THE FUGITIVE - சினிமா விமர்சனம்
ஒரு அட்டகாசமான
ஆக்சன் திரில்லர் படம் பார்க்கவேண்டுமா ? உடனே இந்த படத்தை டவுன்லோட் செய்து பாருங்கள்
. MISSION IMPOSSIBLE , THE BOURNE SERIOUS , EDGE OF TOMMORROW போன்ற படங்களெல்லாம்
இந்த படத்தின்முன் தூசி என்றுதான் சொல்லுவேன் . நான் பார்த்த ஆங்கில ஆக்சன் திரில்லர்
திரைப்படங்களிலேயே , ஒருநிமிடம் கூட போர் அடிக்காமல் , அடுத்தது என்ன ? அடுத்தது என்ன
? என்று என்னை கட்டி இழுத்துச்சென்ற திரைப்படம் என்றால் அது FUGITIVE தான் .
என்னடா இவன் ஓவர்
பில்டப் கொடுக்கிறான் என நினைக்கிறீர்களா ? பில்டப் கொடுப்பதற்கு ஏற்ற படம்தான் இது
. படத்தின் துவக்கதில் ஒரு பெண்மணி கொலை செய்யப்படுவாள் . அவளைக்கொலை செய்ததாகக்கூறி , அவளுடைய கணவர் டாக்டர்
ரிச்சர்ட் என்பவரை கைது செய்து விசாரிப்பார்கள் . விசாரணையில் , ஒருகை மட்டும் கொண்ட
ஒருவன்தான் தன் மனைவியைக்கொலை செய்ததாக ரிச்சர்ட் தெரிவிப்பார் . ஆனால் சாட்சியங்களும்
, சூழ்நிலைகளும் ரிச்சர்டுக்கு எதிராக இருக்க , கோர்ட்டில் மரணதண்டனை அளித்துவிடுவார்கள்
. ரிச்சர்டை , சிறைக்கு அழைத்துச்செல்லும்போது , அந்த வண்டியில் இருக்கும் மற்ற கைதிகள்
, போலிசாரை அடித்துப்போட்டு தப்பிக்க முயற்சி செய்வார்கள் . அப்போது நடக்கும் மோதலில்
, வண்டி ரயில் ரோட்டில் விழுந்துவிடும் . பின் அதிலிருந்து ரிச்சர்ட் தப்பித்து , தன் மனைவியைக்கொலை செய்தவனை தேடிச்செல்வார் .
அதேநேரம் தப்பித்தவர்களைப்பிடிக்க மார்ஷல் சாமுவேல் வருவார் . அவர் ஒரு கண்டிப்பான
அதேநேரம் புத்திசாலியான போலிஸ் . அவருடைய கடமை , தப்பித்தோடிய கைதியான ரிச்சர்டைப்பிடிப்பது
. அவர் ஒருபுறம் துரத்த , தன் மனைவியைக்கொன்றவனை ஒருபுறம் ரிச்சர்ட் தேட என்று அட்டகாசமாக
படம் செல்லும் .
முதல் பத்துநிமிடங்கள்
சாதாரண படமாகச்செல்லும் . தண்டனைக்கைதிகள்
தப்பிக்கமுயற்சிக்கும்போது பிடிக்கும் வேகம் , படம் முடிவடையும் வரை தொடரும் . வெறும்
ஓட்டம் , சண்டை என்றில்லாமல் , லாஜிக்குடன் கூடிய மேஜிக்கான திரைக்கதையால் , இப்படம்
அருமையாய் நம்மைப்பரவசப்படுத்தும் . அந்த ரயில்
விபத்துக்காட்சிகள் , அணையிலிருந்து ரிச்சர்ட் குதிக்கும் காட்சிகளெல்லாம் படத்தில்
பார்க்கும் போது மயிர்க்கூச்சறியும் படியாக இருக்கும் . இத்தனைக்கும் அந்த ரயில்விபத்தை
உண்மையான ரயிலைக்கொண்டு படமாக்கியிருக்கிறார்கள் . அதேபோல் ரிச்சர்ட் தப்பிக்க ஒரு
ஐடியா போட , அதைக்கண்டுபிடிக்க சாமுவேல் போடும் ஐடியாக்கள் என ஒரு பேட்மேன், ஜோக்கர்
கான்செப்டே ஓடும் .
