‘கில்’மா – சிறுகதை





‘ஒரு எலி , தான் வாழனும்னா தாவரங்கள சாப்ட்டாகனும் . ஒரு பாம்பு , அதோட வாழ்க்கைக்காக,  எலிய சாப்டும் . கழுகு , பாம்ப சாப்டும் . இதுக்குப்பேருதான் உணவுச்சங்கிலி . ’  அஷோக் பள்ளி வகுப்பறைக்கு நுழையும் நேரத்தில்  அந்த ஆசிரியை பொறுமையாகவும் அழகான தன் குரலாலும்  விலங்கியலைப்பற்றி  மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தாள் . அஷோக் வந்ததைப் பார்த்ததும் ,தன் பாடத்தைநிறுத்திவிட்டு  அவளின் கால்கள் அவனிருந்த திசைநோக்கி வந்தது . அவள் சென்றதும் துவரை அமைதியாய் இருந்த மாணவர்கள் , அந்த கேப்பை உபயோகப்படுத்தி தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர் .

‘ஏன் சார் உங்க பையன் ஒருவாரமா ஸ்கூலுக்கு வரல ?’

இல்ல மேடம் .கொஞ்சம் பிரச்சன . இன்னைலருந்து ஒழுங்கா ஒந்துடுவான் .’ என்றுகூறியவாறே அவன் கண்களில் கெஞ்சினான் . அதன்பின் அவன் மகனை வகுப்பறையில் அவள் அழைத்துச்சென்று உட்காரவைத்துவிட்டு ஒரு சைலன்ஸ் சொன்னாள் . அதைப்பார்த்துவிட்டு கண்களால் நன்றிசொல்லிவிட்டு கிளம்பினான் . அவளுக்கு எப்படித்தெரியும் ? ஒருவாரத்திற்குப்பின் இன்றுகாலைதான் அவன் ஜெயிலில் இருந்து வெளிவந்திருந்தான் . வீட்டை நோக்கிய அவனுடைய பயணம் 95 சதவீதம் முடிந்திருக்க , வீட்டின் முகப்பில்  அவனுடைய நண்பன் பவுனின் முகம் வரவேற்றது .

சாரி மச்சி . நிறைய வேல . அதா ஸ்டேசனுக்கு வரமுடில . என்ன ஒருவாரத்துலயே வுட்டுட்டானுங்களா ?’

‘பரவால்ல மச்சி . இவனுங்க எங்க வுட்டானுங்க . என்னோட வூட்டுக்காரியோட நகையெல்லாம் வித்துதான் வெளிலவரமுடிஞ்சது .’

‘சரி . எங்கூட வா . ஒரு மேட்டரு .’ என்றவாறு அவனுடைய பதிலை எதிர்பாராமல் வண்டியில் அவனை ஏற்றிக்கொண்டு கிளம்பினான் .


டேய் ! எங்கடா போறோம் ?

கம்முனு வா ’  என்று  பதற்றத்துடன் கூறிவிட்டு தன் இருசக்கரவாகனத்தை ஒரு தொழிற்சாலை நோக்கி செலுத்தினான் . பவுனின் வண்டி  பாழடைந்த  ஒரு தொழிற்சாலையில் நிற்க , பைக்கிலிருந்து இறங்கிய பவுனு வேகவேகமாய் உள்ளேநுழைந்தான்  . அவன் பேரை மட்டும் தனியாய் சொன்னால் அவனுடைய  ஏரியாக்காரர்களுக்கு அவ்வளவாக தெரியாது . ‘ ப்ளட்டு  ’ எனும் அடைமொழியுடன் அவன் பெயரைச் சேர்த்துச்சொன்னால் தான் தெரியும் .

