Eternal Sunshine Of Spotless Mind - சினிமா விமர்சனம்

என்றுமே இனிய முடிவுகளை உடைய திரைப்படங்கள் நம் மனதிற்கு ஒரு சந்தோஷத்தை தரும் . அதிலும் காதல் திரைப்படங்கள் என்றால் சொல்லவா வேன்டும் ? அப்படி ஒரு இனிமையான காதல் அனுபவமே இந்தத்திரைப்படம் . நாம் காலையில் கண்விழிக்கிறோம்.அந்தநாள் நமக்கு வாழ்வின் முக்கியமான நாள்.நம் வாழ்வில் விரும்பி இழந்த ஒருவர் நினைவாக ஓரிடத்திற்கு செல்ல நினைக்கிறோம்.அச்சமயம் பார்க்கிங்கில் உள்ள நம் காரோ அல்லது பைக்கோ ஆக்சிடன்ட் ஆகி உள்ளது. பார்த்ததும் டென்சனாகி,வேறு வழியின்றி மனம் போன போக்கில் ரயில்வே ஸ்டேசனோ பஸ் ஸ்டாண்டோ செல்கிறோம்.நாம் போக வேண்டிய இடத்திற்கு வரும் பஸ்ஸையோ ட்ரெயினையோ விட்டு வேறு பஸ் (அ) ட்ரெயின் ஒன்றில் ஏறும்படி மனம் சொல்கிறது.மனம்போன போக்கில் ஒரு கடற்கரைக்கு செல்கிறோம்.அங்கே திடிரென்று ஒரு பெண் நம்மை கவர்கிறாள். அவளைப்பார்த்தாலும் பேச ஒரு பயம். ஆனால் பயணத்தின் போது அதிசயமாக அவளே வந்து பேசுகிறாள்.அவளை நமக்கு மிகவும் பிடித்துப்போகிறது.அன்று நாள் முழுவதும் அவளுடன் கழிக்கிறோம்.அவளை திருமணம் செய்ய மனம் விரும்புகிறது.அவளும் நம்மை விரும்புகிறாள் என்று அறிகிறோம். அடுத்த நாள...