Wednesday, 14 January 2015

ஐ – சினிமா விமர்சனம்நேற்று , ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்கள் , இப்படம் 1000 கோடி வசூல் செய்துவிடும் என்று கூறியிருந்தார் . படம் அடுத்தவாரம் சீனாவில் வேறு மிகப்பிரம்மாண்ணடமாக ரிலிசாகப்போவதாக ஏராளமான தகவல்கள் வேறு .  200 கோடிக்கு மேல் பட்ஜெட் , விக்ரமின் கடுமையான உடல் உழைப்பு , ஏ.ஆர்.ரஹ்மானின் மெர்சலான பாடல்கள் இதையெல்லாம் விட எங்கள் தானைத்தலைவர் பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு என பயங்கர எதிர்பார்ப்பு . இது போதாதென்று நான் வேறு ஐ படத்தின் கதை என்று ஒரு பதிவை வேறு எழுதிவைத்து தொல்லைத்ததால் வேறுவழியேயின்றி படத்திற்கு செல்லவேண்டியதாய் போயிற்று . நல்லவேளையாக தியேட்டர் மேனஜர் ஒருவரைப்பிடித்து , நேற்றே டிக்கெட் எடுத்தாயிற்று . இருந்தாலும் ஒரு படத்தின் மார்க்கெட் அல்லது நடிகரின் நிலவரம் என்ன என்பதை பிளாக்கில் டிக்கெட் வாங்கும்போது தெரிந்துகொள்ளலாம் . எனக்குத்தெரிந்து கத்தி படத்திற்கு 200 ரூபாய் டிக்கெட் , வீரம் படத்திற்கு 200 ரூபாய் டிக்கெட் . கிட்டத்தட்ட தலயும் தளபதியும் ஒரே லெவலில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்தது . சரி , ஷங்கர் மற்றும் விக்ரமின் மார்க்கெட் எந்த அளவு இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் என தியேட்டரில் சென்று பிளாக்  டிக்கெட் ஆசாமிகளைத்தேட , ஒருவனும் சிக்கவில்லை . முதல் காட்சிக்கு ஒரு ஸ்கிரினில் டிக்கெட் வேறு கவுண்டரிலேயே மீதம் இருந்ததாக மேனஜர் தெரிவித்தார் . சரி , நாளை தான் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை  என்றவாறே தியேட்டருக்குள் நுழைந்தேன் .

அட படத்தோட கதை என்னப்பா என டென்சனாகிறீர்களா ?  ஏற்கனவே எழுதுன ஐ படத்தின் கதை தான் . ஆனால் கொஞ்சம் பட்டி , டிங்கரிங் . பாடி பில்டர் விக்ரம் . பெரிய மாடல் அழகி எமி . விக்ரமுக்கு எமி என்றால் கொள்ளைப்பிரியம் .  தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் வெல்லும் விக்ரம் , சப்பை கம்பனிகளுக்கு மாடலாக இருக்கிறார் . இன்னொருபுறம் எமியுடன் நடிக்கும் விளம்பர நடிகர் , எமியை படு்ககைக்கு அழைக்க , எமி அதற்கு மறுக்க  , விளம்பரத்தில் இருந்து அந்த நடிகர் எமியை தூக்குகிறார் . அப்போது சீனாவில் நடைபெற இருக்கும் விளம்ப  ஷூட்டிங்கு ஆள் தேட , விக்ரம் சிக்குகிறார் . பின் சீனா செல்லும் விக்ரமுக்கும் எமிக்கும் காதல் வர , அதைத்தொடர்ந்து சில நாட்களில் பெரிய மாடலாகிறார் விக்ரம் . அதன்பின் விகாரமான தோற்றத்துடன் மாறிய விக்ரம் , எதனால் மாறினார் ?யார் வில்லன் ? கடைசியில் என்ன ஆனார் என்பதையெல்லாம் தியேட்டரில் பார்த்துகொள்ளுங்கள் .

படத்தின் முக்கிய தூண் P.C.ஶ்ரீராம் தான் என்றால் மிகையாகாது . அப்பப்பா  ! மனிதர் பிலிம் ரோல் கேமராவில் தான் இப்படத்தை எடுத்தார் என்றால் யாரும் நம்பமாட்டார்கள் . அப்படியே ஒவ்வொரு காட்சியையும் , கேமராவில் பிடித்து அவர் வழங்கியவிதம் பிரமிப்பு . சில போரான காதல்  காட்சிகள் கூட இவரின் கேமரா கைவண்ணத்தாலும் ஏ.ஆரின் அபரிதமான பிண்ணனி இசையாலும் அழகாய்த்தெரிகிறது . சந்தோஷ்சிவன் , நீரவ் ஷா , திரு என எத்தனை சினிமாட்டோகிராபர் வந்தாலும் , இவர்முன் தூசிதான் என்பதை நிருபித்திருக்கிறார் . இவரின் சினிமாட்டோகிராபிக்காகவே தாராளமாய் ஒருமுறை பார்க்கலாம் .

