Sunday, 21 December 2014

பிசாசு – சினிமா விமர்சனம்ஹெர்குல் பொய்ரெட் . அகதா கிறிஸ்டி என்ற ஆங்கில க்ரைம் கதை மன்னனின் ஆஸ்தான கேரக்டர் தான் ஹெர்குல் பொய்ரெட் . அகதா கிறிஸ்டி , பொய்ரெட்டை ஒரு பொறியுருண்டை மாதிரி வடிவமைத்திருப்பார் . ஆனால் அவர் துப்பறிவதைப் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாய் இருக்கும் . 1926 –ல் வெளியான அகதாவின் புகழ்பெற்ற ஒரு நாவல் , THE MURDER OF ROJER ACKROYD . ஒரு கொலையைக்கண்டுபிடிக்க வரும் பொய்ரெட் , அவருக்கு உதவும் ஒரு டாக்டர் என கதை பரபரவெனச்செல்லும் . ஆனால் , கடைசியில் வைப்பார் பாருங்கள் ஒரு ட்விஸ்ட் . அந்த ட்விஸ்ட்டாலேயே அந்த நாவல் இன்றளவும் உலக க்ரைம் நாவல்களில் 5-ஆம் இடத்தில் இருக்கிறது .

2004 – ஆம் ஆண்டு , ஹாலிவுட் விக்ரம் (சாரி ! கோலிவுட் கிறிஸ்டின்பேல்னு வேனும்ணா விக்ரம சொல்லலாம் .) கிறிஸ்டின்பேலின் நடிப்பில் , ப்ராட் ஆன்டர்சன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படம் THE MACHINIST . இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்ட பேல் , தன் எடையை இழந்துகொண்டே வருவார் . திடிரென ஒரு உருவம் அவரை மிரட்டிக்கொண்டே இருக்கும் . பேலுக்கு பலவிதமான மனஉலைச்சல்கள் அந்த உருவத்தால் ஏற்படும் . அந்த உருவம் தன்னைக்கொல்ல நினைப்பதாக பேல் எண்ணிக்கொண்டு , தப்பிப்பிழைக்க முயற்சிப்பார் . கடைசியில் வேறுவழியே இல்லாமல் போலிசிடம் சரணாகதி அடைவார் . அங்கு ஒரு கிளைமேக்ஸ் ட்விஸ்ட் வரும் . அதுதான் அப்படத்தைக்காப்பாற்றி இருக்கும் .

அடப்பாவி ! பிசாசு விமர்சனம்னு ஏதேதோ எழுதி வச்சிருக்கன்னு திட்டாதிங்க . நேரா இப்போ கதைக்கு வரலாம் . முதல்காட்சி , ஒரு பெண் தலையில் அடிபட்டு ரோட்டில் கிடக்கிறாள் . அவளைக்காப்பாற்ற ஹீரோ முயல , அவள் இறந்துவிடுகிறாள் . அவளின் நினைவாக ஒரு செருப்பை எடுத்துக்கொண்டு வருகிறார் . சில நாட்கள் கடந்தாலும் ஹீரோவிற்கு அப்பெண்ணின் நினைவு மட்டும் அகலவில்லை . ஒரு கட்டத்தில்  இறந்த பெண் , பேயாக மாறி அவன் வீட்டிலேயே இருக்கிறாள் . அவளை விரட்ட ஏதேதோ முயற்சி செய்கிறார் ஹீரோ ! ஆனால் முடியவில்லை. ஆனால் அந்த பேயோ , ஹீரோவின் அம்மாவை காப்பாற்றுவது முதலான நல்ல செயல்களை செய்கிறது . இதைப்புரிந்து கொள்ளாத ஹீரோ , அந்த பெண்ணின் தந்தையிடம் சென்று , புதைத்த பிணத்தை எரிக்குமாறு மிரட்டுகிறார் . ஏன் என வினவும்  அப்பெண்ணின் தந்தையை அழைத்துவந்து , தனது வீட்டில் இருக்கும் பேயைக்காட்டுகிறான் .  அதேநேரத்தில் , அந்த பேய் நல்லபேய் என கண்டுகொள்ளும் ஹீரோ , அதைக்கொன்றவர்களைத்தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கிறான் . இதுதான் கதை !இப்படத்தினை வேறு எந்த இயக்குநர் எடுத்திருந்தாலும் , அதரமொக்கையாய் போயிருக்கும் . இல்லாவிடில் கமர்ஷியல் மயமாய் இருந்திருக்கும் . ஆனால் , மிஷ்கின் இப்படத்தை உளவியல்ரீதியாகும் , அதேநேரத்தில் சமூக அவலங்களையும் கையில் எடுத்துக்கொண்டு ஒரு அக்மார்க் கிளாசிக் திரைப்படமாக மாற்றியிருக்கிறார் . பொதுவாக மிஷ்கினின் படங்கள் ‘காப்பி’ என்றதொரு குற்றச்சாட்டு வரும் . நான் அந்த ஒரிஜினல் படங்களைப்பார்த்ததில்லை . காரணம் , எப்படியும் அந்த ஒரிஜினலைவிட 100 மடங்கு சிறப்பாகத்தான் மிஷ்கின் எடுத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு . இப்படத்தில் நான் எதிர்பார்க்காதது , ஹுயுமர் தான் . மிஷ்கினிடம் இவ்வளவு நகைச்சுவைத் திறமை இருக்கிறதா என்று எண்ணுமளவிற்கு , நயமான நகைச்சுவை இப்படத்தில் தூவிவிட்டிருக்கிறார் . அடுத்து இப்படத்தை பேய்ப்படம் , பயங்கரமாய் பயமுறுத்தும் என்றெண்ணி செல்லவேண்டாம் . இது ஒரு உளவியல்ரீதியிலான க்ரைம் கதை . ஹீரோவாய் வருபவர் முகம் எங்கே இருக்கிறது என்று தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும் .தலையில் முடியும் , அதற்கு சரிசமமாய் முகத்தில் தாடியையும் வைத்துக்கொண்டு , பார்க்க இவர்தான் பிசாசு பொல இருக்கிறார் . அவரின் நண்பர்களாய் வரும் இருவரும் தூள் கிளப்புகிறார்கள் . ஹீரோயினாக வருபவரை பார்க்கும்போது ‘வாவ்’ சொல்லத்தோன்றுகிறது . யாருக்கும் பெரிதாய் நடிக்க சான்ஸ் இல்லை .ஆனால் , ஒவ்வொருவரிடம் இருந்தும் பல விஷயங்களை மிஷ்கின் , அருமையான குறியீடுகளாய் காட்டியிருக்கிறார் . ப்ரேமில் ஒரு நடிகர் கூட , சும்மா தேமே என்று வராமல் ஒவ்வொருவரையும் மனதில் பதியுமாறுச்செய்துள்ளார் .

