CN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்
இதுவரை வந்த பேட்மேன்
படங்களில் , ஏன் நோலன் படங்களிலேயே , பயங்கர வேகமானதும் , அட்டகாசமான விசுவல்களும்
, அற்புதமான கேரக்டர்களையும் கொண்ட படம் என்றால் , அது டார்க் நைட் தான் .
இப்படத்தைப்பற்றிப்
பார்க்கும்முன் என் சிறுவயதில் நடந்த நிகழ்வு
ஒன்று ஞாபகம் வருகிறது 2008 ன் ஜூலை மாதம் . அப்போதே நானெல்லாம் HBO மற்றும் STAR
MOVIES சேனல்களின் அதிதீவிர விசிறி . அந்த நாட்களில் நான் பார்க்கும் படங்கள் எல்லாம்
எந்தமாதிரி என்றால் , ஒன்று தாருமாறான சண்டைக்காட்சிகள் இருக்கவேண்டும் . இல்லையெனில்
அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கவேண்டும் . அப்போதெல்லாம் HBO வில் அடிக்கடி
ஆதிகால பேட்மேன் படங்கள் போடுவார்கள் . அதில் என்னை ஓரளவு ஈர்த்த படம் என்றால் , பெங்குயின்
வில்லனாக வரும் அந்த BATMAN RETURNS படம் மாத்திரமே ! அதற்கு காரணம் , சிம்பிள் . பென்குயின்
மட்டுமே ! அதைத்தாண்டிய மற்ற பேட்மேன் படங்களெல்லாம் என் பொறுமையை வெகுவாக சோதிக்கும்
.ஜாக் நிக்கல்சன் . ஜிம் கேரி , ஜார்ஜ் குளுனியெல்லாம் அப்போது என்னைப்பொறுத்த வரை
ஒரே ஒரு டப்பா படம் நடித்தவர்கள் . அத்தகைய காலகட்டங்களில் ஸ்பைடர்மேனின் தற்கொலைப்படை
ரசிகர்களில் நானும் ஒருவன் . அதற்கடுத்து , சூப்பர்மேன் தான் என் சாய்ஸ் . இவர்களுக்கு
அடுத்தது என் பேவரைட் என்றால் ஸ்ரெக் , ஃபைன்டிங் நீமோ போன்ற அனிமேசன் படங்கள் தான்
. ஒருமுறை ( ஜூலை ஆரம்பம் என்று நினைக்கிறேன்
) நோக்கியா நிறுவனம் , தன்னுடைய புதுவகை போன்களை வாங்கினால் , பேட்மேன்
கீசெய்ன் , டீசர்ட் போன்றவற்றை வெல்லலாம் என விளம்பரம் கொடுத்திருந்தது . நோக்கியா
தான் அப்படியென்றால் , செய்ன்ட் கோபைன் கிளாஸ்
நிறுவனம் , டாடா நிறுவனம் என்று பெரிய பெரிய நிறுவனங்கள் , பேட்மேன் , பேட்மேன் என்று ஒருமாத காலத்திற்கு தங்களின் விற்பனைக்காக
பேட்மேனின் ஜட்டிவரை பரிசாக அறிவித்தார்கள் . ஜூலை மாதம் முழுக்க , அந்த இரண்டு டீவி
சேனல்களில் வெறும் பேட்மேன் தான் .
ஜூலை 18 அன்று
டார்க் நைட் அமெரிக்காவில் ரிலிசாகியது . அன்று
லாஸ் ஏஞ்சலஸில் ஒருவர் டார்க் நைட் படத்தைக்காண சென்றுள்ளார் . அவர் சென்ற
ARCLIGHT மல்டிபிளக்சில் 14 ஸ்கிரினில் டார்க் நைட் தான் ஓடிக்கொண்டிருந்தது . ஆனால்
அவருடைய துரதிருஷ்டம் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை . அவர் யாரென்று பார்த்தால்
, கிறிஸ்டோபர் நோலனின் கூடப்பிறந்த சகோதரர் ஜொனதன் நோலன் தான் . சரி , அடுத்த ஷோவிற்காவது
டிக்கெட் வாங்கலாம் என்று , அந்த மாலில் இருக்கும் ஒரு பாரில் அமர்ந்து தலைவர் பீர்
அடித்திருக்கிறார் . ஒரு ஸ்கிரினில் படம் முடிந்ததும் , அந்த ஸ்கிரினில் டிக்கெட் எடுக்கலாம்
என்று டிக்கட் கவுண்டர்க்கு சென்றிருக்கிறார் . அங்கே கனஜோரான கூட்டம் இருக்க , தலைவர்
வரிசையில் நின்றிருக்கிறார் . இவரின் முறை வந்ததும்
‘எப்பா தம்பி
! ஒரு டிக்கெட் . பர்ஸ்ட் கிளாஸ் . நல்லா சென்டர் சீட்டா பார்த்துப்போடு ’ என்று டிக்கெட்
கொடுப்பவனிடம் கூறியிருக்கிறார் .
