அந்த 7 நாட்கள் 1-8-2013 - 8-8-2013
நண்பர்களே!! இப்பதிவின்
வாயிலாக , ஒரு வாரத்தில் நான் பார்த்த படங்களை பற்றி பகிர்வதே, இப்பதிவின் நோக்கம்.
ORPHAN(2009) - திரில்லர்
மிகச்சாதாரணமாக
ஆரம்பிக்கும் திரைப்படம், வாவ் சொல்ல வைக்கும் கிளைமேக்ஸ் உடன் முடியும், ஒரு சிறந்த
திரில்லர் வகையிலான திரைப்படம்.
ஒரு 12வயது பெண்குழந்தையை
, அநாதை இல்லத்திலிருந்து தத்து எடுத்து வளர்க்கிறார்கள் ஒரு தம்பதியினர். அக்குழந்தை
மிக SMART ஆகவும், திறமைசாலியாகவும் இருக்கிறது. திடிரென சில கொலைகளை செய்கிறது.
அவ்வீட்டில் இருக்கும் தம்பதியின் குழந்தைகளை கொலை செய்யவும் முயற்சிக்கிறது. அதைத்தாண்டி,
அவ்வீட்டின் தலைவனை படுக்கையறைக்கு அழைக்கிறது. எதற்காக இப்படி செய்கிறது , யார் அந்த
குழந்தை போன்றவைகளுக்கு, நம்மை திகைக்க வைக்கும் கிளைமேக்சில் விடை உள்ளது. கிளைமேக்சை
முதலிலே கண்டுபிடிப்பவர்களுக்கு ‘யுரேகா தளபதி’ பட்டம் வழங்கப்படும்
படத்தின் கேமரா
கோணங்கள் , எடிட்டிங் ஆகியவை சிறப்பு .
த்ரில்லர் ரசிகர்கள்
, தவறவிடக்கூடாத படம்.
THE DEPARTED(2006) – ட்ராமா , திரில்லர் , ஆக்சன்
சிறந்த இயக்குனர்களில்
ஒருவரான மார்ட்டின் ஸ்கார்சோசியின் இயக்கத்தில், டைட்டானிக் புகழ் லியனோர்டோ டீ காப்ரியாவின்
நடிப்பில் வெளிவதந்த படம்.
சிம்பிளாக சொல்ல
வேண்டுமெனில் , காக்கிச்சட்டை ,பில்லா , மங்காத்தா ,ஜில்லா என்ற நான்கு படங்களும் ஒன்றாக
வைத்து பார்த்தால் எப்படி இருக்குமோ , அப்படி இருக்கிறது.
ஒரு தாதா. அவனை
வேவ்வு பார்க்கச்செல்லும் ஒரு போலிஸ் அதிகாரி . தாதாவின் வளர்ப்பு மகன் போன்ற ஒருவன்,
தாதாவுக்காக போலிஸில் சேர்ந்து உளவு பார்க்கிறான். கடைசியில் யார் ஜெயித்தார்கள் என்பதே
கதை.
இப்படத்தின் இறுதி
30 நிமிடங்களில், நம்மையும் தாண்டி 3 தடவை ‘அட என்னடா இது’ என்று சொல்ல வைத்துவிடுவார்
, இயக்குனர் .
2.30மணிநேரப்படமானாலும்
, அலுப்புத்தட்டாமல் பயணிக்கிறது. படத்தின் இசை , அருமை.
கண்டிப்பாக பார்க்கலாம்.ரத்தம்
சிந்தும் வன்முறை காட்சிகள் சில இருப்பதால்
, குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்க்கலாம்
THE LEAGUE OF EXTRAORDINARY
GENTLEMAN(2003) – ஆக்சன் ,
அக்கால ஜேம்ஸ்பான்டு சீன்-கானரி மற்றும் நம்மூர் நஷ்ருதின் ஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.
கதை என்று சிம்பிளாக
சொல்லவேண்டுமெனில், அவெஞ்சர் படம் 1899 காலகட்டத்தில் எடுத்திருந்தால் எப்படி இருக்கும்.
அதே தான் இப்படத்தின் கதை. சில பல சக்திகள் உடைய 6 பேர் ஒன்றாக வில்லனை எதிர்த்து போராடுவதே
கதை.
ஆனால், திரைக்கதை
சிறிதும் போரடிக்காமல், செம ஸ்பீடாக செல்லும். கிராபிக்ஸ் காட்சிகள் அருமை. படத்தில்
முக்கியமான பல காட்சிகளில் நம் சிவபெருமான் சிலை வந்து போகும். சில காட்சிகள் , இந்தியரை
பெருமை படுத்துவன போலிருக்கும்.
ஆக்ஷன் விரும்பிகள்,
கிராபிக்ஸ் விரும்பிகளுக்கு ஏற்ற படம். குழந்தைகளுடன் காணத்தகுந்த படம்.
BLACK SWAN(2010) – ட்ராமா
பாலே என்ற ஒரு
நடனம் உள்ளது. அதாவது, உடலின் மொத்த எடையையும் , வெறும் கால் விரல்களால் தாங்கியபடியே
ஆடுவார்கள். அந்த நடனத்திற்கான கதை என்பது, கிட்டத்தட்ட தேவதை கதை மாதிரி தான். வெள்ளை
தேவதை என்றால் அன்பு , பொறுமை , அமைதி போன்ற முகபாவனைகளுடனும் , கருப்பு தேவதை என்பவள்
அரக்கி போன்று வெறிபிடித்த மாதிரியும் ஆட வேண்டும்.
