78 ரூபாய் – சிறுகதை

‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்.’ அவரின் குரல் என்னை ஈர்த்தாலும் என்னுடைய அப்போதைய நிலை அவர் கூறுவதை ஒன்றமறுத்தது. ஒரு அவசரகாரியமாக வெளியில் கிளம்பிய எனக்கு மழையின் வடிவில் தடை ஏற்பட ஒரு வீட்டின் முற்றத்தில் அடைக்கலமானேன். ஓரிரு நிமிடங்களில் அவரும் தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் நனைந்தும் நனையாமலும் நான் இருக்குமிடத்தை அடைந்தார். அவ்வீட்டின் உரிமையாளர் எனக்கு சொந்தமென்பதால் அவருடன் துளிகூட ஈடுபாடில்லாமல் மழையைப் பற்றிய மொன்னையான விவாதங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் வந்து சேர்ந்தார். அவரின் காக்கி பேண்டும் சர்ட்டும் அவர் வொயர்மேன் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது. ‘புதுசா வந்துருக்கிங்களா சார்’ எனது அருகிலிருந்த வீட்டின் உரிமையாளன் அவரிடம் கேட்டான். ‘ஆமா தம்பி. அத்தனூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர். அதுக்குமுன்னாடி…..’ என்று ஆரம்பித்து பல்வேறு விதமான அனுபவங்களைக் கூறிக்கொண்டே...