‘என்ன டேட்ல வேனும்
சார்’ என்று அவன் கேட்க , இவர் கடுப்பாகி
‘யோவ் ! என்ன விளையாட்றியா
? அடுத்த ஷோக்கு தான்யா ’ என்றிருக்கிறார் .
‘சாரி சார் . ரெண்டு நாளைக்கு ஹவுஸ்புல் ’ என்றானாம் அவன் .
‘என்ன விளையாட்றியா
? எனக்கு முன்னாடி இருந்தவங்களுக்கெல்லாம் டிக்கெட் கொடுத்து அனுப்பற . என்ன மட்டும்
வுடமாட்டேன்ற ’ என்ற ஜொனாதனிடம்
‘அவுங்கள்லாம்
அடுத்த வாரத்துக்கு டிக்கெட் புக் பண்ண வந்துருக்காங்க சார்’ என்றானாம் .
சரி , ஆக்ரோஷவழியில்
நம் உரிமையை நிலைநாட்டுவதற்கு பதில் , இரக்கத்தில் இவனை சாய்க்கலாம் என்றெண்ணி , நான்
தான் இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் என்று கூற , அப்போதும் அந்த டிக்கெட் கொடுப்பவன்
விடவில்லையாம் . மறுபடியும் பாருக்கு வந்து அமர்ந்து பீரை குடித்துக்கொண்டே போனை எடுத்த
ஜொனதன் , தன் அண்ணனிடம் பேசலாமா என்று யோசித்தாராம் . எப்படியும் நம்ம அண்ணாத்த , அண்ணியோட
ஜப்பான்லயோ , ஹாங்காங்லயோ ஜாலியா டூயட் பாடிட்ருப்பாரு என்றுணர்ந்த ஜொனதன் , அடுத்ததாக
WB க்கு போனை அடித்திருக்கிறார் . அவர்களோ இவருக்கு அட்டகாசமானதொரு பதிலை அளித்திருக்கிறார்கள்
.
‘தம்பி ! இந்த
படத்துக்கு டிக்கெட் அந்த தியேட்டர்ல மட்டுமில்ல , லாஸ் ஏஞ்சலஸ் , ஏன் அமெரிக்காவுலயே
இல்லை . எல்லாம் ஃபுல் . இப்போதைக்கு கடல்ல கூட இல்லையாம் .’ என்றிருக்கின்றனர் .
மனிதர் படுபயங்கர
கோவத்தில் இருக்க , இவர் எதிரிலேயே அனைவரும்
படத்தைப்பார்த்து முடித்துவிட்டு ஆஹா ! ஓஹோ என்று புகழ்ந்தவாறே சென்றிருக்கின்றனர்
. அப்பவே நம்ம அண்ணன் ப்ரிவியூ ஷோவுக்கு கூப்டான் . ஒழுங்கா போயிருக்கலாம் என்று நொந்தவாறே
இடத்தை காலி செய்தாராம் .( பின்குறிப்பு – ஜொனதனுக்கு , ஆடியன்சோடு அமர்ந்து படம் பார்க்கவே
அதிக விருப்பமாம் . இதற்குமுன் இவரது திரைக்கதையில் வெளிவந்த அத்தனைப்படங்களையும் அப்படித்தான்
இவர் பார்ப்பாராம் .)
மேலே உள்ள பேட்டியை
படிக்கும்போதுதான் எனக்குத்தெரிந்தது . எதற்காக நோக்கியா முதல் அனைத்து நிறுவனங்களும்
அந்த ஒருமாதம் பேட்மேனை வைத்து பிழைப்பு நடத்தினார்கள் என்று .
