிப்படுத்தும் நடிப்பாகட்டும் , பேலின் பழிவாங்கும் முகமாகட்டும் அத்தனையும் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார்கள் . பார்டனின் மனைவி , ஆஞ்சியரின் மனைவி , ஆஞ்சியர் மற்றும் பார்டன் இருவரின் காதலி என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கார்கள் . வழக்கம்போல மைக்கேல் கைன் கட்டராக வந்து நம் மனதை கொள்ளை கொள்கிறார் .  படத்தில் டெஸ்லாவாக வரும் டேவிட் பௌவி ஒரு இசையமைப்பாளர் , நடிகர் , தயாரிப்பாளர் என பன்முகமுடையவர் . அவரிடம் கால்ஷிட் வாங்குவதுதான் நோலனுக்கு பெரும்பாடாய் இருந்ததாம் . அவருடன் நடிக்கையில் ஜாக்மேன் கூட பதட்டத்தில் பல டேக்குகள் வாங்கியிருந்தாராம்.  இரண்டுமுறை கிராமி விருதுகள் வென்றவர் என்பது கூடுதல் செய்தி . இவரின் உதவியாளராக வரும் ஆன்டி செர்கிஸ்தான் , டான் ஆஃப் தி ஏப்ஸ் படத்தில் வரும் சீசர் என்றால் நம்பமுடிகிறதா ? மேலும் இத்திரைப்படம் நியூ மார்க்கெட் பிலிம்ஸால் இனைந்து தயாரிக்கப்பட்டது . அந்த தயாரிப்பு நிறுவனம் தான் ஓலனுக்கு முதலில் மெமென்டோ வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது . டேவிட் ஜூலியன் இசை படத்தை அழகாய் நகர்த்திச்செல்லும் . 40 மில்லியனில் தயாரான இத்திரைப்படம் , 100 மில்லியன் வசூலை அள்ளியிருந்தாலும் இத்திரைப்படத்திற்கான வசூல் அதுவல்ல என்பது படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாய் தெரியும். படத்தை பற்றி மேலே கூறினால் அது கண்டிப்பாய் எக்கச்சக்க ஸ்பாய்லராய் மாறிவிடும் என்பதால் இத்துடன் இப்பதிவை முடித்துக்கொள்கிறேன் . படத்தை பார்க்கத்தொடங்கும்முன் வரும் வசனத்தை கவனமாக கொண்டு படத்தினை பாருங்கள் . ஒரே முறையில் படம் அழகாய் புரியும் . அட ! இவ்வளவு எழுதிவிட்டு அந்த வசனத்தை எழுதாமல் விட்டால் பதிவு முழுமையடையாதல்லவா ! ARE YOU WATCHING CLOSELY ? பை த பை இது என்னுடைய 50-வது பதிவு ! அதுவும் எனக்கு மிகமிக பிடித்த நோலனின் பிரஸ்டீஜ் படத்தை எழுதியது சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பதிவில் THE DARK KNIGHT உடன் உங்களைச்சந்திக்கிறேன் .


தொடர்புடைய பதிவுகள் 


நோலன்;s - Memento - Part 2


நோலன்'S - Memento -Part 1

நோலன்'s - Following


நோலன் 's - Insomnia


நோலன்'s - Batman Begines
உங்கள் விருப்பம்

9 comments:

 1. நண்பரே,

  முதலில் பாராட்டுகளும் வாழ்த்துக்களும். உங்களின் 50வது பதிவுக்கான தேர்வு அபாரமானது.

  ப்ரிஸ்டீஜ் நோலனின் அதி அற்புதம். உங்களைப் போன்ற எனக்கும் இந்தப் படமே நோலனின் மிக உன்னதமானது என்ற எண்ணம் உண்டு. மிக அழகான விவரிப்பு. நல்ல வேலையாக படத்தின் முடிவில் தோன்றும் ஆச்சர்யத்தை உடைக்காமல் ரகசியத்தை காப்பாற்றியது பாராட்டுக்குரியது. Are you watching closely? ஒரு நல்ல tag line.

  என்னை வெகுவாக கவர்ந்த வசனம் படத்தின் இறுதியில் பார்டனிடம் கேட்கப்படும் கேள்விக்கு ("Do you have any last words?") அவன் சொல்லும் பதில்தான். மேஜிக் கலையைப் பற்றி அறிந்தவர்களுக்கு அது மிகச் சரியாகப் புரியும். ஒரு உண்மையான மேஜிக் கலைஞன் தன் வாழ்வின் அந்தக் கடைசி கணத்தில் இதைத்தவிர வேறு என்ன சொல்லமுடியும்? பார்டன் சொல்வது.

  "Abracadabra".

  ReplyDelete
  Replies
  1. அந்த கேள்வியை கேட்டவுடன் அவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தையான Abracadabra வைக்கேட்டதும் நானே அதிசயித்துதான் போனேன் . ஆனால் , படத்திலேயே அதை தெளிவாக கூறிவிடுவார்கள் . பார்டனுக்கு மேஜிக் என்பது உயிர் போன்றது . அவன் அதற்காக எவ்வளவு தியாகம் வேண்டுமானாலும் செய்வான் . அதை உணர்த்துவது போலிருக்கும் வசனம் தான் அது . அதே போல் படம் ஆரம்பிக்கும்போது வரும் Are you watching Closely , சாரா கேட்கும் கேள்வியான Did u love me ? என்பதற்கு பார்டன் தரும் பதில்கள் , என படத்தில் பல வசனங்கள் நச் ரகம் தான் . கிளைமேக்ஸில் ஆஞ்சியரும் பார்டனும் , மேஜ்ஜிக்கிற்காக தாங்கள் செய்ததைக்கூறுவதும் அருமையாக இருக்கும் . நோலனின் படங்களில் வசனங்கள் ஷார்ப் அன்ட் ஷார்ட் . அதில் இந்த படம் மாஸ்டர்பீஸ் .

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!!

   Delete
  2. காரிகன் எனது பதிவு டிராப்ட் மோடில் இருக்க இங்கே பதிவே வந்துவிட்டது ...
   இனி நான் வேறுமாதிரி எழுதனும்... ஹ ஹ
   ஹெல்தி காம்படீஷன்..

   Delete
 2. உங்கள் ஆங்கிலப் பட ரசனையைக் கண்டு ,எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. அண்ணன் ஜோக்காளிக்கு எப்பவுமே ஜோக்கு தான் !!

   ஹீ ஹீ ஹீ

   Delete
 3. படங்கள் தேர்வு அருமை ...
  தகவல்களை கொட்டிவைத்திருக்கும் பதிவு ..
  ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ...
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா !

   எல்லாம் இணையத்தின் செயல் !!!

   ஆஹா பிரஸ்டீஜ் பற்றி தாங்களும் எழுதுகிறீர்களா ? தங்களுடைய பிரஸ்டீஜ் விமர்சனத்திற்காக வெயிட்டிங் .

   Delete
 4. Migavum arumai .. sago !

  ReplyDelete