ப்ளட்டின் பின்னே  என்ன நடக்கிறதென்றே தெரியாமல் உள்நுழைந்தான் ஆசிட் அஷோக். இருவரும் சிறுவயதுமுதலே தோழர்கள் .  இவர்களின் பெயர்களுக்கு முன்னால் இருக்கும் அடைமொழிகளைக்கண்டாலே,  ரவுடிகள் என்று , நமக்குத் தானாய் புரிந்துவிடும். இவர்கள் இருவரில் ஒருவனான ப்ளட்டு , சேலத்தின் மிகப்பெரிய ரவுடியான ‘சேலம்’ சேகரிடம் பணியாற்றிவருகிறான் . அரசியலுக்கு வரும்முன்புவரை ‘சாவு’சேகராய் இருந்தவன் ,இப்போது சேலம் சேகரானான்  . சேகரின் வலதுகை தான் ப்ளட்டு பவுனு . அஷோக்கோ இன்றைய நிலையில் ஆசிட் என்பது கக்கூஸ் கழுவுவதற்கே அதிகளவு பயன்படுவதால்  , தன்கையே தனக்குதவி என்று சங்கிலி அறுத்துப் பிழைத்துக்கொண்டிருந்தான் . அவ்வப்போது , செய்ன் ஸ்நாச்சிங் கேஸ்களில் மாட்டும் ஆசிட்டை , ‘சேலம்’சேகரின் பெயரைக்கூறி , அங்கிருக்கும் போலிசாரை பீதியாக்கி காப்பாறி விடுவான் ப்ளட்டு . சண்டைக்கு அஷோக் சரிவராத காரணத்தாலும் , பயந்தாங்கொள்ளியாகவும் இருந்ததால் சேகரிடம் சேரமுடியவில்லை .

தொழிற்சாலையின் பல இயந்திரங்கள் திருடப்ப்பட்டு , மக்களால் உண்ணப்பட்டது போக மிச்ச எச்சமாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் பார்வைக்குக்கிடைத்தன . பெரும்பாலும் துருப்பிடித்தும் , குப்பைகளின் கூடாரமாகவும் காட்சியளித்த அத்தொழிற்சாலையில் ஆங்காங்கே குவாட்டர் பாட்டில்களும் பீர் பாட்டில்களும் உடைக்கப்பட்டு காணப்பட்டன . தொழிற்சாலையின் உள்ளே நுழைந்த இருவரையும் எதிர்பார்த்து ஒரு உருவம் காத்திருந்தது . அந்த உருவத்தை நோக்கி நேராய் சென்றான் பிளட் . பிளட்டின் பார்வையிலேயே என்னாச்சு என்ற கேள்வி எதிரிலிருந்தவனுக்கு கேட்டதுபோல் உணர்ந்திருக்கவேண்டும் .

‘மேட்டர் பினிஷ் ணா . எனக்கும் அப்படியே ஏதாவது பாத்து செஞ்சிங்னா .. ’

‘அதெல்லாம் பண்ணிக்கலாம் மணி

அதுவரை படபடப்புடன் இருந்த பவுனின் முகம் , இறுக்கம் தளர்ந்து கொரூரபுன்னகைக்கு மாறியது . இதைப்பார்த்துக் கொண்டிருந்த ஆசிட்டுக்கோ ஏதோ நடக்கப்போகிறது என்று மட்டும் புரிந்தது .

பாடி எங்க ?’ என்ற ப்ளட்டின் கேள்விக்கு , வினா ஏதும் பேசாமல் பாழடைந்த அந்த தொழிற்சாலையில் உள்ள  ஒரு அறைக்குக்கூட்டிச்சென்றான் மணி எனும் புதியவன் . பின்னால் 10 அடி கேப்பில் ப்ளட்டும் , அவனுக்கு பின்னே ஏதும் புரியாமல் ஆசிட்டும் வந்தனர் .

மச்சி ! என்னடா நடக்குது ? யார்ரா அவன் ?’ என்றான் ஆசிட் .

அவந்தான் மச்சி என்னோட லெப்ட்டு . சேகருக்குத்தெரியாம முடிச்சிக்கட்ட நா ஏற்பாடு பண்ண ஆளு .’

என்னடா சொல்ற ? சேகர போடறதுக்கா ?’ என்றான் அதிர்ச்சி விலகாமல் .

