Sunday, 11 January 2015

பாரதியும் மதமாற்றமும்
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மதமாற்றம் என்பது தாருமாறாக நடந்துவருகிறது . அதுவும் தமிழகத்தில் நிம்மதியாய் ஒரு பஸ் ஸ்டாண்டை கடந்து செல்லமுடியாது . டிப்டாப்பாக வரும் ஆசாமிகள் திடீர் பிரச்சார பீரங்கிகளாய் மாறி நம்மிடம் ரத்தம் கக்கிச்சாகுமளவிற்கு சாத்தானின் கதைகளை அள்ளித்தெளிக்கிறார்கள் . உங்களுக்கு குடும்பத்தில் பிரச்சனையா ? மாறுங்கள் எங்கள் மதத்திற்கு ! உடனே உங்கள் பிரச்சனை , கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று எர்வாமேட்டின் பாணியிலான இவர்களின் பிரச்சாரங்களால் மக்கு மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள் . உலகில் பிரச்சனையில்லாதவன் எவனுமில்லை . உயிர்போனபின் என்ன பிரச்சனை என்று நமக்கு தெரியாததால் , சாகும் வரை பிரச்சனைக்குப் பழக்கப்பட்டவர்களாய்த் தானிருக்கிறோம் .  இதற்காக நான் ஒன்றும் பிறமதங்களின் எதிரி என்று அர்த்தமில்லை . என் மதம் எனக்கு முக்கியம் . அதைக்காக்க என்னாலான பணியைச்செய்வேன் . அது பிற மதங்களுக்கு எதிரானதாக இருக்கலாம் .  


கீழ்கண்ட நிகழ்ச்சி மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு எனும் நாலில் இருந்து பெறப்பட்டது .

ஒருமுறை பாரதியைக்காண , அவருடைய நண்பர் சுரேந்தரநாத் ஆர்யா வந்திருந்தார் . ஆர்யா சுதந்திர போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று , விடுதலையாகி பாரதியைக்காண வந்திருக்கிறார் . சகல விசாரிப்புகளுக்கு பின் ,
“பாரதி . உனக்கு விஷயம் தெரியாதே !நான் கிறித்துவனாக மாறிவிட்டேன் .சிறையிலும் வெளியிலும் டேனிஷ் பாதிரிமார்கள் எனக்கு மிகவும் பரிவுகாட்டிச்செய்த உதவியை நான் எப்படி வர்ணித்துச்சொல்வது ? நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் ” என்றார் ஆர்யா .

“இப்படி நேரும் என்று நான் சந்தேகித்ததுண்டு , நீ என்ன செய்வாய் ? இந்துசமூகம் இருக்கிற நிலைமை இதற்கெல்லாம் இடங்கொடுக்கிறது ; உயிரற்றஜன சமூகம் ” என்று பதறிக்கொண்டே பாரதியார் கூறினாராம் .

“ஜெயிலிலிருந்து நான் வெளிவந்தபிறகு என்னிடம் ஒருவரும் பேசத்துணியவில்லையே ! எங்கே போனாலும் என்னைக்கண்டு பயப்படுகிறார்கள் . பாதிரிமார்கள்தாம் என்னிடம் நல்லமுகம் காண்பித்து , எனக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்தார்கள் . பிரசங்கத்திலே கைத்தட்டுறதும் , வீட்டுக்குப்போனதும் பயப்படுகிறதுந்தான் இந்துக்களின் வேலை . இக்கூட்டத்தில் இருக்க  எனக்குச்சற்றுகூடப் பிடிக்கவில்லை .நான் கிறித்துவனானதில்ல உனக்கு வருத்தமோ ! ” என்றார் ஆர்யா .