லிங்கா படத்தின் இசையமைப்பாளரா இப்படத்தின் இசை என்று வாய்மேல் விரல்வைக்க வைத்துவிட்டார் ரஹ்மான் . இப்படத்தின் பி.ஜி.ம் ட்ராக் தனியாய் ரிலிசானால் நிறைய பேரின் ரிங்டோனாக இருக்கும் . அவ்வளு அற்புதம் .விக்ரம் – யப்பா !இந்த மனுஷனுக்கு நடிப்புனா பைத்தியம்போல . இந்த படத்துக்காக உருக்கி எடுத்துருக்காரு . இவருடைய நடிப்பை பற்றி சொல்லித்தெரிவதில்லை . எமியின் ரசிகர்களெல்லாம் செமையா என்ஜாய் பண்ணலாம்பா .  அமைதியான அழகைத்தாண்டி , கவர்ச்சியிலும் கலக்கியெடுத்துவிட்டார் .  எமி சென்னைத்தமிழில் பேசும்போதுதான் அந்த லிப் மூவ்மென்ட் நன்குவரவேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்திருக்கிறார்கள் . பாவம் அந்த பெண்ணோ , மனப்பாடம் செய்த பள்ளி மாணவியைப்போல் ஒப்புவிக்கறது . மேடம் என்று ஒழுங்காக கூட சொல்லத்தெரியாத அளவிற்கு தமிழ்நாட்டில் , அதுவும் சென்னையில் ஒருவர் இருப்பாதாய் கூறுவதெல்லாம் ரொம்ப ஓவர் சுபா . வசனம் மிகச்சுமார் தான் . ஷங்கர் சார் , இலக்கியவாதிகள்ல இன்னும் சிறப்பானவங்க நிறைய பேர் இருக்காங்க . சுஜாதா இல்லாத குறை எந்திரனில் கூட அவ்வளவாய் தெரியவில்லை . ஆனால் இந்த படத்தில் நன்றாய் தெரிகிறது .

மேக்கப் , கிராபிக்ஸ் , லொகேசன் , ஸ்டன்ட்  என அனைத்தும் மிகச்சிறப்பாக இருக்கிறது . ஒருசில ஸ்டன்ட் சீன்களெல்லாம் ரொம்ப ஓவரோ என எணவைக்கிறது .  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘என்னோடு நீ இருந்தால்’ பாடல் , பில்டிங் ஸ்ட்ராங்கு , பேஸ்மென்டு வீக்கு என்பதுபோல் அமர்க்களமாய் ஆரம்பித்து , அமைதியாய் முடிந்துவிட்டது . இந்த படத்தில் , EXTENDED VERSION இணைக்கப்பட்டதாய் கூறப்படுகிறது . ஹாலிவுட்டில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் படங்கள் , படத்தின் நீளத்தை அதிகரிக்க சில காட்சிகள் சேர்ப்பார்கள் . ஆனால் இங்கோ , அதுவே பெரும் தொல்லையாய் போய்விட்டது . படம் 2 மணிநேரம்ம 52 நிமிடம் .இன்னும் ரெண்டு நாட்களில் கத்தரி போட்டுவிடுவார்கள் என நினைக்கிறேன் .

ஒரு சாதாரண காதல் கதையை , சயின்ஸ் பிக்சனாக அமைத்ததெல்லாம் ஓ.கே . ஆனால் ஷங்கர் சிவாஜி படத்தில் செய்த தவறையே இதிலும் செய்துவிட்டார் . பாடல்களுக்கு தாறுமாறாய் செலவு செய்துவிட்டு , படத்தில் கோட்டை விட்டுவிட்டார் . பாடல்களைத்தவிர்த்து பார்த்தால் 100 கோடிக்குள்ளே இப்படத்தை முடித்து இருக்கலாம் .  தேவையில்லாமல் செலவை அதிகரித்து , வசூல் குறைந்ததே என்று புலம்ப போகிறார்கள் . சில காட்சிகளில் அடுத்து வரும் வசனம் என்ன என்று சினிமா ஞானமே இல்லாத என் நண்பன் கூட கூறுகிறான் . பல காட்சிகள் வரும்முன்பே அது இப்படித்தான் இருக்கப்போகிறது என்று ஆடியன்சுக்கு தெரிந்துவிடுகிறது . கிளைமேக்ஸ் ஓ.கே என்றாலும் சிறிது ஏமாற்றம் தான் .

ரவிச்சந்திரன் அவர்களுக்கு 1000 கோடி வசூல் செய்யக்கூடிய கதை எப்படி இருக்குமென்று தெரியாது போல . 300 கோடியை கிராஸ் செய்தாலே சாதனைதான் .