சரி , படத்தைப்பற்றி
பார்ப்போம் . BATMAN BEGINES -ல் முதல் வில்லன்
ராஸ் – அல் – குல்லை அழித்தாயிற்று (இவரு கொல்லலைங்கோ ! அவரே செத்துட்டாரு ) . இரண்டாவது
வில்லனான ஸ்கேர்க்ரோவை ஜெயிலுக்கு அனுப்பியாயிற்று . கிட்டத்தட்ட கோதம் நகரின் பிரபல
வில்லன்களையெல்லாம் பேட்மேன் அழித்துவிட்டார் . CORRUPTED அதிகாரிகளையும் திருத்திவிட்டார்
. கடைசியாக படம் முடியும்போது கமிஷனர் கோர்டன் , ஒரு
கார்டை கொடுத்து , இவன்தான் இப்போது சிட்டியை மிரட்டத் தயாராகிக் கொண்டிருக்கிறான்
என பேட்மேனிடம் சொல்கிறார் . அதேநேரம் , தன்
காதலி ரேச்சலோ , இந்த சிட்டிக்கு பேட்மேன் தேவையில்லை எனும் நிலை ஏற்படும்போது பேட்மேனை
மணப்பதாக கூறுகிறாள் . இத்துடன் படம் முடிகிறது . இந்த பாகத்தில் , முதல் காட்சி வருகிறது
. ஒரு பதறவைக்கும் மாதிரியான இசையுடன் ஒரு பெரிய பில்டிங்கை காட்டுகிறார்கள் . அந்த
பில்டிங் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ஒரு கயிறைக்கொண்ட அம்பு , எங்கோ செல்கிறது . அதனைத்தொடர்ந்து
, ஒரு பேங்க் கொள்ளையடிக்கப்படும் காட்சிகளும் , கொள்ளையர்களே ஒருவர் மாறி ஒருவர் சுட்டுக்கொல்வதையும்
நாம் பார்க்கிறோம் . அனைவரும் இறந்துவிட , மிச்சமிருக்கும் ஒருவன் நம்முன் அறிமுகமாகிறான்
. அவன்தான் , உலகின் மோஸ்ட் வான்டட் வில்லன் , ஹாலிவுட்டின் ஃபேவரைட் வில்லன் , நோலனின்
அதிஅற்புதமான படைப்பு எனப்பலவாறு புகழப்படும் ஜோக்கர் .
இதே காட்சியை எவ்வளவு கேவலமாக எடுக்கலாம் என்பதை காணவிரும்புபவர்கள் , ஜூலாயி எனும் அல்லுஅர்ஜுனின் தெலுங்கு படத்தினைக்காணுமாறு சிபாரிசு செய்யப்படுகிறார்கள் . சரி , எல்லோரும் காண்டாவது புரிகிறது . இப்படத்தின் கதையைப்பற்றி கூறுவது என்பதும் , அல்வா எப்படி சாப்பிடவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதும் ஒன்றுதான் . இப்படத்தினைப்பார்க்காதவர்கள் யாரும் இணையதளத்தில் உலவிக்கொண்டிருக்கமுடியாது . எனவே சில முக்கியமான விஷயங்களைப்பற்றி மட்டும் எழுதிவிடுகிறேன் . மேலே நாம் பார்த்த காட்சிதான் , உலக வரலாற்றிலேயே முதன்முதலில் IMAX TECHNOLOGY மூலம் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் . அதற்குமுன் வரை IMAX- ல் வெளிவந்த திரைப்படங்கள் 35MM கேமரா மூலம் படமாக்கப்பட்டு , IMAX – க்கு ஏற்றவாறு கன்வர்ட் செய்யப்பட்டே வெளிவந்தன . ஆனால் இப்படத்தின் 6 ஆக்சன் காட்சிகளின் பெரும்பகுதி IMAX டெக்னாலஜியின் அடிப்படையில்தான் வெளிவந்தது . அப்படி என்ன IMAX டெக்னாலஜி என்று நீங்கள் புலம்புவது தெரிகிறது . IMAX பற்றி தெரியாதவர்கள் இங்கே அழுத்துங்கள் .
இந்த ஜோக்கரின்
இன்ட்ரோ காட்சியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி மறைந்திருக்கிறது . அதாவது , அந்த பேங்க் மேனஜரிடம் தன் முகமுடியைக்கழற்றிவிட்டு
‘ I BELIEVE WHATEVER DOESN’T KILL YOU SIMPLY MAKES YOU ’ என வசனம் பேசுவார் . அந்த
காட்சியைப் படமாக்கும்போது , கேமராவில் ஏதோ டெக்னிக்கல் ப்ராப்ளம் ஆகி , லெட்ஜரின்
முகம் அவுட் ஆஃப் போகஸ் போல் ஆகிவிட்டது . எனவே நோலன் மீண்டும் ரீஷூட் செய்யச்சொல்ல
, குழப்பமடைந்த லெட்ஜர் , நம் நடிப்புத்தான் சரியில்லை , அதனால் தான் கிறிஸ் மறுபடியும்
ரீஷூட் செய்யச்சொல்லிவிட்டார் என நினைத்துவிட்டார் . அதனால் , ஆறுமாதகாலமாய் , ஹோட்டல்
ரூமில் தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அடுத்த ஷாட்டில் அவர் இறக்கினார் . ஆனால்
நோலனுக்கோ இரண்டாம் காட்சியில் திருப்தி ஏற்படாமல் , முதலில் எடுத்த அவுட் ஆஃப் போகஸ்
காட்சியையே பிக்ஸ் செய்து , நமக்கும் அதையே காட்டியிருப்பார் . (அந்த காட்சியை பார்த்துவிட்டு
, இதில் எங்க தம்பி அவுட் ஆஃப் போகஸ் இருக்குனு சண்டைக்கு வந்துடாதிங்க . அதையெல்லாம்
DI ல சரிசெஞ்சுதான் ரிலிஸ் பண்ணாங்க .)