பாரதியார் ஒன்றுமே சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார் ; பிறகு சொன்னார் ; “மனக்கசப்பு அடைந்த ஒவ்வொரு இந்துவும் , அதுவும் புத்தியும் தைரியமும் தேசபக்தியும் நிறைந்த ஒவ்வொரு இந்துவும் ஜனசமூகத்தின் ஊழல்களைக் கண்டு மனம் சகிக்கமுடியாமல் , வேறு மதத்திற்கு போய்விட்டால் , அந்த ஹிந்து சமூகத்தின் கதி என்னவாகும் ! புருஷன் செய்த தப்பிற்கு மனைவி தற்கொலை செய்துகொள்வதும் , மனைவியின் தவறுக்காக புருஷன் சந்நியாசம் வாங்கிக்கொள்வதும் சகஜமாய்ப் போனால் , குடும்ப வாழ்க்கை என்பதைப்பற்றியே பேசமுடியாது . இனி நீ பாதிரிமார்களின் ஆளுகைக்குப் பயந்து நடக்கவேண்டியவன் . உன்னுடைய தேசபக்தியை (இந்த இடத்தில் பாரதி கண்ணீர்விட்டார் ) அவர்கள் மதப்பிரசாரத்து்ககாக பயன்படுத்திக்கொண்டாலும் கொள்ளக்கூடும் . உனக்கு நான் உபதேசம் செய்வது தவறு .”

மேலும் பாரதி கூறியதாவது ,

“ஒருவர் செய்த உதவிக்கு நன்றி பாராட்டுவது மனித இயற்கை . அதை ஒப்புக்கொள்கிறேன் . அந்த இயற்கை இல்லாமல் போனால் உலகம் கட்டுக்கொள்ளாது . ஆனால் நன்றி காண்பிக்கும் பொருட்டு நாம் அடியோடு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுண்ணோ > ஹிந்து ஜனசங்க ஆசாரங்களிலும் கொள்கைகளிலும் தினசரி வாழ்க்கையிலும் எத்தனையோ ஊழல்கள் , கசடுகள்  ஏறியிருக்கலாம் . அவைகளை ஒழிக்க நாம் பாடுபடவேண்டும் . அவைகளை ஒழிக்கமுடியாது என்று பயந்து , வேறு மதத்தில் சரண்புகுவது என்பது எனக்கு அர்த்தமாகாத சங்கதி . எல்லா மதங்களிலும் உண்மை உண்டு . நம்  ஹிந்து ஜனங்களிடம் நமக்கு ஆத்திரம் வரலாம் . அதற்காக அவர்களை ஒழிக்கவோ , அவர்களுடைய பரம்பரையை ஏளனம் செய்து அவமதிக்க நாம் எண்ணலாகாது ”’.


இதுக்குமேல் என்ன சொல்வது ? ஒருவர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்பதற்காக உங்கள் மதத்தை விட்டு இன்று வெளியேருகிறீர்கள் . நாளை வேறொரு மதத்தவன் உதவி செய்து என் மதத்திற்கு வா என்று அறைகூவல் விடுத்தால் அந்த  மதத்திற்கும் மாறுவீர்களா ? நன்கு யோசியுங்கள் . மற்றவர்களுக்காக என்றும் மதமாற்றத்தில் இறங்காதிர்கள் . இதற்குமேலும் யாராலும் மதமாற்றத்தைப் பற்றி சொல்லிவிடமுடியாது . உணர்ந்து ஒன்றிணையுங்கள் நண்பர்களே !!!


உங்கள் விருப்பம்

15 comments:

 1. //மற்றவர்களுக்காக என்றும் மதமாற்றத்தில் இறங்காதிர்கள் .//அருமையா தெளிவா சொன்னீங்க ..ஒருவர் எதோ மன ஆறுதலுக்கென ஜெபிக்க அழைத்தால் உடனே /நீ கிறிஸ்தவ மதத்துக்கு மாறு // என்று கட்டாயப்படுத்துவது மிக கேவலம் ..force செய்தா அது மாற்றமில்லை ..பிரச்சினைகளுக்கு மத மாற்றம் தீர்வாகாது .. விரும்பி ஏற்பது அவரவர் இஷ்டம் .. மேலும் எனக்கு எங்கப்பா அம்மா (கடவுள் )உயிர் என்பதற்காக பிறரின் பெற்றோரை(கடவுள் ) இழிவுபடுத்துவதும் கேவலம் ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா !

   என்னைப்பொறுத்தவரை மதம் என்பதே ஒருவகையான சாதியைப்போன்றதொரு அமைப்புதான் . நான் மனிதத்திற்கு முதலிடம் கொடுப்பவன் . இருப்பினும் ஊரே நிர்வாணமாய் திரியும்போது நான் மாத்திரம் சட்டையும் வேட்டியுமாய்த்திரிந்தால் , என்னைத்தான் கேனையன் என்று சமூகத்தில் சொல்வார்கள் .

   அதேநேரம் இவ்விடத்தில் நான் எந்தவொரு மதத்தினையும் குறிப்பிடவில்லை . கட்டாய மதமாற்றம் , அல்லது கேன்வாஸ் செய்யப்படும் மதமாற்றங்களைத்தான் நான் எதிர்க்கிறேன் .

   // மேலும் எனக்கு எங்கப்பா அம்மா (கடவுள் )உயிர் என்பதற்காக பிறரின் பெற்றோரை(கடவுள் ) இழிவுபடுத்துவதும் கேவலம் ..// செறிவுமிகு இக்கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் . அதேநேரம் , என்னுடைய தாய் , தந்தை ஒருவேளை கெட்டவர்களாகவே இருக்கும் பொருட்டு , அதை அடுத்தவர்கள் இழிவாய்க்கூறி உன் தாய் , தந்தையை விட்டு என்னுடன் வா எனும் போது நான் செய்ய நினைப்பேன் ???

   Delete
  2. //கட்டாய மதமாற்றம் , அல்லது கேன்வாஸ் செய்யப்படும் மதமாற்றங்களைத்தான் நான் எதிர்க்கிறேன்// நானும் தான் ....

   Delete
 2. ஓ இப்படி எல்லாம் நடந்து இருக்கா

  ReplyDelete
  Replies
  1. என்ன ணா ? நீங்க இன்னும் இந்த புத்தகம் படிக்கலையா ? இது ஒரு அற்புதமான புத்தகம் . உ.வே.சா வோட என் சரிதம் , சத்தியசோதனை , மெய்ன் கெம்ப் , அக்னிச்சிறகுகள் , மேரிகேம் போன்ற வாழ்க்கைப்புத்தகங்களைவிட பல்லாயிரம் மடங்கு சிறப்பான புத்தகம் .பாரதி என்பவர் யார் என்பை அருகிலிருந்து பார்க்கும் வண்ணம் அழகாய் உருவாகியிருகிறது . நான் முழுமூச்சில் படித்த சில புத்தகங்களில் இதுவும் ஒன்று . மறக்காமல் சீக்கரம் படித்துமுடியுங்கள் .

   கொசுறு : உங்க தானைத்தலைவர் சாரு கூட இதப்பத்தி கோணல்பக்கங்கள் - பகுதி 2 ல புகழ்ந்து தள்ளிருக்காரு,

