தெருவில் ஒரு சிறுவன் – குறும்பட விமர்சனம்
உங்களுக்கெல்லாம், ஐ மீன் என் ப்ளாக்கை வாசித்து வருபவர்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியாக இல்லாவிட்டாலும் சிறிய ஆச்சரியாமாவது கண்டிப்பாக இருக்கும்; என்னடா இவன், ஒலகசினிமா, ஹாலிவுட் சினிமா என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தவன் திடுதிப்பென குறும்படத்திற்கு விமர்சனம் எழுதவந்துவிட்டானென்று. ஏற்கனவே பலமுறை யோசித்து எழுதாமல் விட்ட டாபிக் குறும்பட விமர்சனம். நேற்றிரவு மூறையின் ஏதோவொரு நியூரானில் உறங்கிக்கிடந்த அந்த யோசனையைத் தட்டியெழுப்பி, அதற்கு விட்டமின் ஊட்டி வளர்த்தி, இப்போது எழுதவைத்துவிட்டார் இப்படத்தின் இயக்குநர் சனாதனன். ஏற்கனவே சாதித்தவர்களைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் , சாதிக்கப் போகிறவர்களைப் பற்றி எப்போது எழுதப்போகிறீர்கள் என்று சைலன்டாக அவர் கேட்ட கேள்வி பசுமரத்தாணி போன்று மூளையில் பதிந்துவிட்டது. அவர் கேட்பதும் வாஸ்தவம் தான். சினிமாவிற்கு இருக்கும் மீடியா சப்போர்ட்டில் 0.1 சதவீதம் கூட குறும்படங்களுக்கு இல்லை என்பதே 100 சதவீத உண்மை. சரி, இன்றிலிருந்து மாதம் ஒரு குறும்படத்தையாவது நம் வாசகர்களுக்கு (?) அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்ற தலையாய கொள்கையை நெஞ்சினுள் விதைத்து, அதை இன்...