CN's - MeMeNtO - சினிமா விமர்சனம் அல்ல

CN’S – MEMENTO – திரைக்குப்பின்னால் சென்ற பதிவில் , நோலனின் மெமென்டோ படத்தைப்பற்றிப்பார்த்தோம் . இப்பதிவில் , அப்படத்தின் பிண்ணனி மற்றும் திரைக்குப்பின்னால் நடந்த நிகழ்வுகளைக்காணலாம் . நோலன் , இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இணைந்த கலவை . நோலனின் பெற்றோர் அமெரிக்க , இங்கிலாந்து நாட்டைச்சார்ந்தவர்கள் . ஆங்கில இலக்கியத்தை, இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துமுடித்தார் . இங்கிலாந்தில் இருக்கும்போதுதான் , தன்னுடன் படித்து வந்த எம்மாவை காதலிக்க ஆரம்பித்தார் . இருவரும் பால்யகால சிநேகிதர்கள் . கல்லூரி நண்பர்களை சேர்த்து எப்படியோ Following படத்தினை முடித்தார் . அதன்பின் , அவரின் காதலி எம்மாவிற்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துவிட , அமெரிக்கா சென்றுவிட்டார் . உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த விஷயம் , மெமென்டோ திரைப்படம் , ’ மெமென்டோ மோரி ‘ எனும் ஜொனதனுடைய சிறுகதையின் தாக்கத்தால் உருவானது என்று . FOLLOWING திரைப்படத்தை முடித்தபின் , தன்காதலியான எம்மா தாமசின் வேண்டுதலின்பேரிலும் , FOLLOWING படத்தினை சான் – பிரான்சிஸ்கோ விழாவில் திரையிடுவதற்...