Monday, 6 October 2014

PUSS IN BOOTS - சினிமா விமர்சனம்
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கதைகள் FAMOUS.எடுத்துக்காட்டாக நம் ஊரில் ‘ஒரு ஊர்ல’எனத்தொடங்கும் பல ராஜாக்கதைகள்.அந்த மாதிரி இத்தாலி மற்றும் ப்ரான்ஸ் நாட்டில் கய்வான்னி ப்ரான்ஸிஸ்கோ ஸ்ட்ராபரோலா  மற்றும், ஜியாம்பட்டிஸ்டா சார்லஷ் பெர்ரால்ட் எனும் கதாசிரியர்களால் 1729 ல் MASTER CAT (OR) THE BOOTED CAT என்று வடிக்கப்பட்ட கதையே இது.

உங்களுக்கு பூனை என்றால் மிகப்பிடிக்குமெனில் இத்திரைப்படம் உங்களை அட்டகாசப்படுத்தும்.ஏனெனில் இந்த கதையின் ஹீரோ ஒரு பூனை.அதுவும் சிம்மக்குரலில் பேசி,பாவ முகத்தைக்காட்டி,ரவுடியிசம் செய்யும் பூனை.

சரி படத்தினுள் செல்லலாம்.
முதல் காட்சியில் ‘WANTED(க்ரிமினல்)’லிஸ்டில் உள்ள ஒரு அழகிய பூனை நமக்கு தத்ரூபமாக அறிமுகமாகிறது. அது ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்து தப்பித்துப்போவது போல் அறிமுககாட்சி.அது தப்பித்து ஒரு பாருக்கு செல்கிறது.அங்கு சிலரின் உரையாடல்கள் மூலம் JACK&JILL என்ற தம்பதியினரிடம் மாயவிதைகள் உள்ளதாகவும் அதன்மூலம் வானத்தில் உள்ள பொன்முட்டையிடும் வாத்தைக்கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆகலாம் என்பதையும் தெரிந்து கொள்கிறது. PUSS – ற்கு , ஒருவிதத்தில் பணத்தேவை இருக்கிறது .அதனால் JACK & JILL வீட்டிற்கு சென்று அந்த மாயவிதைகளை திருடப்போகிறது . அவ்விடத்தில் இன்னொரு திருடியான , பெண்பூனையைக்காண்கிறது. அப்பொழுது ஏற்படும் பிரச்சனையில் மாயவிதைகளை இருவராலும் களவாடமுடியவில்லை. அந்த கோபத்தில் அந்த பெண்பூனையின் இருப்பிடத்திற்கு சென்றால் அங்கு HUMPTY DUMPTY ஐ காண்கிறது. HUMPTY , PUSSடம் தங்கமுட்டையை அடைய உதவ வேண்டும் எனக்கெஞ்சுகிறது. ஆனால் PUSS முடியாது என மறுக்கிறது.


SAN RICARDO என்ற அழகிய நகரத்தில் IMELDA என்ற அநாதை விடுதி நடத்தும் பெண்ணின் வீட்டின்முன் ஒரு தொட்டியில் அழகிய பூனைக்குட்டி கிடைக்கிறது.அதைப்பார்த்த அவள் அதை எடுத்து வளர்த்த ஆரம்பிக்கிறாள்.அந்த பூனைக்கு அங்கு ஒரு முட்டை நண்பன் கிடைக்கிறான்.அவன் பெயர் HUMPTY alexander DUMPTY.ஓரு சூழலில் இருவரும் இணைபிரியா தோழர்கள் ஆகிறார்கள்.HUMPTY அவன் தோழனான பூனைக்குட்டிக்கு PUSS எனப்பெயரிடுகிறான்.ஒரு நாள் HUMPTY, PUSS-டம் பேசும்போது தன் கனவைக்கூறுகிறான்.