இந்த படம் 7 ஆஸ்கார்
நாமிநேட் மற்றும் 1 ஆஸ்கார் பெற்றுள்ளது . சாமவேலாக வரும் டாமி லீ ஜோன்ஸ் , தன்னுடயை
அலட்டலில்லாத அட்டகாசமான நடிப்பால் சிறந்த துணைநடிகருக்கான ஆஸ்காரை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டார்
. ரிச்சர்டாக வரும் ஹாரிசனும் , அற்புதமான நடிப்பை வாரி வழிங்கியிருக்கிறார் என்றுதான்
கூறவேண்டும் . படத்தின் பெரும்பலம் திரைக்கதை மற்றும் வசனங்கள் . போர் அடிக்காமல் வேகமாக
செல்லும் திரைக்கதையில் , ஆங்காங்கெ கெத்தான வசனங்களும் , ஹூயுமரான வசனங்களும் கண்டிப்பாய்
நம் கவனத்தை ஈர்க்கும் . இசையமைப்பாளர் ஜேம்ஸ் நியுட்டனும் தன் பங்கிற்கு , பதைபதைப்பான
இசையை வழங்கி , படத்தைத்தூக்கி நிறுத்தி இரு்க்கிறார் . இவர் பெயரை எங்கோ பார்த்தது
போல இருக்கிறதா ? இவர்தான் ஹன்ஸ் ஜிம்மரோடு இனைந்து BATMAN BEGINES மற்றும் THE
DARK KNIGHT க்கு அட்டகாசமான இசையை வழங்கியிருப்பார் . அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டின்
சிறந்த 100 திரில்லரில் இந்த படம் இருக்கிறது . ரோட்டன் டோமெட்டோஸ் தளத்தில் 96 சதவித
பாஸிட்டிவ் வாக்குகள் . 1993 – ல் வெளிவந்த படங்களின் வசூலில் 3 வது இடம் . இதுதவிர
ஏராளதாராளமான விருதுகள் மற்றும் நாமினேஷன்கள் என அக்காலத்தை கலக்கியத்திரைப்படம் .
இந்த வருடத்தில் தான் ஸ்பில்பெர்க்கின் SCHINDLERS
LIST எனும் காவியமும் ரிலிஸ் ஆனது என்பதை கவனத்தில் கொள்க .
எனக்கு ஒரே ஆதங்கம்
, இவ்வளவு சிறப்பான ஒரு திரைப்படத்தைப்பற்றி யாருமே தமிழில் எழுதவில்லை என்பதுதான்
.நல்லவேளையாக நடிகர் ராஜேஸ் , எனக்குப்பிடித்த ஆங்கிலப்படங்கள் என்ற அவருடைய புத்தகத்தில் இப்படத்தைப்பற்றி எழுதியிருக்கிறார் . கொடுமை என்னவெனில் , இத்திரைப்படம் கே டிவியில் மாதம் ஒரு முறை தமிழ் டப்பிங்கில்
, படுகேவலமாக ஓடிக்கொண்டிருக்கிறது . 1963
– 67 வரை , ஆங்கில நாடகமாக டிவிகளில் ஓடிக்கொண்டிருந்த FUGITIVE , 1993- ல் திரைப்படமாக
எடுத்து மாபெரும் வெற்றி பெற்றார் இயக்குநர் ஆன்ட்ரூ டாவிஸ் . தவறாமல் பார்க்கவேண்டிய திரைப்படங்களில் , தாராளமாய் இப்படத்தினை இணைத்துக்கொள்ளுங்கள்
. அதுவும் ஆக்சன் – கிரைம் திரில்லர் விரும்பிகள் என்றால் , கண்டிப்பாய் இருமுறையாவது
பார்க்கவேண்டிய திரைப்படம். இந்த படத்தை தமிழில் எடுத்திருக்கிறார்களா என்று தெரியாது
. ஆனால் அப்படி எடுத்தால் படம் கண்டிப்பாய் இன்றைக்கும் 100 ஓடி , வருடத்தின் மெகா
ப்ளாக்பஸ்டராவது உறுதி .
fugitive படம் வந்த உடன் பார்த்தோம். அதிலிருந்து டிவிடியும் வாங்கி நூறு தடவையாவது பார்த்திருப்போம் உங்கள் விமரிசனம் அருமை.ஐ தாட் யு டோண்ட் கேர் முதல் தரமான டயலாக்.
ReplyDeleteஅப்படினு இல்லைங்க தல ! பதிவோட நீளம் எக்கச்சக்கமா போய்டும்னு பயந்து இந்த படத்த பத்தி நிறைய விஷயங்கள் சொல்லாம விட்டுட்டேன் . இந்த படத்த பத்தி இன்னொரு பதிவு கண்டிப்பா போடனும் . என்ன காரணத்தாலோயோ , இந்த படம் எனக்கும் உங்கள மாதிரியே அதிகமா பிடிச்சிடுச்சி !!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே !!நான் பார்க்கிறேன்
ReplyDeleteSir,
ReplyDeleteWrite more about Super Star Harrison Ford films in your blog...............
Billa
எழுதிடலாம் தல !!! :-)
Deleteதெலுங்கில் நாகர்ஜூனா மனிஷா நடித்து தமிழில் எல்லாமே என் காதலி என வந்தது
ReplyDeleteதகவல் மற்றும் வருகைக்கு நன்றி அண்ணே !!
ReplyDeleteSir,
ReplyDeleteWhat about "The Great Escape ". I have seen that film more no. of times. I await for your review.
Billa
நா இன்னும் அந்த படம் பாக்கலைங்க ஜீ ! பாத்துட்டு புடிச்சிருந்தா கண்டிப்பா எழுதறேன் . பரிந்துரை செய்தமைக்கு நன்றி !!!
Delete