Thursday, 21 August 2014

BURIED (Eng-2010) – சினமா விமர்சனம்


BURIED - ENGLISH 2010
தமிழில்  வெளிவந்த இருவர் மட்டும் என்ற படத்தில் , ஹீரோ , ஹீரோயின் என இருவர் மட்டுமே , மொத்தப்படத்திலும் நடித்திருப்பார்கள் . இதே போன்று கிட்டத்தட்ட ஹீரோவை மட்டுமே சுற்றி நகரும் படங்களில், வில் ஸ்மித் நடித்த AFTER LIFE படத்தையும் குறிப்பிடலாம்(ஆனால் , இந்தப்படத்தில் ப்ளாஸ்பேக் காட்சிகளில் பலர் வருவார்கள்) . CAST AWAY , 127 HOURS , LIFE OF PIE , GRAVITY போன்ற படங்களிலும் , பெரும்பான்மையான காட்சிகள் ஒருவரைச்சுற்றியே நடப்போது போல் காட்டினாலும் , அந்த படங்களில் , ஒரு சின்ன வேடத்திலாவது, வேறொருவரை ஒரு காட்சியில் காட்டிவைத்துவிடுவார்கள் . ஆனால் , முழுக்க முழுக்க , வெறும் ஒருவர் மாத்திரமே நடித்த படம் ஒன்றெனில் , எனக்குத்தெரிந்தவரை இது ஒன்று மட்டுமே. அப்படியே வேறு படங்கள் இருந்தாலும் , இந்த படத்தில் வரும் இன்னொரு சிறப்பு , கண்டிப்பாக அந்த படங்களில் இருக்காது . காரணம் , இந்த படம் முழுக்க முழுக்க ஒரே லொகேசனில் எடுக்கப்பட்டது .

2006 , அமெரிக்கா , ஈரான் மீது போர்த்தொடுத்த காலம் . அச்சமயத்தில் , அமெரிக்காவிலிருந்து , கான்ட்ராக்ட் அடிப்படையில் ட்ரைவர் , சமையல்காரர் , போன்ற ஆட்கள் இராணுவத்திற்கு உதவும் பொருட்டு நியமிக்கப்பட்டிருப்பார்கள் . ஈரானில் அடிக்கடி நடக்கும் தீவிரவாத சண்டைகளின்போது , இராணுவத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு ,மிஞ்சுபவர்களை கடத்திக்கொண்டு சென்றுவிடுவார்கள் தீவிரவாதிகள். அப்படி கடத்தப்பட்டவர்களை , ஒரு சவப்பெடிய்யில் அடைத்து , ஆழமாக நிலத்தினுள் புதைத்துவிடுவார்கள் . புதைக்கப்பட்டவர்கள் , தங்கள் உறவினர்களை தொடர்புகொண்டு பேச ஒரு செல்போனும் , ஒரேஒரு லைட்டும் வைத்துவிடுவார்கள் . புதைந்து இருப்பவர்களுக்கு , தீவிரவாதிகள் போன் செய்து , அமெரிக்க அரசிடம் தொடர்பு கொண்டு பணம் வாங்கித்தருமாறு  மிரட்டுவார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார் படத்தின் ஹீரோ பால் .

