லிங்கா - சினிமா விமர்சனம்
4 வருடங்களுக்குப்பின்
ரஜினி திரைப்படம் , அதுவும் ரவிக்குமார் இயக்கத்தில் , ரஜினியின் பிறந்தநாளன்றெ ரிலிஸ்
என்பதால் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ! அதையெல்லாம் படம் பூர்த்தி செய்ததா ?
படத்தின் கதை பத்திரிக்கை
, இணைய விமர்சகர்களால் ஏற்கனவே பிரித்து மேயப்பட்டுவிட்டன . எனவே கதை பற்றி தெரியாதவர்கள்
மட்டும் இந்த பத்தியை படிக்கவும் . மற்றவர்கள் நேரே அடுத்த பத்திக்கு வந்துவிடுங்கள்
. சோலையூர் எனும் ஊரில் அணைக்கட்டை ஆராய வரும் என்ஜினியர் பொன்வண்ணன் , அவ்வூரின் எம்பியால்
கொலை செய்யப்படுகிறார் . பொன்வண்ணன் சாகும்போது , அணையை ஒட்டியுள்ள கோவிலில் ஒரொ ருத்ராட்ச
மாலையை தூக்கியெறிந்துவிட்டு , ஊர்ப்பெரியவரிடம்
அந்த கோயிலை திறந்தால்தான் அவ்வூரைக் காப்பாற்ற முடியுமென சொல்லி இறக்கிறார் . அந்த
கோயிலை திறக்கவேண்டுமெனில் அணையையும் அக்கோவிலையும் 70 ஆண்டுகளுக்குமுன் கட்டிய ராஜா
லிங்கேஸ்வரரின் வாரிசு தான் திறக்கவேண்டும் என சத்தியம் செய்யப்பட்டுள்ளதால் , அந்த ராஜாவின் வாரிசை அவ்வூர்வாசிகள் தேடிச்செல்கின்றனர்
. ஊர்ப்பெரியவரின் பேத்தியும் , நியூஸ் ரிப்போர்ட்டருமான அனுஷ்கா , ராஜாவின் பேரனான
லிங்காவை கண்டறிகிறார் . ஆனால் திருட்டுத்தொழில் செய்யும் லிங்கா , தன் நிலைமைக்கு
தன்னுடைய தாத்தாவே காரணம் என்பதால் வரமறுக்கிறார் . ஒருகட்டத்தில் வேறுவழியில்லாமல்
ஒத்துக்கொள்ள , சோலையூருக்கு ரஜினி மற்றும் அவருடைய நண்பர்கள் சந்தானம் , கருணாகரன்
ஆகியோர் செல்கின்றனர் . அந்த பெரியவரின்மூலம் , அணைக்கட்டு கோவிலில் இருக்கும் மரகதலிங்கத்தைப்பற்றி
அறியும் ரஜினி அண்ட் கோ , அதைத்திருட முயற்சி செய்கின்றனர் . அதை ஊர்க்காரர்கள் பார்த்துவிட
, ரஜினி கோவிலை திறந்து பூஜை செய்வதுபோல் நடிக்கிறார்
. அப்போது ஊர்க்காரர்களிடம் , ரஜினியின் தாத்தாவும் ராஜாவுமான லிங்கேஸ்வரனைபற்றி ஊர்ப்பெரியவர்
கூறுகிறார் . 1939 –ல் , பிரிட்டிஷ் ஆட்சியின்போது கலெக்டராக அறிமுகமாகும் ராஜா , சோலையூருக்கு
அணை கட்ட பிரிட்டிஷாரிடம் கேட்கிறார் . ஆனால் அதைமறுக்கிறது பிரிட்டிஷ் அரசாங்கம்
. கோவமடைந்த ரஜினி , தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் சொந்த பணத்தில் அணையை கட்டிமுடிக்கிறார்
. கட்டிமுடிக்கும் தருவாயில் சிலரின் நயவஞ்சகத்தால் ¸தன் சொத்துமுழுதும் இழந்து , ஊர்க்காரர்களிடமும்
அவமானப்பட்டு அவ்வூரைவிட்டு செல்கிறார் . அவருடைய தியாகத்தை பின்னரே உணரும் மக்கள்
, அவரிடம் சென்று தங்களின் ஊருக்கே வருமாறு கெஞ்சுகின்றனர் . ஆனால் அதைமறுத்துவிடுகிறார்
ராஜா . அவர் வந்து தான் திறக்கவேண்டுமென்று அப்போதைய ஊர்த்தலைவரான விஜயக்குமார் சத்தியம்
செய்துவிடுகிறார் . அதன்பின் தான் தனது தாத்தாவின் பெருமைகளை உணரும் ரஜினிக்கு , ஊர்ப்பெரியவரின்மூலம்
ஒரு உண்மை வெளிப்படுகிறது . அதாவது , மீண்டும் சோலையூருக்கு ஒரு மாபெரும் ஆபத்து வந்துவிட்டது
என்பதும் அதை பேரன் ரஜினிதான் தீர்த்துவைக்கவேண்டுமென்பதுதான் . அதன்பின் என்ன ஆனது
என்பதே திரைப்படம் .
