பைரவா – சினிமா விமர்சனம்
அடுத்தடுத்து
தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த
போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைப்பாளர்
என்றதும் டரியலே ஆகிவிட்டேன். டீசரும் ட்ரைலரும் கொஞ்சநாட்களாக விஜய்க்குள் தூங்கிக்கொண்டிருந்த
‘காடுனா புலி! வூடுனா கரடி’ விஜயை மொத்தமாக ஏலமெடுத்தது போலிருக்க, பாடல் மட்டுமே கொஞ்சம்
ஆறுதலாக இருந்தது. காலையில் பிகைன்ட் வூட்ஸ் மற்றும் சில ப்ளாக்கர்களின் விமர்சனங்கள்,
இதுக்கு சுறாவே தேவலாம் என்ற ரீதியில் வெளிவர, இருமனமாகவே திரையரங்குக்குள் சென்றேன்.
கதையை
என்னவென்று சொல்வது; தலயும் தளபதியும் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்த காலமெல்லாம் மலையேறி
விட்டது. யாருக்கோ நடக்கும் பிரச்சனையில் வான்டேடாக வண்டியிலேறி ரவுடி அவதாரம் எடுப்பதையே
கடந்த சில திரைப்படங்களாக இருவரும் கையான்டு வருகின்றனர். அதேரீதியில் தான் காதலிக்கும்
பெண்ணிற்கு இருக்கும் பிரச்சனையை தானே தலையிலேற்றி (‘விக்’க சொல்லல) அதை வழக்கம்போல
தீர்த்து சுபம் போட்டுவிடுகிறார்கள். இடையிடையே காமெடியைப் பொழிய நண்பன், காதலியுடன்
காதல் எபிசோட், ஆக்சன் எபிசோடுகள், ப்ளாஷ்பேக்
மற்றும் மிகமுக்கியமான இன்டர்வெல் சண்டையைத் தொடர்ந்து ‘ஐ யம் வெய்ட்டிங்’ ரீதியிலான
வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் போன்
உரையாடல். அதனால் இந்த க்ளிஷேக்களையெல்லாம்
ஓரங்கட்டிவிடலாம்.
இப்போது
மேட்டர் என்னவென்றால் மேலே சொன்ன க்ளிஷேக்களை எவ்வாறு அடுக்கி, அதை எவ்வளவு வேகமாக
திரையில் கடத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே திரைப்படத்தின் வெற்றி அமையும். அந்த வகையில் பைரவா ஓரளவு திருப்தி படுத்தியுள்ளது
என்றே சொல்லவேண்டும். ஜாலியாக ஆரம்பித்து, எந்த லாஜிக்கும் தேவையில்லாத, பக்கா லோக்கலான
விஜய் திரைப்படமாக வெளிவந்துள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆங்காங்கே சறுக்கினாலும்
, கொஞ்சம் வேகமாகவே பயணிக்கிறது திரைக்கதை.
படத்தின்
மைனஸ்களை பட்டியலிட வேண்டுமானால் விஜய்யின் மேனரிசம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது;
பல இடங்களில் க்யூட்டாக தெரியும்; சில இடங்களில் படுகேவலமாகவும் உள்ளது. வில்லனை புத்திசாலி
போல் காட்டிவிட்டு, அவனை வழக்கம்போல் மூளையற்றவனாக ஆக்கிஉள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் அவ்வளவு ஈர்க்காதது பெரும் லாஸ்; விஜய்யைப் பொறுத்தவரை
பாடல்களின் தாக்கம் பட்டிதொட்டியெங்கும் நிறைந்திருக்கும். சின்னஞ்சிறு குழந்தைகள்
கூட ரைம்ஸ் சொல்லுவது போல் , விஜய்யின் திரைப்படம் வெளிவந்தால் அத்திரைப்படத்தின் பாடலைப்
பாடிக்கொண்டிருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் அந்த சாத்தியம் நிறைவேறவில்லை. விஜய்யின்
நடனத்தை எதிர்பார்த்துவிடாதிர்கள், அதேபோல் இந்த படத்தில் சுத்தமாக வொர்க்கவுட் ஆகாத
மற்றொரு விசயம் காமெடி; எவ்வளவோ முயற்சித்தும் இந்த திரைப்படத்தின் காமெடிக்காக சிரிப்பதென்பது
அசாத்தியமானதொன்றாகவே எனக்கு இருந்தது.
ப்ளஸ்கள்
என்று பார்த்தால் விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்; சந்தோஷ் நாராயணின் பிண்ணனி இசை; ரிச்சான
ஒளிப்பதிவு. காதல் மற்றும் ஆக்சன் காட்சிகள். மொத்தத்தில்
ஒருமுறை பார்க்கும் ஜாலியான டைம்பாஸ் திரைப்படம். மற்ற விமர்சனங்கள் கூறுமளவுக்கு மட்டமான
திரைப்படமெல்லாம் இல்லை; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்; மற்றவர்கள்
பொங்கல் விடுமுறைக்காக குடும்பத்தோடு போகலாம்.
nice write up meg
ReplyDeleteஅலோ அலோ மைக் டெஸ்டிங் ஒன்டு த்ரீ
ReplyDeleteவீ.ஏ ஒ மெக் வலைப்பக்கம் வரவும்
தொடர்ந்து எழுதுக அன்புடன் மது
ReplyDelete