கதை -
படத்தின் ஆரம்ப காட்சியில் ,பால் விழித்துப்பார்ப்பார் . தன் கையில் இருக்கும் லைட்டரின்மூலம் , தான் இருக்கும் இடத்தைப்பார்ப்பார் .சவப்பெட்டியில் அடைக்கப்பட்டிருப்பதை உணருவார் .இடையில் தீவிரவாதிகளிடம் இருந்து போன் வரும் .அப்போதுதான் , தான் கடத்தப்பட்டதையும் , மாலை 6 மணிக்குள் 5மில்லியன் டாலர் பணம் தந்தால் பிழைக்கலாம் என்பதையும் அறிவார் .முதலில் தன் வீட்டிற்கு போன் செய்வார் . யாரும் எடுக்கமாட்டார்கள் .யார் யாருக்கோ போன் செய்து கடைசியில் நாட்டின் முக்கிய அதிகாரிகளிடம் தன் நிலையை கூறுவார். ஆனால் , அமெரிக்கா , எப்போதும் தீவிரவாதிகளின் நிபந்தனைக்கு செவிசாய்த்து பணம் தந்த தாக சரித்திரம் இல்லை, கவலைப்படவேண்டாம் ,உங்களை மீட்டுவர அதிகாரிகளை அணுப்புகிறோம் என்று கூறுவார்கள்.  அந்த அதிகாரியின் போன் நம்பரும் கிடைக்க ,அதைக்கொண்டு அவரை தொடர்பு கொள்வான். அவர்களும் வருவதாக கூறுவார்கள். இடையிடையே அவன் மனைவிக்கு போன் , செய்துகொண்டே இருப்பான். ஆனால் , அவன் மனைவி , போனை எடுக்கவே மாட்டாள் . போன் நம்பரை வைத்து ட்ராக் செய்யலாமே என்றாலும் அது ப்ளாக்பெர்ரி வகை போன் .ட்ராக் செய்வது கடினம். போனில் சார்ஜ் வேறு குறைந்துகொண்டே இருக்கும் .இன்னொரு பக்கம் , சவப்பெட்டியுனுள் ஒரு பாம்பு வேறு புகுந்துவிடும் . தீவிரவாதி வேறு போன் செய்து ஆயா , அம்மா என்று திட்டுவான் . இன்னொரு பக்கம் மீட்புக்குழு இவன் இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறுவார்கள். அதே நேரத்தில் , ஆரம்பத்தில் இவன் சவப்பெட்டியை உடைக்க முயற்சித்ததால் , மணல் உள்ளே புக ஆரம்பித்திருக்கும் .கடைசியில் என்ன ஆனான் ? மீட்கப்பட்டானா ? இல்லையா ? என்பதே கிளைமேக்ஸ் .இவை அனைத்தும் , நாம் உணருவது , அவன் மற்றவர்களுடன் பேசும் செல்போன் பேச்சுகளால் மட்டுமே. ஒவ்வொரு படத்திலும் , யாராவது ஒருவர் மாத்திரமே தனியே ஒளிரும்படி தன் வேலைகளை செய்திருப்பார்கள் .ஆனால் ,இப்படத்தை பொறுத்தவரை , எல்லோரும் மிகமிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் பால்-ஆக நடத்திருக்கும் ரியன் ரெனால்ட்ஸ்-ன் நடிப்பு , அவ்வளவு அற்புதமாக இருக்கும். மனுசன் , தன்னந்தனியா நடிச்சு ,மொத்தப்படத்தையும் தூக்கி வச்சிருக்கார். ஒரு காட்சியில் தன்னைப்பெற்ற தாய்க்கு போன் பண்ணுவார் .

‘அம்மா , நான் தான் பால் பேசுறேன்’

‘எந்த பால் ?’

‘அம்மா , உங்களுக்கும் , உங்க ஹஸ்பன்ட்ல ஒருத்தருமான (ஒருவரின் பெயர்) அவருக்கு புறந்த பையன்மா’

‘ஓ அப்படியா ? சரி’

இப்படி ஒரு காட்சியில் , ஹீரோவின் முகபாவனைகள் அவ்வளவு ஏக்கமாக காட்டிருப்பார்கள்.
மொத்தத்தில் , எளிமையாக ஒரு உலகத்திரைப்படம் பார்க்கவேண்டும் என்றால் இதை கண்டிப்பாக காணலாம் . காட்சிகள் குழப்பமில்லாமல் , தெளிவான திரைக்கதை மூலம் அழகாக நகரும்.இயல்பான வசனங்கள் , நமக்கு , கதையை நன்கு உணர்த்தும். ஒரே லொகேசன் என்பதால் போர் அடிக்கும் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள் .படத்தில் ஒரு இடத்தில்கூட போர் அடிக்காது. இந்தப்படம் பார்க்கும்போது என் மனதில் , நாம இவன் இடத்துல இருந்தா யாருக்கு போன் பன்னிருப்போம் , ஆமா, சித்தப்பாவுக்கு பண்ணாதான் வந்து நம்மள காப்பாதுவாரு. இல்ல , தம்பிக்கு போன் பண்ணலாம் , இல்ல நண்பனுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சிட்டேதான் பார்த்தேன் . அந்த அளவுக்கு கதையுடன் ஒன்றவைத்த திரைப்படம். மிஸ் பண்ணாம பாருங்க . 


படத்தின் ட்ரைலரை கீழே காணவும் :-

நன்றி - YOUTUBE , GOOGLE IMAGES , 


உங்கள் விருப்பம்

10 comments:

 1. ஒக்கே, லிஸ்ட்ல சேர்த்துட்டேன்! :)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பாருங்கணா !! ஒரு வித்தியாசமான அணுபவமா இருக்கும்!!! :-)

   Delete
 2. Replies
  1. கண்டிப்பாங்ணா !! படத்துல ஒரு பெரிய ப்ளஸ் , நம்ம கண்ணுக்கு ஹீரோ பன்றது தெரியரத விட , நாம என்ன செய்வோம் அந்த இடத்துலனு பீல் பன்னுவோம்!!!

   Delete
 3. நல்ல சுவாரிசியமான படத்தை தன் அறிமுக படுத்தி உள்ளீர்கள். கண்டிப்பாய் பார்கிறேன். :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்கருத்துக்கும் நன்றிணே !! பாருங்க !! படம் நிச்சயமா , ஏமாத்தாது

   Delete
 4. ivan locke இந்த படத்தையும் பாருங்க

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பார்க்கறேங்க !!

   Delete
 5. I seen this movie. Nice one..but climax i didn't expect that... u r doing a very good job..showing world class movies to our people. Great...keep it up.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க !!! தங்களின் பெயர் தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் !!

   Delete