முதலில் இப்படத்தில்
வறிந்து கட்டி திட்டப்படவேண்டியவர் ரஹ்மான் தான் . முதலிரண்டு பாடல்கள் மட்டும் சுமாரக
கொடுத்துள்ளார் .மற்றபடி ஏனோதானோ என்று முடித்துக்கொடுத்துள்ளார் . கடைசியாக படையப்பாவிற்குப்பின்
ரஜினிக்கு ரஹ்மான் அடித்து தூள் கிளப்பிய பாடல்கள் சிவாஜியில் மாத்திரம் இருந்ததாக
ஞாபகம் . முதல் பாடலே , கோச்சடையான் படத்தின் பாட்டை மீண்டும் ரீமேக்காக்கியிருக்காரோ
என எண்ணவைக்கிறது . பிண்ணனி இசை படுமோசம் . இவருடைய இசையினால்தான் பலமான இடங்கள் கூட
படுகேவலமாக இருந்தது. தயவு செய்து அடுத்த படங்களில் ரவிக்குமாரும் , ரஜினியும் ரஹ்மானை
பயன்படுத்துவதைப்பற்றி யோசிக்கவேண்டும் . ரவிக்குமார் அவசரகதியில் பாடலை ஓகே செய்தாரா
? இல்லை ரஹ்மானின் இசைத்திறம் வறண்டுவிட்டதா என எண்ணுமளவிற்கு இருக்கிறது இசை .
அடுத்து பாராட்டப்படவேண்டியவர்
எடிட்டர் . ஆறே மாதத்தில் படம் முடிப்பதெல்லாம் ஓகே ! ஆனால் அதெற்கென்று அவசரகதியில்
ஏனோதனோவென்று எடுத்து எடிட்டரிடம் கொடுத்துவிட்டார்கள் போல . அவரும் தன் திறமை முழுதையும்
காட்டி , கத்தரித்து ஒட்டியுள்ளார் . அவர் மட்டும் இல்லையெனில் , நோலனின் படம் போல்
ஆங்காங்கே துண்டுதுண்டாய் படம் இருந்திருக்கும் .கலை இய்க்குநரும் முடிந்தவரை பிரம்மாண்ட
செட்களை அழகாக வடிவமைத்துள்ளார் . அந்தகால கார் , கண்ணாடி , மாளிகைகள் போன்றவையெல்லாம்
முடிந்தவரை செட் போட்டு தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவையும்
பாராட்டியாகவேண்டும் .மனிதர் தீயாய் வேலை செய்துள்ளார் . பிரம்மாண்ட காட்சிகளை எடுப்பதில்
ஏற்கனவே ஷங்கரிடமும் , வித்தியாசமான கேமரா ஆங்கிளை செட் செய்வதில் கௌதம் மேனனுடம் வேலைசெய்துள்ளதால்
, இவ்விரண்டும் இப்படத்தில் இவருக்கு கைக்கொடுத்துள்ளது .
ஏங்க கிராபிக்ஸ்
டிசைனர் ஐஸ்வர்யா ! உங்களால இவ்வளவு தான் முடியுமா ? முதலில் படத்தில் கிராபிக்ஸ் என்பது
இருப்பதே தெரியாத அளவுக்கு காட்சி அமைப்பதுதான் கிராபிக்ஸ் டிசைனரின் வேலை . அதைவிட்டு
விட்டு , அச்சுஅசலாய் இதெல்லாம் கிராபிக்ஸ் என்பது பட்டவர்த்தனமாய் தெரியுமளவிற்கா
காட்சிப்படுத்துவிர்கள் ? ட்ரெய்ண் சண்டைக்காட்சிகளில் அப்படியே தி வேம்பைர் ஹண்டர்
படத்தின் சண்டைக்காட்சுகளின் எதிரொலிப்பு தெரிகிறது . அதுவும் கிளைமேக்சில் ரஜினி பைக்
ஓட்டி செல்லும் காட்சிகளெல்லாம் அந்த கால எம்.ஜி.ஆர் கால டெக்னிக் . படுகேவலமாய் இருந்தது
. இந்த டைட்டில் டிசைனரை எங்கிருந்து பிடித்து போட்டார்களோ தெரியவில்லை . அவரும் தன்
பங்கிற்கு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் பாட்ஷா படத்தின் டைட்டில் டிசைனை சுருட்டி
போட்டுவிட்டார் .