லெட்ஜரின் ஜோக்கர் பாத்திரத்தின்மூலம் தான் ஆஸ்கார் பெற்றார் என்று நமக்கு தெரியும் . ஆனால் லெட்ஜர் ஏற்கனவே BROKEBACK MOUNTAIN எனும் திரைப்படத்திற்காக , ஆஸ்கார் நாமிநேட் செய்யப்பட்டிருக்கிறார் . அந்த படத்தில் அவரின் நடிப்பைக்கண்ட நோலன் , அவரின்பால் ஈர்க்கப்பட்டுத்தான் ஜோக்கராக நடிக்கும்படி லெட்ஜரை அணுகினார் . திரைக்கதை முழுதாக ரெடியாவதற்கு முன்பே லெட்ஜர், ஜோக்கர் கேரக்டரில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு , ஹோட்டல் அறையில் ஆறுமாதகாலமாய் தனக்குள் இருக்கும் ஜோக்கரை வெளிக்கொணர்வதில் ஈடுபட்டிருந்தார் . திரைக்கதையின் முழுவடிவம் ரெடியானபின் , ஒவ்வொரு காட்சியைப்பற்றியும் , அடிக்கடி நோலனுடன் விவாதித்துக்கொண்டே இருந்தார் . இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம் ஒருவகையில் அவரது நடிப்பும் , குரலும் தான் . அவரின் முந்தைய படங்களில் அவரின் குரலுக்கும் , இப்படத்தில் அவரின் வாய்ஸ் மாடுலேசனையும் பார்த்தால் தெரியும் . ஆனால் , அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாட ரசிகர்கள் தயாராய் இருந்த நேரத்தில் அவர் மரணமடைந்துவிட்டார் . அளவுக்கதிகமாக மாத்திரைகளை உண்டதால் மரணித்துவிட்டார் என்று போஸ்ட்மாடர்ம் ரிப்போர்ட் கூறினாலும் , நோலனின் சைக்கியாட்ரிக் வித்தைகளில் மயங்கி , ஜோக்கராய் தன்னைக்காட்ட , அதிகமான மருந்துகளை உட்கொண்டதன் விளைவாகவே லெட்ஜர் இறந்துவிட்டார் என்ற புரளிகளை ஹாலிவுட்டில் சில புண்ணியவாண்கள் கிளப்பிவிட்டார்கள் . இப்படத்தில் லெட்ஜரின் பங்கு எத்தகையது என்றால் , அவர் இறக்கும்முன்பே நோலன் வெளியிட்ட ஒரு பேட்டியின்மூலம் அறிந்துகொள்ளலாம் . ‘லெட்ஜர் தன்னுடைய வசனங்களை வெறும் குரல்வளையின் உதவியோடு மட்டும் பேசவில்லை . அவரின் இதயத்திலிருந்துதான் அவரது வசனங்கள் வெளிவந்தன . அவர் ஒரு அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர் .’ என்றார் நோலன் .
பேட்மேன் பிகைன்ஸ்
திரைப்படத்தில் , ஜோக்கரின் கார்டை கமிஷனர்
கோர்டன் கொடுப்பது போன்ற காட்சி , ஒரு EXCITEMENT – ற்காகவே வைக்கப்பட்டது . அப்போது
THE DARK KNIGHT பற்றிய எந்தவொரு ஐடியாவும் இல்லாமல்தானிருந்தார் . ஆனால் அதிர்ஷடவசமாக
இப்படத்தின் லிங்க் போல அந்த காட்சி அமைந்தது . பேட்மேன் ட்ரையாலஜியை எடுக்கும்முன்பு
நோலன் சகோதரர்களுக்கு அவ்வளவாக காமிக்ஸ் பரிச்சயம் இல்லை (காமிக்ஸ் என்றாலே கடுப்பாகும்
ஒருவர் இப்படத்தில் நடித்துள்ளார் . அவர் வேறு யாருமில்லை , கமிஷனர் கோர்டனாக வரும்
கேரி தான் .) . அதன்பின் இரவரும் , கதாசிரியார் டேவிட். எஸ் . கோயருடன் இணைந்து 65
வருடகால பேட்மேன் காமிக்ஸ்களை படித்து ஆராய்ந்து , அதில் வரும் கேரக்டர்களின் உண்மைத்தன்மையை
ஓரளவு அலசியபின்பே , தங்களின் கதாபாத்திரங்களை இவ்வாறெல்லாம் படைக்கலாம் என்று திட்டமிட்டனர்
.
பழைய ஜோக்கர்கள்
எல்லாம் கலர்கலராய் கோட் போட்டுக்கொண்டு , முகத்தில் மாஸ்க் போன்று பெயிண்ட் அடித்துக்கொண்டு
வந்திருந்தபோது இந்த படத்தில் வரும் ஜோக்கர் மாத்திரம் வெகு சிம்பிளாய் வருவார் . முகத்தில்
பவுடர் , மற்றும் லிப்ஸ்டிக் . வாயின் இருபுறமும் தழும்பு மற்றும் முகத்தின் சில இடங்களில் கருப்புநிறவண்ணம்
உபயோகிக்கப்பட்டிருக்கும் . இந்த ஒப்பனை ஐடியா நோலனுக்கு வந்ததற்கு காரணம் FRANCIS
BACON PAINTINGS ன் பாதிப்பு தான் . மேலும் காமிக்ஸ்களில் வரும் ஜோக்கரைப்பார்த்தால்
, கிறுக்குத்தனம் மிக்கவனாகவும் புத்திசாலித்தனம் குறைந்தவனாகவும் வருவான் ( காமிக்ஸின்படி
ஜோக்கரைக்காட்டிலும் புத்திசாலித்தனமாகவும் , பலசாலியாகவும் விளங்குபவன் BANE தான்
. காமிக்ஸ்களில் ஸ்கேர்க்ரோவின் வெளியிடும்
விஷவாயுத்தாக்கத்தினால் பாதிக்கப்படும் பேட்மேனின் கனவில் வந்து அட்டூழியம் செய்பவன்
தான் ஜோக்கர் ) . ஆனால் இப்படத்தில் , கிறுக்குத்தனம் குறைந்த , அதேநேரம் புத்திசாலித்தனமான
ஜோக்கரை உலவ விட்டிருப்பார்கள் .
நோலனுக்கு , இப்படத்தில்
மிகமிக பிடித்த காட்சி எதுதெரியுமா ? ஜோக்கரை
, கோர்டன் கைது செய்து சிறையில் வைத்திருப்பார் . அப்போது பேட்மேன் ஜோக்கரின் பின்னிருந்து
தோன்றி , ஜோக்கரை விசாரிப்பார் . இந்த காட்சிதான் நோலனுக்கு மிகவும் பிடித்த காட்சி
. ஏனென்றால் அதன்முன் வரை , பேட்மேனும் ஜோக்கரும் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் சந்தித்திருக்கமாட்டார்கள்
(அந்த சண்டைக்காட்சியை இதில் சேர்க்கவேண்டாம் .) அப்போது பேட்மேனிடம் ஹார்வி மற்றும்
ரேச்சல் இருக்கும் இடத்தை ஜோக்கர் கூறுவான் . ஜோக்கர் சொல்லிமுடித்ததும் பேட்மேன் ஜோக்கரை
அடிப்பதாக ஒரு காட்சி இருந்தது . ஆனால் ஷூட்டிங்கின்போது , பேல் அந்த காட்சியில் ஜோக்கர்
சொல்லிமுடித்ததும் அவனை விட்டுவிட்டு கிளம்பினராம் . ‘கட்’ செய்த நோலனிடம் பேல் சொன்னது
‘அவன் தான் உண்மையை சொல்லிவிட்டானே ! பின் எதற்கு அவனை அடிக்கவேண்டும் ’ என்றாராம்
. அதன்பின் நோலனும் அதேமாதிரியே படமாக்கினார் . இப்படத்தில் லெட்ஜருக்கு சரிசமமான அளவு பாத்திரத்தில்
ஒன்றிநடித்த பேலின் உழைப்பு இந்த காட்சியிலேயே தெரிந்துகொள்ளலாம் . ஒரு எக்ஸ்ட்ரா செய்தி
, கிறிஸ்டியன் பேலும் , ஹீத் லெட்ஜரும் ஏற்கனவே I AM NOT THERE எனும் திரைப்படத்தில்
ஒன்றாக நடித்திருக்கிறார்கள் .
ஜோக்கர் யார்
? எங்கிருந்து வந்தான் ? போன்ற கேள்விகளையெல்லாம் நோலனிடம் கேட்டதற்கு( நா இல்லைங்கோ
) சிம்பிளான பதில் கூறினார் . JAWS படத்தில் வரும் சுறாக்கள் எங்கிருந்து வந்தன ? அவைகளுக்கு
என்ன பின்புலம் ? போன்றவற்றைப்பற்றி நாம் ஆராய்கிறோமா ? அதேபோல் தான் ஜோக்கரும் . அவனைப்பற்றி
ஆராயத்தேவையில்லை . அவனுடைய நோக்கம் என்ன
என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும் என்றார் .
படத்தில் ஜோக்கர்
மற்றும் பேட்மேன் அறிமுகக்காட்சிகளை உற்றுநோக்கினால் ஒன்று புரியும் . பேட்மேன் , இருளின்
இளவரசனாய் கோதம் நகரைக்காக்க முயற்சிப்பார் . ஜோக்கர் , பகலில் சிங்கம்போல் கர்ஜித்து
நகரை நடுங்க விடுவார் . இதேபோல் TWOFACE எனப்படும் ஹார்வி கேரக்டரையும் இவ்வாறே கம்பேர்
செய்யலாம் . ஹார்வி – THE WHITE KNIGHT . பகலில் முகமுடியணியாத கோதமின் உண்மையான ஹீரோவாய்
, மக்களில் ஒருவனாய் , மக்களுக்காக போராடுபவனாய் இருப்பான் . வசந்தம்போன்ற அவனது வாழ்க்கையில்
புயல்போன்ற துன்பம் வரும்போது அவன் குணங்கெட்ட TWOFACE ஆக மாறி தீய செயல்கள் புரியத்துவங்குகிறான்
. ஆனாலும் எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர் வம்சத்தைச்சார்ந்த நம் பேட்மேனோ , வாழ்க்கையில்
எண்ணற்ற துன்பப்புயல்களை கடந்தவன் சிறுவயதில்
பெற்றோரை இழந்தான் ; காதலியையும் இழந்தான் . . அவனது வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள்
வந்தாலும் , எப்போதும் மனம்தளராமல் ஒரேமாதிரியாய் இருப்பவன் . எல்லோரும் ஒன்றை கவனிக்க
. இப்படத்தில் THE DARK KNIGHT எனக்குறிப்பிடப்படுபவர் BRUCE WAYNE தான் . பேட்மேன்
இல்லை . என்னய்யா சொல்ற ? கோர்டன் கூட கடைசி சீன்ல பேட்மேன பார்த்துதான DARK
KNIGHT னு சொல்லுவாரு என்கிறீர்களா ? அவருக்கு
பேட்மேன் யாரென்று தெரியாது .நமக்குத்தெரியுமே .
கோர்டனாக வரும்
கேரி ஓல்ட்மேன் , ஏற்கனவே எக்கச்சக்கமான திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் . அவருக்கு
நல்லவர் வேடங்களில் நடிக்கவேண்டும் என்ற நீண்டநாள் ஆசை , இப்படத்தின்மூலம் நிறைவேறியது
. ஆல்ஃபர்ட் ஆக வரும் மைக்கேல் கெய்னை பற்றி கூறவே வேண்டாம் (ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில்
இவர் நடித்த WITHOUT A CLUE முடிந்தால் பாருங்கள்
) . இவரும் ப்ரூஸ் வெய்னும் பேசிக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் கிளாஸ் ரகம் . விஞ்ஞானி
லூசியஸ் பாக்ஸ் ஆக வரும் மோர்கன் ஃப்ரீமேன் , வழக்கம்போல அட்டகாசம் செய்துள்ளார் .
இவரின் நக்கலான வசனங்கள் , உதட்டோரத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் . ஹார்வி டென்டாக ஆரன்
எக்கார்ட் . சரியான பொருத்தம் . படத்தில் கடுப்பாக்கிய ஒரு கேரக்டர் என்றால் அது ரேச்சலாக
வரும் மேகி தான் . இந்த நோலன் எதற்காக இந்த பாட்டியை படத்தில் ஹீரோயினாக போட்டு கடுப்பேற்றி
விட்டார் . அதுவும் ப்ரூஸும் , ஹார்வியும் ரேச்சல் , ரேச்சல் என உயிரை விடும்போது
‘ப்பா ! யார்ரா இவ ?’ ரகம் . கடுப்பாக அந்த பாட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
, அதை சாகடித்து நம்மைக்காப்பாற்றி விடுகிறார் . படத்தின் ஒளிப்பதிவாளர் WALLEY , ஒரு
அட்டகாசமான விசுவல்களை நமக்கு காட்டியிருக்கிறார் . என்ன , IMAX கேமராவில் படமெடுக்கிறேன்
என்று ஒரு கேமராவைத்தான் உடைத்துவிட்டார் பாவம் . இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் பற்றி
என்ன கூறுவது என்றே தெரியவில்லை . பேட்மேன் இன்ட்ரடக்சன் காட்சிகளில் வரும் அந்த தீம்
மியூசிக் , விசிலடிக்கவைத்துவிடும் . ரத்தத்தையே காட்டாத முதல் ஆக்சன் திரைப்படம்
. அதுவும் 32 கொலைகளை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனை வைத்துக்கொண்டு , இப்படியும் படமெடுக்கிறார்
நோலன் . இது மாத்திரம் டாரன்டினோ கையில் சிக்கியிருந்தால் , தியேட்டரையே நப்பிவிடும்
அளவிற்கு மோட்டர் போட்டு ரத்தத்தைக் காட்டியிருப்பார் . சரி , இந்த பதிவில் பேல் பற்றி
எழுதவிருப்பமில்லை . ஏற்கனவே பதிவின்நீளம் தாருமாறாய் இருப்பதால் THE LEGEND ENDS பதிவில்
அவரைப்பற்றி முழுதாய்ப்பார்க்கலாம் .
அடுத்து பேட் மொபைல்
எனப்படும் பேட்மேனின் பைக் . ஏற்கனவே
TUMBLER (டம்ளர் இல்லைங்க . டம்ப்ளர் )எனும் ஒருவித பீரங்கி போன்ற வாகனத்தை
வைத்திருந்த பேட்மேன் , இப்படத்தில் அட்டகாசமான பைக்கில் வருகிறார் . அது கிட்டத்தட்ட
உண்மையான பைக் தான் . அதைப்பற்றி பார்க்கவேண்டுமெனில்
YOUTUBE-ஐ அனுகுங்கள் . ஆனால் அந்த பைக் பற்றி ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி உள்ளது .
நோலனும் , ப்ரடக்சன் டிசைனர் நாதன் க்ரௌலியும் , பைக்கை உருவாக்கும் முயற்சியில் நோலனின்
வீட்டு கேரேஜில் உட்கார்ந்து தீவிரமாய் யோசித்து ஒரு டிசைன் செய்தார்கள் . அதை விஷூவல்
எஃபெக்ட் டீமிடம் காட்டினார்கள் . அதைப்பார்த்த அவர்கள் , நோலனிடம் கேட்டது ஒன்றே ஒன்று
தான் . ‘இதற்குமுன் பைக் என்றால் என்னவென்று உங்களுக்குத்தெரியுமா ?’ என்பதுதான் .
உண்மையாக கூறினால் மோட்டார்பைக் டெக்னாலஜியைப்பற்றி , நோலனுக்கு அவ்வளவாக தெரியாது
. அவரின் கண்டுபிடிப்பான அந்த பைக் , கடைசியில் முழுவடிவம் பெற்று திரையில் வந்தது
. அதில் முன்சக்கரத்தின் இரு பக்கங்களிலும் இரு துப்பாக்கிகள் இருக்கும் . ராணுவப்போர் விமானங்களில் இருக்கும் டிசைனிங் பாதிப்பில்
, அவ்வாறு நோலன் வைத்திருப்பார் .
வழக்கம்போல , உளவியல்
ரீதியிலான அணுகுமுறையை இப்படத்திலும் தொட்டிருக்கிறார் . சூப்பர்ஹீரோ படங்களில் ஒரு
பெரும்புரட்சியையே இப்படத்தின்வழியே நோலன் செய்துவிட்டார் . 2012-ல் வெளிவந்த THE
DARK KNIGHT RISES படத்தில் THE LEGEND ENDS எனும் கேப்சன் வைத்திருப்பார் நோலன் .