   Delete
 3. Christianity and Islam where in India right from the day they were in the world. so the concept of conversion is a big scam in the first part. And going by the history of India the biggest ever conversion happened is done by British - that is Making all Castes, Religious customs -philosophies as Hindus except - Christianity,islam, Sikh, Boutham. So you want to be against that? that must be funny.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் . தங்களைப்போன்றோரைத்தான் எதிர்பார்த்தேன் . முதலில் ஒன்றை நன்றாய் கவனிக்க . அக்காலத்தில் ஆங்கிலேயேன் , இந்தியர்களை எந்நாளும் அடிமைப்படுத்தும் பொருட்டு , அவர்களை ஒரு ஆங்கிலமோக அடிமைகளாக மாற்ற முயற்சித்தான் . அதற்காக அவன் கொண்டுவந்தது கல்விமுறை . அவன் மதமாற்றத்தின்பேரில் பெரிய அபிமானம் இல்லாதவன் . அவனுக்கு பின் வந்த டேனிஷ்காரர்கள் முழுமையும் இந்தியாவில் மதமாற்ற வியாபாரம் செயவே வந்தனர் . அரசல்புரசலாக மதமாற்றை ஆங்கிலேயேன் ஆதரித்தாலும் , அதை நடைமுறைப்படுத்தி , இந்தியர்களை மதமாற்றத்திற்குட்படுத்தியவர்கள் டேனிஷ்காரர்கள் தான் . அக்காலத்தில் அடிமைப்பட்ட மக்களிடத்து , எங்கள் மதத்தில் இணைந்தால் ஆங்கிலேயருடன் சுமூகமாக வாழலாம் என்று ஆசைகாட்டி ஏமாற்றி மதம்மாற்றினர் . சுதந்திரத்துக்குப்பின் , இந்நிலைமை இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது . சாதி எனும் அமைப்பு உலகில் எல்லா மதத்தவரிடத்தும் காணப்பட்டுத்தான் வருகிறது . கத்தோலிக்கர்கள் ஒரேயடியாக யூத இனத்தை அழிக்க முற்படவில்லையா ? யூதர்கள் கிறித்துவத்தை எதிர்த்து போர் புரியவில்லையா ? முஸ்லிம்களும் கிறித்துவர்களும் இஸ்ரேலில் நடத்திய புனிதப்போரைப்பற்றி தெரியாதா ? கிறித்துவ பாதிரிமார்களே , அஸாசின் எனும் கொலைகார கூலிப்படையை பணிக்கு அமர்த்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றுகுவித்த வரலாறு மறந்துவிட்டதா ? உலகில் எம்மதமும் பர்ஃபெக்ட் கிடையாது . ஆனால் அதற்காக கட்டாய மதமாற்றம் , எம்மதத்தவர்க்கு எதிராய் இருப்பினும் கண்டிக்கத்ததக்கது . போனமாதம் சிலரை இந்துக்களாக மாற்றிவிட்டார்கள் என கிறித்துவர்கள் அணிதிரண்டு குதித்தது மட்டும் தங்களின் கண்ணுக்குத் தெரியும் . கிட்டத்தட்ட இருபது நூற்றாண்டுகளாக , சமணர்கள் , புத்தர்கள் , முகலாயர்கள் , டேனிஷ் மதகுருமார்கள் என்று உருவாக்கிய மதமாற்றங்கள் பெரும்பாலும் இந்துக்களுக்கு எதிரானதாகத்தானே நடந்துவந்துள்ளது ! இதே கிறத்துவர்கள் முஸ்லிம்களிடம் சென்று தங்களின் மதமாற்ற வியாபாரத்தை நடத்தமுடியுமா ? இல்லை பவுத்தர்கள் யூதர்களிடத்து சென்று பம்ம முடியுமா ? எம்பாரதி சொன்னதுபோல் இந்துசமூகம் உயிரற்றஜன சமூகமாய் இருப்பதனாலே தான் இவ்வனைத்தும் சாத்தியமாயிற்று .

   Delete
  2. உயிரற்ற எம்சமூகத்திற்கு , புரியவைக்க நான் முயற்சிப்பது , பிறமதங்களுக்கு எதிரானதல்ல . அவனவனுக்கு அவனவனுடைய மதம் முக்கியம் .மதத்தால் அடித்துக்கொள்வது எப்படி மாபெரும் குற்றமோ , அதேபோல்தான் ஒருவனை கட்டாய , கேன்வாஸ் மதமாற்றம் செய்தலும் . இதையெல்லாம் கூறினால் உங்களுக்கு funny ஆகத்தெரிகின்றது . .பாரதி கூறியது போல் தமிழர்க்கு 'இரும்புக்காது ' , முனவர் ரா.திருமுருகன் கூறியது போல் தமிழனுக்கு 'எருமைத்தோல்' என்பதை நிறுபிதுவிட்டீர்கள் அனானி , வாழ்த்துகள்

   Delete
 4. பாரதியையே மறந்து விட்டார்கள் பலர்... அவர் சொன்னது...?

  ReplyDelete
  Replies
  1. பாரதியைப்பற்றிய சரியானமுறையில் மக்களிடையே விழுப்புணர்வை உண்டாக்கத்தவறிய அரசு , எப்போதும் சினிமா மாத்திரமே உலகம் என்று நினைக்கும் அற்ப புத்தியுடன் திரியும் தமிழர்கள் ,ஆங்கிலமோகத்தின் உச்சியில் தமிழையேத்தாழ்வாய் எண்ணும் மனப்போக்கு இதுதான் 21 - ம் நூற்றாண்டில் தமிழரின் நிலை . இந்நிலையில் 30 கோடிபேரின் வீரத்தையும் கோவத்தையும் ஒரேமனிதனுள் அடக்கிய வடிவமாய் திகழ்ந்த

   வீரப்பாரதியைப்பற்றி தெரியாதவர்கள் , வெட்கிதலைகுனிந்து கூன்பிடித்தாற்போல தான் திரியவேண்டும் . வரு்கைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா .

   Delete
 5. ---அரசல்புரசலாக மதமாற்றை ஆங்கிலேயேன் ஆதரித்தாலும் , அதை நடைமுறைப்படுத்தி , இந்தியர்களை மதமாற்றத்திற்குட்படுத்தியவர்கள் டேனிஷ்காரர்கள் தான் . அக்காலத்தில் அடிமைப்பட்ட மக்களிடத்து , எங்கள் மதத்தில் இணைந்தால் ஆங்கிலேயருடன் சுமூகமாக வாழலாம் என்று ஆசைகாட்டி ஏமாற்றி மதம்மாற்றினர் . சுதந்திரத்துக்குப்பின் , இந்நிலைமை இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது .-----

  நண்பரே,

  ஒரு விதத்தில் இது உண்மைதான். ஆனால் ஒரு விஷயத்தை மறந்துவிட்டீர்கள். மத மாற்றத்தினால் கிருஸ்துவர்களாக மாறியவர்கள் பெற்ற சௌகரியங்கள் என்ன என்பதையும் தெரிவித்தால் நலம். சொல்லப்போனால் இவ்வாறான கிருஸ்துவர்களை விட நம் மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே ஆங்கிலேயனின் அளித்த அனைத்து சௌகரியங்களையும் அனுபவித்தவர்கள். அவன் நம்மை விட்டுச் சென்றபோது அவர்களிடம்தான் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் போனான்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ! வாருங்கள் அண்ணா ! என்ன சிறிது காலமாக ஆளையே காணவில்லை .

   மதமாற்றம் காரணமாய் யாருக்கும் ஒரு பிரயோஜனமுமில்லை என்பதே நிதர்சனம் . ஆங்கிலேயேன் ஒப்படைத்துச்சென்றது அப்போது தலைவர்கள் என கொண்டாடப்பட்டவர்கள்தாம் . உண்மையாய் போராடியவர்கள் சுதந்திரதுக்குப்பின் என்ன செய்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்தார்கள் . அச்சமயம் சில போலி கயவர்கள் அரசியலில் உள்நுழைந்து , தங்களுக்கு வேண்டியவர்களையும் , தாங்கள் புத்திசாலியாக நினைக்கும் சிலரையும் வளர்த்துவிட்டார்கள் .மதமாற்றம் அடைந்தவனுக்கென்று பெரும்சலுகையெல்லாம் கிடைக்கவில்லை . சலுகையை கைப்பற்றியவர்கள் யாரென்று வரலாறு அறிந்தவர்களுக்கு சொல்லித்தெரிவதில்லை .

   Delete
 6. பாரதி யார்? கேட்கும் காலத்தில் சிறந்த பகிர்வு...வாழ்த்துக்கள் அன்பா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணே ! பாரதியைப்பற்றி அறியாதவர்ரகள் வெட்கித்தலைகுனிந்து திரியவேண்டும் .

   Delete
 7. பாரதி யார்?
  ஜாதி வெறி பிடித்தவன்.
  சமஸ்கிருத வெறி பிடித்தவன்,
  இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக மாற்ற வேண்டும் என்று கொக்கரித்தவன்.
  கஞ்சா போதையில் "அச்சமில்லை அச்சமில்லை" என்ற பாடலை எழுதிவிட்டு,
  அதற்காக ஆங்கிலேயர்களிடம் மண்டிபோட்டு மன்னிப்பு கேட்டவன்.
  கப்பலோட்டிய தமிழரான வ.உ.சி-யை வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுத்த எட்டப்பன்.
  தவறாமல் பிராமணர் சங்க - ஜாதிக் கூட்டத்தில் கலந்து கொண்டவன்.
  தமிழகத்தின் வைரஸ் கவிஞனான பாரதியைப் பற்றி, அறிமாயல் இருப்பதே நல்லது.

  ReplyDelete