படத்தில் பாராட்டப்படவேண்டியவர்
மேக்கப்மேன் . சிவாஜி , எந்திரனைக்காட்டிலும் இளமையான ரஜினி பெரும்பாலான காட்சிகளில்
தெரிகிறார் . அதேபோல் துடுக்குத்தனம் , கம்பீரம் போன்றவை பளிச்சென ரஜினியிடம் இன்னும்
மிளிர்வது ஆச்சரியம் தான் .படத்தில் இரு ஹீரோயின்கள் . அனுஷ்கா முகத்தில் இருக்கும்
அழகு , முதுகில் இல்லை . இப்படியே கொழுத்துக்கொண்டு போனால் , இன்னும் இரண்டு ஆண்டுகளில்
சின்னத்திரையில்தான் வாழ்க்கை . சோனாக்ஷி சின்ஹா இந்தி மார்க்கெட்காக பயன்படுவார்
.தமிழில் ஏனோதானோவென்று இருக்கிறார் . ஆனால் அவரது குரும்பான நடிப்பு நன்றாயிருந்தது
. ரஜினியும் சந்தானமும் அடிக்கும் பல காமெடிகள் ஹா ஹா ரகம் . ரஜினியைப்பற்றி கூற வேண்டாம்
. படையப்பா படத்தில் நான் பார்த்த ரஜினியை மீண்டும் அதேமாதிரி காண்கிறேன் . என்ன ,
கிளைமேக்ஸ் காட்சிகளில் இது ரஜினியில்லை என்று தெரிதும் பார்க்கும் போது கொஞ்சம் சிரிப்பு
வருகிறது . தெலுங்கு வில்லன் ஜெகபதிபாபுவை வைத்து காமெடியாக்கி இருக்கிறார்கள் . அவரைப்பார்த்தால்
வில்லன் எனும் ஃபீலிங்கே வராத அளவிற்கு இருக்கிறது. தெலுங்கு மார்கெட்காக சிலபல ஓவர்
ஆக்சன் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ரவிக்குமார் தான் கொஞ்சம் பாவம் .ரஜினியின்
கட்டளைக்காக ஆறுமாதத்தில் உழைத்து இப்படத்தினைமுடிந்தவரை சிறப்பாக எடுத்துள்ளார் .
ஆனால் சி இடங்களில் தன் முத்திரையை பதிக்கத்தவறினாலும் , மொத்தமாக இது ரவிக்குமார்
படம் என்பதை உணர்த்திவிடுகிறார் . ரவிக்குமாருக்கு இன்னும் சிறிதுகாலம் டைம் கொடுத்து
பொங்கலுக்கு பொறுமையாக வந்திருந்தால் , ஒரு சூப்பர் டூப்பர் மெஹா ப்ளாக்பஸ்டராகியிருக்கும்
. எல்லோரும் கூறுவதைப்போல மொக்கையெல்லாம் இல்லை . படம் நன்றாக தான் இருக்கிறது . படம்
முடியும் போது ப்ளாஸ்பேக்கை குறைத்து நடப்பு நிகழ்வுகளை அதிகரித்திருக்கலாமோ என்ற எண்ணம்
மட்டும்தான் தோன்றுகிறது . இது ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் . நடுநிலை ரசிகர்களுக்கு
என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் . குடும்ப ஆடியன்சுக்கும் பிடிக்கும் வண்ணம்தான் திரைப்படம்
உள்ளது .
நல்ல விமர்சனம் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
Thanks For the Comment Anna !!
Deletewww.facebook.com/kasthurirengan74 இது என் முகநூல் முகவரி வருக
ReplyDeleteநேர்மையான விமர்சனம்.படம் ஒன்றும் சூப்பர் டுப்பர் டைப் கிடையாது.முதலுக்கு மோசம் இல்லேன்னா ஓகே.
ReplyDeleteநடுநிலையான விமர்சனம் !கதை படம் பார்க்க தூண்டும் படி இல்லை !
ReplyDeleteகண்டிப்பா பார்க்கற டைப் படம் இல்லைங்ணா ! ஆனா என்டர்டெய்ன்மென்டா இருக்கும் !
Deleteசிறந்த திறனாய்வுப் பார்வை
ReplyDeleteதொடருங்கள்
Good review sir. very natural and neutral review.
ReplyDeleteThanks For Coming Sir !!!
Delete