அவன் பதிலேதும் சொல்லாமல் புன்னகையை வீசியபடியே உள்ளேநுழைந்தான் . சேகரைப்போட்டுவிட்டதாகக் கூறி , ப்ளட்டின் எதிரிகள் மேல் பழியைப்போட்டு  , அவர்கள் அனைவரையும் முடித்துவிடலாம் . அதன்பின் போலிசிடம் கொஞ்சம் அமௌன்ட் இறக்கினால் இதையெல்லாம் ஒருவழிக்குக்கொண்டுவந்து தன்னை சேலத்தின் எதிர்கால மறைமுக சக்தியாக்கிக்கொள்ளலாம் . இனி இந்த சேலம் அவனுடையது .

எப்ப்பர்ரா ப்ளட்டு முடிச்ச ? சேகரு கூட குறஞ்சது ஒரு பத்து பேராவது சுத்துவாங்களேடா ?

என்று ஆசிட் , கேட்டுக்கொண்டே செல்ல  , ப்ளட்டின் பார்வையோ ஒருமூலையை நோக்கி சென்றது . ப்ளட்டின் பார்வை சென்ற திசையில் தன் பார்வையை ஓடவிட்ட ஆசிட்டுக்கு  அதிர்ச்சிரேகை முகத்தில் தவழ ஆரம்பித்தது . அவர்கள் இருவரும் பார்த்த திசையில் சுகு , ராஜா  உட்பட சேகர் ஆட்கள் ஐவரின் உடல்கள் சவமாய் கிடந்தன . தோட்டாக்கள் பாய்ந்த இடங்களின் வழியே ரத்தம் வழிந்தோட , RBC-க்கள் எவ்வளோ முயன்று க்ளாட்டிங் வைத்துத்தடுத்தாலும் அதையும் தாண்டி கிழிசலான பொத்தல்களின்வழி பீறிட்டுச்சென்றது . அந்த அறையில் வீசிய குருதி ரத்தத்தின் சூட்டிலேயும் நாற்றத்தாலும் , எப்படியும் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு ஒரு பத்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிந்தது .

15 வருஷமா அவங்கூட இருக்கேன் ; இதுகூடவா எனக்குத்தெரியாது? இதோ போறானே முன்னாடி , அவன சேகருகிட்ட வேலைக்கு சேத்துவிட்டதே இதுக்குத்தான் . ’ என்றவாறே தன் நினைவலைகளை ஓட்டிப்பார்த்தான் . அவனுடைய வாழ்க்கையில் எப்படியாயினும் பெரிய ரவுடியாகிவிடவேண்டும் என்பதே லட்சியம் . இரண்டு ஆண்டுகளுக்குமுன் வரை சேகருக்கு விசுவாசமாய் இருந்த ப்ளட்டு , சைனாவின் இறப்புக்குப்பின் தன்நிலைப்பாட்டை மாற்றிக்கொன்டான் . தன் வாழ்க்கையில் வெறும் ரவுடியாக இருந்தால் மட்டும் பிழைத்து வாழமுடியாது என்பதை உணர்ந்தான் . சைனா  , சேகரின் நண்பன் . அவனை போலிசார் என்கவுண்டரில் போட்டபோது யாராலும் எதுவும் செய்யமுடியாது . ப்ளட்டே ஆந்திராவில் தலைமறைவாய் மூன்றுமாதம் இருக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டான் . ஆனால் , இதையெல்லாம் தாண்டி , என்கவுண்டருக்கு கதாநாயகனாய்  இருக்கவேண்டிய சேகரை ,  போலிஸ் கண்டுகொள்ளவில்லை . காரணம் , அரசியல் .

முன்னே சென்றுகொண்டிருந்தவன் ஒரு அறைக்குள் நுழைய , அங்கே ஆர்வத்துடன் நுழைந்தான் ப்ளட்டு . ‘டமால் டமால் ’ என்று இரண்டு தோட்டாக்கள் எங்கிருந்து வந்ததென்று உணரும்முன்னே சேகரின் மார்பில் இரண்டு புல்லட்கள் கிழித்திருந்தன . முதலில் ஏதும் தெரியாமல் முழித்த ப்ளட்டின் நெஞ்சிலிருந்து ரத்தம் கசியவும் , தோட்டா வந்த திசையை நோக்கினான் . அங்கே சேகரும் , சிறிதுநேரத்திற்குமுன் தன்னை அழைத்துவந்திருந்த மணியும் நின்றுகொண்டிருந்தார்கள் .