மொத்தத்தில் , அதான் ஏற்கனவே சொல்லிட்டனே . விக்ரம் ,எமி , P.C.ஶ்ரீராம் , A.R. ரஹ்மானுக்காக தாராளமாய் ஒருமுறை பார்க்கலாம் .தொடர்புடைய இடுகைகள்


ஐ படத்தின் கதை 

பிசாசு - சினிமா விமர்சனம்

PK - சினிமா விமர்சனம்

THE DARK KNIGHT - திரைக்குபின்னால்
உங்கள் விருப்பம்

18 comments:

 1. காதல் காட்சிகள் சவ சவ. அந்த திருநங்கை விக்ரமை காதலிப்பது பிறகு அது நிறைவேறாமல் போவதில் அவரும் வில்லனாக மாறுவது எல்லாம் தேவை இல்லாத திணிக்கப்பட்ட கேரக்டர்.சந்தானம் பவர் ஸ்டாரை கலாய்த்து காமெடி செய்வதெல்லாம் சலிப்பு தட்டுகிறது.விக்ரம் நடிப்பு நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் மிகப்பெரிய ஓட்டை இருப்பது வருத்தத்துக்குரியது . ஈசியாக அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடிவதால் பெரிய சுவாரஸ்யம் எல்லாம் ஒன்றும் இல்லை . பாவம் விக்ரம் அந்நியனுக்கு பிறகு அவரால் பெஸ்ட் பிலிம் கொடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது . இந்த திரைக்கதைக்கு போய் விக்ரம் 3 வருடத்தை வீணடித்து விட்டாரே? ஷங்கருக்கு என்ன ஆச்சு ? அந்நியனுக்கு பிறகு ஷங்கரின் இயக்கத்திலும் தோய்வு ஏற்பட்டு உள்ளது. விக்ரம் பெரிய உழைப்பை கொடுத்து இருந்தும் ஷங்கரின் திரைக்கதை ஓட்டையினால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது . அந்நியன் பிதாமகன் போன்ற படங்களை தான் விக்ரம் இடம் இருந்து நாம் எதிர்பார்க்கிறோம் . ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி செய்து அது நிறைவேறாமல் போனதில் அவரை போலவே அவர் ரசிகனாக எனக்கும் மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது .

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் கொஞ்சம் டிஸ்ஸப்பாய்ண்ட்மென்ட் தான் ஜீ . தேவையில்லாம இழுக்கடிச்சிட்டாங்க . ஆனா , படம் பார்த்த பாதி பேரு நல்லா இருக்குனு சொல்றாங்க . பாதி பேரு சுமார்னுதான் சொல்றாங்க . எனக்கு சுமாரா தான் தெரிஞ்சது . படத்தோட சொதப்பல்கள் எல்லாம் வெளிய சொன்னா ஸ்பாய்லர் ஆகிடும்னுதான் சொல்லல .

   Delete
 2. Arumayana thelivana vimarsanathruku nandri.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ! வருகைக்கு நன்றி

   Delete
 3. யானைக்கும் அடி சறுக்குமோ ?
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. இந்த யுகத்துல டினோசருக்கே அடிசறுக்குதுணா !! இந்த படம் தேறுறது கொஞ்சம் கஷ்டம்

   Delete
 4. ஒ படம் பார்த்தாச்சா ?
  தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என்று வைத்திருக்கிறேன் ..

  ReplyDelete
  Replies
  1. ்கண்டிப்பா பாருங்ணா ! எதிர்பார்ப்போட போகாதிங்க .

   Delete
 5. அதற்குள் பார்த்தாச்சா....?

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. பார்த்தாச்சுங்ணா . நன்றி ணா


   தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் , உறவினர்கள் , நட்புக்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் .

   Delete
 6. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 7. ல காட்சிகள் வரும்முன்பே அது இப்படித்தான் இருக்கப்போகிறது என்று ஆடியன்சுக்கு தெரிந்துவிடுகிறது . ஏதோ நடிப்பிற்காக பார்க்கலாம். ஆனால் பெண்மை மேல் கொண்ட வன்மையான ப்டம் இது

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கூறுவதும் வாஸ்தவம்தான் மேடம் .கருத்துக்கு நன்றி

   Delete
 8. இதன் திரைக்கதை "மெமன்டோ'வை நினைவுபடுத்தியது

  ReplyDelete
  Replies
  1. மெமன்டோ என்று சொல்லிவிடமுடியாது . நடப்புக்காட்சிக்கு அடுத்ததாய் பிளாஷ்பேக் காட்சி என்பது போல் அமைத்திருக்கிறார்கள் . இதே டைப்பில் ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வந்துள்ளன ஜீ !

   Delete
 9. I பட விமர்சனம்
  ஒரு வெளிப்படையான விமர்சனம்

  https://www.youtube.com/watch?v=TgDxTq0rSX8&list=UUQRyESJZRjHY3LC883wUyEA

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ! உங்க விமர்சனமும் அருமை . தொடருங்கள்

   Delete