அதாவது ஒரு மேஜிக் விதையின் மூலம் விதைக்கப்படும் செடியின் வழியே வானத்திற்கு சென்று அங்குள் தங்க முட்டையிடும் வாத்தின் முட்டைகளை கொண்டு வந்து பெரும்பணக்காரன் ஆக வேண்டும் என்பதே அவன் கனவு.அதற்காக அவனும் PUSSம் சேர்த்து அந்நகரிலுள்ள விதைக்கடைகளில் திருடும்போது அங்குள்ள தலைமைக்காவலரிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அக்காவலர் இவர்களை  வளர்ப்புத்தாயான இமெல்டா விடம் விட்டு எச்சரிக்கின்றார்.அதைக்கேட்டு மனம் வருந்தும் தாயைப்பார்த்து PUSS இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன் எனக்கூறுகிறது.அதன்பின் திடிரென்று PUSS ஒரு ஆபத்தில் இருந்து தலைமைக்காவலரின் தாயைக்காப்பாற்றுவதால் அந்நகரின் ஹீரோ ஆகிறது.இதைக்கண்டு அவர் நண்பணான HUMPTY பொறாமைக்கொள்கிறது.மேலும் HUMPTY பல திருட்டு வேலைகளை செய்து ஒரு திருடனாக மாறுகிறது.
ஒருநாள் PUSS தூங்கிக்கொண்டிருக்கும்போது HUMPTY வந்து எழுப்பி ஒரு பொய்யான காரணம் கூறி ஓரிடத்திற்கு கூட்டிச்செல்கிறது.அங்கு சென்று பார்த்தால் HUMPTY அந்நகரின் வங்கியைக்கொள்ளை அடிக்கிறது.இதைக்கண்ட PUSS இது தவறென்றும் அவர்கள் நம் மக்கள் எனவும் கூறி அதற்கு புரிய வைப்பதற்குள் காவலாளிகள் வந்து விடுகிறார்கள்.துரதிருஸ்டவசமாக தலைமைக்காவலரை PUSS தாக்கி விடுகிறது.அங்கிருந்து தப்பிச்செல்லும்போது புஸ்ஸை அவரின் தாயார் பார்த்துவிடுகிறார்.தாயாரைக்கண்டதும் PUSS கவனமிழந்து வண்டியை ஒரு பாலத்தின்மீது விடுகிறது.அப்போது HUMPTY காவலரிடம் மாட்டிக்கொள்கிறான்.அவன் PUSSஇடம் உதவி கேட்கும்போது ‘SAVE YOURSELF’எனக்கூறி தப்பித்துவிடுகிறான்.அதன்பின் அவனை ‘WANTED’லிஸ்டில் சேர்க்கப்படுகிறான். 

இப்பொழுது HUMPTY ன் தந்திர பேச்சை நம்பி PUSS மீண்டும் உதவுகிறது.அதாவது தங்கமுட்டையை தன் சொந்த ஊரில் சேர்த்தால் மீண்டும் அவர்கள் PUSSஐ அரவணைத்துக்கொள்வார்கள் என எண்ணுகிறது JACK&JILLNலிடம் போரடி மாயவிதையைப்பெற்றதா?HUMPTYன் உண்மையான PLAN என்ன?PUSS தன் நகரில் மீண்டும் சேர்ந்ததா என்பதை டவுன்லோட் செய்து காணவும்.

இத்திரைப்படம் மோஷன் கேப்சர் முறைப்படி உருவாக்கப்பட்டதாம் .CHRISS MILLER எனும் டைரக்டர் இயக்கியுள்ள இத்திரைப்படம் IMDB ல் 6.7 மதிப்பெண்களைக்கொண்டுள்ளது. PUSSற்கு குரல் கொடுத்துள்ளவர் ஆன்டனியோ பான்டெரஸ். HUMPTYக்கு Zach Galifianakis என்பவர் இவர்தான் HANG OVER  படத்தில் தாடிக்காரராக வந்து அட்டகாசம் செய்வார். நேரம் இருப்பின் தாராளமாக , இப்பூனையை ஒருமுறை ரசிக்கலாம் .

 

 

 உங்கள் விருப்பம்

2 comments:

 1. #இத்திரைப்படம் மோஷன் கேப்சர் முறைப்படி உருவாக்கப்பட்டதாம் #
  நம்ம கோச்சடையானும் இப்படி உருவானதால் தான் பூனையாகி விட்டாரா ?

  ReplyDelete
  Replies
  1. அப்படினு இல்லைங்ணா ! என்னைக்குமே முதல்முயற்சி , சொதப்புவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது . இதே டெக்னாலாஜியில் வெளியான முதல் படமான போலார் எக்ஸ்பிரஸ் படம்கூட படுதோல்வி தான் . அதன்பின் வந்த முயற்சிகள் தான் , இந்த டெக்னாலாஜிய வெற்றியடைய வைத்தன . அதேபோல் , கோச்சடையான்கூட ஒருவகையில் முதல்முயற்சியென்பது முடிந்தவரை தெரியாத அளவிற்கு எடுத்திருப்பார்கள் . என்னைப்பொறுத்தவரை , 300 என்ற ஹாலிவுட் படத்தில் பயன்படுத்திய டெக்னாலஜியில் கோச்சடையான் எடுக்கப்பட்டிருந்தால் , இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும் என நினைகிறேன்

   Delete