உண்மையில் பேட்மேனை LEGEND ஆக இப்படத்தில் மாற்றியிருப்பார் . இப்படத்தின் கடைசிக்காட்சிகளில்
கோர்டன் பேசும் வசனங்கள் , ஒருவிதமான பெருமையையும்
, இரக்கத்தையும் , தியாகத்தின் வலியையும் நமக்குள் கொண்டுவரும் . 2008 –ல் வெளிவந்த
படங்களின் வசூலில் நம்பர் 1. இதுவரை வெளிவந்துள்ள ஹாலிவுட் படங்களின் வசூலில் 19 வது
இடம் . 8 ஆஸ்கார் நாமினேஷன் . BAFTA முதல் GOLDEN GLOPEவரை அனைத்துவகையான விருதுகள்
மற்றும் நாமினேசன்கள் . 1 பில்லியனைத்தொட்ட 4 வது திரைப்படம் . சூப்பர்ஹீரோ படங்களில்
ஆல்டைம் ஃபேவரைட் . கேமரூனுக்கு அல்வா கொடுத்த
IMDB யில் 4-வது இடம் . ரோட்டன் டொமேட்டோசில் 94 சதவீத பாஸிட்டவ் ஓட்டுகள் (இந்த தளத்தில்
, THE DARK KNIGHT RISES வெளியானபோது நடந்த நிகழ்ச்சி சொல்லிமாளாது .) இப்படத்தில்
ஜோக்கரின் பாதிப்பு எத்தகைய சம்பவத்தை நிகழ்த்தியது என்றால் , THE DARK KNGHT RISES திரைப்படத்தின் ரிலிசின்போது
ஒரு அரைக்கிறுக்குப்பிடித்த பொறம்போக்கு , நான்தான் ஜோக்கர் என்று கூறி தியேட்டரில்
படம்பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி மக்களுல் 28 பேரைச்சுட்டு கொன்றான் .
BATMAN BEGINES திரைப்படம் 128 நாட்களில் ஷூட்டிங் முடிக்கப்பட்டது (பேட்மேன் பிகைன்ஸ் படத்தின் மூலம் , கிறிஸ்டியன் பேலின் அடுத்த படமான RESCUE DAWN க்கு மார்க்கெட் கிடைத்தது .) . அப்படியென்றால் DARK KNIGHT படத்திற்கு எத்தனை நாட்கள் ஆகியிருக்கவேண்டும் ? வெறும் 122 நாட்களில் படத்தின் ஷூட்டங்கை முடித்துவிட்டு , நோலன் இன்சென்பசன் எழுத சென்றுவிட்டார் . கிட்டத்தட்ட இப்படத்தின்வழியே நோலனுக்கு இன்செப்சனுக்கு ஒரு ஐடியா கிடைத்தது . அவருக்கு கிடைத்த ஐடியா வேறொன்றுமில்லை , ஐடியா தான் . புரியவில்லையா ? பேட்மேன் பிகைன்ஸ் திரைப்படத்தின் கிளைமேக்சில் வரும் ஜோக்கர் கார்ட் எனும் ஐடியாவை பட்டைத்தீட்டி , காமிக்ஸில் வரும் ஹார்வி எனும் ஐடியாவை உள்ளே இழுத்துவிட்டு , ரேச்சலை ஹார்வியுடன் இணைத்துவிடும் ஐடியாவைக்கொண்டு , TWO FACE ஐ உருவாக்கலாம் எனும் ஐடியாவை வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் THE DARK KNIGHT . இப்போது இந்த படத்தின் உருவாக்கம் எனும் ஐடியா எங்கிருந்து வந்தது என்று யோசித்தால் , ‘அடப்போப்பா ! என்று கடுப்பாகாதீர்கள் . அடுத்த பதிவு இன்செப்ஷன் பற்றியது தான் . அதில் நான் விலாவரியாக ஐடியாவைப்பற்றி கூறுகிறேன் . (இவ்வருடத்தின் முதல் பதிவு !!!)
தொடர்புடைய இடுகைகள்
#ஜொனதனுக்கு , ஆடியன்சோடு அமர்ந்து படம் பார்க்கவே அதிக விருப்பமாம் #
ReplyDeleteஜொனதனின் தொடர் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் !
அதை எதற்காக அவர் செய்தார் என்று புரியவில்லை அண்ணா ! அவருடைய பேட்டிகளில் அதைக்கூறியிருந்தார் . நீங்கள் கூறுவதும் ஒருவகையில் உண்மையாய் இருக்கலாம் .
Deletefirst change your font man
ReplyDeleteI'll Check it and Come Back to u ! Thnx For ur Compliment
DeleteSir,
ReplyDeleteWrite about the Film "The Great Escape"
Billa
Ya Sure Sir !!!
Deleteஅட்டகாசம் ... :) ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...
ReplyDeleteரொம்ப நன்றிங்க தல !
Delete