இதில் , வெள்ளை
தேவதையாக சிறப்பாக ஆடும் ஹீரோயினுக்கு , கருப்பு தேவதை (BLACK SWAN)யாக ஆட சரியான படி
வராது. அதில் எப்படியோ ஆடி, அவள் ஒரு வாய்ப்பு பெறுகிறாள். அவள் வாய்ப்பு பெற்றபின்
, அவள் மனதில் எழும் உணர்ச்சிகளின் போராட்டாம், அவளை எந்த அளவிற்கு செல்ல தூண்டும்
என்பதை அழகாக விவரித்துள்ளார், டேரன் அரவனாஸ்கி.
இது ஒரு 18+ திரைப்படம்.
பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு சிறப்பாக காட்டி, அதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர்.
பொறுமை இருந்தால் , அவசியம் பார்க்க வேண்டிய படம். கிளைமேக்ஸ் அருமையாக இருக்கும்.
கிக்(KICK-2014) – இந்தி , ஆக்சன்
தெலுங்கில் கிக்
என வெளியான படம் , தமிழில் தில்லாலங்கடி என்று ரீமேக்காக , மீண்டும் இந்தியில் , சல்மான்கானை
கொண்டு மசாலா தடவி புதுப்பித்துள்ளனர். சல்மான்கானுக்கு ஒரு மச்சம் உண்டு. தென்னிந்திய
படங்களை உருவி அவர் சுட்ட வடை , இந்தியில் பீசா , பர்கரை விட வசூல் அள்ளியுள்ளது. அதே
போல் இதுவும் பவர்ஸ்டாரின் லத்திகா சாதனை முதல் அனைத்து சினிமா வசூல்களையும் அடித்து
நொறுக்கியதாக கேள்விபட்டேன்.
கதையெல்லாம் சொல்லி
காண்டாக்க மாட்டேன். தில்லாலங்கடிய, நல்லா பட்டி பாத்து டிங்கரிங் பண்ணி, கிராபிக்ஸ்
மற்றும் கேமராமேன் உதவியோட அதகளம் பண்ணிருக்காங்க.மேலும் பாடல்கள் அனைத்தும் , சிறப்பாக
இருக்கும்.இதுல ஆறுதல், வழக்கம்போல சட்டைய கழட்டி நம்மள காண்டாக்காம , அமைதியா நடிச்சிட்டு
போயிருக்கார், சல்மான்.
ஜாலியா பாக்கலாம்
டைப் படம்.
நீ எங்கே என் அன்பே – தமிழ் , ட்ராமா
(அந்த படத்துல தான் சீன் இல்லைனு பாத்தா , ஒரு போட்டோலகூட சீன் இல்ல !!! அதான் இந்த போட்டோ)
‘தேவதை வந்தாள், தேன்விழி பார்த்தாள் , என்,
செல்நம்பருடன் சென்றாள்.
.செல்லில் இல்லிற்கு வரசொன்னாள்,
சென்றேன், சிலையானேன்’
இப்படி நா ஒரு
கவிதை(?!!) சொன்னா உங்களுக்கு எப்படி டென்சனாகும். அப்படித்தான் இருந்துச்சி, இந்தப்படமும்.
ஏதோ சொல்ல வர்றாங்கனு நானும் கஷ்டப்பட்டு பாத்தேன். ஆனா , கடைசி வரைக்கும் இதோ கன்னித்தீவு,
அதோ கன்னித்தீவு னு ஒரு கழுதைத்தீவ கூட காட்டல.
தீவிரவாதிகளால்
கடத்தப்பட்ட கணவனைத்தேடி அலையும் , மனைவி.
கடைசியில் புருஷன் கிடைத்தானா இல்லையா என்பதே கதை.அதை கடைசியில் ஒரு சுமாரான ட்விஸ்டுடன்
, நம் கழுத்தை அறுத்து சொல்லியிருப்பார்கள்.படம் பார்த்து முடித்ததும், உண்மையாலும்
அவனுங்க தீவிரவாதி இல்லடா, இந்த படத்த எடுத்தவன்தான் தீவிரவாதி எனும் மகத்தான உண்மை
எனக்குள் தெரியவந்தது.
ப்ளடி பெக்கர்ஸ்.
அவசரப்பட்டு , எவனாச்சும் சும்மா கொடுத்தான், நயன்தாரா ரசிகர்னுலாம் பாத்துடாதிங்க.
அதுக்கு பேசாம ‘தல’யோட ஆழ்வாரையோ , ‘தளபதி’யோட சுறாவையோ பாத்து தொலைச்சிடாலாம்.
இந்த வாரம் அம்புட்டுதான்!!
அடுத்த வாரம் பாக்கலாம்!!!(என்னது அடுத்தவாராமா? னு நீங்க ஓடுனாலும் விடமாட்டேன்)
GENINUE - இது எந்த மொழி வார்த்தை? என்னா அர்த்தம்? சத்தியமா புரியல. பட் ஆர்பன் படம் பாக்கலாம்னு தோணுது கதைச் சுருக்கத்தைப் பார்த்தா. அப்புறம்.... ப்ளாக் ஸ்வான்ல ஆடப்படறது பாலி நடனம் இல்ல... அதுக்குப் பேரு பாலே. நிறையப் படங்களோட விமர்சனம் போடறதவிட இந்த மாதிரித் தவறுகள் இல்லாம ஒண்ணு போட்டாலும் சிறப்பு என்பது என் கருத்து.
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றிணா!! சிலபல Spelling Mistake தானா வருது!! நானும் எவ்ளோ ட்ரை பன்றேன்!! வருங்காலத்துல சரியானபடி திருத்திக்கிறேன்ணா!!
Deleteorphan கண்டிப்பா நல்லா இருக்கும்!! கிளைமேக்ஸ் , யாருமே எதிர்பார்க்காத மாதிரி இருக்கும்! நேரம் கிடைக்கும்போது பாருங்கணா!!