லாங்ஷாட் , வசன அளவு , கேமரா ஆங்கிள் , இசை போன்றவற்றை எப்படி்ககையாள வேண்டும் என்பதனை மிஷ்கினின் படங்களைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் . அவ்வளவு அருமையாக கையாண்டிருக்கிறார் .


மேலே முதலிரண்டு பத்தியில் நான் எழுதியவைகளில் ஏதேனும் ஒன்றை அறிந்தவர்கள் , இப்படத்தின் முடிவினை நன்கறியலாம் .

மொத்தத்தில் ‘அரண்மனை’ போன்றதொரு படமாகவும் இல்லை . அதேநேரம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ போன்றதொரு படமாகவும் இல்லை .கமர்ஷயல் டைப் ரசிகர்கள் , கொஞ்சம் பொறுமையாய் ரசிக்கவேண்டி இருக்கும்  . க்ரைம்கதைப்பிரியர்கள் , உலக சினிமா விரும்பிகள் , தமிழில் மாற்றுத்திரைப்படம் பார்க்கவிரும்புபவர்கள் ஆகியோர் தாராளமாய் செல்லலாம் .

இப்படத்தினைப்பற்றிய பதிவு ஒன்று பெரிதாக எழுதவிருப்பம் . அதை வரும்வாரங்களில் எழுதலாம் என்றும் இருக்கிறேன் . காரணம் அவ்வளவு குறியீடுகள் . இப்போதைக்கு , இப்படத்தினைப்பற்றிய விமர்சனம் முற்றியது .தொடர்புடைய பதிவுகள்லிங்கா - சினிமாவிமர்சனம்


சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம்


THE PRESTIGE- சினிமா விமர்சனம்


உங்கள் விருப்பம்

4 comments:

 1. மிஷ்கின் படத்தை நான் மிஸ் பண்ணுவதே இல்லை ,உங்கள் விமர்சனம் உடன் பார்க்கத் தூண்டுகிறதே :)

  ReplyDelete
  Replies
  1. இன்னும் பார்க்கவில்லையா ? சீக்கரம் பாருங்கண்ணே ! மிஷ்கின் படம் எவ்வளவு சூப்பரா இருந்தாலும் ஒரு வாரத்துக்கு மேல ஓடாது !!

   Delete
 2. //ப்படியும் அந்த ஒரிஜினலைவிட 100 மடங்கு சிறப்பாகத்தான் மிஷ்கின் எடுத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .//
  !!!!!!! உண்மைதான்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா !!!

   Delete