‘**** மவனே ! என்னய்ய போட்டுத்தள்ள ப்ளான் பண்றியா ? சாவுடா *****  ’ என்றவாறு சேகர் கொடூரமான முகத்தைக்கோவத்திற்கு வார்த்துவிட்டிருந்தான் . மீண்டும் ஒரு தோட்டாவை நெஞ்சில் பாய்ச்ச , அடுத்தநொடி ப்ளட்டு கீழே இறந்துவிழுந்தான் . இதற்குள் சேகரின் முதுகில் ‘சரக்’கென ஒரு கத்தி பாய , அந்த கத்திக்குச்சொந்தக்காரன் , ப்ளட்டைச் சேகரிடம் காட்டிக்கொடுத்திருந்தவன்தான்  . கத்தியின்வழி ரத்தம் பீறிட , மெல்ல நிலத்தைநோக்கி சரிந்தான் சேகர் . பின்னால் வந்துகொண்டிருந்த ஆசிட்டோ , ப்ளட்டின்மேல் தோட்டா பாயும்போது சிலையானவன்  , சேகரின் வயிற்றில் கத்தி இறங்குவதைப்பார்த்து அரண்டு போயிருந்தான் . அங்கு என்ன நடக்கிறது என்பது தெரிவதற்குள் இரு பிணங்கள் விழுந்ததும் தப்பி ஓட முயற்சித்தான் ஆசிட் . அவன் முதுகையும் தோட்டா கிழித்துச்செல்ல , அடுத்தவிநாடி தரையில் விழுந்து , உயிரை வானுக்கச் செல்லவிட்டிருந்தான். அனைவரும் இறந்துவிட்டார்களா என உறுதி செய்வதற்கு ஒவ்வொருவரையும் பரிசோதித்துப்பார்த்த மணி , மகிழ்ந்தான் . அவனுக்கும் ப்ளட்டின் ஆசை வந்ததில் அதிசயமில்லை .

சேகரைப் போட ப்ளட்டு ப்ளான் பண்ணிணான் , ப்ளட்டை போட்டுவிட்டு அவனுடன் வந்த அடியாட்களையும் கொன்று தான் மட்டும் தப்பித்ததாக சொல்லி மற்றவர்களை நம்பவைத்துவிடுவான் மணி  . சேகரிடம் நம்பிக்கையை பெற அவன் செய்த ஒரேவிஷயம் , ப்ளட்டின் பிளானை சேகரிடம் புட்டு புட்டு வைத்தது தான் . மேலும் ப்ளட்டின் அடியாட்கள் என்று சொல்லி , சேகரிடம் விசுவாசமாக இருந்த ஐவரையும் கோர்த்துவிட்டிருந்தான் . இந்த FACTORY பிளான் , பிளட்டு போட்டுக்கொடுத்தது என்றாலும் , அதையும் சேகரிடம் சொல்லி எல்லாரையும் ஒன்றாக பரலோகம் அனுப்பிவிடலாம் என்று புது ஐடியாவை சேகருக்குள் விதைத்திருந்தான் மணி . துளிகூட சேகருக்கும் , ப்ளட்டுக்கும் சந்தேகம் வராமல் எல்லா வேலைகளையும் பக்காவாய் பிளான் போட்டிருந்தான் . எல்லா பிணங்களையும் பார்த்து , அவர்களின் சாவை உறுதி செய்தான் . இனி அவன் மர்டர் மணி . போனை எடுத்து தகவல் சொல்லவேண்டிய சிலரிடம் வருத்தத்துடன் முகத்தை வைத்தவாறே பேசிமுடித்தான் . அனைத்தும் அவன் நினைத்ததவாறே நடக்க ,  வெற்றிக்களிப்பில் வெளிய வந்தவனுக்கு போலிசார் தோட்டாக்களால் வரவேற்பு  அளித்து , சிவலோக பதவி கொடுத்து வானுலகிற்கு அனுப்பி வைத்தனர் .

