TERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்

ஒரு பேட்டியில் கேமரூனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . அதாகப்பட்டது நீங்க ஏன் தலீவரே ரெண்டு பார்ட்டோட டெர்மினேட்டர் சீரிச நிறுத்திட்டிங்க என்பதே அக்கேள்வி . அதற்கு அவரும் எளிமையானதொரு பதிலைத் தந்தார் . எவ்விதமான முன்யோசனையுமில்லாமல் எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுப்பதே பெரிய விஷயம்; காரணம் பார்வையாளர்கள் முதல் பாகத்தினை மனதில் பலவாறாக கற்பனை செய்துகொண்டிருப்பார்கள் . அதே கற்பனையுடன் வரும்போது இரண்டாம் பாகம் என்னதான் நன்றாக இருந்தாலும் பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் . இரண்டாம் பாகத்திற்கே இந்நிலை என்றால் மூன்றாம் பாகத்தினைப்பற்றி சொல்லவேண்டுமா ? அவர்கள் மனதில் நிலைக்கும்படியான இரு படங்களை நான் தந்துவிட்டேன் . அது போதும் எனக்கு என்றார் கேமரூன் . கிட்டத்தட்ட யோசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே புரிந்துகொள்ளக் கூடிய விசயம்தான் இது . ஆரம்பத்தில் நம் காதலியின் சிறுபிள்ளைத்தனமான போக்கு நமக்குப்பிடித்திருக்கும் ; ஆனால் போகப் போக அதுவே நமக்கு எரிச்சலைத் தரும் .காரணம் அவளை மிக மிகப் பிடித்திருப்பது தான் . சரி...