‘இங்க பாரு . ஒழுங்கா நாங்க சொல்றமாதிரி நடந்துக்க . நீயும் ப்ளட்டும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்னு எங்களுக்குத்தெரியும் . நீ ஒழுங்கா போலிசுக்கு ஒத்துழைச்சினா உன்மேல இருக்க பழைய கேசயெல்லாம் எடுத்துடுவோம் . நீயும் புதுசா லைஃப ஸ்டார்ட் பண்ணலாம் . இல்லனு சொன்ன , அப்றம் லைஃப்லாங் ஜெயில் தான் ’ என்ற காவல்துறை அதிகாரிக்கு , தன் சம்மதத்தை மௌனத்துடன் வழங்கியிருந்தான் ஆசிட் அஷோக் .



தொடர்புடைய இடுகைகள்








Comments

  1. ரத்தச்சகதியில் குளிக்க வைத்து விட்டீர்கள் நண்பா....

    தமிழ் மணம் 2

    எல்லாம் சரி சலைப்பு நம்ம பேருலருந்து பாதியை கில் பண்ணிட்டியலேமா.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ! இந்த கதைக்கு என்ன தலைப்பு வைக்கறதுனே தெரியாம தவிச்சிகிட்டு இருந்தப்போதான் அண்ணனோட ஞாபகம் வந்துச்சி . சரி , நம்மோட கதையும் கில்லிங் தான் . அதோட வித்தியாசமாகவும் இருந்ததாலே கடைசி நேரத்துல உங்கப்பெயரை உங்களுக்கே தெரியாம சுட்டுட்டேன் ணா . நன்றி

      Delete
  2. சாரி தலைப்பு சலைப்பு ஆகி விட்டது.

    ReplyDelete
  3. #‘ஒரு எலி , தான் வாழனும்னா தாவரங்கள சாப்ட்டாகனும் . ஒரு பாம்பு , அதோட வாழ்க்கைக்காக, எலிய சாப்டும் . கழுகு , பாம்ப சாப்டும் . இதுக்குப்பேருதான் உணவுச்சங்கிலி .#
    ஒரு ரௌடி வாழணும்னா இன்னொரு ரௌடியைக் கொன்றாகணும்,உணவுச் சங்கிலி போலத்தான் இதுவும் என்று முடித்திருக்கலாம் :)
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. அதையும் எழுதிட்டா படிக்கறவங்க தேமேனு படிச்சிட்டு போறதுக்கு நாமே ஒரு வழி பண்ணிக்கொடுத்த மாதிரி ஆகிடும்ணே . இத கண்டிப்பா படிக்கறவங்களுக்கு தானா புரியும் அப்டிங்றதால தான் எழுதல .

      வருகைக்கும் ஓட்டிற்கும் நன்றி அண்ணே

      Delete
  4. ரத்தக்காட்டேறிகளின் கதை பயமாக இருக்கவில்லை

    ReplyDelete
  5. ஹா ஹா ! எனக்கும் திரில்லருக்கும் ரொம்ப தூரம்ணே . அந்த சாப்டர தொடவே மாட்டேன் . சரி ஒரு கிரைம் கதை எழுதனும்னு நினைச்சி முதல் அடிய எடுத்துவச்சேன் . நல்லவேளை பலத்த அடிவிழாம தப்பிச்சிடுச்சி . அதுவரைக்கும் சந்தோஷம் . கருத்துக்கு நன்றி அண்ணே

    ReplyDelete
  6. நல்ல ப்ளான்...! சிந்திக்க வைத்து முடித்தது அருமை...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்ணே ! தங்களோட ஊக்கப்படுத்தல் மற்றும் வழிகாட்டுதல் தான் இன்னும் என்ன தொடர்ந்து எழுத வச்சிட்டு இருக்கு .

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை